இந்த வாரம் பூரா நல்லாவே பிஸி. டீம் லீடர் வெகெஷன்ல போனதாலா அவங்க ஆணியும் என் கைல. உங்க கமண்ட்ஸ் எல்லாம் படிச்சேன். ரொம்ப நன்றி. கண்டிப்பா பதில் எழுதுவேன். அது வரைக்கும் பொறுத்தருள்க. பதிவுகள் அது பாட்டுக்கு ஷெட்யூல் பிரகாரம் வெளிவந்துட்டு இருக்கு. சமத்தா. இது தவிர.
விஜியோட இந்த இடுகை படிச்சதில இருந்து மனசு முழுவதும் ஒரு கோபம், ஆற்றாமை, அழுகைனு கலவையா ஒரு உணர்வு. படிச்ச எல்லாரும் இந்த அனுபவத்துக்கு ஆளாகி இருப்பிங்கனு நினைக்கிறேன். பகிர்ந்து கொண்டதுக்கும் பகிர அனுமதிச்சதுக்கும் நன்றி விஜி.
சுனிதா கிருஷ்ணன்.. எனக்கு அவங்கள பத்தி சொல்ல வார்த்தையே வரல. என்ன ஒரு தைரியம்.. கலங்கிய கண்களும் பிரமிப்புமா அவங்க பேச்ச கேட்டு, பாத்துட்டு இருந்தேன். அவங்கள தீர்க்காயுசோட வாழ வை இறைவானு வேண்டிக்க தவறல. அவங்களுக்கு என் மரியாதை நிறைந்த வணக்கங்கள்.
அந்த பிஞ்சு முகங்கள் இன்னமும் மனசில இருக்கு. எப்டி முடியுது அவங்களால?? இந்தப் பிஞ்சுப் பூக்கள கடிச்சுக் குதற?? என்ன வகை இவங்க?? மிருகம்னு கூட சொல்ல முடியல. என்னோட அக்காச்சி நேர்ல பாத்த ஒரு நிகழ்வு. அப்போ அவ டீச்சர் ட்ரெய்னிங்ல இருந்தா. ஒரு ஃப்ரெண்ட் கூட பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது பைக்ல ரெண்டு பேர் வந்தாங்களாம். கூட அஞ்சு ஆறு வயசில ஒரு குட்டிப் பொண்ணு. ஒருத்தர் பைக்ல இருக்க மத்தவர் இறங்கி கடைக்குள்ள போனாராம். பைக்ல மற்றவர் இவங்களுக்கு முதுகு காட்டி இருந்தாராம். பொண்ணு அழுற சத்தம் கேட்டுதாம். அப்போ கடைக்கு போனவர் திரும்பி வர குட்டிப் பொண்ணு இன்னும் சத்தமா அழுதிட்டே சொன்னாங்களாம் ”அப்பா.. இந்த அங்கிள் கிள்றார் ரொம்ப வலிக்குது”னு. அவங்க கை காட்ன இடம்?? அங்க இருந்த எல்லாரும் பாத்திட்டாங்க இதை. அப்பா அங்கிளுக்கு பளார்னு ரெண்டு அறை விடுறத்துக்கு பதில் இவங்களையும் சுத்தியும் பாத்துட்டு “சரிடாம்மா.. இதோ நாம வீட்டுக்கு போயிடலாம்”னு சொல்லி குழந்தை வாய இறுக்கி மூடிட்டே போய்ட்டாங்களாம். இப்போவும் அக்காச்சி சொல்வா. லச்சு கவனம்டி. நீ போகாத இடத்துக்கு தனியா யார் கூடவும் அனுப்பாத. ஆண்கள் சில விஷயங்கள நினைக்க மாட்டாங்க. அந்த கணம் போதும் ஒரு மிருகம் தன் வேலைய காட்டனு.
நான் ப்ளஸ் டூ முடிச்சிட்டு ரிஸல்ட்கு வெயிட் பண்ணிட்டு இருந்த சமயம். அப்போ எங்க ஊர்ல பல் மருத்துவர் இருந்தாங்க. ஆனா மருந்துதான் இல்லை. இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள்ள போக வேண்டிய கட்டாயம். அப்பா கூட போனேன். உயிர் போனாலும் பரவால்லை மானம் போயிரக்கூடாதுங்கிறதுதான் அப்போ ஒவொரு பெண்ணோடதும் வேண்டுதல். வயது இங்க கணக்கில இல்லை. அப்பா ஃப்ரெண்ட் வீட்ல தங்கி இருந்தோம். அங்க என் கஸின் ஒருத்தி பேயிங் கெஸ்டா இருந்தா. படிக்கிறத்துக்காக. ஒரு நாள் அவ வர வேண்டிய நேரத்துக்கு டியூஷன் முடிஞ்சு வர்லை. வீட்டுக்கார ஆண்ட்டி அவ்ளோ சத்தம் போட்டாங்க. எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு. அப்போ அவங்க சொன்னாங்க. ”பத்து வயசு கூட இருக்காதும்மா ஒரு பொண்ணு. ரெண்டு மூணு பேர் சேர்ந்து குதறியிருக்காங்க. ஹாஸ்பிட்டல்ல அவ அழுத சத்தம் இன்னமும் என் காதில கேக்குது. நிலைமை தெரிஞ்சும் நாமளே எதுக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கி குடுக்கணும் அவங்களுக்கு”ன்னு.
இங்க இன்னமும் மோசம். பையன் பொண்ணு வித்யாசமில்லாம சீரழிக்கிறாங்க. lommemann (pocket man) ன்னு ஒண்ணு ரொம்ப வருஷமா சுத்திட்டு இருந்துது. 10-13 வயசு பையன்கள்தான் அதனோட இலக்கு. அது பேண்ட் பாக்கெட்ல கை விட்டு பாக்க சொல்லுமாம். சாக்லெட், பணம் இருக்கும்னு. பாக்கெட் ஓட்டையா இருக்குமாம். போலீஸ் யார்னு கண்டு பிடிச்சும் கைது செய்ய முடியாம இருந்துது. ஆதாரம்?? Erik Andersen அது பேரு. 58 வயசு. 1999 – 2006 காலப்பகுதியில 66 பையன்கள அப்யூஸ் பண்ணி இருக்கு. அது அசந்த ஒரு நேரத்தில போன வருஷம் எங்க ஊர்ல வச்சுத்தான் பிடிச்சாங்க. பணக்காரன். படிச்சவன். பையன் கூட நல்ல வேலைல இருக்கார்.
கைதுக்கு அப்புறமா தான் நிறைய்ய பேர் போலீஸ் கிட்ட கம்ப்ளைண்ட் குடுக்க ஆரம்பிச்சாங்க. இன்னமும் பலர் வெளிய சொல்ல வெக்கத்தில மறைச்சு வச்சிருக்கலாம்னும் சொல்றாங்க. தண்டனை என்ன தெரியுமா?? 6-9 வருஷ சிறை. 2,525,000kr காம்பன்சேஷன். 500,000kr சட்டச் செலவுகள். இது போதுங்களா அதுக்கு?? கல்லால அடிச்ச்ச்ச்ச்சே கொல்லணும். என் கலீக் சொல்வா. ”இதுங்கள எல்லாம் ஒரு கம்பிக் கூட்டுக்குள்ள பிறந்த மேனியா விட்டுட்டு, வெளிய குட்டிக் கல்லு நிறைய்ய வச்சிருக்கணும். யார் வேணா எப்ப வேணா கல்லெடுத்து அடிக்கலாம். நான் எவ்ளோ செலவுன்னாலும் போயி அடிச்சிட்டு வருவேன். ஆனா உயிர் போகாம சாப்பாடு தண்ணில்லாம் ஒழுங்கா குடுக்கணும். அப்போதான் இது மாதிரி இன்னொண்ணு உருவாகாது”ன்னு. இப்போ சதுவுக்கு Voss cup football tournament நடந்துதுன்னு சொன்னேனே. இப்டியான இடங்கள்ல இந்த pedophiles சுத்திட்டு இருப்பாங்களாம். அதுகளுக்குன்னு ஒரு பெரிய நெட்வெர்க்கே இருக்குதாம்.
பசங்க தனியா வெளிய போறதுன்னா எப்டி நடந்துக்கணும்னு சொல்லி வச்சிருக்கோம். தனியா போறதும் தவிர்க்க முடியாதே. பர்த்டே பார்ட்டி, ஸ்கூல் ட்ரிப், ஆக்டிவிட்டிஸ்னு போக வேண்டிய கட்டாயம் இருக்கு. எந்த மிருகம் எங்க இருக்குமோ?? அன்பா, மிரட்டலான்னு பல வகைகள்ல அவங்க தாக்குதல் இருக்குதே. ஸ்கூல்லவும் குட் டச், பேட் டச் பத்தி எல்லாம் சொல்லிக் குடுத்திருக்காங்க. அது மட்டுமில்லாம பசங்க கிட்ட நாமளும் ஓப்பனா பேசுறது ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். தனக்கு என்ன ஆகுதுன்னே தெரியாம பாதிக்கப்படுறவங்கதான் அதிகம்னு சொல்வாங்க. இதுக்கு மேல எனக்கு சொல்லத் தெரியலைங்க. ஆத்திரம்.. இல்லை இல்லை.. கொலைவெறிதான் வருது.
17 நல்லவங்க படிச்சாங்களாம்:
எரிக் ஆண்டர்சனுக்கு நல்ல தண்டனை நீங்க கொடுத்தது அப்டித்தான் உயிர் போகாம வலிக்க வலிக்க அடிக்கணும்...
சுனிதா அவர்களக்கு என் மரியாதை நிறைஞ்ச வணக்கம் தெரிவிக்கிறேன் ..சுசி நீங்க சொன்ன மாதிரி இந்த மாதிரி ஆளுகளை கல்லால் அடிச்சு கொன்னா தான் மத்தவங்க திருந்துவாங்க ...பசங்களை வெளியில் தனியா அனுபறது ரொம்ப ஆபத்தான விஷயம் தான் .எல்லா பெற்றோரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது
சுசி, பகிர்தலுக்கு நன்றி. இது சிதறல்கள் தீபாவிடம் இருந்து நான் எடுத்து பகிர்ந்தது.
பகிர்தலுக்கு நன்றி.
;(
சுனிதா கிருஷ்ணனுக்கு வணக்கங்கள். மயில் பஸ்ல கூட பகிர்ந்து இருந்தாங்க.
:((((
இப்படி உலகம் கெட்டழியரத பாக்கரத விட இந்த உலகம் சீக்கரமா அழுஞ்சு போனாலே தேவல..2012 வரை பொருமயா இருக்கனுமா ஆன்டவா??
வணங்க வேண்டிய பெண்மணி சுனிதா கிருஷ்ணன்.
அரபு நாட்டில இருக்கிற தண்டனை எப்ப வருமோ அப்பதான் இதெல்லாம் சரிவரும் , ஒரு பயம் வரும் . (( ஈரானில் பொது இடத்தில தூக்கு தண்டனை இப்பவும் உண்டு --சிக்னலில் கிரேனில் கயிறு கட்டி ஒரே நேரத்தில 10 பேருக்கு துக்கில் போட்டதும் உண்டு ))
அரபு நாட்டில இருக்கிற தண்டனை எப்ப வருமோ அப்பதான் இதெல்லாம் சரிவரும் , ஒரு பயம் வரும் . (( ஈரானில் பொது இடத்தில தூக்கு தண்டனை இப்பவும் உண்டு --சிக்னலில் கிரேனில் கயிறு கட்டி ஒரே நேரத்தில 10 பேருக்கு துக்கில் போட்டதும் உண்டு ))
நியாயமான கொபம்.
இதெல்லாம் கேள்வி படும்போது
அடி வயிறு கலங்குகிறது.
எல்லார் வீட்லயும் குழந்தைங்க
இருக்கு.
கடவுளே...
ஆண்டவனே என்ன சுசிக்கா இது !!??ரத்தம் கொதிக்குது...இவனுங்க எல்லாம் என்ன ஜென்மம்....இருங்க மணசு விட்டு அவன திட்டிட்டு வர்றேன்...பகிர்வுக்கு நன்றி சுசிக்கா...பாராட்டுகளும்...
அதேதான் வசந்த். இதுங்க எல்லாம் சாக கூடாது.
V V V V V
நன்றி சந்தியா. சரியா சொன்னிங்க. பெத்தவங்க தான் முதல்ல யோசிக்கணும்.
V V V V V
நன்றி விஜி. தீபாவுக்கும்.
நன்றி குமார்.
V V V V V
நன்றி கோபி.
V V V V V
ஓ.. இன்னமும் நான் பஸ்ல ஏறல அம்மிணி. விரைவில்..
நன்றி கார்க்கி. கார்க்கிதானே??
V V V V V
முதல் வருகைக்கு நன்றி காயத்ரி. அப்டியும் இதுங்க அழியட்டும். நாம வாழலாம்.
V V V V V
நன்றி அக்கா.
சில விஷயங்கள் சில நாடுகள் செய்றது சரியாத்தான் இருக்கும். இங்க அப்டி பண்ணா அவ்ளோதான். இந்த மிருகத்துக்கே மனிதாபிமானம் இல்லாம இவ்ளோ கொடும் தண்டனை குடுத்தாச்சுன்னு அது தரப்பு வழக்கறிஞர் சொல்லுது.
V V V V V
அதே பயம்தான் எனக்கும் உடனவே வரும் மதுமிதா.
V V V V V
நல்லா திட்டுங்க கனி.
Post a Comment