Pages

  • RSS

31 March, 2010

விண்ணைத் தாண்டிய தமிழ் அவதாரம்..

அன்னிக்கும் பயங்கர ஸ்னோ.. இருந்தாலும் அதையும் தாண்டி ரொம்ப எதிர்பார்ப்போட போனேன். கண்ணாளன வேற உசுப்பேத்தி கூட கூட்டிட்டு போயாச்சு. அதே க்ரூப். அதாவது எங்க நண்பர்கள் வட்டம். ஒருத்தர் இது பசங்களுக்கு புரியாத படம் அதனால அவங்கள நான் bowling center கூட்டிப் போறேன்னு சதுவ பொறுப்பெடுத்தார். லச்சும்மா அவங்க ஃப்ரெண்டி வீட்டுக்கு போனாங்க. தியேட்டர் உள்ள போனா எந்த தமிழ் முகத்தையும் காணோம். இருங்கப்பா இவ்ளோ மோசமா ஸ்னோ கொட்டும்போது எல்லாரும் நம்மள மாதிரியே சீக்கிரமா வர நினைச்சிருக்க மாட்டாங்கனு  என்னவர் பார்வைய தவிர்த்து பதில் சொன்னேன்.

 

கொஞ்சம் ஆளுங்க வந்தாங்க. வந்தவங்க என்ன கேட்ட கேள்வி பெரும்பாலும் இப்டியா இருந்துது. தெரிஞ்சேதான் அந்தப் படத்துக்கு வராம இதுக்கு அதுவும் சீக்கிரமா வந்திருக்கீங்க இல்ல.. நல்லாருங்க. யாரும் நம்ப மாட்டேங்கராங்க. அவ்ளோ ஏன் நீங்க கூட நம்பாம என்ன திட்னீங்க இல்ல.. சரி விடுங்க.. ஒரு ஃப்ரெண்டோட அம்மா வராங்க வாங்க அவங்க கிட்ட பேசலாம்.

 

ஹாய் ஆண்டி.. எப்டி இருக்கீங்க?

நல்லா இருக்கேம்மா..

எப்டி போச்சு இந்தியா பயணம்லாம்?

நல்லா போச்சும்மா.. என்ன எல்லாருக்கும் உடம்புக்கு முடியாம போச்சு.. அதான் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டோம்.. இங்க வந்தா இந்த ஸ்னோ இப்டி கொல்லுது.. இப்போ கொஞ்சம் பரவால்லடா..

(இப்டியே கொஞ்ச நேரம் அவங்க பயணம் பத்தி பேச்சு போயி படங்கள் பக்கம் வந்து நின்னிச்சு)

இங்க என்ன படம்லாம் போட்டாங்கம்மா?

குட்டி, கோவா.. ஆயிரத்தில் ஒரு..

அப்பாடா.. ஓடி முடிஞ்சுதா அந்த படம்.. தப்பிச்சேன்.

ஏன் ஆண்டி.. அப்டி சொல்றீங்க?

அது ஒரு கருமம் பிடிச்ச படம் போல.. ட்ரெய்லர் பார்த்தே நான் பயந்துட்டேன்.

நான் நீங்க இந்தியால பாத்திருப்பீங்கனுல்ல நினைச்சேன்..

ஏம்மா.. எற்கனவே உடம்புக்கு முடியல.. அதில இது வேறயா..

 

அப்டியே டிக்கட் குடுக்க ஆரம்பிச்சாங்க. உள்ள போய்ட்டோம். இருந்தாலும் என் மைண்ட்ல ஒரு கேள்வி சுத்திட்டே இருந்துது. கருமம் படமா இல்ல பாத்தவங்களா இல்ல பாக்காமலே திட்டு வாங்கிறவங்களா??

 

17:30 ஷோ.. சீட் நம்பர்லாம் கிடையாது நீங்களே போய் இஷ்டத்துக்கு உக்காருங்கன்னாங்க. நடு ரோல வசதியா, வரிசையா உக்காந்தோம். என்ன கூட்டம் கம்மியா இருக்கு. பின்ன கடசியா பாத்த படம் அப்டி.. ரொம்ப மிரண்டிட்டாங்க போல.. பாவம்ல மக்கள்.. இந்த வகையில பேச்சு அடிபட்டுது. நான் எதுவும் சொல்லவும் இல்லை. கேக்கவும் இல்லை. நோட் பண்ணிக்கோங்க. என் இடப் பக்கம் கண்ணாளன். வலப் பக்கம் கொலைவெறி கொஞ்சம் கம்மி ஆயிட்ட அக்கா. நான் வரதால நல்ல படமா இருக்கும்னு நம்பி வந்திருந்தாங்க.

 

ரொம்ப நேரமா பாத்துட்டு இருந்தோம். வந்திச்சு பாருங்க இண்டர்வல்.. அடப்பாவிகளா இப்போதான் இண்டர்வலா? சொன்னது என்னவர். அதுவும் கொஞ்சம் சத்தமா.. பக்குனு எல்லாரும் சிரிச்சிட்டாங்க. அன்னிக்குனு காஃபி மெஷின் கூட ரிப்பேர். தியேட்டர் எதிர்க்க இருந்த காஃபி ஷாப்ல வாங்கிட்டு வந்தது குளிர்ல ஜில்னு ஆயிடிச்சு. வேற வழி.. மறுபடி உக்காந்தோம்.

 

போகும்போதே என் ஃப்ரண்டுக்கு ஒரு பிரச்சனைனு மனசு சரியா இருக்கல. படம் இருந்த வலிய அதிகம் ஆக்கிடிச்சு. பாடலும் காமராவும் கட்டிப் போடலேன்னா எப்பவோ எந்திரிச்சு போயிருப்பேன். பொறுமைய இழுத்து பிடிச்சிட்டு இருந்த என்னவர் கூடவே வந்திருப்பார்.

 

- சிம்பு ஒவொரு தடவையும் அந்த கேள்விய கேட்டப்போ எல்லாரும் சிரிச்சாங்க. நான் மட்டும்    ரசிச்சேன்.. அது நான் என் கண்ணன எப்போதும் கேக்கற கேள்வியாச்சே :))

- சிம்புவும் த்ரிஷாவும் பார்க்ல உக்காந்து பேசறப்போ உதடு துடிக்க சிம்பு பேசிட்டு இருந்தார். என் கண்ணில தூசி.. அவ்வ்.. மத்தவங்க குசுகுசுனு ஆரம்பிச்சு இப்போ சத்தமாவே பேசிட்டு இருந்தாங்க.

- இந்த வலி இவ்ளோ கஷ்டமா இருக்கும்னு நினைச்சுப் பாக்கலன்னு த்ரிஷா சொன்னப்போ ஆவ்வ்..

 

இனி வெளிய வந்து பேசிக்கிட்டது.

- என்னங்க இந்த படத்துக்கு போயெல்லாம் அழுவீங்களானு என் மூஞ்சிய பாத்து கேட்டவங்களுக்கு பக்கத்தில இருந்தவங்க சொன்னாங்க அவங்க இந்த படத்த பாத்தோமேங்கிற கஷ்டத்தில அழுதாங்கப்பானு.

- ஒருத்தங்க சொன்னாங்க எனக்கு கௌதம் மேனன் எடுத்த படத்த விட சிம்பு எடுத்த படம்தான் பிடிச்சுதுங்கனு.

- ஒருத்தங்க சரி விடுங்கப்பா அதான் த்ரிஷாவே சொல்லிட்டாங்களே மூவ் ஆன் னு.. அப்புறம் என்னன்னு சொன்னாங்க.

- ஒருத்தங்க ரொம்ப இழுவ்வ்வ்வையா இருந்திச்சுல்லன்னாங்க.. நான் சொன்னேன் விண்ணைத்தாண்டணும்னா சும்மாவா.. அவ்ளோ தூரம் போணும்ல.. அதான்..

 

என்னப் பொறுத்த வரைக்கும் பாடல்கள் சொன்ன அளவுக்கு படம் காதலை சொல்லைங்க. காட்சிகள் தனித்தனியா பார்க்க நல்லா இருக்கு.. படத்தில திணிச்சா மாதிரி இருந்துது. ட்ரெயின்ல நடந்தது.. வா ஆ ட்ரெயின் சீன்ல இருந்தே நான் இன்னும் வெளிய வரல.. இது அத விட நல்லா இருந்திருக்கணும். த்ரிஷா வீட்ல கல்யாணம் நின்னப்போ சிம்பு பாக்க போவாரில்ல.. திரை பின்னாடி அவர கூட்டிப் போய் உக்கார வச்ச சீன் தேவை இல்லாத ஒண்ணு.. இது மாதிரி நிறைய. இத எல்லாம் ஏன் சொல்றேன்னா இதெல்லாம் இல்லாது இருந்திருந்தா காதல் இன்னும் அழகா இழுவை இல்லாம சொல்லப்பட்டிருக்கும். எதிர்பார்ப்பு கம்மியாகி த்ரிஷா இத தான் சொல்லப்போறாங்கனு முன்னாடியே யூகிக்க முடிஞ்சது ஆர்வத்தை குறைச்சிடுச்சு.

 

பசங்கள பிக் அப் பண்ணிட்டு வர வழில லச்சு கேட்டா யாரெல்லாம் வந்தாங்கனு. அவ க்ளாஸ் பையன் ஒருத்தர் வந்திருந்தார்னும் சொன்னேன். கதை என்ன. சொன்னோம். படம் நல்லா இல்லையானு அடுத்த கேள்வி. நானும் அவரும் அர்த்தமுள்ள ஒரு பார்வை பரிமாற்றம் செய்து கொண்டோம். இல்லடா ஓக்கேதான். ஆனா கொஞ்சம் பிடிக்கலை. அப்டினா எந்திரிச்சு வந்திருக்க வேண்டியதுதானேன்னா. அம்மாவுக்காக நானும் உக்காந்திட்டு இருந்தேண்டான்னார் என்னவர். பாவமா இருந்துது. எனக்கும் ஒரு வகையில அந்த காதலோட வலி பிடிச்சிருந்துது. அதான் வர்லனு சொன்னா அவங்களால புரிஞ்சுக்க முடியாதேனு நான் எதுவும் சொல்லல. வீட்டுக்கு வந்ததும் சாட்ல அந்த பையன் கிட்ட பேசிட்டு வந்து சொன்னாங்க.. அம்மா அவருக்கு படம் ஒண்ணுமே புரியலையாம். நல்ல வேளை நாங்க வர்ல. என் உடன் பிறப்பு பேசிச்சு. என்னடி டல்லா இருக்கே. இல்லக்கா படம் பாத்துட்டு வந்தோம். அதான். ஃபோனப் புடுங்கி தன்னோட ஆதங்கத்த வெளிப்படுத்தினார் என்னவர். ஊர்ல இருக்கும்போது எங்கள மகளிர் மட்டும் பாக்க வச்சீங்க இல்லை.. உங்களுக்கு நல்லாவே வேணும்ணா.. எல்லாம் கேட்டுட்டு சந்தோஷமா சொல்லிச்சு என் உ.பி.

 

அடுத்து தமிழ்ப்படம் பார்த்து சிரிரிரிரிரிரிச்சோம்.

 

அவதார்.. நானே ஒரு அவதாரம் அப்புறம் எதுக்கு அத போயி பாக்கணும்னு என்னவர் வர்ல. நான் பசங்க அதே நண்பர்களோட போனோம். ரசிச்சு பாத்துட்டு வந்தோம்.

 

இப்போ போன வாரம் கலைஞர் + ஐங்கரன் டிவி ஒளிபரப்பின போர்க்களம் பாக்க போறேன். ரெக்கார்ட் செஞ்சு வச்சிருக்கேன்.

இடையில ஒரு விஷயம் கேள்விப்பட்டு என் ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணேன்.

வர செவ்வாய் பையா போடறாங்களாம் அக்கா.. போலாமா..

இனிமே வருவேனு நினைக்கிறீங்க உங்க கூட படம் பாக்க? காமடி பண்ணாம வேற எதுனா பேசுங்க.. இல்லேனா ரணகளம் ஆயிடும்..

படம் எடுத்தவங்கள விட்டிட்டு என் மேல இவ்ளோ கொலைவறி ஆகாதுனு அவங்களுக்கு நான் எப்டி புரிய வைப்பேன். பாவம் நான்.

 

வர்ட்டா..

17 நல்லவங்க படிச்சாங்களாம்:

Chitra said...

பாவங்க......நாடு விட்டு நாடு வந்தாலும், உங்களால தப்பிக்க முடியலியா?

ராமலக்ஷ்மி said...

வித்தியாசமான விமர்சனம்:)!

பிரியமுடன்...வசந்த் said...

ஆவ்வ்

ரொம்ப ரொம்ப லேட்டா விமர்சனம்...

இடையில சாதுவா, நடு ரோவுல ஸ்பெல்லு மிஸ்ஸ்ஸ் பாருங்க....

seemangani said...

//படம் இருந்த வலிய அதிகம் ஆக்கிடிச்சு. பாடலும் காமராவும் கட்டிப் போடலேன்னா எப்பவோ எந்திரிச்சு போயிருப்பேன்.//

ஆமாவா... ஆமாவே...காதலர்கள் கொண்டாடும் படம் ரகுமான் இசை காதலர்கள்...வழக்கம் போல சுசி பாணில சூப்பர் விமர்சனம்..அருமை

கார்க்கி said...

//சிரிரிரிரிரிரிச்சோ//

இதுக்கு நான் சிரிரிரிரிரிரிரிச்சேன்

Complan Surya said...

ஆகா
மிகவும் அருமை
லேட்டா வந்தாலும்
நீட்ட பதிவு போட்டு இருக்கிங்க.

அங்க அங்க ஒரு வடிவேலு போல ஒரு மிமிக்ரே பண்ணிட்டு
எங்க சங்கத்தை சிரிக்கவும் வைக்கேறீங்க சுசிமா.
வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
வருத்தபடாத வாசிப்போர்
சங்கம்
செயலாளர்
காம்ப்ளான் சூர்யா

கோபிநாத் said...

ரைட்டு...நோட் பண்ணிக்கிட்டேன்...;))

சுசி said...

இல்லைங்க சித்ரா..

Æ Æ Æ Æ Æ

நன்றி அக்கா. நீங்க பாத்திட்டீங்களா??

Æ Æ Æ Æ Æ

என்ன செய்ய வசந்த்.. நேரமின்மை.. திருத்திட்டேன்.. சரியானு பாருங்க..

சுசி said...

நன்றி சீமான்..

Æ Æ Æ Æ Æ

அவ்வ்.. நானும் சிரிச்சுட்டுதான் இருந்தேன் கார்க்கி.. 'ஒரு சூறாவளி'க்கு அப்புறம்தான் சிரிரிரிரிக்க ஆரம்பிச்சேன்..
ஆவ்வ்..

Æ Æ Æ Æ Æ

ஹிஹிஹி.. நன்றி சூர்யா.. என்னய வடிவேலு ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க.. ரைட்டு.

சுசி said...

எத நோட் பண்ணீங்க கோபி??

பித்தனின் வாக்கு said...

நல்ல விமர்சனம். அது என்ன எப்பவும் கும்பலா போய்த்தான் படம் பார்ப்பீங்களா?. படத்தை ரொம்ப ஆர்வமா பார்த்துருக்கீங்க போல. நன்றி.

ராமலக்ஷ்மி said...

பார்க்கவில்லை:)!

சுசி said...

அப்டியாவது நண்பர்கள் கூட இருக்கலாமேனு தான் அண்ணா + இன்பமோ துன்பமோ யாம் பெறுவது வையகமும்..

Æ Æ Æ Æ Æ

பாக்கலையா அக்கா.. கண்டிப்பா பாருங்கனு சொல்ற அளவுக்கு படம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து :))

மங்குனி அமைச்சர் said...

இதுக்கு தான் எந்த விசயமும் "ப்ளான்" பன்னி பன்ணனும், 'ப்ளான் "பண்ணாம போன இப்படிதான் , இப்ப பாருங்க உங்க பதிவ பாத்து நாங்க எஸ்கேப் ஆகிட்டோம்

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி அமைச்சரே..

கலக்கிட்டேடி சுசி.. உன் பதிவ அமைச்சர்லாம் படிக்கிறாரு பாரு :))

Complan Surya said...

hilo

rumba perumai padapidathu..ammaicher ellam padikranganu..

avanga ellam enga sangatha serntha aluga than..

naliku prime ministera padikka porarna patukangaleyen..

yarnu kekurengala..
vera yarunga
satchat
complan suryathan..

nandri valga valamudan.
V.v.s
complan surya

சுசி said...

ரொம்ப நன்றி பி.எம் காம்ப்ளான் சூர்யா..