Pages

  • RSS

10 October, 2010

வேண்டவே வேண்டாம்!!

என்னை நீ முழுவதுமாக

புரிந்து கொள்ளும்போது

என் உயிர் கண்டிப்பாக

என்னிடம் இருக்காது

எனக்காக உன் கண்ணிலிருந்து

ஓர் ஒற்றைத் துளி கூட

வேண்டவே வேண்டாம்

உன் மீதான என் அன்பை

அது கேவலப்படுத்தி விடும்

பதிலாக யாரிடமாவது சொல்லி

பெருமைப் பட்டுக்கொள்

உனக்காகவே ஒரு பைத்தியம்

வாழ்ந்து இறந்ததென்று!!

;;;     ;;;     ;;;     ;;;     ;;;

girl with book

;;;     ;;;     ;;;     ;;;     ;;;

மறு ஜென்மம் எனக்கு

உண்டா தெரியவில்லை

ஆம் என்பது பதிலானால்

உன் அன்புக்குரியவளாய்

அதிலாவது பிறக்க வேண்டும்

இன்னொரு பிறவி

உன் அன்புக்காக ஏங்கும்

பாவப்பட்ட ஜீவனாக

இறைவா எனக்கு

வேண்டவே வேண்டாம்!!

40 நல்லவங்க படிச்சாங்களாம்:

சீமான்கனி said...

செம்ம பீல்..."ச்சே" ..கவிதை மனச என்னவோ பண்ணிடுச்சு சுசிக்கா...

Balaji saravana said...

என்ன சுசி.. சோகம் பெருகி ஆறா ஓடுது.. :(
//ஒற்றைத் துளி கூட
கேவலப்படுத்தி விடும்//
ரொம்ப வருத்தம் தான்.. புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறாங்களே! :(

கலாநேசன் said...

நல்லா இருக்குங்க...

LK said...

இரண்டும் அருமை.. நன் ஒரு கவிதை போட்டி வச்சிருந்தேன் கவனிக்கலையா

Gopi Ramamoorthy said...

சூப்பர்.

யாதவன் said...

உனக்காக தவம் கிடக்கும்
உயிர் இல்லா ரோஜா நான்
பிறர்க்காக பறிக்க வந்தால்
வாடிடுவேன் உடன் நானாய்
எதற்காக எனை முட்டினாய்
தேன் குடிக்க ஏன் தட்டினாய்
உனக்காக இதழ் விரித்த போது
எதற்க்காக எனை வெறுத்தாய்

விஜி said...

சுசி.. ம்ம்ம் இதே மூட்ல தான் நானும் இருக்கேன் :(

தமிழரசி said...

என்ன சுசி ஏற்கனவே செத்துக்கிட்டு இருக்கேன்.படித்ததும் முழுதும் செத்து போனதாய் தோன்றுகிறது,, என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது கவிதை.ல்வ் இட் சோ மச்..

தாரணி பிரியா said...

ஏன் இந்த சோகம் சுசி

தாரணி பிரியா said...

நீங்க கவிதை எழுதறதை யாரும் வேண்டவே வேண்டாம் அப்படின்னு சொல்லலை தானே :)

ரெண்டுமே நல்லா இருக்குங்க

Chitra said...

ஆஹா.... ஓஹோ...... சூப்பர்! :-)

அருண் பிரசாத் said...

ஏன் நல்லாதான போய்ட்டு இருந்தது!

கோபிநாத் said...

அட்டகாசமான தலைப்பு அக்கா ;)

நட்புடன் ஜமால் said...

எனக்காக உன் கண்ணிலிருந்து

ஓர் ஒற்றைத் துளி கூட

வேண்டவே வேண்டாம்


யாவரும் நலம்.

சுசி said...

//"ச்சே"// ரைட்டு கனி.

# # # # #

காதல்னா சோகம் இருக்கணுமே பாலாஜி.

# # # # #

நன்றி கலாநேசன்.

சுசி said...

அச்சச்சோ.. இல்லையே கார்த்திக். எங்க?? லிங்க் குடுங்க..

# # # # #

நன்றி கோபி.

# # # # #

சூப்பரா இருக்கு யாதவன். உங்க பிளாக் பேர் என்னங்க??

சுசி said...

விஜி.. என்னாச்சுப்பா??

# # # # #

அச்சச்சோ.. தமிழ்.. இது நான் சும்மா எழுதினது. உங்கள காயப்படுத்தினத்துக்கு சாரிப்பா :((

# # # # #

தாரணி நீங்களுமாஆஆவ்வ்.. இப்போ நீங்க கேள்வியா கேக்கறிங்களா.. சொல்றிங்களா..

சுசி said...

சித்ரா.. உங்களுக்கும் ரைட்டு!

# # # # #

இப்போவும் நல்லாதான் போகுது அருண்.

# # # # #

கோப்ஸ்ஸ்ஸ்ஸ்.. புரியுது.. கிர்ர்ர்ர்ர்..

சுசி said...

ஜமால்.. ஹிஹிஹி..

சௌந்தர் said...

பாவப்பட்ட ஜீவனாக

இறைவா எனக்கு

வேண்டவே வேண்டாம்!

ஏன் இந்த திடீர் முடிவு :(

funmachine - தமிழமிழ்தம் said...

சோகம் எப்போதும் சுகம் தான், இதுபோன்று பொர்கவிதையாய் கிடைக்கும் போது. என சொல்றதுன்னு தெரில! நின்னிச்சு என் மனசுல.

sakthi said...

இன்னொரு தமிழரசியா????

பித்தனின் வாக்கு said...

susi eppadima iruukinga?. kunalan sir, kulanthaikal ellam nalama?.
kavithai realy super.

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாவ்.. கவிதை அழகுங்க.. அதுவும் முதல் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, எதிர்பார்க்கவேயில்லை. கிளாஸ்.!

ப்ரியமுடன் வசந்த் said...

முதல் கவிதை நல்லாருக்கு சுசி..!

இரண்டாவது கவிதையின் நாயகி பாவம் :(

LK said...

@சுசி

போட்டி முடிந்து விட்டது. லிங்க் http://kavisolaii.blogspot.com

vinu said...

உன் மீதான என் அன்பை

அது கேவலப்படுத்தி விடும்


உனக்காகவே ஒரு பைத்தியம் வாழ்ந்து இறந்ததென்று!

கார்க்கி said...

ம்ம்..

என்னம்மா ஃபீல் பண்றீங்க!

சே.குமார் said...

நல்லா இருக்குங்க...

சே.குமார் said...

நல்லா இருக்குங்க...

சுசி said...

இது எப்பவோ எடுத்த முடிவு சௌந்தர் :)

# # # # #

முதல் வருகைக்கு நன்றி தமிழமிழ்தம்.. அப்பா சரியா எழுதிட்டேன் :)

# # # # #

சக்தி.. நோ ரெட் ரம் வெறி.. அவங்க ரேஞ்சு என்ன.. ஆவ்வ்..

சுசி said...

அண்ணா.. நாங்க நல்லா இருக்கோம்ணா. நீங்க எப்டி இருக்கிங்க?? அப்பப்போ வரிங்க. இருந்தாலும் மறக்காம இருக்கிறத்துக்கு நன்றிண்ணா.

# # # # #

ஆதீஈஈஈஈ.. பிளீஸ்.. பொய் சொல்லாதிங்க. வலிக்குது.. :(

# # # # #

ஆமா வசந்து.. அவ பாவம்னுதான் நானும் சொல்றேன்.. புரிஞ்சுக்கமாட்றாங்களே.. :((

சுசி said...

நான் கலந்துக்க மாட்டேன் கார்த்திக். ஆனா பரிசு என்னன்னு பாக்கணும்ல.. தாங்ஸ்பா.

# # # # #

வினு.. என்னாச்சு??

# # # # #

ஹஹாஹா.. உங்களை விடவா குரு??

சுசி said...

நன்றி குமார்.

Madumitha said...

உங்கள் கவிதைகளில்
உப்புச் சுவை கொஞ்சம்
தூக்கலாயிருக்கு.

கயல் said...

:((

தியாவின் பேனா said...

என்ன ஒரு
அருமையான கவிதை
வாழ்த்துகள் சுசி

logu.. said...

sema jorunga..

Priya said...

தலைப்பும் வரிகளும் நல்லா இருக்கு!

பாலன் said...

அன்புக்கும் உண்டா அளவு.. :) எவ்வளவு தான் பெற்றாலும் இன்னும் வேண்டுமென்றே ஏங்கி நிற்கும், அந்த ஏக்கத்தில் விளைந்த கவிதையும் சோகத்திலும் இனிமையாக உள்ளது ...
இன்னும் வேண்டும் உங்கள் கவிதை ;)