Pages

  • RSS

08 September, 2011

என் அடாவடித் தோழிக்கு!

தலைப்பை படிச்சியா. இப்டித்தான் உன்னை சொல்லத் தோணுது விஜி. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து தோழிகள்ல என் உயிர் நட்பு தவிர வேற யாரையும் நான் ஒருமையில சொன்னதில்ல. அவளுக்கு அடுத்து நீ தான்.

பதிவுலகம் வந்த புதிதில எப்பவோ உன்னோட ஒரு போஸ்ட் படிச்சேன். அது என்னன்னே மறந்திட்டேன். ஆனா உன்னோட ப்ரஃபைல்ல இருந்த மயில் மட்டும் நினைவிருந்தது. அப்புறம் வேற பதிவுகள்ல உன் கமண்ட்ஸ் பார்த்தேன். மறுபடி எப்போ உன் பதிவு தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்னு நினைவில்ல. திடீர்னு ஒரு நாள் உன் மெயில் ஐடி குடுத்தே. முதல் நாள் சாட் இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது. நான் இங்க எப்டி முழிச்சிட்டு (மிரண்டுட்டுன்னும் சொல்லலாம்) இருக்கேன்னு தெரியாம நீ பாட்டுக்கு நீ, வா, போன்னு பேசிட்டு (டைப்பிட்டு) இருந்தே. ரெண்டு மூணு தடவை மரியாதைப் பன்மையா வழக்கம் போல பேசினேன். அப்புறம் என்னை அறியாமலே நானும் நீ, வான்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.

இத்தனை நாள்ல எவ்ளோ நேரம் சாட்/மெயில் பண்ணி இருப்போம். ஆனாலும் பல வருஷம் நட்பா இருந்த ஒரு உணர்வு தானா வந்திடிச்சு. எல்லாரோடும் பேசினாலும் ஒரு சிலர்ட்ட தான் இந்த உணர்வு வரும். உன்னட்ட பேசின உடனவே உன்னோட கலகலப்பும், குறும்பும் அப்படியே சந்தோஷமா மாறி மனசை நிறைக்கும். எப்பவாச்சும் நீ கொடுக்கிற அட்வைஸ்/டிப்ஸ் கூட சமயத்தில உதவியா இருக்கும்.

பதிவுலகம் (யாருக்கும்) நிரந்தரம் இல்லை. காலம் எப்படி மாறும்னு சொல்ல முடியாது. ஆனாலும் அதுக்கு அப்புறமும் உன் நட்பு தொடரணும்பா. உன் வீடு வந்து, உன் கலாய்த்தல்ல திணறி, பப்புவோட பல்பில பிரகாசமாகி, வர்ஷாவோட டான்ஸ்ல நிறைவாகி, ராம் என்ற புண்ணியாத்மாவை தரிசிச்சு.. உஸ்ஸ்ஸ்(இது நீ சொல்லிக்கோ).. நல்ல நாளதுவுமா உன்னை அதிகம் பயமுறுத்தல. ஆனா உனக்கு என் தொல்லை தொடரும் தாயீன்னு சொல்லி முடிச்சுக்கறேன்.

நல்ல்ல்லா என்ஜாய் மாடி. நிறைய்ய்ய்ய ஐஸ்க்ரீம் முழுங்கு. என்னிக்கும் இதே சந்தோஷத்தோட இரு. கிஃப்ட்ல எதுனா மாந்தளிர் நிறத்தில  கிடைச்சா பாத்திட்டு பத்ரமா எனக்கு பார்சல் பண்ணிடு.

பிள்ளையாரப்பா.. விஜிய மட்டும் காப்பாத்து.. அவ எங்க எல்லாரையும் காப்பாத்துவா!!

ஹாப்பி பர்த்டே டியர் :)

13 நல்லவங்க படிச்சாங்களாம்:

ப்ரியமுடன் வசந்த் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் விஜி மேடம் வாழும் காலம் வரை குழந்தைகளுடனும் கணவருடனும் நண்பர்களுடனும் உறவுகளுடனும் மகிழ்ச்சியாக இருக்க மனமார்ந்த வாழ்த்துகள்..!

Anonymous said...

மிகவும் சரியா கனிச்சிருக்க சுசி விஜியை...பெண்ணே நீயும் பெண்ணா என நான் வியந்த பெண் இந்த ராட்சசி...

பித்தனின் வாக்கு said...

பிறந்தநாள் வாழ்த்துகள் விஜி

nalla ninaivu koorthal.

கோபிநாத் said...

வலையுல சொர்ணக்கா எங்கள் பாசக்கார விஜிக்காவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)

\\எப்பவோ உன்னோட ஒரு போஸ்ட் படிச்சேன். அது என்னன்னே மறந்திட்டேன். \\

இதை விட பெரிய பிறந்த நாள் பரிசு விஜிக்காவுக்கு இல்லை ;-))))))

r.v.saravanan said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

/விஜிய மட்டும் காப்பாத்து.. அவ எங்க எல்லாரையும் காப்பாத்துவா!!/

அழகு:)!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜி!

விஜி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்..

சரி சரி விடு :)))
இதயம் இனித்தது (மேட் இன் அடையாறு ஆனந்த பவன்)

கண்கள் பனிந்தது :))))))))))))


தேங்க்ஸ் செல்லம்

விஜி said...

தேங்க்ஸ் வசந்த்

டமில் நன்னி :)

நன்றிங்க பித்தன் வாக்கு

கோபி கிர்ர்ர்ர்ர்ர்

ஜெய்லானி said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் many more happy returns of day :-)

Gopi Ramamoorthy said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜி!

சே.குமார் said...

பிறந்தநாள் வாழ்த்துகள்.

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

//பிள்ளையாரப்பா.. விஜிய மட்டும் காப்பாத்து.. அவ எங்க எல்லாரையும் காப்பாத்துவா!! //

உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்... உங்கள் நண்பிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...