Pages

  • RSS

14 March, 2010

உனக்கு நேரம் சரி இல்ல..

நான் இன்னமும் பாக்கலை. பாக்காம எழுதக் கூடாதுங்கிர வைராக்கியத்தோட இருந்தேன். என்னையும் எழுத வச்சிட்டாங்க. பாக்க கூடாதுனு நினைக்கலங்க. பாக்க முடியாம போச்சு. எப்டியோ தட்டிப் போச்சுனும் சொல்லலாம். பாக்கணும்னு நிறைய எதிர்பார்ப்பு இருந்துச்சு. பாக்கலாம்னு முடிவானப்போ வேணாம்னு  தோணிச்சு. ஆனா அத நான் வேணும்னு செஞ்சதா நினைச்சிட்டாங்க. அதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.

 

இங்க வந்ததில இருந்து பழகறவங்க. என் மேல சொன்ன குற்றச்சாட்டுக்கள் நியாயமானு நீங்களே சொல்லுங்க. ரொம்ப கம்பல் பண்ணாங்க பாக்க போலாம்னு. இப்போ முத பத்தியோட மூணாவது லைன்ல இருந்து படிச்சுட்டு வாங்க.. என் சொல் பேச்சு கேட்டு போய் மறுபடி படிச்சவங்களுக்கு நன்றி.. இப்போ இந்த பத்திய முதல்ல இருந்து மறுபடி படிக்காமலே உங்களுக்கு புரிஞ்சிருக்கும், நான் விட்ட இடத்திலேர்ந்து சொல்லறேன்னு.. பாத்திட்டு வந்ததில இருந்து என் கிட்ட பேசல. ரெண்டு வாரம் கழிச்சு எங்க வீட்டுக்கு வந்திருந்தவங்க கிட்ட எப்டிக்கா படம்னு ரெண்டு வார்த்தைதான் கேட்டேங்க.. பொங்கிட்டாங்க போங்க.. கிச்சன்ல நின்னு கேட்ட என் தப்ப உணர்ந்து உயிர்ப் பயத்தோட நான்.. இனி அவங்க சொன்னது இல்ல இல்ல.. கொலைவெறியோட சொன்னது..

ரொம்ப எதிர்பார்ப்போட போனேன் தெரியும்ல உங்களுக்கு. அங்க போனா தியேட்டர் காத்தாடுது.. படம் ஆரம்பிச்சுதா.. பாத்துட்டே இருந்தோமா.. கொஞ்ச நேரம் ஆனதும் என் அக்கா சிரிக்க ஆரம்பிச்சுட்டா.

ஏங்கா.. காமடி சீனா..

நீங்க காமடி பண்ணாதீங்க. எதுவும் புரியலப்பா.  என் பொண்ணு அப்பப்போ அவங்கள பாத்து முறைக்க ஆரம்பிச்சுட்டா. அவ கண்டுக்கணுமே.. இப்டியே போனா வந்தாரு பாருங்க பார்த்திபன். பேசினாரு பாருங்க ஒரு தமிழ்.. அதுக்கு அப்புறம் அக்கா சிரிச்ச சிரிப்பில பொண்ணு கடுப்பாகி வேற சீட்ல போய் உக்காந்துட்டா. அவங்கள பாத்து நானும் சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். அவங்க அப்டி சிரிச்சு அன்னிக்குதாம்பா பாத்தேன்.

யாரும் திட்டலையா உங்கள?

எங்க அவங்களும் புரியாம தான் பாத்துட்டு இருந்தாங்க போல.. எங்க கூட  சிலர் கூட்டு சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்கப்பா.

இல்லக்கா.. இது புது விதமான கதைனு சொல்றாங்க..

எவன் சொன்னான்? கூட்டிட்டு வாங்க என் முன்னாடி. இந்த படம் இந்தியால இப்பவும் ஓடுதுன்னு சொல்லுங்க இனிமே நான் வாழ்க்கேல படம் பாக்கல. 

இல்லக்கா.. ஓடிட்டு இருக்காம்..

(இப்போ ஒரு லுக்கு விட்டாங்க பாருங்க.. என்னத்த சொல்ல)

அப்டினா போய்ப் பாருங்க எங்கள மாதிரி அறியாம போய் மாட்டிக்கிட்டவங்க தான் பாத்திட்டு இருப்பாங்க.

பார்ட் டூவும் எடுக்க போறாராம் செல்வா..

(இப்போ முன்னய விட கேவலமா ஒரு லுக்கு)

வேணாம் என்ன கொலைகாரி ஆக்கிடாதீங்க சொல்ட்டேன்.

அப்போ காமடிக்குனு யார் வந்தாங்க?

அதான் அவரு கார்த்தி வந்தாரே. அவருதான் பெரிய காமடி பீஸு.

கார்த்தி ட்ரெய்லர்ல பாக்கும்போது ஒரு மாதிரி தலைய குனிஞ்சுட்டே போறாறே.. அது என்ன சீன்?

அவர் படம் பூரா அப்டிதான் போறார். இதில எதனு நான் சொல்ல. நீங்க இந்த படத்த டிவிடில கூட பாத்துடாதீங்கப்பா. அப்டியே பாக்குறதுனா கூட நான் வர நேரம் என் கண்ல படற மாதிரி வச்சிடாதீங்க. சொல்ட்டேன்.

பாட்டுக்கா.. ஆனா மாலை நேரம் வர்லயாமே..

உங்களுக்கு எப்டி தெரியும்?

அது சும்மா நெட்ல மேயும்போது படிச்சேன்..

இந்த குழப்பத்தில அத யாரு கேட்டா. அன்னிக்கு ஒரு படம் பாக்க வான்னீங்க. விஜய பிடிக்காத நானே அவ்ளோ என்ஜாய் பண்ணி பாத்தேன். அது உங்களுக்கு பொறுக்கல இல்ல. ஏம்பா.. ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே.. வேற என்ன படிச்சீங்க..

இல்லக்கா.. நீங்க சொன்ன எல்லாமே படிச்சேன்.

(இங்கனதான் வசமா மாட்டிக்கிட்டேன். அவ்ளோ கோவமா அவங்கள நான் பாத்ததே இல்ல) ஆனா நான் வேணும்னு வராம விடலக்கா.. அது உங்களுக்கே தெரியும்.. அவர் மாட்டேனுட்டார்.. பசங்களுக்கும் புரியாது..  நான்  தனியா வரலாம்னா இந்த ஸ்னோல ரிஸ்க் எடுத்து ட்ரைவ் பண்ண பயமா இருந்துது..

(இத சொல்லிக்கிட்டே மெதுவா அவங்கள கிச்சன விட்டு ஹால் பக்கம் கூட்டிட்டு வந்துட்டேங்க. கரண்டி எடுத்து வீசினா பரவால்ல.. கத்தி எடுத்து வீசிட்டா??)          

படம் பாக்காமலே எனக்கு வந்த நிலைய பாத்தீங்களா?? என் சித்தி ரெண்டு நாள் பொண்ணு மேல கடுப்பாவே இருந்தாங்க. அவங்கதான் அடம் பிடிச்சு கூட்டிப் போக சொன்னாங்களாம். அப்பா சொன்னார் யாம் பெற்ற துன்பம் நீயும் பெறணும்டாம்மா.. கண்டிப்பா நீயும் பாருன்னு. இதுக்கப்புறம் ஒருத்தர் கிட்ட கூட நான் மறந்தும் கேக்கல.

நீங்க ஆயிரத்தில் ஒருவன் பாத்தீங்களாஆ??

aayirathil-oruvan கார்த்திக்குப் பதில் செல்வாவ இங்க நிக்க வச்சிருக்கணுமோஓ??

அப்பப்போ என் கண்ணன் சொல்றதுதான் இப்போவும் என் நினைவுக்கு வந்துதுங்க. அதான் தலைப்பா போட்டுட்டேன். கரெக்டா இருக்குதுங்களா??

வரட்டுங்களா..

28 நல்லவங்க படிச்சாங்களாம்:

பித்தனின் வாக்கு said...

நல்ல வேளை நானும் பார்க்கவில்லை. வாங்குன சி.டி யைக்கூட அப்படியே என் கம்பெனி செக்யூரிட்டி கிட்ட கொடுத்துட்டேன். நல்ல விமர்சனம். நன்றி.

பித்தனின் வாக்கு said...

ஹை இன்னிக்கு மீ த பர்ஸ்டா? எப்பவும் லாஸ்டில் படிக்கும் பழக்கம் மாறிடுச்சா?

அண்ணாமலையான் said...

பாவம்தான் நீங்க

ராமலக்ஷ்மி said...

நானும் படம் இன்னும் பார்க்கவில்லை. பார்த்தாலும் படம் பிடிக்குமோ இல்லையோ இந்தப் பதிவு ரொம்பப் பிடித்திருக்கிறது:)))!

Anonymous said...

ரெண்டாவது பகுதி ஒரே ரத்தகளமா இருந்துதே. அதப்பத்தி ஒண்ணுமே சொல்லலை.( குழந்தைகளை கூட்டிட்டு போலயே)

Chitra said...

கார்த்திக்குப் பதில் செல்வாவ இங்க நிக்க வச்சிருக்கணுமோஓ??........படத்தை வச்சு காமெடி பண்ணிட்டீங்களே!

seemangani said...

லேட்டா விமர்சனம் எழுதுனாலும் விவரமாதே எழுதி இருக்கீக படம் பார்த்து பைத்தியம் புடிச்சவகள நீங்க இன்னும் மீட் பன்னால போல நல்ல வேலை அப்டியே அடக்கி வாசிக்க வேண்டியதுதான்...
விமர்சனம்...கி..கி..கி......கிக்கி...

கோபிநாத் said...

என்ன கொடுமை அக்கா இது...ம்க்கும்...இந்த பதிவை நான் வன்மையாக சிரிப்புடன் கண்டிக்கிறேன்...பின்ன அதுக்கு அப்புறம் எம்புட்டு ஏழரைகளை கடந்து வந்துருக்கோம்..(கோவா,வி.த.வ, அசல்..) ;-))))

கோபிநாத் said...

\\\.( குழந்தைகளை கூட்டிட்டு போலயே)\\

சின்ன அம்மணி அக்கா சுசிக்காவே ஒரு குழந்தை...;)) (எப்பூடிஇஇஇஇ))

கோபிநாத் said...

பட்....சில காட்சிகள் தவிர 1001 எனக்கு ஓகே தான்...அந்த சிவன் நிழல் காட்சி எல்லாம் நன்றாக வந்திருக்கும்..அந்த இசை கூட..;)

தாரணி பிரியா said...

சொன்ன பேச்சு கேட்கலைன்னா இப்படித்தான் :)

கார்க்கி said...

@கோபிநாத்,

செம சூப்ப்ர் சீனுங்க அது. ஆனா நாங்க ஏற்கனவே பழைய ஹாலிவுட் படத்துல இன்னும் பெட்டரா பார்த்ததால் அவ்வளவா பிடிக்கல... :))

இந்தப் படத்தை பத்தி எழுதிட்டு நல்லா இருக்குன்னு நான் சொல்லனும்ன்னு எதிர்பார்க்காதிங்க :))

மன்னார்குடி said...

ஆயிரத்தில் ஒருவர் நீங்கள்.

விக்னேஷ்வரி said...

நீங்க ரொம்ப நல்லவங்க சுசி. அதான் படம் பார்க்காமத் தப்பிச்சுட்டீங்க. :)

Mehar said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 

(Pls ignore if you get this mail already)

சுசி said...

இதுதான் நல்ல பழக்கம் அண்ணா.. செக்யூரிட்டி இப்பூ எப்பிடி இருக்கார்??

! ! ! ! !

அண்ணாமலையான்.. உங்களுக்கு புரியுது..

! ! ! ! !

நீங்களுமா அக்கா..

ஹிஹிஹி.. எனக்கு இதுக்கு மேலேயும் அத பாக்கணுமான்னு இருக்கு :)))

சுசி said...

அம்மிணி.. நான் இன்னும் பாக்கல.. பாக்க போனவங்க கிட்ட ரெண்டாவது பகுதி பத்தி பயத்தில கேக்கல.. கேட்டிருந்தா அவங்க இருந்த கொலை வெறிக்கு எங்க வீடு ரத்தகளமா ஆயிருக்கும் :(((

! ! ! ! !

எத சொல்றீங்க சித்ரா?? படத்தையா இல்ல கார்த்தி படத்தையா??

! ! ! ! !

பைத்தியம் புடிச்சா பரவால்லையே சீமான்.. கொலை வெறில்ல வந்திருக்கு..

சுசி said...

கோபி.. குழந்தை குட்டு வச்சாலும் வலிக்கும் தெரியும்ல.. கிர்ர்ரர்ர்ர்ர்..
நான் பாத்தா சொல்றேன் படம் எப்டின்னு.. மத்த ஏழரைகளையும் சேர்த்து தான் சொல்றேன் ;)

! ! ! ! !

இனிமே ஒழுங்கா கேட்டுக்கிறேன் தாரணி பிரியா.. :))

! ! ! ! !

ரைட்டு விடுங்க.. ஆனா ஒரு ஜோடி வைர கம்மல்கள எதிர்பார்த்துட்டு இருக்கேன் கார்க்கி.. பார்சல் அனுப்பிட்டீங்க இல்ல??

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி மன்னார்குடி.. வந்ததுமேவா..

! ! ! ! !

நீங்க பாத்துட்டீங்களா விக்னேஷ்வரி??

! ! ! ! !

மெயில் வந்துட்டே இருக்கு மெஹர் :))) வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

//இந்த படம் இந்தியால இப்பவும் ஓடுதுன்னு சொல்லுங்க இனிமே நான் வாழ்க்கேல படம் பாக்கல//

படம் புரியலைன்னு சொல்லுங்க..நல்லா இல்லை யாரும் பாக்க வேணாம்னு சொல்லாதீங்க. ஆந்திராவில் இப்போது அதிக வசூல் சாதனை இந்தப் படம் தான். ஆனாத் தமிழனுக்குத் தான் புரியல. என்னக் கொடுமை இது..?

இய‌ற்கை said...

:-)))))

Anonymous said...

hia nan tapchitenay...

na padam pakalaieyey...

hi-joolyy..appada epothan santhosma eruku...

etukuthan avasarapadapidthunu cholrathu..

amma yaro oru akka padam pathu siricikitu erunthangaley avanga ungala adikkavilyaa..

mm epo kavithai elutha porenga
oru nala kadhiyavathu podunga unga padivila..

nandri valga valamudan
complan surya

சுசி said...

அவ்வ்வ்வ்.. புலவரே.. நான் எங்க சொன்னேன் யாரும் பாக்க வேணாம்னு.. பாத்தீங்களானு கேட்டா அடிக்க வராங்கப்பா.. அததானே சொன்னேன்.. நான் இன்னமும் பாக்கவே இல்லப்பா.. ஆவ்வ்வ்வ்..

! ! ! ! !

சிரிப்புக்கு நன்றி இயற்கை.

! ! ! ! !

நீங்களுமா சூர்யா?? நான் இன்னமும் ஆ ஒ பாக்கலைங்க.. அவங்க தானே விருப்பபட்டு போனாங்க.. அதனால தப்பிச்சேன்.. :))
நான் என்ன எழுத மாட்டேன்னா சொல்றேன்.. நேரம்??

பிரியமுடன்...வசந்த் said...

sirikka kuuda mudilakkaa sema tired ...

:(

சுசி said...

என்ன ஆச்சு உ.பி????????

உடம்புக்கு ஒண்ணும் இல்லையே??????

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????


மீண்டும் வருவான் பனித்துளி !

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி சங்கர்.

அய்யய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????

//மீண்டும் வருவான் பனித்துளி !//

goma said...

இன்றைக்குத்தான் வந்தேன் .

வாழ்த்துக்களோடு பாராட்டும் தந்தேன்.