Pages

  • RSS

22 March, 2010

கொஞ்சம் குறைச்சுக்கோங்க..

மழைக்கும் மலைக்கும் பெயர் போன ஊருங்க எங்க ஊர். நான் இங்க வாழ வந்த இந்த பதினொரு வருஷத்தில இவ்ளோ கொடுமையான ஒரு விண்டர் சீஸன் இந்த வருஷம்தான் அனுபவிச்சிட்டு இருக்கேன். ஸ்னோ கொட்டும். ஒரு வாரம் இருக்கும். அப்டியே ஒரு மழை வந்து எல்லாம் கரைஞ்சு போய்டும். மறுபடி ஸ்னோ.. மழை..னு குளிர்ல இருந்து தப்பிடுவோம். நார்வேல இருந்து வந்துட்டு இங்க குளிருதுனு சொல்றீங்களேனு மத்த நாட்டுக்காரங்க கேப்பாங்கனா பாருங்களேன். யார் கண்ணு பட்டுதோ.. இந்த தடவை மழை பெய்வேனா பாருனு அடம் புடிக்குது. 1879 ஆம் வருஷத்துக்கு அப்புறம் வந்திருக்கிற ரொம்ப ட்ரையான வின்ரர் சீஸன் இதானாம். விளைவு??

 

எங்கள தண்ணீர சிக்கனமா மட்டுமில்லாம கொதிக்க வச்சும் பாவிக்க சொல்லி இருக்காங்க.

 

இந்த ஊருக்கு Gullfjell  ங்கிற ஒரு மலையில இருந்து தண்ணீர் சப்ளை பண்ணிட்டு இருந்தாங்க. மழை இல்லாததுனால சம்மர்க்குனு ரிசர்வில இருக்கிற நீரையும் பாவிக்க வேண்டியதாயிடுமோனு பயந்து Storavatnet ங்கிற இடத்தில இருந்து சப்ளை ஆரம்பிச்சாங்க, போன செவ்வாயில இருந்து. பிரச்சனை என்னன்னா என்னதான் நாங்க குளோரின் போட்டு சுத்தம் செஞ்சாலும் தண்ணீர் அவ்ளோ சேஃப் கிடையாது. நீங்க கொதிக்க வச்சு பாவிங்கனு சொல்லிட்டாங்க. பல் துலக்க, காய்கறி, பழங்கள் கழுவ, அடுப்பில செய்யாத சமையலுக்கு  எல்லாம் சுட வச்ச தண்ணிய பாவிக்க சொல்லி இருக்காங்க. குளிக்கும்போது வாய மூடிக்கிட்டே குளிக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. கொதிக்க வைக்கிற கரண்ட் செலவுக்கு பாட்டில் தண்ணி செலவு கம்மியா இருக்கும்கிறதால அததான் வாங்கறோம். நாளையில இருந்து வழக்கம்போல பாவிக்கலாம்னு அவங்க சொன்னாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்க வீட்ல பாட்டில் தண்ணிதான்னு முடிவு செஞ்சிருக்கோம்.

 

அம்மா இந்த தண்ணி நல்லாவே இல்லைனு பாட்டில் தண்ணி குடிக்க பசங்க பண்ற அடம் தாங்கல. எந்த நேரமும் பைப் தண்ணி குடிச்சிடுவாங்களோனு பயத்திலவே சுத்த வேண்டியதா இருக்கு. அதனால நானும் என் பங்குக்கு சிக்கனமா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

 

- வெள்ளை நிறமுள்ள ஆடைகள தனியா துவைச்சாதான் வெள்ளையா இருக்கும்னு இனிமே தனியா வாஷிங் மெஷின்ல போட்டு துவைக்க மாட்டேன்.

 

- டிஷ் வாஷர் ஃபுல் ஆகாம ஸ்டார்ட் பண்ண மாட்டேன்.

 

- குளியலோட நேரத்த குறைச்சுக்கணும். முக்கியமா பாத் டப்ல குளிக்க கூடாது. போன வாரம் 200 லீட்டர் டாங்க்ல இருந்த சுடுதண்ணி தீர்ந்து போச்சு என் உல்லாசக் குளியலால. பசங்க அய்யா ஜாலி, குளிக்க வேணாம்னாங்க. ஃபுட்பால் விளையாடிட்டு வந்த கண்ணாளன்  குளிக்க முடியாம போனதால வெளிய போறதா இருந்த ப்ளான் ஊத்திக்கிச்சு.

 

- இது கண்ணாளன் கவனிக்க வேண்டியது. கார் வாஷ். ரோட் ஃப்ரீஸ் ஆகாம இருக்க உப்பு போடுவாங்க. அதுவும் ஸ்னோவும் சேர்ந்து கருப்பா பிடிச்சுக்கும். சமயத்தில இது நம்ம வண்டிதானானே டவுட் ஆகிற அளவுக்கு வண்டியோட நிறம் மாறி இருக்கும். கொஞ்ச நாளைக்கு கார் வாஷ் பண்ண கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கு ஊராட்சி.

 

ஒரு நாள் ஃப்ரிஜ்ல தண்ணீர் பாட்டில வைக்க மறந்துட்டேன்னு ஆஃபீசுக்கு ஃபோன போட்டு குடும்பமே கூட்டு சேர்ந்து திட்டித் தீர்த்திடுச்சுங்க. என்னதான் ஃப்ரிஜ்ல வச்சு குடிச்சாலும் பாட்டில் தண்ணி நல்லாவே இல்லைங்க. ஜில்லுனு டப்ல எடுத்து குடிக்கிறா மாதிரி இல்லை. மலைல இருந்து வர அருவியில நேரா அள்ளிக் குடிச்சாப்ல இருக்கும் எங்க ஊர் தண்ணீர்.

Gullfjell னா தங்க மலைனு அர்த்தம். தங்கத்தோட நிலை தண்ணிக்கும் வந்திட்டா?? இப்போ ஸ்னோ இருக்கிறதால அத உருக்கியாவது பாவிக்கலாம். சம்மர்ல?? காலநிலை தாறுமாறா மாறி வேற இருக்கு. காலப் போக்கில தண்ணீர் தீர்ந்து போய்டிச்சின்னா?? ஸ்னோவும் இருக்காதே.. நிறைய இல்லைனாலும் கொஞ்சூண்டாவது எல்லாரும் யோசிக்கலாம்ல.. அப்டியே நம்மால முடிஞ்சதையும் செய்லாம்ல.. வாங்க எல்லாருமா எதுனா செய்லாம்..

 

ராமலக்ஷ்மி அக்காவோட இந்த பதிவ படிச்சுப் பாருங்க. எப்டி சிக்கனமா தண்ணீர பாவிக்கலாம்னு நல்லா சொல்லி இருக்காங்க. கீழ இருக்கிற படத்த உங்க வலைப்பக்கத்தில சேர்த்தும் பங்களிப்பு செய்யலாம்னு அக்கா சொல்லி இருந்தாங்க.

அப்புறம் என்னங்க.. வரட்டா..

 

vann 2010 kopi bildet

19 நல்லவங்க படிச்சாங்களாம்:

ப்ரியமுடன் வசந்த் said...

இது கண்ணாளன் கவனிக்க வேண்டியது. கார் வாஷ். ரோட் ஃப்ரீஸ் ஆகாம இருக்க உப்பு போடுவாங்க. அதுவும் ஸ்னோவும் சேர்ந்து கருப்பா பிடிச்சுக்கும். சமயத்தில இது நம்ம வண்டிதானானே டவுட் ஆகிற அளவுக்கு வண்டியோட நிறம் மாறி இருக்கும். கொஞ்ச நாளைக்கு கார் வாஷ் பண்ண கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கு ஊராட்சி.
//

இது வேறையா நடக்குது உபி


இந்த உபின்னா என்னான்னு கேட்டு கே பிட்ட இருந்து ஒரே தொல்லைக்கா பேசாம நீங்களே இதுக்கு ஒரு போஸ்ட் போட்ருங்க....

சுசி said...

இது வேறயா உ.பி??

இதனால் என் உ.பியோட அனைத்து கே.பிகள் கிட்டவும் சொல்லிக் கொள்வது யாதெனில்..

உ.பி அப்டினா உடன் பிறப்புங்கோவ்..

உ.பி அப்டினா உடன் பிறப்புங்கோவ்..

உ.பி அப்டினா உடன் பிறப்புங்கோவ்..

மூணு தடவை சொல்லிட்டேன் உ.பி.. இது போதுமா இல்ல போஸ்ட்லவும் எழுதணுமா?? கேட்டு சொல்லுங்கப்பா.. ஒண்ணும் பிரச்னை இல்லை.. எழுதிடலாம். எனக்கும் ஒரு போஸ்ட்டுக்கு மாட்டர் ஆச்சு :)))

புலவன் புலிகேசி said...

ஒன்றை இழந்தால்தான் அதன் அருமை தெரியும்னு சொல்வாங்க...அந்த மாதிரி இருக்குங்க...இருந்தாலும் நல்ல முடிவு...கடை பிடித்தல் மகிழ்ச்சி...

பித்தனின் வாக்கு said...

ஆகா இப்படி தண்ணீர் இல்லாத ஊருல எங்க தங்கச்சி வாக்கப் பட்டா என்ன பண்றதுன்னு பாரதிராஜ ஸ்டைலில் எழுதலாமுன்னு பார்த்தால், அந்த நடை நமக்கு வரவில்லை. விட்டுரலாம். அந்த தங்க மலையை நம்ம ஊருக்கும் கொண்டு வந்துருராலாமா?

பரவாயில்லை, கொஞ்ச நாளைக்கு அட்ஜெஸ்ட் பண்ணிக்குங்க. இதுக்கே இப்படி என்றால் எதிர் காலத்தில் வாட்டர் வார் எல்லாம் வருமாமே. நினைச்சா பகீர் எங்கின்றது. நன்றி சுசி.

ராமலக்ஷ்மி said...

பதிவும் இட்டு படமும் இணைத்து பங்களிப்பை சிறப்பாகச் செய்துவிட்டீர்கள். நடைமுறை வாழ்விலே எல்லோரும் நம்மால் ஆனதை கடைப்பிடிக்க ஆரம்பிப்போம். அதற்கு நீங்கள் எடுத்திருக்கும் முடிவுகள் எல்லாம் சூப்பர்.

நட்புடன் ஜமால் said...

நல்லது!

கார்க்கிபவா said...

நம்ம பாலிசி ரொம்ப சிம்பிள்


save water




















drink beer

கோபிநாத் said...

நான் நினைச்சேன் கார்க்கி சொல்லிட்டாரு..;)))

ரைட்டு நோட் பண்ணிக்கிறேன் ;)

கோபிநாத் said...

\குடும்பமே கூட்டு சேர்ந்து திட்டித் தீர்த்திடுச்சுங்க.\\

ஆகா..ஆகா...ஆகாஆஆகாக்காகா ;))

பனித்துளி சங்கர் said...

////////எங்கள தண்ணீர சிக்கனமா மட்டுமில்லாம கொதிக்க வச்சும் பாவிக்க சொல்லி இருக்காங்க. ///////


சரியாக சொன்னீங்க ! பகிர்வுக்கு நன்றி !

சீமான்கனி said...

//கண்ணாளன் குளிக்க முடியாம போனதால வெளிய போறதா இருந்த ப்ளான் ஊத்திக்கிச்சு.//

அடக்கடவுளே...சென்ட் அடிச்சாவது நினைத்ததை சாதிச்சு இருக்க வேணாமா....என்ன சுசி இது கூடவா சொல்லி தரனும்...

Anonymous said...

ரொம்ப சிக்கனமா இருக்கீங்க. குட்

விக்னேஷ்வரி said...

அட்வைஸ்னாலும் அழகா சுவாரசியமா சொல்ல சுசியால தான் முடியும். சூப்பரு.

Anonymous said...

susima...

supera eruku padivu..

varavara

eppadi eppadi ellam elutharenga..

annal ethu eluthinalum athila oru karuthu eruku..

valga valamudan..

v.v.sangam sarbaga

"Karuthu Medhai Susi"

enkira pattathai alithu

Mahilkirom..

Vaippu athimaiku Nandri,
Complan boy
V.V.S Sangam

சுசி said...

சரியா சொன்னீங்க சித்ரா.

Å Å Å Å Å

நன்றி புலவரே.

Å Å Å Å Å

அதேதான் அண்ணா.. இந்த ஒரு வாரத்தில ரொம்ப பயந்ததால எடுத்த முடிவுகள் தான் மேல எழுதினது.

சுசி said...

நன்றி அக்கா.. எதோ என்னால முடிஞ்சது :)))

Å Å Å Å Å

நன்றி ஜமால்.

Å Å Å Å Å

அட.. அப்டியே என் கண்ணன் பாலிசி கார்க்கி.

சுசி said...

கோபி.. girrrrrrrrrrrrr.. பாசத் திலகமே.. நல்லாருங்க.

Å Å Å Å Å

நன்றி சங்கர்.

Å Å Å Å Å

என்ன சீமான் நீங்க.. ஃபுட்பால் விளையாடிட்டு வந்தவருக்கு சென்ட் அடிச்சு கூட்டிட்டு போனா ஊரு தாங்குமா??
அவ்வ்வ்வ்..

சுசி said...

நன்றி அம்மிணி.

Å Å Å Å Å

நன்றி விக்னேஷ்வரி. இங்க இன்னமும் ஸ்னோ இருக்குதுங்க.

Å Å Å Å Å

அவ்வவ்வ்வ்வ்.. நன்றி சூர்யா.. எனக்கு நல்லதா ஒரு பட்டம் வழங்கிய முதல் ஆள் நீங்கதான்.. ஆவ்வ்வ்வவ்..

Unknown said...

தண்ணி ல இவ்வளவு மேட்டர் இருக்குதா? நல்ல இருக்குங்க...இந்தியா எவ்வளவோ பரவாயில்லை போல இருக்கு.
நன்றி
வெண்புரவி