Pages

  • RSS

15 November, 2011

மீசை முகம் மறந்து போச்சே..

போன திங்கள் நான் லீவ் போட்டேன்னு கவலையா, சந்தோஷமா தெரியலை. தரை/தலை தொட்டுக்கொண்டே இருக்கிறது மேகம். அழகாகவும், பயமாகவும், ஆபத்தாகவும் கூட இருக்கிறது. நாள் முழுவதும் இருந்தாலும் நேரத்துக்கேற்ப அடர்த்தியும், இருளும் கூடிக்குறைகிறது. இந்த அழகில் வீதியில் கறுப்பு உடையில் செல்லும் மக்களை என்னதான் செய்ய. பிள்ளைகளை பள்ளி கூட்டிப் போகும்போதும், வரும்போதும் அவளவு கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. பள்ளி போகும்போது சது எடுத்த படங்கள் கீழே.

002 003

006

பால்கனியில் இருந்து ரசிக்க மனமும் இல்லை, குளிரும் விடவில்லை. அவ்வப்போது ஜன்னல் வழி எட்டிப் பார்ப்பதோடு சரி.

045 046 

@@@@@

halloween. இப்போ இரண்டு வருஷமாகத்தான் பசங்க தாங்களாகவே கேண்டி கலெக்‌ஷன் கோதாவில் குதித்திருக்கிறார்கள். முன்னெல்லாம் நானும் கூடவே போக வேண்டும். புல்லுக்கும் ஆங்கே பொசியும் என்றாலும் எலும்பை உறைய வைக்கும் குளிரில் போவது கொஞ்சம் கஷ்டம்தான். ஒரே ஒரு தடவை கூட வந்த மாம்ஸ் பின்னர் எஸ். இப்போதும் வீட்டில் இருப்பதும் ஒன்றும் நிம்மதியான விஷயம் அல்ல. விதவிதமாக வந்து மிரட்டுவார்கள். சிலருக்கு தூர நின்றே கேண்டியை கொடுத்துவிட்டு ஓடி வந்து விடுவேன்.

வீட்டுக்கு வெளியே லைட் போட்டிருந்தாலோ, மெழுகுவர்த்தி ஏற்றி இருந்தாலோ அந்த வீட்டில் கேண்டி கிடைக்கும் என்று அர்த்தமாம். trick or treet என்ற கலெக்‌ஷன் மந்திரத்தை இங்கே knask eller knep என்கிறார்கள். இங்கு வந்த வருடம் விஷயம் தெரியாமல் வெளியே லைட்டை போட்டுவிட்டு பயத்தோடு பல்ப்பும் வாங்கிய நினைவு பசுமையாக இருக்கிறது. நாங்கள் கலெக்‌ஷனுக்கு போவது போலவே வருபவர்களைப் பார்த்து மிரள்வதும், கேண்டி கிடைத்த மகிழ்வில் குதிக்கும் குழந்தைகளைப் பார்ப்பதுவும் சந்தோஷமே. எங்கள் வால்கள் உரிமையோடு இரண்டு முறை கலெக்‌ஷனுக்கு வந்தார்கள். போகும்போது போணி. பின்னர் வீடுகளின் வரிசைக்கிரமம்.

077 நண்பர் மகனுக்கு அம்மு மேக்கப் போடுகிறார். நாலு மணிக்கு நான் ஆஃபீஸால் வர அனைவரும் ரெடி. ஆறு மணிக்குத்தான் (பேய்)உலா தொடங்கும் என்பதால் காத்திருந்து கலைந்த மேக்கப்பை மீண்டும் டச்சப் செய்து விட்டார்.

 

 

084 a நம் வீட்டு வால்கள் இருகரையும், நடுவில் நண்பர் பிள்ளைகள்.

 

 

 

 

 

026 எனக்கு கிடைத்த மிச்ச சொச்சம் இவளவே. பெஸ்ட் சாக்லெட் மாம்ஸ் லண்டன் போனபோது இதற்கென்றே நான் சொல்லிவிட்டு வாங்கி வந்ததுதானாம். என்ன செய்ய. இக்கரை சாக்லெட்டுக்கு அக்கரை சாக்லெட் இனிமை.

 

 

@@@@@

018 வேறொரு நண்பர் மகளின் பர்த்டேக்கு வழக்கம்போல் ஐஸிங் செய்தேன். கதவு திறந்து கேக்கை பார்த்த குட்டிம்மா சொன்னார் ‘கிக்கி’ (கிற்றி). அக்காச்சி சொன்னது போல் கேக் சக்ஸஸ். அதாகப்பட்டது பிள்ளை கேக்கில் உள்ள உருவத்தை அடையாளம் காணவேண்டும். கண்டுவிட்டது. இந்த வயது குழந்தைகளிடம் ஹலோ கிற்றி பிரபலமாக இருக்கும்வரை எனக்கும் வேலை குறைவு. கண், மூக்கு, வாய், தலையில் ஒரு பூவோ, ரிப்பனோ கட்டிவிட்டால் முடிந்தது ஐஸிங். ஆனால் வழக்கம்போல் கிற்றிக்கு இம்முறையும் மீசை வைக்க மறந்துவிட்டேன். நண்பியிடம் சொன்னபோது

‘அதானே அதெப்டி ஒவொரு தடவையும் மறக்கறிங்க’ என்றார்.

‘அதில்லைங்க.. இங்க மீசை இல்லாத ஆம்பளைங்களையே பாத்திட்டு இருக்கிறதுல மீசையே மறந்து போச்சுங்க’ என்றேன்.

சிரிப்பில் வீடு ஆடி அடங்கியது. அங்கே நாங்கள் இருந்த அவளவு நேரமும் பர்த்டேக்குட்டி ஒவொரு செருப்பாகப் போட்டு நடப்பதும், விழுந்து எழுவதுமாக இருந்தார். இந்தக் குழந்தைகளுக்கு பெரியவர் செருப்புகளில்தான் எவளவு ஆசை. இத்தனூண்டு காலுக்குள் பென்னாம்பெரிய செருப்பையோ ஷூவையோ மாட்டிக்கொண்டு தானே நடக்கமாட்டாமல், அதையும் இழுத்துக்கொண்டு விழுந்தெழுந்து அவர்கள் போடும் கூத்து இருக்கிறதே. செம சிரிப்பு. நாங்கள் சிரிக்கிறோம் என்று தெரிந்ததும் இன்னமும் நடையின் வேகம் கூடும். கடைசியில் என் செருப்பை அவரிடம் இருந்து வாங்கி வர கொஞ்சம் கெஞ்ச வேண்டி இருந்தது.

028

8 நல்லவங்க படிச்சாங்களாம்:

r.v.saravanan said...

குழந்தைகளை பற்றி எழுதும் போது நீங்களும் குழந்தையாகவே மாறிய குதுகலம் தெரிகிறது பதிவில்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நிகழ்வுகளின் சுவையான தொகுப்பு.

பாலா said...

குளிரா? அப்படின்னா என்னங்க?

vinu said...

he he he he

கோபிநாத் said...

:-))

இராஜராஜேஸ்வரி said...

இக்கரை சாக்லெட்டுக்கு அக்கரை சாக்லெட் இனிமை.

சுசி said...

ஹிஹிஹி.. நான் வீட்ல கடைகுட்டிங்க சரவணன் :))

@@

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜாமுதீன்.

@@

பாலா.. உங்களுக்கு இம்புட்டு நளினம் ஆவாதுங்க.. அவ்வ்வ்வவ்.. :))

சுசி said...

வினோத்.. ஹஹாஹா..

@@

கோப்ஸ்.. :))

@@

அதேதாங்க இராஜராஜேஸ்வரி :))