Pages

  • RSS

17 June, 2010

சுளீர்..

மனம் முழுவதும் வெறுமை

பொய்த்துப் போய்விட்ட கசப்பு

ஏமாற்றத்தின் அழுத்தம்

என் மீது எழுந்த அருவருப்பு

ஓயாது உள்ளே கதறும் குரல்

அசிங்கம் நான்!!!

தோற்பது புதியதல்ல

ஒரே விதமான தோல்வி

என்றும் எதிர்பார்த்திரா அடி

தட்டி எறிந்து விட்டு

என் வழியே எழுந்து விட்டேன்

முதல் முறை

வழியே இல்லாத படி

அத்தனையும் அடைத்து விட்டேன்

இம் முறை

வேண்டாம்

இன்னொரு சுய தேற்றுதல்

வலிக்கட்டும்

சாவின் பின்னும் உணர வேண்டும்

இந்த உயிர் வலியின்

சாட்டை அடியை..

Ø Ø Ø Ø Ø

                                                     sad woman 

Ø Ø Ø Ø Ø

”அழுது முடிச்சியா?”

தெரிந்து கொண்டே கேட்கிறாய்

என் அன்பைப் போலவே

கண்ணீரும் அளவில்லாதது

இரண்டு நிமிடத்தில் முடிந்திட

அது என்ன உன் அன்பா??

23 நல்லவங்க படிச்சாங்களாம்:

கயல் said...

நீண்ட நாட்களுக்குப் பின் நிஜமாய் ஏங்கினேன் தோழி! என் கண்ணீரைத் துடைக்க விரல்கள் வேண்டுமென... அசத்திட்டீங்க! ரொம்ப நல்லாருக்கு.

நட்புடன் ஜமால் said...

யாவரும் நலம்ன்னு சொல்லிட்டு

வரிகளில் சுளீர்

:(

சீமான்கனி said...

//இம் முறை

வேண்டாம்

இன்னொரு சுய தேற்றுதல்

வலிக்கட்டும்

சாவின் பின்னும் உணர வேண்டும்

இந்த உயிர் வலியின்

சாட்டை அடியை..//

வலியை தாங்கி தங்கி விழியில் வழியும் கண்ணீரோடு விதியை வென்று வீழ்த்தவந்தவளின் மொழி சொல்லும் கவிதை அருமை...

சுசிக்கா அந்தவலி எனக்கும் தொற்றிகொள்கிறது...என்னத்த சொல்ல...
ரெம்ப வலியா இருக்கு...

எல் கே said...

தோழி முதல் கவிதை மிக மிக அருமை. இரண்டாவதும் நன்றாக உள்ளது.

ராமலக்ஷ்மி said...

இரண்டாவது கவிதை அதிக சுளீர்.

நல்லாயிருக்கு சுசி இரண்டுமே.

Madumitha said...

என்னாச்சு..
சுளீர்..சுளீர்
இரண்டு சாட்டையடி.

புன்னகை said...

I feel de feel u feel Susi!!!

Anonymous said...

என்னது இது? நோ நோ :(

Chitra said...

சுளீர்னு கவிதைகள் இருக்குதுங்க.... !

Unknown said...

இரண்டாவதில் ஒரு பீல் இருக்கு.

Anonymous said...

என்னாச்சு சுசி வரிகளில் வலி தெரியறதே ...

கார்க்கிபவா said...

அனைத்தும் கடந்து போகும்.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி கயல். கமண்ட் கூட கவிதையாவே எழுதரிங்க நீங்க :))

R R R R R

ஜமால்.. :))))

R R R R R

அச்சச்சோ.. பிட்டுக்கு மண் சுமந்த கதை ஆச்சே கனி.. ஆவ்வ்வ்..

சுசி said...

மிக்க நன்றி தோழர் கார்த்திக்.

R R R R R

ரொம்ப நன்றி அக்கா.. இரண்டும் இரண்டு வித சுளீர் :))

R R R R R

எனக்கா மதுமிதா.. ஆவ்வ்வ்..

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி புன்னகை.. அப்போ நீங்களும் என்ன மாதிரியே அப்பாவிதான் போல :))

R R R R R

நோ நோ.. நீங்க அழ கூடாது மயில்..

R R R R R

உங்க கண்ணாடி கலக்குதுங்க சித்ரா.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி ஆறுமுகம்.

R R R R R

சந்தியா நீங்களுமா..

R R R R R

எங்க போகும் கார்க்கி??

கோபிநாத் said...

அய்யோ...அய்யோ...இன்னாது இது கவிதை பார்த்து பயந்துட்டு வந்தா...பின்னூட்டம் எல்லாம் அதைவிட பயமாக இருக்கு..;)))

உண்மையில் உங்களுக்கு ஏதாச்சும் ஆகிடுச்சா? இல்லை கார்ல பல்பு போட்டதுக்கு ஏதாச்சும் பல்பு வாங்கினாங்களா!!?? அதுக்கா இப்படி ஒரு கவிதை...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ஃவ ;)

சுசி said...

பாருங்க கோபி.. உங்களுக்கே இவ்ளோ பயமா இருக்குன்னா எனக்கு எப்டி இருக்கும்??

ஆவ்வ்வ்..

Thamira said...

இரண்டாவது கவிதை வீரியம்.

முதல் புரியலை, நீங்க ரொம்ப பெரிய கவிஞராக இருப்பீங்க போலயே.!

சுசி said...

அப்டியா ஆதி..

எல்லாம் பிப, அபிப பதிவுகள படிச்ச தோஷம் :))

ஜெய்லானி said...

பிச்சி பீஸ்பிஸா ஆக்கிட்டீங்க கவிதை வரிகளில் சூப்பர்..!!

சுசி said...

நன்றி ஜெய்லானி..

பிடிங்க மாப்ப.. :))

ப்ரியமுடன் வசந்த் said...

கவிஞர் சுசி அவர்கள் எங்கிருந்தாலும் தொடர்ச்சியாக இனி கவிதைகள் எழுத வருமாறு அழைக்கப்படுகிறார்கள்...

ஊய் ஊய் ஊய்...