Pages

  • RSS

21 October, 2010

அடுத்த மாட்டருக்குப் போகலாம்!!

ஒரு குட்டிக் கதை. ரொம்ப பிடிச்சுது கேட்ட பொழுது.

ஒரு குருவும் சிஷ்யனும் போய்க் கொண்டு இருக்கிறார்கள். வழியில் ஒரு ஆறு. கடக்க நினைக்கும்போது வந்து சேர்கிறாள் ஒரு இளம்பெண். அவளால் அதைக்  கடக்க முடியாத நிலை. குரு அவளைத் தோளில் தூக்கியபடி கடக்கத் தொடங்குகிறார். சிஷ்யனுக்கு ஒரே யோசனை, குழப்பம். குருவிடம் கேட்கத் தைரியம் இருந்தும் கேட்க விடவில்லை அவரின் பிடிவாதக் குணம். கூடவே அவராகவே சொல்லுவார் என்ற நம்பிக்கையும். குரு சிஷ்யனின் மனம் அறிவார். குழப்பத்தை அவரே கேட்கட்டும் என்று வாளாவிருந்தார். அக்கரை சேர்ந்து இரவு ஒய்வு எடுத்துக் கொள்ளும்போது குருவே கேட்டார் ’உன் மனக் குழப்பம் என்ன? சொல் சிஷ்யா’ . அதற்கு சிஷ்யன்  ’நீங்கள் எப்படி ஒரு இளம் பெண்ணை தொட்டுத் தூக்கலாம். உங்களுக்கே இது நியாயமாகப்பட்டதா’ என்று பொங்கிவிட்டார். அதற்கு குரு ஒன்றே ஒன்றுதான் சொன்னார். ’நான் அவளை அப்போதே, அங்கேயே இறக்கிவிட்டுவிட்டேன். நீ இன்னமும் சுமந்து கொண்டு இருக்கிறாய்’

சமயத்தில் நாமும் இந்த சிஷ்யனைப் போலத்தான். அவரவர் தாம் செய்வதை செய்து முடித்துவிட்டு சந்தோஷமாகப் போய்க் கொண்டே இருப்பார்கள். நாம் தான் அதை நினைத்து நினைத்தே.. சரி விடுங்கள். அடுத்த மாட்டருக்குப் போகலாம் நாம்.
[ [ [ [ [

நேற்று தேதி 20.10.2010. நேற்றுத்தான் இந்த வருடத்துக்கான முதல் பனி வீழ்ச்சி என்பதில் இந்த ஊருக்கு அதிகப்படி சந்தோஷம். எல்லோரையும் போல் என்னால் கொண்டாட முடியவில்லை. வெள்ளைப் பனி பார்த்து வெள்ளந்தியாய் ஆனந்தக் கூக்குரலிட்ட பிள்ளைகளுடன் ஒப்புக்கு ஆர்ப்பரித்தேன். மனதுக்குள் ஒரு பக்கம் எரிமலை வெடித்துச் சிதற, மறுபக்கம் பொங்கி வந்த கண்ணீர் நதி அதை அணைத்துக் குளிர்வித்துக் கொண்டிருந்தது. அந்த மனநிலையில், அக் கணம் பேசிக் கொண்டிருந்த உயிர் நட்பிடம் கூட இதைப் பகிர்ந்து கொள்ளவில்லை. 'ஏன் டல்லா இருக்கே?' என்று கேட்கப்பட்ட  கேள்விக்கு பதில் சொல்லாதது போலவே இதை பகிர்ந்து கொள்ளவும் தோன்றவில்லை. இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே விழித்தும் வெளிநடப்பு மறந்து, கட்டில் விட்டு இறங்கி வர மனமில்லாமல் கண் மூடிப் படுத்திருந்தேன். லேட்டானதில் விரைவாக ரெடியாகி, கார்க்கீயோடு அதை விட வேகமாக வெளி வந்தால்.. என்ன சொல்ல.. நீங்களே பாருங்கள். வண்டி இப்படி இருக்கிறது. அதிலிருந்த பனியை தட்டிக் கொட்டி வேலைக்கு வர அரைமணி லேட். ட்ராஃபிக் வேறு நெரித்தது. என்னைப்போலவே நிறையப் பேர் இருக்கிறார்கள் போல.

026 027 முதல் நாளே காலை 7:17 க்கு இந்தக் கொடுமை. ரோடைப் பாருங்கள்.

இரண்டு வாரம் முன்னாடியே இங்கு குளிர் தொடங்கி விட்டது. எனக்கு சுவீடனில் ஒரு நண்பி இருக்கிறார். அவருடன் பேசும்போது 'இனிமேல shawl, gloves, woolen hat, rubber boots, down jacket எல்லாம் போட்டுக்கிட்டு fancy dress contest போக ஆரம்பிக்க வேண்டியதுதான். அதுக்காகவே அரை மணி நேரத் தூக்கத்தை தியாகம் பண்றதுதான் பெரிய கொடுமைங்க' என்று சொன்னார். அவங்க ஒல்லியா இருப்பாங்க. நான் down jacket ல போனாஆஆவ்வ்வ்.. சரி விடுங்கள். அடுத்த மாட்டருக்குப் போகலாம் நாம். 
[ [ [ [ [ 

பனிகாலத்தில் காலையில் வண்டிக்குள் ஏறும்பொழுது ஒரு குளிர் வரும் பாருங்கள்.. எலும்பை உறைய வைக்கும். முன்னாடியே காரை ஸ்டார்ட் செய்து ஹீட்டர் போட்டு வைக்காவிட்டாலோ அல்லது காரிலிருக்கும் நவீன முறை தானியங்கி ஹீட்டர்களை முன்னாடியே டைம் செட் செய்து வைக்காவிட்டாலோ செத்தோம். நான் ஸ்னோவை வழித்து, சுரண்டி சுத்தம் செய்யும் நேரம் கண்டிப்பாக காரை ஸ்டார்ட் செய்து விடுவேன். உறுத்தலுடன். அரை மணி நேரம் முன்னாடி வண்டியை ஸ்டார்ட் செய்து வைப்போர் பலர். உறுத்தலின்றி. ஒவொரு வின்டரின் போதும் சூழல் எவளவு மாசுபடும் என்று நினைத்துப் பாருங்கள். . போன வாரமே அவதானிகள் சொல்லிவிட்டார்கள் இன்று பனி விழும் என்று. ஞாயிறன்றே கண்ணாளன் எங்கள் வண்டிக்கு விண்டர் டயர் மாத்திவிட்டார். இன்னும் பலர் சம்மர் டயரோடு ஓட்டுகிறார்கள். பின்னர் எங்கிருந்து விபத்துக்களைத் தவிர்ப்பது. போன வருடம் டிசம்பரில் ஆரம்பித்த பனி வீழ்ச்சி, இந்த வருடம் ஐப்பசியிலேயே ஆரம்பித்துவிட்டதில் கடுப்பில் இருக்கும் இந்த ஊர்க்காரர்களுக்கு இதுக்கு மேலும் புத்தி சொல்வது எனக்கு நல்லதல்ல. பரவாயில்லை சொல்லு என்கிறீர்கள்தானே? சரி விடுங்கள். அடுத்த மாட்டருக்குப் போகலாம் நாம்.
[ [ [ [ [

மதியம் ஒரு மணி வரை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பின்னர் பாருங்கள் கூத்தை. நாங்களும் ஆணிகளை வைத்து விட்டு யன்னல் வழியாக புதினம் பார்க்க ஆரம்பித்தோம். சம்மர் டயர் மாற்றாததால் வந்த வினை. என் பேச்சை யார் கேட்கிறார்கள்.

037 சிவப்பு பஸ்சின் பின் நிற்கும் வெள்ளை வண்டி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தது போக்குவரத்துச் சிக்கலை.

036 இந்த சிவப்பு வண்டி வழுக்கிப் போய் முன்னால் நிற்கும் வெள்ளை வண்டி மீது டமார்.. மரம் மறைக்கின்றது. ரோடுக்கு அந்தப்புரம் ஒரு சிவப்பு வண்டி தெரிகிறதா? அரைமணிக்கும் மேலாக முயற்சி செய்தார். வண்டி நேராகுவதாய் காணோம். பின்னர் அப்படியே பார்க் செய்துவிட்டுப் போய்விட்டார்.

038 இந்த அம்மணியும் சம்மர் டயர் மாற்றவில்லை. பாதசாரியிடம் உதவி கேட்கிறார். பாருங்க.. பஸ் கஷ்டப்பட்டு ஓவர் டேக்கிங்.

039 041 என் இருக்கையில் இருந்தபடியே யன்னல் வழி காட்சிகள்.

042 043 என் மீது எந்த வண்டியும் இடித்துவிடாமல் தப்பிவந்து பசங்களை பள்ளியில் இருந்து கூட்டிப் போகக் காத்திருந்தபோது. இடப்பக்கம் லச்சு பள்ளி. வலப்பக்கம் சதுர் பள்ளி.

047 048 இது நேற்று வீட்டு பால்கனியில் இருந்து எடுத்தது. எதிரே மைதானத்தில் சதுர் காற்பந்துப் பயிற்சியில். சரியாக இப்போதுதான் ஓரிரு வெண்பனித் துளிகள் விழத் தொடங்கின. உற்றுப் பார்த்தால் வெள்ளைப் புள்ளிகளாய் தெரியும். தெரியவில்லையா? சரி விடுங்கள். அடுத்த மாட்டருக்குப் போகலாம் நாம் என்று சொல்லப் போவதில்லை நான். இத்துடன் முற்றும். இப்போதைக்கு!!

வர்ட்டா..

29 நல்லவங்க படிச்சாங்களாம்:

R. Gopi said...

I the first

நான் கூட இந்த சவால் சிறுகதையைப் பிடித்துக்கொண்டு அடுத்த மேட்டருக்குப் போகாமல் இருக்கிறேனோ?!

போட்டோ எல்லாம் சூப்பர்.

Anonymous said...

ஹாய் சுசி :)
குட்டிக் கதை ஏற்கனவே கேட்டது தான் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் மனக் கதவை தட்டிக் கொண்டுதான் இருக்குது..

//ஒவொரு வின்டரின் போதும் சூழல் எவளவு மாசுபடும் என்று நினைத்துப் பாருங்கள். //
மெயில்ல வர்ற சில போடோகளைப் பார்த்து எவ்வளோ அருமை அப்படின்னு நினைச்சிருக்கேன், ஆனா அதுல இவ்ளோ விஷயம் இருக்கிறது இப்போ தான் தெரிஞ்சுக்கிறேன் :(
அதே மாதிரி அந்த விண்டர் டயர் & சம்மர் டயர் பத்தி கேள்வி பட்டது கூட இல்ல..

இந்த டைம்ல ஊரே வெள்ளை பெயிண்ட் அடிச்ச மாதிரி இருக்கும்ல..
படங்களும் உங்க தொகுப்பும் அருமை சுசி :)

எல் கே said...

antha oor kaarangalukku arivurai solra alavukku aayacha susi.. gr8than

எஸ்.கே said...

கதை+நிகழ்வுகள்+படங்கள்=தொகுப்பு சூப்பர்!

Anonymous said...

அவியலாய் இருந்தது பதிவு...

Madumitha said...

தெரிந்த கதை என்றாலும் ஒவ்வொருமுறை படிக்கும் போதும்
ஒரு விஷயம் சொல்கிறது.
நீங்கள் சொன்னவற்றையெல்லாம்
படங்களே சொல்லி விட்டன.
சின்னதாய் ஈரக் காற்று பட்டாலே
இங்கெல்லாம் தும்மல் போடுகிறோம்.

Chitra said...

Snowing Already??? WOW!

ப்ரியமுடன் வசந்த் said...

சூதானமா இருங்கோ!

சீமான்கனி said...

சுசிக்க படங்கள் ஜில்லுனு இருக்கு எழுத்து எல்லாம் ஜிவ்வுன்னு இருக்கு நேத்து யு டயுப்-ல ஒரு வீடியோ பார்த்தேன் சிரிப்பு வந்தது அதே நிகழ்வை உங்க பதிவில் படிக்கும் போது கஷ்ட்டமா இருக்கு....

அருண் பிரசாத் said...

cooooooooooooool

எனக்கு இப்படிபட்ட இடத்தில் வாழ ஆசை... வந்து பார்த்தால் தான் கஷ்டம் தெரியும் என்கிறீர்களா? ரைட்டு...


மொரீசியஸ்ல் என்னால் 10 டிகிரி குளிரையே தாங்க முடியவில்லை. ஹாட் சென்னைவாசி நான். உங்கள்பாடு புரிகிறது

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லா இருக்கு...

VELU.G said...

அழகான படங்கள்

நல்ல பகிர்வு

சாந்தி மாரியப்பன் said...

எத்தனைதடவை கேட்டாலும் அந்த குட்டிக்கதை அலுக்கவே செய்வதில்லை.. பனிவிழும் ஊரை தள்ளியிருந்து ரசிக்கப்பிடிக்கும்.. அங்கியேயிருந்து குப்பை கொட்டும்படி ஆனா!! சரி, விடுங்க.. அடுத்த மாட்டருக்கு போலாம் :-)))

vinu said...

neenga dailyum office porappoo konjam paaththu drive pannungappaaa

r.v.saravanan said...

குட்டிக் கதை நல்ல பகிர்வு படங்கள் ரொம்ப நல்லாருக்கு சுசி

விஜி said...

ஹிஹிஹி சுசி.. கமெண்ட் தனியா சொல்றேன்:)) இப்ப வந்துட்டு போனதை மட்டும் சொல்லிக்கிறேன்

ராமலக்ஷ்மி said...

அறிந்த கதையே எனினும் பாலாஜி சொல்லியிருப்பது போல எப்போது வாசிக்கையிலும் சிந்திக்க வைக்கிற ஒன்று.

பனி பொழிந்த படங்களும் பகிர்வும் அருமை சுசி.

கோபிநாத் said...

ம்ம்ம்....ரைட்டு அடுத்த மாட்டருக்கு போகலாம்..;)

கார்க்கிபவா said...

ம்ம்

எங்க ஊருல எல்லாம் சனிதான் பிடிக்கும். பனி..ம்ம்

சுசி said...

ஹிஹிஹி.. சமத்து கோபி நீங்க.

$ $ $ $ $

எல்லாம் அக்கரைப் பச்சைதான் பாலாஜி. கதை.. எனக்கும் அப்டித்தான் இருந்துது. டயர் பத்தி விரிவா எழுதறேன்.

$ $ $ $ $

அய்யய்யோ.. விஜிதான் கார்த்திக் கிரேட். நான் இல்லை :))

சுசி said...

நன்றி எஸ்கே.

$ $ $ $ $

பரிசலுக்கு போட்டியாவா தமிழ்?? :))

$ $ $ $ $

நன்றி மதுமிதா. அப்போ நான் வீணா சொல்லிட்டேனா?? :))

சுசி said...

வாவ் இல்லை சித்ரா. ஆவ்..

$ $ $ $ $

சரிங்கோ வசந்து.

$ $ $ $ $

விடுங்க கனி. நான் மட்டும் என்னவாம். ஆஃபீஸ்ல நிக்கும்போது இதெல்லாம் பாத்து சிரியா சிரிச்சேனே.

சுசி said...

வந்து பாக்கணும் அருண். அவ்ளோ அழகு. இங்கயே இருக்கிறது தாம்பா கஷ்டம் :(

$ $ $ $ $

நன்றி வெறும்பய.

$ $ $ $ $

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேலு.

சுசி said...

கு கொ ஆனா கஷ்டம் தான் அமைதிச்சாரல். என்ன செய்ய.. விதி.

$ $ $ $ $

சரிங்க வினு. கஷ்டமா இருந்தா பஸ்ல போயிடுவேன்.

$ $ $ $ $

நன்றி சரவணன்.

சுசி said...

விஜி.. சொல்லவே இல்லை.. சீக்கிரம் சொல்லு..

$ $ $ $ $

கதை.. அதே தான் அக்கா என் எண்ணமும்.

$ $ $ $ $

நிஜமா போயிடலாமா கோப்ஸ்?? :))

சுசி said...

உங்களுக்கு தோழிகள பிடிக்கிற மாதிரின்னு வச்சுக்குங்களேன் குரு.

sakthi said...

அருமையான குட்டிக்கதை

பனிக்காலத்தை ரசிக்கின்றீர்கள் போலும்

வாழ்த்துக்கள்!!!!!

தினேஷ்குமார் said...

வணக்கம்
முதல் முறை வாசிக்கிறேன் உங்கள் பதிவின் வரிகளை நல்ல பதிவு

R.பூபாலன் said...

சுசிக்கா ... எனக்கு இதெல்லாம் நேர்ல பார்த்து அனுபவிக்கனும் போல இருக்கே.....

அப்புறம் அந்த குட்டிகதை எனக்கு ஏற்கனவே தெரியு...........மே.....