Pages

  • RSS

29 June, 2009

வாழ்த்து மழையில் அம்மாவும் அப்பாவும்...


எல்லோரும் நலமா உறவுகளே?!
இன்று என்னோட அன்பு அப்பாவுக்கும் ஆசை அம்மாவுக்கும் திருமணநாள். அவங்க இன்னிக்கு மாதிரியே இன்னும் நெற...ய்ய வருஷம் சந்தோஷமா வாழணும்னு வாழ்த்துங்கள்.கூடவே சின்னதா ஒரு தகவலும் குடுத்திருக்கேன். பாருங்க.

Year 1 is Paper Anniversary
Year 2 Cotton Anniversary
Year 3 Leather Anniversary
Year 4 Linen Anniversary
Year 5 Wood Anniversary
Year 6 Iron Anniversary
Year 7 Wool Anniversary
Year 8 Bronze Anniversary
Year 9 Copper Anniversary
Year 10 Tin or Aluminum Anniversary
Year 11 Steel Anniversary
Year 12 Silk Anniversary
Year 13 Lace Anniversary
Year 14 Ivory Anniversary
Year 15 Crystal Anniversary
Year 20 China - porcelain Anniversary
Year 25 Silver Jubilee or silver wedding Anniversary
Year 30 Pearl Anniversary
Year 35 Coral or jade Anniversary
Year 40 Ruby Anniversary
Year 45 Sapphire Anniversary
Year 50 Golden Jubilee Anniversary
Year 55 Emerald Anniversary
Year 60 Diamond Jubilee
Year 65 Blue sapphire Anniversary
Year 70 Platinum Jubilee.
Year 75 Diamond wedding Anniversary
Year 80 Oak wedding Anniversary

24 நல்லவங்க படிச்சாங்களாம்:

gayathri said...

ammavum appavum ithe mathri neraya naal santhosama irukanumnu naanum kadavula vendikiren susi

ராமலக்ஷ்மி said...

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என் அன்பான திருமணநாள் வாழ்த்துக்கள்!

லோகு said...

Appa amma vukku vaazththukkaL...

Thamiz Priyan said...

அம்மா, அப்பாவுக்கு வாழ்த்துக்கள்!
அப்படியே அடுத்த மாதம் நீங்கள் கொண்டாடப் போகும் Golden Jubilee Anniversary க்கு வாழ்த்துக்கள்!
(அப்பாடா.. கொளுத்திப் போட்டாச்சு.. நிம்மதியா தூங்கலாம்)

சுசி said...

வாழ்த்துக்கு நன்றி காயத்ரி.

சுசி said...

வாழ்த்துக்கு நன்றி ராமலக்ஷ்மி அக்கா.

சுசி said...

வாழ்த்துக்கு நன்றி லோகு!

சுசி said...

வாழ்த்துக்கு நன்றி தமிழ் பிரியன். நிம்மதியா தூங்கினீங்களா? என்ன ஒரு ஆசை!! நிச்சயமா கோல்டன் ஜூப்லீ நான் கொண்டாடும்போது நீங்க எல்லாரும் எங்கள வாழ்த்தணும்னு ஆசைப்படறேன். (ரொம்ப சென்டியா டச் பண்ணீட்டிங்க) இப்போதான் ஒரு வழியா நெட்டித் தள்ளி அலுமினியத்துக்கு வந்திருக்கோம். இன்னும் நா....ப்பது இருக்கே.. சும்மா விளையாட்டுக்குங்க. இதுக்கே தாலிய பத்து தடவ கண்ணில ஒத்திக்க வேண்டியதாயிடிச்சு. இனி குணா வந்ததும் ஆசீர்வாதம் வேற வாங்கணும். அப்போ தான் மனசு ஆறும். (வெடிச்சது போதுமா நண்பரே... நாளைக்கு குட்டியா ஒரு பகல் தூக்கமும் போட்ருங்க)

கார்க்கிபவா said...

வாழ்த்துகள்

அப்துல்மாலிக் said...

இவ்வளவு அன்னிவர்சரி இருக்குனு இப்போதாங்க தெரியுது

நல்ல தொகுப்பு

Admin said...

அம்மா, அப்பாவுக்கு வாழ்த்துக்கள்!

உங்கள் பதிவுகள் அருமை தொடர்ந்தும் எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்...

கலையரசன் said...

அம்மா, அப்பாவுக்கு வாழ்த்துக்கள்!

அப்புறம்...
டாக்டர்.. நீங்க டாக்டரா? டாக்டர்.

சுசி said...

வாங்க சந்த்ரு. அது எப்டி த் இல்லாம உங்க பேர் எழுதறீங்க? வாழ்த்துக்கு நன்றி.

சுசி said...

நன்றி கார்க்கி.

மயாதி said...

வாழ்த்துக்கள்...


உங்க தளத்தின் பேரைப் பார்க்கவே பயமா இருக்கே. நீங்க பிளாக்கில வந்த பேய் இல்லைதானே?

ஹீ ஹீ ஹீ ...

சுசி said...

வாங்க அபுஅஃப்ஸர். இப்டில்லாம் போட்டு தம்பதியர உசுப்பேத்தி விட்டுர்ராங்க. போகப் போக தலைப்போட மதிப்பு ஏறுரதப் பாக்கும்போதே கஷ்டம் புரியும்னு நினைக்கிறேன். இத எல்லாம் பாத்து நீங்க பின் வாங்க கூடாது மக்கள்ஸ். யாம் பெற்ற (பெறுகின்ற) இ(து)ன்பம் இவ் வையகமும் பெறணும்ல.

சுசி said...

நன்றி கலையரசன். போலி டாக்டர்னு போட்டுமா நம்புறீங்க? தலைப்புக்கு பொருத்தமா இருக்கட்டுமேன்னு போட்டேன். வேணா மாத்திகிடுறேன். எதானாலும் பேசி தீத்துகிடலாம்.

சுசி said...

வாங்க மயாதி, நன்றிகள்.
அட நீங்க வேற. பேயான்னு கேட்டதுக்கே இன்னைய தூக்கம் கோவிந்தா. நா ரொம்...ப பயந்தவங்க. ஏதோ எல்லாரும் நலமா இருக்கட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணத்திலதான் இந்த தலைப்ப எடுத்தேன். நல்ல வேளை சிரிப்பு எஃபக்ட ஹி ஹின்னு போட்டிங்க. ஹா ஹான்னு போட்ருந்தா என் நிலம என்னாகிறது?

ப்ரியமுடன் வசந்த் said...

docter parentsக்கு வாழ்த்துக்கள்

Admin said...

உங்கள் பதிவுக்கு பின்நூட்டம் இட்டபின்னர் உங்கள் பதிவுகளை முடிந்தவரை பார்த்தேன் மிகவும் அருமை..... தொடருங்கள்....

அப்படி என் பெயர் எழுவது கஷ்டமான விடயமல்ல sanru என்று எழுதுங்க அது சந்ரு என்று மாறிவிடும்.

சென்ஷி said...

அப்பாவிற்கும் அம்மாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றேன்!

(ஆனிவர்சரி தகவல் பகிர்விற்கு நன்றி)

சுசி said...

வாங்க வசந்த்!
வாழ்த்துக்கு நன்றி. அடைப்புக்குள்ள போலி docter parentsனும் போட்ருக்கலாம்.

சுசி said...

உங்க பொறுமைக்கு நன்றி சந்ரு (ஐய் எழுதிட்டேனே)

சுசி said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சென்ஷி.