Pages

  • RSS

09 March, 2010

திட்டாதீங்கப்பா..

வேற ஒண்ணும் இல்லீங்க.. வி தா வ நானும் பாத்துட்டேன். அது பத்தி எழுதிட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கிறதால இப்போதைக்கு என் பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையா, நெட்ல தேடி பிடிச்சு சில நாட்களே ஆன புத்தம் புதிய ஒரு படத்த வச்சு..

ஒரு குட்டிப் பதிவு.

படிச்சிட்டு தலைப்ப படிங்க. அப்டியே படம் பாத்ததும்.. அட அந்த படத்த சொல்லலைங்க.. இங்க நான் போட்டிருக்கிற படம்.. உங்க மைண்ட்ல தாண்டுற.. சாரி.. தோன்றுற வரிகளை கவிதையா கமண்ட்ல பொழிஞ்சிட்டு, தீட்டிட்டு, வடிச்சிட்டு, வரைஞ்சிட்டு.. ரைட்டு விடுங்க.. எழுதிட்டு போங்கங்க.. படத்துக்கு பெருமையா இருக்கும். மறுக்கா சொல்றேன் இந்தப் படத்துக்கு.

வரட்டுங்களா..

j 014

விண்ணையும் தாண்டி விடலாம்

என் அருகே நீ இன்றி

உன் நினைவுகளோடு

வாழ்வதை விட.

-----------------x-----------------

பாதம் மண்ணை தீண்ட வில்லை...
காதலி நினைவில்...

-நன்றி சீமான் கனி.

-----------------x-----------------

உன்னைத் தாண்டியே
இன்னும் வரவில்லை
விண்ணைத் தாண்டி வருவது
அப்புறம்

-நன்றி சங்கர்.

--------------x---------------

ஆளற்ற ரோட்டில் நடந்து கொண்டியிருந்தேன்
உன் நினைவுகளேடு
பயனற்ற பயணங்கள் முடியாமல் போகின்றது
உன் பிரிவைப் போல
சோகங்களோடு சுகங்களும் சேர்ந்து சுமக்கின்றேன்
உன்னை என் நெஞ்சில் தாங்குவதைப் போல

-நன்றி சுதாண்ணா.

------------------x-----------------

விழியெட்டும் தூரம் வரை
இலக்குகளற்று நீளும்
இந்த தார்ச்சாலையில்
என்னை தனியே நடக்கவிட்டு
கையசைத்து சென்றவளே..
உற்றுப்பார்.
உன்
புறங்கையில் தெரியும்
புன்னகைக்கும் என் முகம்.

-நன்றி கார்க்கி.

-------------------x----------------

என்னோடு
நீ வருவதாய் இருந்தால்
இந்த சாலையின் நீளம்
போதாது எனக்கு

-மீண்டும் நன்றி கார்க்கி.

-------------------x------------------

விண் தாண்டி

உன்னிடம் வந்துவிட்டேன்

இரு வழிப் பாதை

இருந்தும்

திரும்பி வர மனமில்லை.

-நட்புக்கு நன்றி.

--------------------x----------------

23 நல்லவங்க படிச்சாங்களாம்:

சீமான்கனி said...

ai..me the 1st....

சீமான்கனி said...

பாதம் மண்ணை தீண்ட வில்லை...
காதலி நினைவில்...
நல்லா இருக்கு சசி...இல்ல..பசி...இல்ல..
சரி...சுசி...

Chitra said...

ஆட்டோ வருமா.......

Anonymous said...

விண்ணில இருந்து வர்றதுக்கும் போறதுக்கும் இதுதான் ரோடா :)

சங்கர் said...

இது என் ஃபீலிங்

உன்னைத் தாண்டியே
இன்னும் வரவில்லை
விண்ணைத் தாண்டி வருவது
அப்புறம்

கோபிநாத் said...

இதுக்கு பெயர் தான் கொலைவெறி....;;)

கார்க்கிபவா said...

//விண்ணையும் தாண்டி விடலாம்

உன் நினைவுகளோடு

வாழ்வதை விட//

அந்த கொடுமைக்கு விண்ணைத் தாண்டி நரகத்துக்கே போயிடலாம்னு சொல்றீங்க.. குட்..:))

தாரணி பிரியா said...

ஹூக்கும் எனக்கு அதோ பாரு ரோடுன்னு ஒண்ணாப்புல பாடினதுதான் ஞாபகம் வருது சுசி :)




இப்ப தலைப்பை நீங்க கொஞ்சம் திருப்பி படிச்சுகோங்க :)

Anonymous said...

enna kuduma sir ethu..
mudiala..

vennam choliputen..

enna kavithai ethu..
thalium puriali
valum purialai..

annal parunga padivu nala eruku..

valga valamudan
complan surya

ராமலக்ஷ்மி said...

உங்களைப் போய் யாராவது திட்டுவாங்களா?
புத்தம் புது படத்துக்கு உங்க கவிதை சூப்பர்:)!

பித்தனின் வாக்கு said...

என்ன எழுதலாம். ரோடு நல்லாதான் இருக்கு. இதுல போன சந்திர மண்டலத்துக்கு போலாம்மா?

ஆளற்ற ரோட்டில் நடந்து கொண்டியிருந்தேன்
உன் நினைவுகளேடு
பயனற்ற பயணங்கள் முடியாமல் போகின்றது
உன் பிரிவைப் போல
சோகங்களேடு சுகங்களும் சேர்ந்து சுமக்கின்றேன்
உன்னை என் நெஞ்சில் தாங்குவதப் போல

இது நல்லா இருக்கா? நான் ஒரு காமெடிப் பதிவு போட்டுள்ளேன் படிக்கவும்.சிரிக்கவும்(சிந்திக்க அல்ல).

பித்தனின் வாக்கு said...

திட்டிட்டுப் போவதா? அப்புறம் குணாளன் மாமாவிடம் அடிவாங்குறது யாரு?.

கார்க்கிபவா said...

விழியெட்டும் தூரம் வரை
இலக்குகளற்று நீளும்
இந்த தார்ச்சாலையில்
என்னை தனியே நடக்கவிட்டு
கையசைத்து சென்றவளே..
உற்றுப்பார்.
உன்
புறங்கையில் தெரியும்
புன்னகைக்கும் என் முகம்.

இது நான் எழுதிய பழைய கவிதை

கார்க்கிபவா said...

இது புதுசு..

என்னோடு
நீ வருவதாய் இருந்தால்
இந்த சாலையின் நீளம்
போதாது எனக்கு

சுசி said...

புரியுது சீமான் கனி.. அவங்க நினைவில என் பேர மறந்திட்டீங்கன்னு நல்லாவே புரியுது :))

" " " " "

இல்லை சித்ரா.. உங்களுக்கு ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஷூஸ் தான் வந்திட்டே இருக்கு பார்சல்ல.. :))

" " " " "

ஆமாம் அம்மிணி.. உங்க அப்பாவ நடக்க விட்டுடாதீங்க :))

சுசி said...

செம ஃ பீலிங் சங்கர் :))

" " " " "

இப்படி எல்லாம் சொல்லப்படாது கோபி..

" " " " "

கார்க்கீஈஈஈஈஈஈ.. நல்லாருங்க :))

சுசி said...

பாப்கங்தீடாட்தி.. படிச்சேன் எதுவுமே புரியலையே தாரணி பிரியா. உங்களுக்கு மட்டும் எப்டித்தான் புரிஞ்சுதோ போங்க :))

" " " " "

உண்மைய சொன்னத்துக்கு நன்றி சூர்யா.

" " " " "

நன்றி அக்கா. நீங்க எழுதுவீங்கன்னு நிறைய்ய்ய்யய்ய எதிர்பார்த்தேன் அக்கா :)

சுசி said...

போலாம் அண்ணா.. பாத்துட்டு வந்து தொடர் பதிவா எழுதிடுங்க :))
சூப்பரா இருக்கு.. ரெண்டு எழுத்துப் பிழை திருத்தி போட்டிருக்கேன்.. கேக்காமலே..
படிக்கிறேன் படிக்கிறேன்.. ஹிஹிஹி.. அப்போ உதை ஓகேவா??

" " " " "

கார்க்கி.. வேணாம் விட்டுடுறேன்..
சூப்பரா இருக்கு.. நன்றி சொல்லணுமா??

பித்தனின் வாக்கு said...

// ரெண்டு எழுத்துப் பிழை திருத்தி போட்டிருக்கேன்.. கேக்காமலே. //
அய்யே பிழையில்லாமல் இருந்தால் அப்புறம் என் கவிதைன்னு யாரும் ஒத்துக்க மாட்டாங்க..
திருத்தியமைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஆஹா, அத்தனை கவிதைகளையும் ரசித்தேன் சுசி:)!

நம்புங்க, நானும் முயற்சித்தேன். திருப்தியாய் இல்லாததால் எஸ்கேப் ஆகிவிட்டேன்.

நன்றி சுசி. எழுதிய பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்! அனைத்தும் அருமை.

சுசி said...

நன்றி அண்ணா.

" " " " "

அக்கா.. நீங்க மறுபடி வந்து சொன்னதே எனக்கு கவிதை எழுதினா மாதிரி இருக்கு. ரொம்ம்ம்ம்ப நன்றி :)))

குலவுசனப்பிரியன் said...

சிறகை மறந்த உணர்வில் உன்
விண்ணைத் தாண்டும் கனவு.

உடலைத் தந்தது தெய்வம்; உனக்கோ
பிச்சைக் கேட்கும் பக்தி.

உயிரையும் கொடுக்கும் உன்காதலில் என்
உரிமையை மறுக்கும் ஆணவம்.

உளவியல் கேள்வித் தாளில் நீ
உமிழ்ந்து வைத்து உள்ளாய்.

-- என்னைத் திருப்பி தலைப்பாதீங்க

விக்னேஷ்வரி said...

எல்லாமே நல்லாருக்கு சுசி.