Pages

  • RSS

09 June, 2010

கலைந்த கனவு..

இது நடந்தது நான் விண்ணைத் தாண்டிய அன்று. அப்போ ஏன் அப்போவே சொல்லலன்னு நீங்க சொல்றது கேக்குது. அப்டியே நீங்க சொல்லலைன்னாலும் கூட நான் சொல்ல வேண்டியது ஒரு பதிவரா (அப்டின்னா??) என்னோட தலையாய கடமை. அதனால சொல்லிடறேன். (ஸ்ஸ்ஸப்பா.. ஒரு பத்தி ஆச்சா)

படம் முடிஞ்சு அழுது வீங்கின கண்களோட கூட்டத்தை விடுத்து.. தப்பி ஓட வழியில்லாம ஒரு ஃப்ரெண்டுக்காக வெயிட் பண்ண வேண்டிய கட்டாயம், அன்னிக்கு எனக்கு.  தெரிஞ்சவங்க தள்ளி நின்னுட்டு இருந்தாங்க. அவங்களுக்கும் இசை பிடிக்கும்னு தெரியும்.

”எப்டிங்க பாட்லாம் அசத்தல் இல்லை” இது நானு.

“ஆமா.. பைத்தியம் பிடிச்சிடுச்சு.. ஆனா ஒரு பாட்டு படத்தில வர்ல. எனக்கு அது ரொம்ப பிடிக்கும்” இது அவங்க.

“அப்டியா.. ம்ம்ம்.. எல்லாமே வந்துதே.. என்ன பாட்டு அது”

“கனவெல்லாம்னு.. செம பாட்டுங்க”

”கனவெல்லாமா.. அப்டி ஒண்ணு நான் வி தா வ ல கேட்டதே இல்லையே”

“இல்லை.. நீங்க யூ டியூப்ல பாருங்க.. அதையும் சேர்த்திருக்கலாம். வேற எதுனா இழுவை சீன கட் பண்ணிட்டு”

பேச்சு தொடர்ந்து, முடிந்து வீட்டுக்கு வந்து மறந்தே போய்ட்டேன். இன்னைக்கு மன்னிப்பாயா கேட்டு மனசு கனத்துப் போயி இருக்கும்போது இது திடீர் நினைவு வந்து ஆராய்ச்சிய பண்ணேன். யப்பா.. என்ன ஒரு பாட்டு. ஃப்ரம் திலிப் வர்மான்னு இருக்கு. யார்னு தெரில. ஆனா வீடியோல ப்ரசண்ட் பை எஸ். ஜனஹன்னு இருக்கு. ரெண்டு பேருக்குமே நன்றிகள். படத்தோட ஸ்டில்ஸ் ஸ்லைட்ல போது. அதனால தான் அவங்க இது வி தா வனு நினைச்சிருக்காங்க. பாடல் வரிகள், இசை ரெண்டுமே மனசை பிசையுதுங்க. கேட்டுட்டே இருக்கேன். அவ்வ்வ்..

நான் கேட்டத எழுதி இருக்கேன். அதாவது என் காதில வரிகள் இப்டித்தான் கேட்டுது.

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்

நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே

பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே

அந்த நேரம் வரும்பொழுது என்னை வதைக்கின்றதே

--

சாரல் மழைத்துளியில் உன் ரகசியத்தை விழி பார்த்தேன்

நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனிப் பூவாய் நீ குறுக

எனை அறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி

நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி

காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன்

காதல் ஞாபகங்கள் தினம் தினம்..

அப்படியே கண் மூடி ரசிச்சுட்டு இருக்கும்போது மியூசிக் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இல்லாமலே போயிடுது. இது காதல் தோல்வியில பாடினதா இல்லை காதலிகிட்ட தன் காதலோட ஆழத்தை சொல்ற மாதிரி பாடினதா தெரில. ஆனா வரிகள் மனதில பதிஞ்சு போகுது. பாடகரோட குரல் கொஞ்சமே உன்னி கிருஷ்ணன நினைவுபடுத்தும் விதமா இருக்கு. எனக்கென்னமோ இது காதலி நினைவில காதலன் பாடினதாத்தான் இருக்கும்னு தோணுது. ஏன்னா கேக்கும்போது ஒரு விதமான வலி  தானா உருவாகுது. அப்டியே ஒரு ஜோடி மைண்ட்ல நிழலா வராங்க. அவங்களுக்கு இடையிலான காதல், பிரிவு, வேதனைனு காட்சிகள் ஆட்டோமேட்டிக்கா பிளே ஆகுது.. நின்று போகும் இசையோடு சேர்ந்து காட்சிகளும் கலைஞ்சு போகுது.. எனக்குள்ள.. ஆவ்வ்வ்..

அவங்களுக்கு என்ன ஆயிருக்கும்னு தெரிஞ்சுக்க மீதியும் கேட்டே ஆகணும்னு மனசு அடம்பிடிக்குதுங்க.. எங்கு போவேன்.. யாரைக் கேப்பேன்னெல்லாம் தவிக்கலைங்க நானு. அதான் நீங்க இருக்கிங்களே.. யாராவது இந்த பாட்டு முன்ன பின்ன கேட்டிருந்தா சொல்லுங்க. நீங்க.. உங்க குடும்பம்.. உங்க நட்பு.. உங்க தெரு.. உங்க ஊர்.. ஏன் உங்க நாடே நல்லாருக்கும். நீங்களும் பாருங்க, கேளுங்க மக்கள்ஸ்..

வர்ட்டா..

17 நல்லவங்க படிச்சாங்களாம்:

Anonymous said...

ஹலோ சுசி நான் தான் first வந்து பார்த்தேன் .நாளை காலையில் முழுசா படிச்சு கமெண்ட் எழுதறேன்

Anonymous said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...

//அப்டியே ஒரு ஜோடி மைண்ட்ல நிழலா வராங்க. அவங்களுக்கு இடையிலான காதல், பிரிவு, வேதனைனு காட்சிகள் ஆட்டோமேட்டிக்கா பிளே ஆகுது.. நின்று போகும் இசையோடு சேர்ந்து காட்சிகளும் கலைஞ்சு போகுது.. எனக்குள்ள..///

செம்ம்ம் பீலீங்க்ஸ்...ரெம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க சுசிக்கா...பட்டு கேட்டா பழைய நியபகம்லாம் வருது நான் கேக்கமாட்டேன்.... அவ்வவ்வ்வ்வ்...

ப்ரியமுடன் வசந்த் said...

:(

:(

அவ்வளவாக எனக்கு இந்த படமும் பாடல்களும் சுத்தமாய் மனசுல பதியவே இல்லியே :(

ஒரு வேளை எனக்குத்தான் ரசனை கிடையாதோ?

சுசி said...

எழுதுங்க சந்தியா :)

O O O O O

நோ ஃபீலிங்ஸ் சீமான்.. திரிஷாவ பாருங்க.. சரியாய்டும்.

O O O O O

ஒவொருத்தர் ரசனை ஒவொரு மாதிரி வசந்த். தவிர ரசனை கிடையாதுன்னு இல்லை.

எல் கே said...

ஆஜர் போட்டுக்கறேன்,. எனக்கும் இப்ப வர புது படத்துக்கும் ரொம்ப தூரம்

Madumitha said...

இனிமை.
எனக்கும் உண்ணி கிருஷ்ணன்
மாதிரிதான் கேட்குது.

Anonymous said...

சாங் கேக்க ரொம்ப நல்லா இருக்குப்பா ஆனா நான் இது இன்னிக்கு தான் கேக்கரை...சில சமயம் சில பாட்டுகள் ஹார்ட் டச்சிங்கா அமையும் . நன்றி (பாட்டுக்கு தான் )

Anonymous said...

அடிக்கடி கேட்டா இன்னும் ப்டிக்கும்னு நினைக்கிறேன்

Anonymous said...

பாட்டு நல்லா இருக்குங்க சுசி

கோபிநாத் said...

கடமை ;-)

ராமலக்ஷ்மி said...

பாட்டை விடவும் ரசித்து நீங்கள் பகிர்ந்த விதத்தை அதிகம் ரசித்தேன்:)!

கார்க்கிபவா said...

மலேசியாவுல அவர் பெரிய பாடகருங்க. நல்ல பாட்டு. நன்றி சுசி

ஜெய்லானி said...

நா தமிழ் படம் பாத்தே ரெண்டு வருஷமாச்சி ..ஒன்லி கார்ட்டூன் மட்டும்

சீமான்கனி said...

சுசிக்கா...ஃபீலிங்ஸ்சே திரிஷாவை பார்த்துதான்..LOL

:P

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பாட்டு வரிகள் ரெண்டுமே சூப்பர் சுசி.... நீங்க சொன்ன விதம் அதை விட அழகு...

Ahamed irshad said...

Nice sharing..