’அம்மாச்சி.. இத வந்து இப்போ எடுத்து வைச்சிட்டு போறிங்களா இல்லையா.. எத்தனை தடவை சொல்றது கிச்சன்ல ஸ்கூல் பாக் வைக்காதிங்கன்னு’ என் சத்தம் வீடதிர ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது கேக்கும். என் வாழ்க்கையில் நான் அதிகமா சண்டை போடும் ஒரே ஆள்.. என் அம்மாச்சி(உங்க ஊர்ல அம்மு). எங்களுக்கே சமயத்தில் சண்டை போடாதபோது சாப்பிட்டது செரிக்காதது போல் இருக்கும். கண்ணாளன் அடிக்கடி சொல்வது ’இதுங்க ரெண்டும் ஒரே நம்பர்ல இருக்கிறதும் போதும், போடற சண்டையும் போதும்’ ஆனால் என்னதான் சண்டையென்றாலும் அம்மா வேண்டும். எல்லாவற்றுக்கும்.
நவராத்ரி சமயம் கோயில் போனபோது வழக்கம் போல் என் முன்னே நின்றவரை வயிற்றை சுற்றி அணைத்தபடி சாமி கும்பிட்டேன். சாமி தெரியவில்லை. தன்னிச்சையாய் தலை உயர்த்தியும், பக்கவாட்டிலும் பார்த்து வணங்கினேன். எல்லோரும் அதையே சொன்னபோது தான் புரிந்தது. வளர்ந்துட்டாங்க. என் மூக்கு உயரம் வந்திட்டாங்க.
அப்படியே உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் கண்ணாளன். பிடிவாதம், முன்கோபம், பொறுமையின்மை, எதையும் இலகுவாக எடுத்துக் கொள்வது. மீதிக்கு என் அக்காச்சி. நகைகள் பொன்னோ, பொய்யோ. பிடிக்காது. பொட்டு பிடிக்காது. அம்மா வாங்கும் உடைகள் பிடிக்கும், சொல்வதை போட பிடிக்காது. இருந்தாலும் தனியாக விளையாடும்போதோ, பாடும்போதோ, அம்மாவை சுற்றிச் சுற்றி வரும்போதோ அவரில் எங்காவது என்னையும் பார்த்துக் கொள்கிறேன்.
’அம்மா.. நீங்க போட்டிருக்கிற இந்த ட்ரஸ் ரொம்ப அழகா இருக்கு. இந்த தோடு, வளையல் எல்லாம். நான் வளந்ததும் அப்டியே எனக்கு குடுக்கறிங்களா??’
‘ஏம்மா.. இது பழசில்லை. அம்மா உங்களுக்கு புதுசா வாங்கி குடுக்கறேன்’
‘புதுசும் வாங்கி குடுங்க. பழசுன்னாலும் இதுவும் எனக்கு வேணும்’
கேட்டு வாங்கி வைப்பாரே தவிர எதுவும் போட்டுக்கமாட்டார். இந்த சம்மர் சமயம் என் டீஷர்ட்ஸ் நான் போடாமலே சலவைக்கு வந்தது. எப்படின்னு கேட்டால் ‘சும்மா போட்டுப் பாத்தேம்மா. சரியா இருந்திச்சு’ன்னு தன் அலமாரில எடுத்து அடுக்கி வைத்திருந்தா. என் காலணிகளும் தப்பவில்லை.
இப்போவே அக்காச்சி சொற்படி தம்பி நடக்க ஆரம்பித்தாயிற்று. அவருக்கு சாப்பாடு எடுத்து குடுப்பது, சாக்லேட் மில்க் செய்து கொடுப்பது போன்ற சின்ன சின்ன உதவிகள் செய்து கொடுப்பாங்க. அப்பாவிடம் ஐஸ் வைத்து காரியம் சாதிப்பதிலும் சமத்தோ சமத்து.
ஒரு நண்பி பொறுப்பே இல்லாம இருக்கா உங்க பொண்ணு என்பதாய் எதுவோ சொல்ல, பொறுப்பை வளர்ப்பதாய் நினைத்துக்கொண்டு நான் சிலபல அட்வைஸ்களை வாரி வழங்கியபோது சரியென்று நல்ல விதமாகத் தலையாட்டினார். என் பொண்ணுக்குப் பொறுப்பு வந்ததாய் எனக்கும் நிம்மதி. அடுத்த அரை மணியில் அதை சுக்கு நூறாக்கிவிட்டு ஓடியவரைப் பார்த்துக் கேட்டேன்.. இப்போதானே இவ்ளோ சொன்னேன்.. இப்டி பண்ணி வச்சிருக்கிங்க.. பொண்ணா நீங்க?? கேட்ட வாய் மூட முன்னர் பதில் வந்தது.. ஆமாம்.
குழந்தையாய் இருந்தபோது எடுத்த படங்கள், வீடியோக்கள் பார்ப்பதென்றால் கொள்ளைப் பிரியம். ஊர்க் கதைகள், என் சின்ன வயதுக் கதைகள் எல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பார். தோழிகளுக்குக் கூட அதை சொல்லச் சொல்லுவார். வகுப்பில் சமத்து. ஆசிரியர்களின் செல்லப் பெண். எதையும் முதலே செய்து முடித்துக் கொடுத்துவிடுவார். அது சரியா என்று திருப்பி பார்ப்பது கிடையாது. இந்த வகையிலாவது கொஞ்சம் பொறுமையை கற்றுக் கொடுக்கவென்று இன்னமும் முயன்று கொண்டு இருக்கிறேன்.
என் வீட்டுத் தேவதைக்கு இன்று பிறந்தாள். மனதார வாழ்த்துங்க. என் அம்மாச்சி என்றும் இனிமையாய் வாழட்டும்.
தமிழில் இந்தப் பாட்டுத்தான் இப்போ அவங்க விருப்பம். ஐஷின் டான்சும் ஒரு காரணம்.
25 நல்லவங்க படிச்சாங்களாம்:
அம்மாச்சிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் வீடு குட்டி தேவதைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி
அம்மாச்சிக்கு, நம்ம ஊர் ஸ்டைல்ல, "அம்மு குட்டி"க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
வாழ்வு மேலும் சிறக்க ஆண்டவன் அருளாசியும் துணையிருக்கட்டும்..
அம்மாச்சிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க:)!
அருமையான இடுகை சுசி.
‘புதுசும் வாங்கி குடுங்க. பழசுன்னாலும் இதுவும் எனக்கு வேணும்’
உண்மை உண்மை
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
iiiiiiiiiiiiiiiiiii me the firsttuuuuuuuuuuuuuuuuuu
happy birthdaay to youuuuuuuuuuu
kutti maaaaaaaaaaaaaaaa
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும்
நானும் சொல்லிக்கிறேன்...
அம்மாச்சிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Hurra for deg som fyller ditt år
ja deg vil vi gratulere.
Alle i ring omkring deg vi står
ja se nå vi vil masjere.
Bukke, nikke neie, snu oss omkring
danse for deg med hopp og sprett og spring
GRATULERE.
Happy Birthday to Dear Ammu. :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Cheers to you as a birthday
yes, we congratulate you.
All in a circle around you we are
yes we see now will march.
Bow, curtsy nod, turn around
dance for you jump and bounce and spring
CONGRATULATIONS.
இது தாங்க என்னோட முந்தைய Norwegian வாழ்த்தின் ஆங்கிலவாக்கம்.
அம்மு குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று போல் என்று சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்...
தேவதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
Heartly wishes...
மலர் சிரித்தாற்போல்
உங்கள் வீட்டு குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........
மனமார்ந்த வாழ்த்துகள்!
இவ்ளோ நேரம் பேசிட்டிருந்திங்களே ஒரு வார்த்தை சொல்லலை போங்க உங்க பேச்சு கா!
குட்டிம்மா அப்டேட்ஸ் அழகு!
Convey our birthday wishes to her! May God bless her! :-)
அம்மு எல்லா வளங்களுடனும் நலங்களுடனும் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்
சுசி நீங்க வாழ்த்து சொல்லியிருக்கும் விதம் அழகு மா
அப்பாவிடம் ஐஸ் வைத்து காரியம் சாதிப்பதிலும் சமத்தோ சமத்து.
::)))
வாழ்த்துக்கள் அம்மு!
கொஞ்சம் லேட்தான் இருந்தாலும் வாழ்த்துகள் சொல்லிடுங்க
me the first./
me the first./
me the first./
hapy birth day to me....
hapy birth day to ammu....
குட்டி தேவதைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி
பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க
வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் :))))
Post a Comment