ஊர்ல இருந்து அண்ணா ஃபோட்டோஸ் அனுப்பி இருந்தார். உங்க கூடவும் பகிர்ந்துக்கலாமேன்னு நினைச்சதோட விளைவு இந்த பதிவு. சொந்த வீட்ல போய் இருக்கிற சந்தோஷம்.. சுகம்.. ஒவொரு தடவை இடம் பெயர்ந்து மறுபடி எங்க வீட்டுக்கு போகும்போதும் அனுபவிச்சிருக்கோம். ஓடியோடி ஏய் இது பாத்தியா.. அத பாத்தியா.. இந்த மரம் இங்க புதுசா வந்திருக்கேன்னு அவ்ளோ ஆரவாரம். ஒவொரு தடவை வீட்ட விட்டு கிளம்பும்போதும் திரும்பி வரும்போதும் அப்பா கண் கலங்க தவறுவதில்லை. அப்போ அது சிரிப்பா இருக்கும் எங்களுக்கு. இப்போ நாங்களே உழைக்க ஆரம்பிச்சதும் தான் அருமை புரியுது. சாரிப்பா.. ரஜியும் இப்போ ஒரு அப்பாவா, உங்க மனநிலைல தான் இருக்கான். தன் உழைப்பில பாத்து பாத்து கட்டிய வீட்டுல ஒரு மாசம்தான் இருந்தாங்க. இப்போ மறுபடி போய் இருக்கிறதுன்னா.. ”சொர்க்கம்டி”ன்னு சொன்னான். கரண்ட் மட்டும் இல்லையாம். அதுவும் சீக்கிரம் வந்துடும்னான்.
இது ரஜி வீட்டோட மிச்சம் மீதிகள். கொய்யா,தேசில்லாம் ஆளில்லாத போதும் நிறைய்ய காய்ச்சுப் போய் இருந்துதாம்.
அண்ணா வீட்டுக்கும் ரஜி வீட்டுக்கும் இடையில கிபிர் விமான குண்டு விழுந்த பெரிய்ய்ய குழி இருந்திச்சாம். நல்ல வேளை வீடு தப்பிச்சு. வீட்டுக்கு பின் பக்க வேலியோரம் இருந்த பதுங்கு குழிக்குள்ள 20 வெடிக்காத ஷெல்குண்டுகள் எடுத்தாங்களாம். என்னடா இதுன்னு நான் பயப்பிட சிரிக்கிறான். ”அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி. என்ன லேண்ட் மைண்ட்ஸ் தான் இன்னமும் சரியா கிளியர் பண்ணல. மத்தபடி ஒரு பயமும் இல்லை”ங்கிறான். எனக்கு வயித்தில நெருப்பு.
எங்க ஊர் கண்ணகை அம்மன் கோயில் திருவிழா. சேதமானாலும் வீழாத கோபுரம். தேரிழுக்கிற படத்துல வலது கரையில ஆரஞ்ச் கலர் வஸ்திரத்துல ஆஜானுபாகுவா தெரியிற முதுகுதான் நம்ம சின்னண்ணா ரஜி.
இது அக்காச்சி தாய்நாடு போன உடன எடுத்தது. எல்லா சாமானும் எடுத்தாச்சான்னு கடைசி லுக் அண்ட் செக் விடும் பொறுப்பான அம்மா பரமேஸ்வரி. அங்க போயி சாப்பிடலைன்னாலும் பரவால்லை. நிறைய்ய குடிக்கணும்னு சித்தி (ஹிஹிஹி.. நான் தான்) சொன்னத சமத்தா கேட்டு கைல கோக் பாட்டில் தூக்கிய அக்காச்சியோட மூத்த வாரிசு சஜோபன். தாய் மண்ணில் கால் பதித்த அத்தானோட பாதங்கள்.
சித்தி மாதிரியே பெட் பிரியர் அக்காச்சியோட ரெண்டாவது வாரிசு கருண். ”என்ன இவருக்கு பிரியம் கொஞ்சம் ஜாஸ்திடி. பூனைய வால்ல பிடிச்சு சுழட்டி ஒரு எறி”ன்னு அண்ணா சொன்னார். இப்போ சமத்தா விளையாடறாராம். நேத்தும் ஸ்கைப்ல காமிச்சார். ஷிஃபர்னு பேர் வச்சிருக்காராம். அத்தையோட லக்கேஜ்ல கனடா போக ட்ரையல் பார்க்கும் அண்ணாவோட கடைசி வால் கிரண். அண்ணா வளர்க்கிற கோழி.. குஞ்சுகள் உடன்.
அவ்வ்வ்வ்வ்வ்..
ரெம்ம்ம்ப டச்சிங்கான படம். ரஜி, கருண், அக்காச்சியோட கடைசி வால் சேரன். மாமன் மடியில உரிமையா இருந்து பட்டாம்பூச்சி பாக்கறாங்க. பொக்கிஷம் இந்தப் படம். எவ்ளோ நேரம் பாத்துட்டு இருந்தேன்னு தெரில.. வித் ஆவ்வ்வ்வ்..
வர்ட்டா..
17 நல்லவங்க படிச்சாங்களாம்:
Ai...vadai...
டச்சிங்கான பகிர்வு சுசிக்கா...ஊருக்கு திரும்புன உணர்வும்....
வாண்டூஸ்...கிளிக்ஸ்...ரம்மியம்...
கடைசிப்படம் அழகு. சின்ன வயசில எருக்கஞ்செடியில பட்டாம்ப்பூச்சிக்கு லார்வா ப்யூப்பா எல்லாம் பிடிச்சு ஷூ பாக்ஸ்ல போட்டு வளத்தி அதை பட்டாம்பூச்சி ஆனதும் வெளியில விடும் போது இருக்கும் சந்தோசம் , இந்தப்படத்தைப்பார்த்ததும் கிடைச்சுது
நான் ரொம்ப நல்லவனுங்க.
சொந்த ஊருக்குப் போகும் சந்தோஷத்தையும், சொந்த
ஊரிலிருந்து விலகி இருக்கும்
துக்கத்தையும் எளிமையான
வரிகளில் வலிமையாகச்
சொல்லியுள்ளீர்கள்.
புகப்படங்கள் அனைத்திலும்
கொஞ்சம் கவிதை தெரிகிறது.
CLICKS...
manasai Clickiyathu...
arumai padangalum ungal ezuththum...
என்னதான் இருந்தாலும் பிறந்து வளர்ந்த இடம் போல ஆகாது..!!
அதை பார்க்கும் போதே வரும் சந்தோஷம் இருக்கிறதே...ஆஹா....>
Thank you for sharing these photos with us. nice photos. The last one is precious and cute!
ம்ம்ம்...குடும்ப படத்தை போட்டு கும்மியாடிக்க விடமால் பண்ணிட்டிங்க...ரைட்டு ;)))
\\ஆஜானுபாகுவா தெரியிற முதுகுதான் நம்ம சின்னண்ணா ரஜி\\\
என்ன ஒரு அறிமுகம் டா சாமீ ;))
சுசி படங்கள் எல்லாமே அருமையா இருக்கு ,,நாங்க எந்த ஊரில் போயி இருந்தாலும் பிறந்து வளர்ந்த ஊரு மட்டும் எப்போதும் மறகரதில்லை..அதே பத்தி பேச சொன்னாலும் அலுக்காமல் பேசுவோம் ..
எப்போ பா நீங்க ஊரு சுத்தின விஷயத்தை பத்தி எழுத போறீங்க ?
வந்துட்டேடேடேடேடேடேன்..
அல்லாருக்கும் நன்றி.. ரொம்ப டயர்டா இருக்கு.. ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடி வரேன் :))))
கடைசிப்படம் அழகு :)
welcome back..
நல்ல படங்கள்..
புகைப்படங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி
சூப்பர் டச்சிங் பதிவு சுசி... கண் கலங்க வெச்சுடீங்க...
உங்கள் எழுத்துகளோடு பார்க்கையில்தான் படங்களை உணர முடிகிறது. வெறும் படங்கள் என்றால் ஸாரி, எடுத்தவருக்கு ஏதும் அவார்ட் கொடுக்கலாம்.
கடைசிப் படம் மட்டுமே நல்ல ஃபீலுடன் எடுக்கப்பட்டுள்ளது.
சாமி.. /\
எந்தa ப்ளாக் எழுதற அக்காவுக்கு.
நேரிய எழுதற நேரத்தை கொடு.
ரொம்ப அழகா இருக்கு படங்கள்
Post a Comment