”தலை வலிக்குது.. உம்மா??”
என்பதாய் நானோ
”தலை வலிக்குதா.. உம்மா!!”
என்பதாய் நீயோ
வாழ்ந்திருக்கிறோம்
எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது
வழக்கம்போல கேட்கத்தான் விழைகிறேன்
புதியதான உன் கோவங்களும்
புரியாதது போன்ற பாவனைகளும்
முகம் நிறைத்த கசப்புக்களும்
எட்டித் தள்ளுவதால்
மனதோடு செத்துப் போகிறது கேள்வி
மறக்காமல் தலைவலியை
மடங்காக ஆக்கிவிட்டு.
<<<<< >>>>>
<<<<< >>>>>
வெறுப்பை உமிழும் விழிகள்
கசப்பாய் பேசும் உதடுகள்
அலட்சியம் நிறைந்த முகம்
யாரையோ பார்ப்பதாய்
ஒரு புது உணர்வு
எனக்குள் எனை மீறித் தோன்றிவிட
தொலைந்து போன என்னவனை
கணமும் தேடுகிறேன்
பழைய நினைவுகளை தட்டிப் புரட்டி
புதிய நினைவுகளை எட்டி விரட்டி.
17 நல்லவங்க படிச்சாங்களாம்:
பழைய நினைவுகளை தட்டி புரட்டி புதியவன் செய்யும் புதிய யுக்தி புதிராய் இராமல் புரிதலை புத்திக்கு புகட்டுகிறது..
சூப்பர் சுசிக்கா ...
உணர்வு பூர்ணமான வரிகள். அருமை
iffa ellam niraiya kavithaikal varukinrathu pola. santhosama iruntha sari. kunalan sir then kulanthaikal eppadi irukkanga?. hope all are fine safe. wishing the same.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா.. இந்த காதலர்கள் இம்சை தாங்க முடியலைடா சாமி.. எதுக்கெடுத்தாலும் ஒரு கவுஜ எழுதி கொல்றாங்க :))
ஒரு புது உணர்வு
எனக்குள் எனை மீறித் தோன்றிவிட
தொலைந்து போன என்னவனை
கணமும் தேடுகிறேன்
பழைய நினைவுகளை தட்டிப் புரட்டி
புதிய நினைவுகளை எட்டி விரட்டி
.....அருமையான வரிகள்... :-)
"வெறுப்பை உமிழும் விழிகள்
கசப்பாய் பேசும் உதடுகள்
அலட்சியம் நிறைந்த முகம்
யாரையோ பார்ப்பதாய்
ஒரு புது உணர்வு
எனக்குள் எனை மீறித் தோன்றிவிட
தொலைந்து போன என்னவனை
கணaமும் தேடுகிறேன்"
அருமையா இருக்கு தோழி ,ஆனாலும் சோக கவிதை மனதுக்கு கஷ்டம்மா இருக்கு
அருமை. நிகழ்ந்தே விடுகிற நிதர்சனமான உண்மை.
ஏன் சுசி... கசப்பெல்லாம் சீக்கிரம் இனிப்பாகிடும்.
//மயில் said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா.. இந்த காதலர்கள் இம்சை தாங்க முடியலைடா சாமி.. எதுக்கெடுத்தாலும் ஒரு கவுஜ எழுதி கொல்றாங்க :))//
அதானே , இது பிப்ரவரி மாதம் கூட இல்லையே :)
//மனதோடு செத்துப் போகிறது கேள்வி
மறக்காமல் தலைவலியை
மடங்காக ஆக்கிவிட்டு.//
எத்தினி மடங்குன்னு சொல்லவேயில்ல?
வர வர தலைப்புலயே சிக்ஸர் அடிக்கிறீகளே சுசீ...
வலி இல்லாத காதல் ஏது?
காதலில் புறக்கணிப்பு என்பது
கொடும்வலிதான். கவிதையின்
விழிகளில் கண்ணீர் வழிகிறது.
துடைக்க வேண்டிய விரல்
நீளட்டும்.
அ ஆ இ ஈ உ ஊ......
சூப்பர்..
சான்சே இல்ல..
க்யூட்.
அட்டகாசம்..
நான் ஃபோட்டோல இருக்கிற பொண்ண சொன்னேன்.:)))
நோ நோ நோ..அடிக்காதிங்க
தொலைந்து போன என்னவனை..
இப்படி நீங்கள் நினைத்த நொடியிலிருந்து தான் அவர் தொலைந்து போக துவங்கியிருப்பார் ...
கசப்பும் உடையதுதான் இல்லறம்.
அருமையா இருக்கு தோழி.
சோக கவிதை மனதுக்கு கஷ்டம்மா இருக்கு.
Post a Comment