Pages

  • RSS

27 June, 2010

ஆகஸ்ட் 18..

நான் நடந்தால் அதிரடி.. போன புதன் கிழமை. 12:20 க்கு ஆஃபீஸ்ல வேலையில மூழ்கி இருந்த என் மொபைல் பாடிச்சு.

”என்னம்மா..”

“அம்மா நாங்க அரோஷா (பாகிஸ்தான் பொண்ணு, அம்மு க்ளாஸ் மேட்) வீட்டுக்கு போலாமா.. அப்பா கேக்க சொன்னார்”

“அப்பாவும் சரினு சொன்னா போங்க. சேர்ந்து போய்.. சேர்ந்து வரணும். சரியா”

12:50 க்கு மறுபடி நான் நடந்தா..

”அம்மா நாங்க அரோஷா வீட்டுக்கு வந்திட்டோம்”

போய் சேர்ந்ததும் சொல்லணும்கிறது எழுதாத சட்டம்.

14:06 நான் நடந்தா..

“என்னடாம்மா”

”அம்மா நான் சது பேசறேன். அரோஷா இல்லை.. அவங்க என்ன விளாட்டுல சேர்த்துக்க மாட்டாங்களாம். என் கூட சண்டை போடறாங்க”

“ஓ.. அக்காச்சி எங்கப்பா”

“அவங்க அரோஷா கூட இருக்காங்க”

“சரி. அவங்க கிட்ட ஃபோன குடுங்க”

கரபுர கரபுர சத்தம் + பேச்சு சத்தம்.

“அம்மா.. என்னம்மா”

“தம்பி கூட அரோஷா சண்டை போடறாங்களாம். என்னாச்சு”

“இல்லம்மா.. அவங்க சண்டை போடலை.. தம்பிதான் அவ,,”

ஃபோன் பிடுங்கப்பட்டு..

“இல்லம்மா.. அக்காச்சி பொய் சொல்றாங்க. அரோஷாதான் முதல்ல திட்னா”

பின்னணியில அரோஷா + அம்மு குரல் மறுப்பாய்..

நேரம் பார்க்கறேன்.. 14:20. ஆணிய பார்க்கறேன். கொஞ்சம் குவியல்தான்.

“தம்பி. அம்மா ஒண்ணு சொல்றேன். கேக்கரிங்களா. அப்டியே ஃபோன கட் பண்ணிட்டு ரெண்டு பேரும் முதல்ல வீட்டுக்கு போங்க. சரியா”

”சரிம்மா”

14:26. நான் நடந்தா..

“என்னம்மா”

“அம்மா.. தம்பி அரோஷா கூட ஃப்ரெண்ட் ஆயிட்டார். நாங்க இன்னும் கொஞ்ச நேரம் விளையாடவா. ப்ளீஈஈஸ்..”

“ம்ம்”

14:31. நான் நடந்த்..

”என்ன்னம்மா”

“அம்மா நான் தம்பி.. அரோஷா இல்லை.. அவ மறுபடி சண்டை போடறா”

“தம்பி.. முதல்ல ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க சரியா.. அம்மா வேலை முடிக்கணும். ஓக்கே.. கிளம்புங்க.. பை”

14:36. நான் ந..

“வீட்டுக்கு போயாச்சா. சைக்கிள்ள போனிங்களா என்ன”

“இல்லம்மா நாங்க இன்னும் போல. அரோஷா அவ அண்ணா கிட்ட சொல்லி எனக்கு அடிக்க சொல்வாங்களாம்”

அவருக்கு 20 வயசு. Polandல படிச்சிட்டு இருக்கார்.

“தம்பி இன்னும் நீங்க வீட்டுக்கு போலையா.. அம்மால்ல போக சொன்னேன்”

“இல்லம்மா.. நாங்க எப்டி போறது. சாவி கொண்டு வர்லையே”

“எதுக்கு சாவி விட்டு போனிங்க. சரி அப்பா வந்திருப்பார்ல. போங்க”

“அப்பா இன்னும் வர்லையாம். கடைக்கு போயிருக்காராம்”

“சரி பரவால்ல. அம்மா வந்திடுவேன். நீங்க முதல்ல கிளம்”

“நீங்க வர ட்ராஃபிக்ல லேட்டானா??”

“லேட்டானா என்ன. வெளிய ரெண்டு பேரும் வெயிட் பண்ணுங்க. அம்மா இல்லை அப்பா வந்துடுவோம்”

“அதெப்டி.. வெளிய வெயிட் பண்ணா கால் வலிக்கும்”

“அதான் வெளிய பெஞ்ச் இருக்கில்ல அதில உக்காருங்க”

“அதில எவ்ளோ நேரம்னு உக்கார்ரது.. போர்மா”

”இதோ பாருங்க.. முதல்ல.. ரெண்டு பேரும்.. வீட்டுக்கு.. கிளம்புங்க.. புரியுதா..”

“அம்மா.. இல்லம்மா..”

“அம்மாச்சி.. அம்மா வேலை முடிச்சு மூணு மணிக்கு கிளம்பிறதா இருக்கேன். ஓக்கே.. வீட்டுக்கு போங்க.. வேற பேச்சு வேண்டாம். நாங்க வர வரைக்கும் ஒண்ணு பெஞ்ச்ல இருங்க.. இல்லை சைக்கிள் ஓட்டுங்க.. அம்மா சொல்றது கேக்குதில்ல.. ஃபோன வச்சிட்டு அம்மா சொன்னத செய்ங்க”

கட் பண்ணிட்டு, மொபைல டெஸ்க்ல வைக்கிறத்துக்குள்ள கலீக்ஸ் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் ங்ஙேஏஏஏ..

“பரவால்லையே இன்னைக்குத்தான் ஒரு அம்மா ஸ்ட்ரிக்டா நடந்துக்கிட்டத நாங்களும் கேட்டோம்”

“ஹிஹிஹி.. கேட்டிங்களா”

”ஆமாம்.. முதல் நாளே இப்டின்னா ஆகஸ்ட் 18 வரைக்கும் என்ன பண்ண போறே”

அவ்வ்வ்வ்..

போன வெள்ளிக்கிழமை. இரவு 8 மணிக்கு பக்கத்து வீட்டு பொண்ணு அமாலிய வந்தாங்க.

“நான் உங்க வீட்ல இன்னைக்கு தூங்கலாமா”

“ஓ.. தாரளமா”

உடனவே என் வாரிசுங்க..

“எத்தன நாள் அவங்க இங்க தூங்கலாம்??”

நான் கிர்ர்ர்ர்ர்..

“இல்லம்மா. ஆகஸ்ட் 18 வரைக்கும் நிறைய்ய்ய நாள் இருக்கே. சொல்லுங்க.. எத்தன நாள்??”

ஆவ்வ்வ்வ்

~~  ~~  ~~  ~~  ~~

boy-girl-balloons

வேற ஒண்ணும் இல்லைங்க.

ஆத்தா எங்களுக்கு லீவு உட்டாச்சூஊஊஊஊஊ..ங்கிறத பசங்க கோரசா இப்டி ஃபோன்ல சொன்னாங்க.. ”அம்மாஆஆஆ.. எங்களுக்கு லீவு விட்டாச்சு.. வீட்டுக்கு போயிட்டிருக்கோம்” காதுல புகையோட கேட்டுட்டு இருந்தேன். அவங்களுக்கு போன புதன் ஸ்கூல் லீவு விட்டாச்சு.. இன்னும் எத்தனை மாசம், வாரம், நாள், மணி, நிமிஷம், செக்கன் இருக்கு லீவுக்குன்னு எண்ணிப் பாத்து என்னய நொந்து போக வச்சிட்டாங்க. அன்னிக்கு.. அதாங்க புதன் கிழமை.. பதினோரு மணியோட பள்ளி முடிஞ்சுது. எனக்கு ஃபோன் வந்தது 11:10 க்கு. அதுக்கப்புறம் நடந்தது தான் மேல சொன்னது.

என்ன செய்ய. பள்ளி விடுமுறைன்னா பாட்டி வீட்டுக்கோ, உறவுக்காரங்க வீட்டுக்கோ அனுப்பி வைக்க முடியுமா எங்களால. இப்டித்தான் சமாளிக்க வேண்டியதா இருக்கு. இங்க சம்மர்ல ஸ்கேட்டிங், கராத்தே, ஸ்விம்மிங்னு  எந்த அக்டிவிட்டிசும் கிடையாது. இனி ஸ்கூல் தொடங்கும்போதுதான் எல்லாம் தொடங்கும். சம்மர் காம்ப் கூட கிடையாது. நான் வீட்டுக்கு வரதுக்கும் அவர் வேலைக்கு கிளம்புறதுக்குமான இடைவெளியில பக்கத்து வீட்டு பசங்க கூட இருக்காங்க. கொஞ்சம் வளந்துட்டதால பயமில்லாம நிம்மதியா இருக்கு.

மக்கள்ஸ்.. வெயிட் பிளீஸ்.. பசங்களுக்கு லீவு விட்டாச்சுங்கிற ஒற்றை வரிய.. இவ்ளோ பத்தி பத்தியா எழுதின என்ன திட்ட முடியாது நீங்க. எல்லாத்துக்கும் காரணம் சின்ன அம்மிணிதான். இல்லையா அம்மிணி.. நீங்கதானே கமண்ட்ல சொன்னிங்க

//இதையெல்லாம் சேமிச்சு வையுங்க. பெரியவங்க ஆனப்பறம் அவங்களாலயே நம்ப முடியாது.//

அப்டின்னு. இப்டி சேமிச்சா கரெக்டுங்களா?? இல்லைன்னா சொல்லுங்க. இன்னும் ரெண்டு பத்தி சேர்த்துடலாம்.

வர்ட்டா..

23 நல்லவங்க படிச்சாங்களாம்:

Anonymous said...

ஹஹா, குட்டீஸ் பெரிசானதும் என்னைத்திட்டாம இருந்தா சரி :)

இன்னும் எங்க வீட்டுல சின்னதுல நீ இப்படி சொல்வே, இப்படி வாயாடுவேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. :) சரி போனாப்போகுது அவங்களுக்கும் மலரும் நினைவுகள் இருந்துட்டு போவுது ஃப்ரீயா வுடறதுதான்.

கார்க்கிபவா said...

அப்போ உங்க விடுதலை ஆகஸ்ட் 18 அன்னைக்கா?

ராமலக்ஷ்மி said...

Let them enjoy:)!

Anonymous said...

ஹைய்ய்ய் இப்பத்தான் நான் 70 நாள் பாஸ் பண்ணினேன்...:))

Madumitha said...

எங்க வீட்ல பசங்களுக்கு
எப்படா விடுமுறை விடும்னு
காத்திட்டு இருப்போம்.

பா.ராஜாராம் said...

:-))

//என்ன செய்ய. பள்ளி விடுமுறைன்னா பாட்டி வீட்டுக்கோ, உறவுக்காரங்க வீட்டுக்கோ அனுப்பி வைக்க முடியுமா எங்களால//

ரொம்ப கஷ்ட்டமான வரிகளாக இருந்தது சுசி.

ஊர்ல கூட, பாட்டிவீடு, உறவுக்காரங்க வீட்டை எல்லாம் இப்போ, கம்ப்யுட்டர் கிளாசும், வீடியோ கேம்சும் பிடிசிக்கிட்டாச்சு.

ஜெய்லானி said...

//இப்டி சேமிச்சா கரெக்டுங்களா?? இல்லைன்னா சொல்லுங்க. இன்னும் ரெண்டு பத்தி சேர்த்துடலாம்.//

(குட்டீஸ்)வரலாற்று சுவடுகள் எப்பவுமே நல்லாவே இருக்கும் . தாராளமா எழுதுங்க . படிக்கவே இனிமையா இருக்கு..!!

சீமான்கனி said...

நல்லவேலை சுசிக்கா "நான் நடந்தா"
குடீஸ் மொபைல் ரிங்டோனா இல்லாம போச்சு...

கோபிநாத் said...

;-))))ரைட்டு ;)

ப்ரியமுடன் வசந்த் said...

//என்ன செய்ய. பள்ளி விடுமுறைன்னா பாட்டி வீட்டுக்கோ, உறவுக்காரங்க வீட்டுக்கோ அனுப்பி வைக்க முடியுமா எங்களால. இப்டித்தான் சமாளிக்க வேண்டியதா இருக்கு. //

ஏன் அனுப்பிவச்சா நார்வே பாங்க் இருப்பு குறைந்துவிடும் என்ற பயமா

:(

டேய் பசங்களா பெரியவங்களானதும் நீங்களும் இவங்க ரெண்டுபேரையும் வீட்டுக்குள்ளாறயே போட்டு பூட்டி வைங்கடா...

Chitra said...

என்ன செய்ய. பள்ளி விடுமுறைன்னா பாட்டி வீட்டுக்கோ, உறவுக்காரங்க வீட்டுக்கோ அனுப்பி வைக்க முடியுமா எங்களால. இப்டித்தான் சமாளிக்க வேண்டியதா இருக்கு. இங்க சம்மர்ல ஸ்கேட்டிங், கராத்தே, ஸ்விம்மிங்னு எந்த அக்டிவிட்டிசும் கிடையாது. இனி ஸ்கூல் தொடங்கும்போதுதான் எல்லாம் தொடங்கும். சம்மர் காம்ப் கூட கிடையாது. நான் வீட்டுக்கு வரதுக்கும் அவர் வேலைக்கு கிளம்புறதுக்குமான இடைவெளியில பக்கத்து வீட்டு பசங்க கூட இருக்காங்க. கொஞ்சம் வளந்துட்டதால பயமில்லாம நிம்மதியா இருக்கு.


...... அப்பா.... நிஜமா நிம்மதிதான்..... சம்மர்னா ஜாலி தான்!

சுசி said...

உங்கள திட்டமாட்டாங்க அம்மிணி. என்ன திட்டாம இருந்தா சரி :))

V V V V V

எனக்கு இனிமே விடுதலையா?? என்ன சொல்றிங்க கார்க்கி??

V V V V V

அதேதான் அக்கா.

சுசி said...

எம்புட்டு சந்தோஷம் பாரு மயிலுக்கு :))

V V V V V

நானும் வேலைக்கு போக முன்னம் அப்டித்தான் இருந்தேன் மதுமிதா. இப்போ அவங்க கூட இருக்க முடியாத வருத்தம் :((

V V V V V

அதுவும் உண்மைதான் பா.ரா. ஆனாலும் எங்க ஊர்ல இன்னமும் அந்த நிலமை வர்ல.

சுசி said...

ரொம்ம்ம்ம்ம்ப நன்றி ஜெய்லானி.

V V V V V

இருந்திருந்தா கண்டிப்பா அதுவும் நல்ல வேளைதான் கனி.

V V V V V

கோபி.. ராங்குன்னு நான் சொன்னா??

சுசி said...

அடப்பாவி வசந்து.. பக்கத்துல இருக்கிற கடைக்கு அவங்க தனியா போனாலே கண்ண கட்டுது.. இதுல நாடு கடந்து அவங்கள அனுப்பிட்டு.. அப்புறம் நாங்க?? அவ்வ்..

பாங்க் இருக்கு.. இருப்பு?? இருந்தா கூட நான் அனுப்பி வைக்க மாட்டேன் சாமி. ஆவ்வ்..

அது சரி.. யாரிந்த ஒற்றைக் கிளி??

V V V V V

அதேதான் சித்ரா.. என்னா லூட்டி அடிக்கிறாங்க இப்போவே :))

எல் கே said...

ensaaaaaaaaaaaaaaaaaiii ur time with kids :P:P

Anonymous said...

விட்டாச்சு விட்டாச்சு லீவு விட்டாச்சு ஹொலிடே ... ஜாலி டே ...இந்த பாட்டு உங்க பசங்கள்கு வேண்டி நான் பாடினது தான்....ஆனா என்ன செய்ய உங்க பாடு தான் திண்டாட்டம் இல்லே ?? ஏன் சுசி ஊருக்கு பசங்களை அனுப்ப வேண்டியது தானே ...உங்க அம்முவும் சதுவும் அம்மா பேச்சு கேக்கற பசங்க தான் ஒத்துகிறேன் ..

Thamira said...

என்ஜாய் தி இம்சை.

'பரிவை' சே.குமார் said...

enjoy with ur kids.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... சூப்பர்.... குட்டிஸ் ரகளை செம ரகளை தான்... இன்னும் ரெண்டு மாசம் நல்லா நொந்து போக வாழ்த்துக்கள்.... ஹி ஹி ஹி

அன்புடன் அருணா said...

கலக்கலான சேட்டை!

சுசி said...

அது தான் முடியாதே எல்.கே.. ஆஃபீஸ் போயாகணுமே..

U U U U U

பாட்டு நல்லாருக்கு சந்தியா. ஊருக்கு கடல் கடந்து.. நாடுகள் கடந்து அனுப்ப முடியாது சந்தியா.. இன்னும் கொஞ்சம் வளரட்டும்.

U U U U U

ஆதி.. ஆகட்டும் ஆகட்டும்.. சுபா ஸ்கூல் போகட்டும்..

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி குமார்.

U U U U U

புவனா.. என்ன ஒரு நல் மனம் :))

U U U U U

நன்றி அருணா மேடம்.