Pages

  • RSS

14 July, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன்..

போற அவசரத்தில வீட்ட பூட்டிட்டு உங்களுக்கு டாட்டா சொல்லாம ஓடிட்டேன். மூணு வாரம் என் குடும்பம் ஸ்விட்ஸர்லாந்துக்கு உல்லாசப் பயணம் போய்டிச்சு. இதுவும் ஹிஹிஹி.. ஷெட்யூல் செஞ்சதுதான். போன இடுகைத் தலைப்பு பாத்திங்க இல்லை.. உங்க பதிவுகள் படிக்க முடியாதேங்கிற கவலைல வந்த பெருமூச்சு தான் அது. உங்களோடதாவும் எடுத்துக்கலாம். நிம்மதிப் பெருமூச்சு. புரியுது. இப்டி ஷெட்யூல் செஞ்சு தொல்லை தொடர என்ன அவசியம் இப்போன்னு கேக்கறிங்க. நெக்ஸ்டு பத்திக்கு வாங்க சொல்றேன்.

அதாவது நான் பேசுறத குறைச்சுக்கிட்டேன்னா நீங்க என்ன  மறந்துடுவிங்களோ, அப்புறம் என் இடத்துக்கு வேற யாராவது வந்துடுவாங்களோ அப்படியாகப்பட்ட பயம் எனக்கு இருக்கு.  அப்டின்னு வேண்டியவர் ஒருத்தர் சொன்னாங்க. அதான். இந்த கொடும் முயற்சி. எப்போதும் டச்ல இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நேரம் கிடைச்சா முடிஞ்ச வரைக்கும் பதிவுகள் படிக்கிறேன். சரியா நண்பர்ஸ்..

நாங்க வந்திருக்கிறது என் மச்சினி நிலா வீட்டுக்கு. அவள பத்தி முன்னாடியே சொல்லி இருக்கேன். மறந்தவங்களுக்காக அம்மா பேயி.. அவ ஆள் ரெம்ப டெர்ர்ர்ர்ரர்.. நம்ம வீட்டு மொக்கை சாமியையே சமயத்தில மொக்கிடுவா. சரண்டர் ஆகாம சமாளிச்சுக்கிட்டே சொல்வார் “அடியேய்.. நீ என்னையே மிஞ்சிட்டேடி.. இரு நேர்ல வரேன் உனக்கு”ன்னு. சாம்பிளுக்கு ஒண்ணு டைப்புறேன் படிங்க. ஸ்கைப்ல கண்ணாளனும் நானும் ஜோடியா உக்காந்து அவ கூட பேசிட்டு இருந்தோம். அவ கம்பியூட்டர்ல கோளாறு. கலர் சரியா தெரியாது. திடீர்னு சொன்னா.

“என்ன மச்சாள்.. நீங்க பிங்க் கலர்ல இருக்கிங்க.. அண்ணா யெல்லோவா இருக்கார்??”

“ஏய்.. நான் பூவுடி.. அப்டித்தான் தெரியும்”

“அப்போ அவர் என்ன பழமா??”

இவ அப்பாவோட ரெண்டாவது தங்கை பொண்ணு. அப்பா வழில எங்க அம்மா அவங்கதான். ராணி அத்தை. அவங்க பசங்களுக்கு முன்னம் எங்களுக்கு ஊட்டி விடுற பாசக்காரி. மாமா 48 வயசிலவே எங்கள விட்டு போய்ட்டார். அத்தைதான் எல்லாம் அவங்களுக்கு. இப்போ அண்ணா கேட்டுக்கிட்டார்னு அண்ணா கூட இருக்காங்க. ஸ்கைப்ல பேசும்போது இப்போதும் அதே குட்டிம்மா, அம்மாச்சிதான் நான் அவங்களுக்கு. மூத்தவளுக்கு என் வயசு. ஊர்ல இருக்கா. ரெண்டாவது பையனும் சுவிஸ்ல. மூணாவது இப்போ நாங்க போயிருக்கிற டெர்ர்ரர். நாலாவது பொண்ணு சுவிஸ் வரத்துக்காக வெயிட் பண்ணிட்டு வருங்கால கணவன் கூட ஸ்கைப்பும் பேச்சுமா இருக்கா.  கடைசிப் பையன் கத்தார்ல. எங்க செல்லம். லேட்டஸ்ட்டா தன் காதல் பத்தி சின்ன மச்சிக்கு மட்டும் தான் தெரியும்னு ஃபேஸ்புக்ல ஒரு வெடிகுண்டை வீசி விட்டிருக்கு. எல்லாரும் யார்னு சொல்லுனு என்னைய குடையறாங்க.

அப்பா கிராமம்தான் ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியோட எல்லை. என்னவர் நார்வே வரத்துக்காக இவங்க வீட்ல தங்கி இருந்தார். இவ சைக்கிள்லதான் டபுள்ஸ் ஏத்திக்கிட்டு எல்லை வரைக்கும் கொண்டு வந்து விட்டிட்டு இவ அப்டியே ஸ்கூல் போனா. தன்னோட ராசிதான் இவர் எங்கேயும் சிக்காம நார்வே வந்ததா சொல்வா. அவ கணவன் ரூபன் அண்ணாவ எங்களுக்கு ஊர்லவே தெரியும். ரொம்ப நல்லவர். இவள நல்லபடியா பாத்துக்கிறார்.

இவளோட குட்டிப்பாப்பா.. அட்ஷகி. எட்டு மாசம். சொன்னா நம்புங்க. அவங்க ஸ்கைப்ல என் கிட்ட மட்டும்தான் பேசுவாங்க. சிரிப்பாங்க. தூக்க வாங்கனு கை நீட்னா வருவாங்க. எல்லா கூத்தும் காட்டுவாங்க. மத்தவங்கள லுக்கு ஒன்லி. ரொம்ம்ம்ம்ம்ம்ப ஆசையோட போறேன் அவங்கள பாக்க.

எங்களுக்கு பிடிச்ச மாதிரி கார்லதான் டூர். ஐஸ்லாண்ட்ல எரிமலை வெடிச்சப்போ பசங்க சொன்னாங்க. இந்த தடவை ஃப்ளைட்ல எங்கேயும் போக வேண்டாம். பயமா இருக்கு. கார்ல போகலாம்னு. அவ்ளோ ஜாலியா இருக்கும். கண்ணாளனுக்கு லாங் ட்ரைவ்னா உயிர். 30km – 60km, சில இடங்களில 80km. இது தான் இங்க ஸ்பீட் லிமிட்.  தலைநகர் ஆஸ்லோ தாண்டிட்டோம்னா அப்புறம் மலைப்பாதை கிடையாது. ஸ்பீட் குறைஞ்சது 120km. கேக்கணுமா என்னவர. கார் இப்டித்தாங்க போகும்.

j (2)

மீதி பயண அனுபவங்கள் அடுத்த பதிவுகள்ல. (தொடரும் தொல்லைஸ் நண்பர்ஸ்.. திடப்படுத்திக்கோங்க) ப்ளான் இதுதான்.

போம்போது நார்வே –  டென்மார்க். சித்தி வீடு ரெண்டு நாள்.

டென்மார்க் – சுவிஸ்.

வரும்போது சுவிஸ் – ஹாலண்ட். ஒரு மச்சாள், ரெண்டு மச்சான்ஸ் வீடுகள்ல ரெண்டு நாள்.

ஹாலண்ட் – டென்மார்க். மறுபடி சித்தி வீடு. ஒரு நாள்.

டென்மார்க் – சுவீடன். முக்கியமான ஒருத்தங்கள பாக்கணும்.

சுவீடன் – நார்வே. ஹோம் ஸ்வீட் ஹோம்.

வர்ட்டா..

14 நல்லவங்க படிச்சாங்களாம்:

எல் கே said...

naaall oora sutthi parthuthu vanthu photovoda eluththunga

Anonymous said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. காதுல புகையெல்லாம் ஒண்ணும் இல்லை :)))

சமாளிச்சோமில்ல... என்ஜாய் சுசி :))

Unknown said...

என்னவோ திருநெல்வேலி-மதுரை-திருச்சி-சென்னை போயிட்டு சென்னை-திருச்சி-திண்டுக்கல்-மதுரை-திருநெல்வேலின்னு ரிட்டன் வர மாதிரி சொல்றீங்க

சீமான்கனி said...

///“ஏய்.. நான் பூவுடி.. அப்டித்தான் தெரியும்”//

அப்போ அடுத்த ப்ரோபில் படம் பூவுதான்...சுசிக்கா நல்லா ஜாலியா ஊர்சுத்திட்டு வாங்க...வந்ததும் பேசிக்கலாம்...

ராமலக்ஷ்மி said...

இனிதே கழியட்டும் விடுமுறை:)! வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

குணா மச்சான் இந்தப்பேயை அப்டியே எங்கயாச்சும் விட்டுப்போட்டு வந்துடு மச்சான் தொல்லை தாங்கலை...

ஊர் சுத்த போயிட்டு ஆபிஸ்ல ஆணின்னு பொய் சொன்ன சுசிக்கு கண்டனங்கள்...

நல்லபடியா ஊர்சுத்த வாழ்த்துக்கள்..கார்ல போறிங்க கவனமாவே போங்க ...

Anonymous said...

சொல்லாமல் போயிட்டேன்னு நான் கோபமா தான் இருந்தேன் ஆனா இப்போ உங்க சொந்தகாரகளை பார்க்கா போகும்போதும் எங்களை எல்லாம் மறக்காமல் பதிவு போட்டிட்டு போனியே இது என்னே ரொம்ப டச் பண்ணிச்சு ..இனிய தோழியே ட்ரிப் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க ..உங்க எல்லா சொந்தங்கல்க்கும் என் வணக்கம் தெறிவிக்கிறேன் ...அடுத்த பதிவுக்காகே காத்திட்டிருப்பேன்..

ஜெய்லானி said...

இன்னும் அனுபவங்கள் படங்களும் போடுங்க .ஆனா பூட்டு மட்டும் போட்டுடாதீங்க

கார்க்கிபவா said...

அது யாருங்க ஸ்வீடன்ல??

ஸ்வீட்டானவங்களா?

என்னவோ வேளச்சேரில இருந்து திருவான்மியூர் போயி, அபப்டியே அடையாறு வழியா மயிலாப்பூர் போயிட்டு, மவுண்ட் ரோட டச் பண்ணி சைதாப்பேட்டை வழியா வேளச்சேரி ரிட்டர் மாதிரி சொல்றீங்க.. ம்ம்

'பரிவை' சே.குமார் said...

Mmmm... Enjoy Tour. Vazhththukkal

Madumitha said...

இனிமையான பயணத்திற்கு
வாழ்த்துக்கள்.
தங்களின் பயண அனுபவத்தை
எதிர்பார்க்கிறேன்.

கோபிநாத் said...

\\என்னவோ வேளச்சேரில இருந்து திருவான்மியூர் போயி, அபப்டியே அடையாறு வழியா மயிலாப்பூர் போயிட்டு, மவுண்ட் ரோட டச் பண்ணி சைதாப்பேட்டை வழியா வேளச்சேரி ரிட்டர் மாதிரி சொல்றீங்க.. ம்ம்\\

ஒரு ரீப்பிட்டு ;))))

என்ஜாய் ;-)))

பித்தனின் வாக்கு said...

mukkiayamana oruthar Hema thana. Have a nice journy

Thamira said...

வாழ்த்துகள் சுசி.!