Pages

  • RSS

13 June, 2010

பரம ஃபுட்பால் ரசிகர்!!

mann ser fotball

- மேச் இருக்கிற நாள்ல குத்துக்கல்லாட்டம் இருக்கிற எனக்கு உடம்புக்கு முடியாம போய்டும். அதனால அவர் லீவ் போட்டுட்டு என்னையும் பசங்களையும் கவனிச்சுக்கணும்.

- கோல்னு கத்தற சத்தத்தில தூங்கிட்டு இருக்கிற பசங்க அலறி அடிச்சுட்டு எந்திரிச்சு என் தூக்கம், இல்லை வேலை கெட்டுப் போகும்.

- அப்டியே ஸ்லோமோஷன்ல எந்திரிச்சுட்டு கோல்னா ஒரு குதி குதிக்கிறது, மிஸ்ஸாச்சுன்னா அதையும் விட ஸ்லோவா உக்காந்துக்கிறது.

- சோஃபா நுனிக்கு வரதும் போறதும் பத்தாதுனு முகத்தில எக்கச்சக்க எக்ஸ்பிரஷன்ஸ் வேற.

- கீழே உள்ளது மாதிரியான சில பல காட்சிகள் மாமியார் வந்து நிக்கும்போது நடந்திருக்கு.

காட்சி 1 : யாருக்கோ எதுவோ ஆய்டுச்சாம்மா.. இல்லையே மாமி. ஏன் கேக்கறிங்க? இல்லம்மா.. இவன பாரு,, ஃபோன்ல யார் கிட்டவோ சோகமா பேசிட்டு இருக்கான்.

காட்சி 2 : நீ என் கிட்ட எதுவுமே சொல்றதில்லை. என்ன மாமி சொல்றிங்க? பாரு.. அவனுக்கு எதுவோ பிரச்னை. சண்டை போட்டுட்டு இருக்கான் ஃபோன்ல.

காட்சி 3 : உனக்கு நான் இங்க வந்தது ரொம்ப செலவாயிடுச்சு இல்லைப்பா.. அதோட இப்போ இந்த மருந்து செலவு வேற.. என்னம்மா சொல்றிங்க? நீங்க வரது எனக்கு செலவா என்ன?? பின்ன.. நேத்துலருந்து ஒரு மாதிரியா இருக்கே.. நீ சரியா பேசவும் மாட்றே.. என் பேச்சையும் சரியா கேக்க மாட்றே..

காட்சி 4 : ரூம்ல தூங்கிட்டு இருக்கிற மாமியார் அலறி அடிச்சுக்கிட்டு மாடிக்கு ஓடி வருவாங்க.. என்னம்மா, என்னப்பா ஆச்சு.. வீட்ல திருடன் வந்துட்டானான்னு கேட்டுக்கிட்டே.

- நாம யாரு.. கிங்குல்ல.. ரேஞ்சுக்கு நூற்றுக் கணக்கான ஃபோன்கள்.. சிரிப்பு + சத்தமா. அதுவே தோத்துட்டாலும் நூற்றுக் கணக்கான ஃபோன்கள். சோகம் + சத்தம் கம்மியா. இப்போ என்ன ஆச்சு?? இதில்லன்னா அடுத்த மேச்ல பாத்துக்கலாம்னு. தோக்கணும்.. அப்போதான் இன்னும் நல்லா விளாடுவாங்க. விளையாட்டுன்னா வெற்றி தோல்வி ஜகஜமப்பானு தத்ஸ் வேற.

- மேச் பாத்துட்டு இருக்கும்போது நானோ, பசங்களோ எது கேட்டாலும் மண்டைய ஆட்டிட்டு.. அப்புறமா நான் எப்போ சொன்னேன்னு அப்பாவியாட்டம் முழிக்கிறது.

- இவங்க (சமயத்தில நண்பர் குழாமும் கூட்டு சேர்ந்துக்கும்) கூச்சல் போதாதுனு டிவி சத்தம் அடுத்த ஊருக்கே கேக்கும்.

- ஃபுட்பால் பிடிக்காதவங்க மேச் டைம்ல வீட்டுக்கு வந்தா வேற வழியில்லாம அவங்களும் மேச் பாக்கணும்.

- நாங்க விசிட் போற வீட்டுக்காரங்க ஃபுட்பால் பிடிக்காதவங்கன்னா அன்னிக்கு நான் எவ்ளோ லேட்டா ரெடியானாலும் நோ கமண்ட்ஸ். இல்லைன்னா தெரியாதா இவ ரெடியாக லேட்டாச்சு, பசங்க கொஞ்சம் டயர்டா இருந்தாங்கன்னு  லேட்டா வந்தத்துக்கு சமாளிஃபிக்கேஷன்.

- டிவி ரிமோட் அவர் கண்ட்ரோல்லவே இருக்கும்.

- லைவ் மேச், ஹைலைட்ஸ், டெக்ஸ்ட்னு ஒரே மேச் பத்தி வித விதமா அலுக்காம பாக்குறது.

- மொபைல், லேண்ட்ஃபோன் எல்லாம் சுத்தி வச்சுக்கிட்டு ஃப்ரெண்ட்ஸ் கூட அப்பப்போ பேச்சு. அப்போ எனக்கு கால் வந்தா ஒண்ணு நான் வீட்ல இருக்கமாட்டேன் இல்லை குளிச்சிட்டு இல்லை தூங்கிட்டு இருப்பேன்னு சொல்லப்படும்.

- யார் பெத்த பிள்ளைங்களோ.. சரியா ஆடலேன்னா அநியாயத்துக்கு திட்டு வாங்குங்க. (கெ வா லாம் அள்ளு கொள்ளையா கேக்கும்)

- என்னமோ நான் அவர் பக்கத்துல உக்காந்த ராசிதான் அவங்க தோத்துட்டாங்கங்கிர மாதிரி என் கிட்ட மூஞ்சிய தூக்கி வச்சுக்கிறது.

- நான் மேச் ரிசல்ட் பத்தி பேசும்போது மட்டும் அட என் பொண்டாட்டி சமத்துங்கிறா மாதிரி பெருமையா ஒரு லுக்கு.

- ஃபுட்பால் மேச் டெலிகாஸ்ட் பண்ற அத்தனை  டிவி சானலும் வச்சிருக்கிறது பத்தாதுனு செண்டிங் க்ளியரா இல்லைன்னா கொடும் காலநிலைலவும் பப்ல போயி பாக்கிறது.

- மேச் பாத்துட்டு சமயத்தில டிவி ஆஃப் பண்ணாம தூங்கிடுறது, பல சமயம் நான் தூங்கிட்டு இருக்கும் போது மேச் போயிட்டு இருக்கும். அவங்க கமண்ட்ரி ஹை பிச்ல போம்போது கனவில நம்மள யாரோ கொலைவெறியோட துரத்திட்டு வர மாதிரியே இருக்கும்.

- வேலைல இருந்து அக்கறையா கால் பண்ணி சொன்னபடி மேச் டீகோடர்ல ரெக்கார்ட் பண்ண போட்டேனா, இல்லை அவர் செட் பண்ணிட்டு போன டைமர் வொர்க் ஆகுதா, இல்லை சானல் ஒழுங்கா வருதான்னு கேக்கிறது.

man-united

[ [ [ [ [ O ] ] ] ] ]

அன்பே.. ஆருயிரே.. என் அத்தான்.. முழுக்க முழுக்க உங்களுக்காகவே இன்றைய பதிவ எழுதி இருக்கேன். Football World Cup ஆரம்பிச்சும் நீ எனக்கு பிடிச்சது பத்தி எழுதலையேடின்னு நாளைக்கு நீங்க கேட்ர கூடாதுப்பா. அதான். சந்தோஷம்தானே.. எதோ நம்ம அறிவுக்கு எட்டின ஃபுட்பால் பத்தின விஷயங்கள எழுதி இருக்கேன்.

ManU-bilde இதானே ஃபுட்பால்.. மேச்னா இத சுத்தி ஆளுங்களும், அவங்கள சுத்தி இன்னும் நிறைய்ய்ய்ய்யா ஆளுங்களும் இருப்பாங்க. அவ்ளோதானே.. எனக்குத்தான் தெரியுமே..

 

எதாவது விட்டு போயிருந்தா சொல்லிடுங்க. இந்த வருஷம் மேல சொன்னதையும் விட புதுசா எதுனா நடந்தா அதையும் சேர்த்து இன்னொரு பதிவு எழுதிடறேன். அப்புறம் பாரதி அக்கா நேத்து ஃபோன் பண்ணி இருந்தாங்க.. நாளைக்கு ஈவ்னிங் ஷாப்பிங் போலாமான்னு.  உங்களுக்கே உங்களுக்கான இந்த ஸ்பெஷல் பதிவுக்கான அன்பு பரிசு எவ்ளோன்னு மட்டும் சொல்லிடுங்க. இவங்களுக்கு ஒரு பை சொல்லிட்டு வரேன் முதல்ல..

வர்ட்டா..

28 நல்லவங்க படிச்சாங்களாம்:

எல் கே said...

இதெல்லாம் இங்கயும் நடக்கும் .. ஒரு வித்தியாசம் . கிரிக்கெட் மேட்ச் நடக்கறப்ப நடக்கும் .அவ்ளோதான்

ராமலக்ஷ்மி said...

//நீ எனக்கு பிடிச்சது பத்தி எழுதலையேடின்னு நாளைக்கு நீங்க கேட்ர கூடாதுப்பா. //

இது பாயிண்ட்:)!

//அன்புப் பரிசு//

ரைட்:))!

Anonymous said...

வரிக்கு வரி சிரிச்சுட்டு இருக்கேன் :))))))))))))) சூப்பர்

கார்க்கிபவா said...

நாந்தான் மொத வெட்டு

ஸ்பெயிந்தான் என் சாய்ஸ்.. அவருக்கு என்னன்னு கேட்டு சொல்லுங்க

Anonymous said...

சுசிம்மா எப்பிடி பா எப்பிடி எல்லாம் எழுதறே? சிரிச்சு சிரிச்சு வயறு புண்ணா போச்சு மருந்து பார்சல் அனுப்புங்க சொல்லிட்டேன் ...

"காட்சி 4 : ரூம்ல தூங்கிட்டு இருக்கிற மாமியார் அலறி அடிச்சுக்கிட்டு மாடிக்கு ஓடி வருவாங்க.. என்னம்மா, என்னப்பா ஆச்சு.. வீட்ல திருடன் வந்துட்டானான்னு கேட்டுக்கிட்டே. "

சூப்பர் தான்

அப்பப்பா இது எழுதும்போதும் நான் சிரிச்சிட்டு தான் இருக்கே என்னடா அம்மா லூசா என்று என் பய்யன் என்னே பார்த்திட்டு போறான் பாரே...

சீமான்கனி said...

me the 1st ah.....

சீமான்கனி said...

எனக்கு இந்த மாதிரி விசித்திரமான ஆளுங்களை பார்த்தா பரிதாபமா இருக்கும் அக்கா...லேடிஸ் சீரியல் பார்த்து உணர்ச்சி வசபடுவதும் இதுவும் ஒண்ணுதான்...

அவ்வ்வ்வவ்....அப்போ இந்த பதிவு நமக்காக இல்லையா...அப்போ நான்தான் உளறிட்டேனா??????

பனித்துளி சங்கர் said...

ரொம்பவும் தீவிர ரசிகராகத்தான் இருப்பாரோ !

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப நொந்து போய் அதை ரெம்ப அழகா ரசிச்சு எழுதி இருக்கீங்க. இங்கயும் கிட்டதட்ட அதே கதை தான்.. ஹா ஹா ஹ

கோபிநாத் said...

;)))) விஷயம் தெரிஞ்சவர் இம்புட்டு பண்ணலாம் தப்போ இல்ல...எங்க வுட்டு நிலைமையே வேற....சின்ன வயசு எப்பாரு விளையாட்டு விளையாட்டுன்னு தெருவே இருக்கியோன்னு அதே தெருவுல வச்சி பின்னி எடுத்தவாரு இப்போ உட்கார்ந்நு அய்யோ..அம்மா..சூப்பரு ஆகான்னு விழுந்து விழுந்து பார்க்குறாரு ;)))))

என் வுட்டு பக்கம் எல்லாம் இன்னும் போறிங்க போல ! ! ! நன்றி ;)

Anonymous said...

Cant wait for the season to start

படம் சூப்பர் :)

ப்ரியமுடன் வசந்த் said...

என் தூக்கம், இல்லை வேலை கெட்டுப் போகும்.// சேம் சேம் ஆபீஸ்?

ஃபுட்பால் பிடிக்காதவங்க மேச் டைம்ல வீட்டுக்கு வந்தா வேற வழியில்லாம அவங்களும் மேச் பாக்கணும்//

பின்ன சாப்பிடும்போது வந்தா சாப்பிடற மாதிரி மேட்ச் பாக்கும்போது வந்தா மேட்ச் பார்த்துத்தான் ஆவணும்...


டிவி ரிமோட் அவர் கண்ட்ரோல்லவே இருக்கும்.//

பாவம் குணா நீங்க சரி பரவாயில்ல ரிமோட்டாச்சும் உங்க கண்ட்ரோல்ல இருக்கேன்னு சந்தோஷப்படுங்க...

நல்லா சுவாரஸ்யமான லைஃப் சுசிக்கா .. கங்ராட்ஸ்...குணா

ப்ரியமுடன் வசந்த் said...

ப்ரோஃபைல் பிக்சர் கை , காதுன்னு மாறிட்டே இருக்கே... இன்னாச்சுக்கா? :)))

Chitra said...

இதானே ஃபுட்பால்.. மேச்னா இத சுத்தி ஆளுங்களும், அவங்கள சுத்தி இன்னும் நிறைய்ய்ய்ய்யா ஆளுங்களும் இருப்பாங்க. அவ்ளோதானே.. எனக்குத்தான் தெரியுமே..


...... ha,ha,ha,ha,ha,ha..... Super punch (or should I say, kick) ...ha,ha,ha,ha,ha....

Madumitha said...

அட இதுல
இவ்ளோ விஷயம்
இருக்கா?

சுசி said...

அந்த கொடுமைய.. அதான் எல்கே கிரிக்கெட் மேச்.. ஊர்ல அனுபவிச்சிருக்கேன்.

P P P P P

ஹிஹிஹி.. பாயிண்ட விட கூடாதில்ல அக்கா.

P P P P P

நிஜமா?? நன்றி மயில்.

சுசி said...

கார்க்கி.. அவருக்கு போன வருஷம் ஸ்பெயினாம். இந்த வருஷம் இங்லண்ட்/ஆர்ஜெண்டீனா. ஆர்ஜெண்டீனா எதுக்குன்னா மரடோனா சொன்னத செய்றாரானு பாக்கவாம் :))

P P P P P

ஹஹாஹா.. இதுதான்.. பதிவர்னா முதல்ல குடும்பம் லூசுனு சொல்லணும். அதான் முதல் படி.

P P P P P

என்னாச்சு கனி??

சாமக்கோடங்கி said...

கொள்ளைக் காரி அவர்களே... படித்துச் சிரித்தேன்..

சுசி said...

ஆமாம் சங்கர்.

P P P P P

துன்பத்திலும் சிரிக்கணுமாம் புவனா :))

P P P P P

நாளைக்கு உங்க வாரிசும் இப்டி சொல்லுமோ கோபி??

நன்றி இருக்கட்டும். முதல்ல புது பதிவு எழுதுங்கப்பா.. (அப்டியே பேசிக்கிட்ட அமவுண்டு??)

சுசி said...

கூகிளாண்டவருக்குத்தான் நன்றி சொல்லணும் அம்மிணி :))

P P P P P

நான் சொன்னது வீட்ல வசந்த்..

அது சரி.. மாமாவ விட்டு குடுப்பிங்களா நீங்க..

நன்றி வசந்த்.. ககபோ :))

பயப்பிடாதிங்கப்பா.. கண்டிப்பா முழுசா வராது.. பாத்து பயத்தில பொட்டுன்னு மக்கள் உயிர் போயிட்டா?? பிள்ளையாரே..

P P P P P

அப்டியும் சொல்லிக்கலாம் சித்ரா..

சுசி said...

இன்னும் வரும் மதுமிதா.

சுசி said...

போலீஸ் வராதில்லை பிரகாஷ்..

கமலேஷ் said...

கிண்டல் பண்ணாதிங்க தோழி...அது involvement அதனால் கொஞ்சம் உணர்ச்சி வசபடுவாங்க..
நல்ல நகை சுவையான பகிர்வு..

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... ஹிலாரியஸ் சுசி. வரிக்கு வரி நக்கல். கலக்கலா இருக்கு.

சுசி said...

நன்றி கமலேஷ்.. முதல் வருகைக்கு. சும்மா விளையாட்டுக்குத்தாங்க. இப்போ நானும் உக்காந்து திட்டிக்கிட்டு இருக்கேன். வேர்ல்ட் கப் இல்லையா.. சரியா விளையாடணும்ல :))

P P P P P

யோகி பயப்பிடலை இல்லை விக்கி..

Thamira said...

இந்த மாதிரி கிரிக்கெட் பாக்குறவங்களைப் பத்து பாத்து கடுப்பாயிருக்கிறவனுக்கு இது கொஞ்சம் ஆறுதல், சந்தோஷமும் கூட.

அப்புறம் ரங்கமணிகளுக்கு டுமீல் வச்சுட்டு கிளைமாக்ஸ்ல ஏதோ ஃபுட்பால் பத்தி எழுதியிருக்கேன்னு கத வுடுறீங்களே. தங்கமணி பதிவுகள் எழுதி ரொம்ப நாளாச்சுன்னு நினைவு படுத்தியதற்கு நன்றி.

சுசி said...

வாங்க ஆதி.. நலமா??

ஹிஹிஹி.. கொழுத்திப் போடாதிங்க சாமி.. எனக்கு தெரிஞ்சத தானே நான் எழுத முடியும்..

பாக்கலாம் உங்க டுமீல் எப்டி இருக்குனு :))

வல்லிசிம்ஹன் said...

வெகு நாளாயிச்சு. இந்த மாதிரி சிரிச்சு!!!!

எல்.கே சொல்கிறமாதிரி.
இங்க க்ரிக்கெட்டுக்கு அதே டிராமா.
சுசி ,உங்களைப் படிக்காமல் விட்டதற்கு வருந்துகிறேன்.