Pages

  • RSS

28 August, 2011

என்னம்மோ நடக்கு!!

’அது வேற ஒண்டும் இல்லை அப்பா. இப்ப என்னில யாருக்காச்சும் கோவம்னு வைங்க. இந்த சந்தர்ப்பத்த வச்சு உடனவே நைட் எங்க வீட்டுக்கு கிறீஸ் மனிதன் வருவான். அதுக்குன்னு கிறீஸ் மனிதன் இல்லேன்னு இல்லை. ஆனா நிஜமான கிறீஸ் மனிதர்களை விட போலிகள் ஜாஸ்தி ஆய்டிச்சு. பகல்ல கொல்லைல மூ*** கூட்டுக்கு போனாக்கூட அங்க கிறீஸ் மனிதன் நின்னா நம்ம ஊரு பொண்ணுங்க என்னதான் பண்ணுவாங்க. இந்த சந்தர்ப்பத்தை சாக்கா வச்சு அங்கங்க இப்டி தனியா இருக்கிறவங்களுக்கு தொல்லை பண்ணிட்டு இருக்காங்க. ஆனா நிஜ கிறீஸ் மனுசங்க எப்ப வருவாங்கன்னு யாருக்கும் தெரியல’

இது அப்பாவுக்கு ரஜி சொல்லியது. வெறுப்போடு இருக்கிறான். இப்போதுதான் திருடர் தொல்லை கொஞ்சம் ஓய்ந்துகொண்டு போகிறதென்றால் இது புதுத் தொல்லை. அண்ணாவின் வீடு நெருக்கமான இடத்தில் இருப்பதால் கத்தினால் உதவிக்கு யாராவது வருவார்கள். ரஜிக்கு அப்படி அல்ல. இருள ஆரம்பித்ததுமே அண்ணி அவனை எங்கும் போகவிடுவதில்லையாம்.

யாரைப் பற்றி சொல்கிறேன் என்று தெரியாதவர்களுக்காக எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். இலங்கையில் தமிழர்/முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கறுப்பு உடையோடு, உடலில் கிறீஸ் பூசியபடி மர்ம மனிதர்கள் அட்டகாசம் செய்கிறார்களாம். தனியாக இருக்கும் பெண்கள்தான் அவர்கள் குறி. ஆனால் எங்கேயும் திருட்டு நடைபெறவில்லை. முதலில் இரவில் ஆரம்பித்த தொல்லை இப்போது பகலிலும் நடக்கிறது. பிடிக்கப்போனால் இராணுவ முகாமுக்குள் தப்பி ஓடுகிறார்களாம். பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டோ அல்லது பொலிஸ் பாதுகாப்போடோ இருக்கிறார்களாம். இதனால் பொலிஸ்/இராணுவத்துக்கும் பொதுமக்களுக்குமிடையே பல முரண்பாடுகள் வந்து அடிதடியாகவும் போயிருக்கிறது. ஆனால் வெல்வது யார்?? உங்களுக்கே தெரியும்.

நேற்று ஸ்கைப்பில் பேசியபோது இளைய மச்சினர் வைஃப் கி.ம வுக்கு ஆணென்று காட்டிக்கொள்ளவென்று இரவில் சறமும் ஷர்ட்டும் போட்டுக்கொண்டு தூங்குவதாக மச்சினர் கிண்டல் பண்ணினாலும் எல்லோரும் இருட்ட ஆரம்பித்ததும் பயத்தோடுதான் இருக்கிறார்கள். மாமி தென்னந்தோப்பில் தனியாக பெரும் பொழுதைக் கழிப்பதால் சரியாகத் தூங்குவதில்லை என்றார். 20 வயதுக்குக் கீழேயும், 60 வயதுக்கு மேலேயும் உள்ளவர்களைக் கொன்று உடல் உறுப்புகளை திருடுகிறார்கள் என்றும் ஒரு கதை வந்ததாம். இப்போது மாமியின் உறவினர்கள் மாமி இங்கு வந்ததால் தனியாக இருக்கப் பயத்தோடு இருக்கிறார்கள்.

என் ஒன்றுவிட்ட அக்காவின் மாமியாருக்கு காதில் ஒரு துண்டை வெட்டியதோடு, புத்திசுவாதீனம் குறைந்த அவர்களின் உறவுப் பெண்ணுக்கும் வெட்டி இருக்கிறார்கள். அண்ணா ஹாஸ்பிடலில் போய் பார்த்திருக்கிறார். எங்கள் ஊர்ப் பெண்கள் இருவர் பகலில் சந்தைக்குப் போனபொழுது யாருமில்லாத வழியில் திடீரென வந்த கி.ம அவர்களை அடித்துவிட்டு ஓடி இருக்கிறான்.

ஒதுக்குப்புறமாகவும், தள்ளித் தள்ளியும் இருக்கும் வீடுகளுக்கு வருவதும் தப்பி ஓடுவதும் அவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. யாரும் பிடித்தாலும் நழுவ இலகுவாய் கிறீஸ் வேறு. திருவிழா சமயங்களில் ஊரில் கிறீஸ் பூசிய மரத்தில் ஏறி சாகசம் செய்யும் மாம்ஸின் ஃப்ரெண்ட் அது உடலில் பட்ட இடம்  அவ்வளவு எரிச்சலாக இருக்குமென்று சொல்வாராம். எப்படித்தான் அதை பூசிக்கொண்டு அலைகிறார்களோ தெரியவில்லை.

என்னதான் இருந்தாலும் ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிகிறது. நாங்கள் நிம்மதியாக இருப்பது யாருக்கோ பொறுக்கவில்லைப்போலும். அரசியலோ இல்லை வேறெதுவோ. காரணம் எதுவாயிருந்தாலும் இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் பகலிலும் பயத்தோடு அலையும் அவலம் எம்மினத்துக்கு மறுபடி வந்திருக்கிறது. அண்ணா, ரஜி, மச்சினரோடு பேசும்போதெல்லாம் பத்திரமாக இருக்கச் சொல்லிக்கொள்வதை விட எங்களைப்போன்ற புலம் பெயர் வாழ் தமிழர்களால் வேறென்ன செய்ய முடியும்??

பிள்ளையாரப்பா!!

9 நல்லவங்க படிச்சாங்களாம்:

கோபிநாத் said...

கொடுமை ;(

vinu said...

:(

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் நான் கூட செய்தி படித்தேன்.கொடுமை..

அப்பாவி தங்கமணி said...

அடப்பாவமே...கஷ்டம் தான் போங்க

Chitra said...

என் ஒன்றுவிட்ட அக்காவின் மாமியாருக்கு காதில் ஒரு துண்டை வெட்டியதோடு, புத்திசுவாதீனம் குறைந்த அவர்களின் உறவுப் பெண்ணுக்கும் வெட்டி இருக்கிறார்கள். அண்ணா ஹாஸ்பிடலில் போய் பார்த்திருக்கிறார். எங்கள் ஊர்ப் பெண்கள் இருவர் பகலில் சந்தைக்குப் போனபொழுது யாருமில்லாத வழியில் திடீரென வந்த கி.ம அவர்களை அடித்துவிட்டு ஓடி இருக்கிறான்.


...really scary to hear about them. Oh my!

ப்ரியமுடன் வசந்த் said...

கேள்விப்பட்டேன்க்கா உடம்பெல்லாம் கிறீஸ் பூசிகிட்டு சிங்களத்தவர்கள் தமிழ் பெண்களை கெடுத்து அவர்களின் மார்களை அறுத்துவிடுகிறார்களாம் கேட்டதும் இரத்தம் கொதிச்சது பாவம் இங்க இருக்கிற பசங்க எல்லாம் ஊருக்கு விட்டா போதும் என் மனைவி அம்மா லாம் பாவம் தனியா இருக்காங்கன்னு கிளம்ப ஆரம்பிச்சுட்டாங்க

அரசாங்கமே இதுபோல ஆள் செட் பண்ணி தமிழர்களை கொடுமை படுத்துறதா கேள்விபட்டேன்க்க்கா கண்டிப்பா இதுவரைக்கும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கிற ஆண்டவனுக்கு இது தெரியாமயா இருக்கும் ஹும் பார்க்கலாம் என்ன செய்றான்னு :((

Mano Saminathan said...

வலைச்சரத்தில் ‘ அனுபவ முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

மாய உலகம் said...

கொடுமைதான்....

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்