Pages

  • RSS

24 March, 2010

அணைக்க மறந்து போகிறேன்..

என் புது வீட்ட பாத்தீங்களா மக்கள்ஸ்..
என் உயிர் நட்பு கட்டிக் கொடுத்துது.. நல்லாருக்குதுங்களா?? எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு. அதனால அதுக்காக இன்னைக்கு வழக்க விரோதமா ஒரு ஸ்பெஷல் போஸ்ட்.. ஏற்கனவே எழுதி கிடப்பில இருந்த ஒண்ணுதான். இப்போ அவசரத்துக்கு உதவுது. எல்லாருமா சேர்ந்து ஜோரா அதுக்கு ஒரு நன்றி சொல்லிடலாம். நான் தனியா சொன்னா திட்டும். ஏற்கனவே உனக்கு நன்றி சொல்லணுமான்னு கேட்டு திட்டு வாங்கிட்டேன். எப்டி இருக்குனு சொல்லுங்க. அதுவும் படிச்சு தெரிஞ்சுக்கட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 hug
நீட்டிய உன் கைகளுக்குள்
ஓடி வந்து ஒளிந்து கொள்கிறேன்
உன் நெஞ்சோடு அப்படியே
ஒண்டிக் கொள்கிறேன்
என் மனதின் சுமைகளை
அங்கேயே இறக்கி வைக்கிறேன்
உன் அணைப்பின் சூட்டோடு
பஞ்சாய் வெளி வருகிறேன்
அதனால்தான்
சமயத்தில் பதிலுக்கு
உனை அணைக்க
மறந்து போகிறேன் கண்ணா..

*******************************************************************************************************************
hugging

முத்தம் கேட்டு
கன்னம் காட்டினான்
ஆவ்.. கொஞ்ச கேட்டா
கடிச்சு வைக்கிறே..
செல்லமாய் முறைத்தவன் காதில்
மெல்லமாய் சொன்னேன்
ஆப்பிளை கடிச்சுதாண்டா
கண்ணா சாப்டணும்
தெரியாதா உனக்கு??

17 நல்லவங்க படிச்சாங்களாம்:

seemangani said...

//ஆப்பிளை கடிச்சுதாண்டா
கண்ணா சாப்டணும்
தெரியாதா உனக்கு?? //

ஆஹா...இனி ஆப்பிள் வாங்குற செலவு மிச்சம்....
சூப்பர்....கோ....

வாழ்த்துகள்...
எனக்கும் ஒரு புது வீடு.....
யாரு கட்டி குடுப்பாங்க மேஸ்திரி அட்ரெஸ் இருக்க???

தோழி said...

very cute

பிரியமுடன்...வசந்த் said...

புது டெம்ப்லேட்ட்ட்ட்ட்ட்

நல்லாருக்கு சுசி

ம்ம்

கவிதை சின்னதா ரசனையா இருக்குக்கா...

புலவன் புலிகேசி said...

டெம்ப்ளேட்டும் சூப்பரு, கவிதைகளும் சூப்பரு...

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

ஆப்பிள் நல்லாயிருக்கு ...

கார்க்கி said...

டெம்ப்ளேட் க்யூட். புகைப்படங்கள் மட்டும் ஏன் இப்படி இருக்குன்னு பாருங்க. அல்லது பார்க்க சொல்லுங்க.

நல்லா இருக்கு

ராமலக்ஷ்மி said...

புது வீட்டுக்கும் உயிர் நட்புக்கும் வாழ்த்துக்கள். அருமை கவிதைகளும்.

கோபிநாத் said...

ஆகா அல்லோரும் புது வீடு சூப்பராக இருக்குன்னு சொல்றாங்க...ஆனா எனக்கு அந்த பழை வீடு தான் பிடிச்சிருக்கு.

போட்டோ ஏன் இப்படி இழுத்துக்கிட்டு கிடக்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...;)

சுசி said...

சீமான்.. ஹிஹிஹி.. அட்ரஸ் இருக்கு.. ஆனா இல்ல.. :))

Ø Ø Ø Ø Ø

முதல் வருகைக்கு நன்றி தோழி :))

Ø Ø Ø Ø Ø

நன்றி வசந்த்.. சீக்கிரமே அது கிட்ட கேட்டு கத்துக்கிட்டு நானும் உங்கள மாதிரி அடிக்கடி வீட்ட மாத்தலாம்னு இருக்கேன் :))

சுசி said...

நன்றி புலவரே.

Ø Ø Ø Ø Ø

நன்றி ஜமால்.

Ø Ø Ø Ø Ø

நன்றி கார்க்கி. எனக்கு பார்க்க தெரியாது. அவ்வ்வ்..
சொல்லிட்டேன்.

சுசி said...

நன்றி அக்கா.

Ø Ø Ø Ø Ø

மைனஸ் ஓட்டு போட்டாலும் நான் நன்றி சொல்வேன் கோபி.. படத்தில க்ளிக் செஞ்சு பாருங்க.. க்ளியரா இருக்கு.. சீக்கிரம் சரி செஞ்சிடலாம்.. சாரி.. பழைய வீடு வித்தாச்சு.

Complan Surya said...

wow

beautiful place...

nan entha ulagathileye ella susima..

so nice putu veedu..

but i miss paliya veedu..

ennomo entha veedu periya high class veedupola erkku..

palaiyaveedu namaveedu pola amithiya aarpatam ellama eruntchu..

hmm sari matrangal ondru thaney maramal erupathu..

nadakatum nadakatum..

kavithigal arumai...

etharthamana rasani...miga alaga..

nandri
v.v.s sangam sabraga
complan surya

Complan Surya said...

first eanku oru doubt erunthchu..nan vera blogkula poitananu..appruma kela ulla thodar elam padichutu
nama correctana addreskuthan vantuerukonu confirm paniten athuvera visiam..

nandri
valgavalamudan.
complan surya

பித்தனின் வாக்கு said...

சரி சரி புரியுது, உங்க ஊருல பனியும் குளிரும் ரொம்ப ஜாஸ்தியாகிடுச்சு.

நல்ல கவிதை, நன்றி.(என்னை மாதிரி கல்யாணம் ஆகாத சின்னப் பசங்களை எல்லாம் இப்படி வெறுப்பு ஏத்தக்கூடாது. ஹா ஹா

மிக்க சந்தேசம், உங்களின் புரிந்துணர்தல் கண்டு.

Chitra said...

Romantic!

சுசி said...

நன்றி சூர்யா.. நான் கூட நட்பு வீட்ட காட்னதும் மறுபடி மறுபடி கேட்டேன் எனக்கா இதுன்னு.. :))) இது நான் ரொம்ப நாளா எதிர் பார்த்துட்டு இருந்த மாற்றம்.

Ø Ø Ø Ø Ø

ஹஹாஹா.. சீக்கிரம் சுப செய்தி வரும்ல.. அப்புறம் அசத்துங்க அண்ணா :))

Ø Ø Ø Ø Ø

அதே அதே.. நன்றி சித்ரா :)))

Complan Surya said...

முத்தம் கேட்டு
கன்னம் காட்டினான்
ஆவ்.. கொஞ்ச கேட்டா
கடிச்சு வைக்கிறே..
செல்லமாய் முறைத்தவன் காதில்
மெல்லமாய் சொன்னேன்
ஆப்பிளை கடிச்சுதாண்டா
கண்ணா சாப்டணும்
தெரியாதா உனக்கு??

addada nethu etha padikama vituviten..

padichitu orey siripu,
sema commedinga ponga..
yena enga akka ponu ella
en kanathium eppdithan kadichuvacuta...nanum kutimutamthan keten.


hahaha....
hio hio...

super romantic.

"pinkuripu..akkaponu kadithuvaithapathi overa carpani ellam panapidathu
na chinapayanthan akkaponuku vaysu 5..enaku 7vaysuthan aguthu.sema setakari akkaponu...


nandri valga
valamudan
complan surya