இலங்கையின் வன்னி மண்ணை ஆட்சி செய்த மன்னர்களில் கயிலைவன்னியனின் ஆட்சிக்காலத்தை வன்னி வரலாற்றின் பொற்காலமென்று சொல்லலாம். இவன் கயிலாயவன்னியன் என்றும் அழைக்கப்பட்டான். வன்னியர் என்றால் வலிமை மிக்கவர் என்று பொருள். வன்னியின் பனங்காமம் என்ற இடத்திலிருந்து 1644 ஆம் ஆண்டு முதல் 34 ஆண்டுகள் வலிமையான ஆட்சியை இம் மன்னன் நடத்தி வந்தான்.
இவன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரது ஆட்சியின் இறுதிக்காலம் வரை, 14 ஆண்டுகள் அவர்களுக்குப் பணியாது, திறை செலுத்தாது இருந்தான். அதேபோல் ஒல்லாந்தரது ஆட்சியிலும் தன் வாழ்வின் இறுதி வரை அவர்களுக்குத் தலை வணங்காது, திறை செலுத்தாது, யாழ்ப்பாணம் வருமாறு அவர்கள் விடுத்த கட்டளையை ஏற்காது உறுதியாக இருந்தான். இதனை ஒல்லாந்து ஆளுநர் Thomas Wantry தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
வன்னிப்பகுதி ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட போதும் மாற்றாரினால் அச்சுறுத்தல் வந்த போதெல்லாம் இவன் தலைமையின் கீழ் அனைவரும் ஒன்று சேர்ந்து போரிட்டனர். ஏழு அரசுக்குள்ளும் இவன் அரசு பேரரசாக போற்றப்பட்டது. Robert Knox என்ற ஆங்கிலேயர் தமது இலங்கையின் வரைபடத்தில் இவனது ஆட்சிப்பகுதி தென்கிழக்கே கொட்டியாரம் என்ற இடத்தையும் உள்ளடக்கிப் பரந்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கயிலைவன்னியன் தம் ஆட்சிப்பகுதியான யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்கக் கூடுமென்று அஞ்சிய போர்த்துக்கேயர், வெற்றிலைக்கேணி என்ற இடத்தில் ‘பெங்சூற்றர்’ என்றும், ஆனையிறவு என்ற இடத்தில் ‘பைல்’ என்றும் இரண்டு கோட்டைகளைக் கட்டியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவன் கி.பி 1678 ஆம் ஆண்டு இயற்கைச் சாவு எய்தினான்.
O O O O O O O O O O O O O O O O O O O O
என்ன மக்கள்ஸ்?? அப்டி எல்லாம் நினைக்கக் கூடாது. நான் நல்லாத்தான் இருக்கேன். இது எப்பவோ ஒரு காலத்தில மரியாதைக்குரிய வெறும்பய அவர்கள் என்னை தொடர்ந்து எழுதச் சொல்லி கை கா(மா)ட்டி விட்ட ஒரு தொடர் பதிவு. அவர் அவரப் பத்தியே ”யோசிச்சு தான் சொல்லணும்... சீக்கிரமே சொல்றேன்..” அப்டின்றார். ஆனாலும் மன்னாதி மன்னன் என்று ஒரு தொடர் பதிவில பாபர் மன்னன் பத்தி நிறைய எழுதி இருக்கார். அப்படியே மன்னர்கள் வரலாறு மீண்டும் நினைவுபடுத்தப்படணும்னு இதை ஒரு தொடரா எழுதலாம்னு என்னையும் தொடரச் சொன்னார். அதுக்கு அவருக்கு மீண்டும் நன்றிகள். ஆவ்வ்வ்.. இனி நான் சிலரை தொடர வைக்கணும். அட.. அதுக்குள்ள அம்புட்டுப் பேரும் ஓடியே போய்ட்டாங்களே.. இருந்தாலும் ஓலை அனுப்புவோம்ல..
அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். என்ன செய்ய.. டிவின்னா யாரக் கூப்பிடப் போறேன்னு சொல்ல முன்னம் ஒரு ஆர்வத்தைக் குடுக்க ப்ரேக் விடலாம். பிளாக்ல.. இப்டித்தான். கொசுவத்தி சுத்தணும். இந்த மன்னன் ஆட்சி செய்ததா சொல்லப்பட்ட இடமான பனங்காமத்தில என் அத்தை ஒருத்தங்க கல்யாணம் செஞ்சு போயிருக்காங்க. வளர்ந்ததுக்கு அப்புறம் போர்ச் சூழ்நிலைகளால அதிகம் போக முடியலைன்னாலும் சின்ன வயசில அங்க போறப்போல்லாம் அரண்மனை சிதைவுகள் உள்ள ஒரு கோயிலுக்கு போவோம். பெரிய பெரிய தூண்கள், சுவர்கள் எல்லாம் காடு மூடி இருக்கும். அதுக்குள்ள ஒளிஞ்சு விளையாடுவோம். அதே போல மாபெரும் மன்னனான பண்டாரவன்னியனுக்கு அவனைக் கொன்ற ஆங்கிலேயத் தளபதியே அவன் வீரத்தைப் பாராட்டி வைத்த நடுகல் சின்னத்தை கற்சிலைமடு என்ற இடத்தில போய் பாத்திருக்கேன். இதை விட வன்னிப் பிரதேசத்தில ஆங்காங்கு குறு நில மன்னர்கள் ஆண்ட கோட்டைகளின் சிதைவாக கருதப்படுற இடங்களையும் பாத்திருக்கேன். சில இடங்கள் யாருமே போக முடியாத அளவுக்குப் பயங்கரக் காடா மாறிப் போச்சு. காடையே வீடாக்கி வாழ்ந்து வந்த விடுதலைப் புலி வீரர்கள் சில இடங்கள் பத்தி சொல்லி இருக்காங்க. இப்போ இதை எழுதும்போது அவ்வளவு பெருமையா இருக்கிறது அப்போ.. அங்க இருந்தப்போ தெரியலை எனக்கு. இனிமே போகும்போது படம் எடுத்துட்டு வரணும்.
சரி.. இப்போ நான் கை கா(மா)ட்டுறவங்க தொடர்ந்து எழுதுங்க.
சாளரம் கார்க்கி – குரு.. நின்று போன மொக்கை வர்மன் தொடர் நினைவிருக்காங்க??
பிரியமுடன் வசந்த் – ஸ்டார்ட் மீஜிக்.. கிளப்புங்கள் பட்டையை..
யாவரும் கேளிர் நர்சிம் – இலக்கியத்துக்கும் மன்னர்களுக்கும் நிறையத் தொடர்பு இருக்கு இல்லையா நர்சிம்.. அதான்..
வீட்டுப் புறா சக்தி – புறா விடு தூது.. தொடருங்க சக்தி.
கூர்வாள் கயல் – ஆவ்வ்வ்.. வாள்.. அதுவும் கூரா.. வீசுங்க பார்ப்போம்.
விஜி – சும்மா இல்லைங்க.. இவங்க இப்போ ’கிரேட்’ விஜியாம். வெல்கம் பேக் விஜி.. அசத்துங்க..
கண்டிப்பா எழுதுங்கப்பா.. ரொம்ப சுவாரசியமா இருக்கும். அனுபவம் சொல்லுது. சரியா..
வர்ட்டா..
23 நல்லவங்க படிச்சாங்களாம்:
அம்மாடி சுசி ... வாழ்க வளமுடன் என்னை கூப்பிடல நீ
இலங்கை மன்னன் பற்றி தகவல்கள் நன்று சுசி!
இலங்கையை பற்றிப் படிக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு ஆற்றாமை வருவது தவிர்க்க முடியல :(
நாங்களும் நல்லவங்கதானுங்கோ ....
மாட்டிகிடாங்களா மாட்டிகிடாங்களா ... தொடர சொன்னவங்க தொடருங்கப்பா... ஹீ ஹி
நான் வாறன்,,, வாழ்த்துக்கள் சுசி.
எழுதிடுவோம் :)) சுசி, எப்பவும் க்ரேட் விஜிதான், தன்னடக்கம் காரணமா வெளியில் சொல்லிக்கறதில்லை :))
வன்னி மண்ணை பற்றி அருமையாய் எழுதி மனதை தொடிடிங்க
பணன்காமதிட்கு நான் போக இருக்கிறேன்
நான் நல்ல பொண்ணு கமெண்டிட்டேன் அக்கா
:)
இலங்கை மன்னன் பற்றி முதல் முறையாக படிக்கிறேன்.... சூப்பர் சுசி
இலங்கை மன்னன் பற்றி முதல் முறையாக படிக்கிறேன்.
தகவல்கள் நன்று சுசி!
நல்ல பதிவு... மதித்து எழுதியதற்கு நன்றி....
இலங்கை மன்னன் தகவல்கள் சூப்பரு (முதல்ல படிக்கும் நம்ம அக்காவா இதுன்னு ஒரு டவுட்டு கூட வந்துச்சி ;)))
மாட்டிவிட்ட ஆளுங்களும் சூப்பரான ஆளுங்க...கலக்குங்க ;)
//இலங்கை மன்னன் தகவல்கள் சூப்பரு (முதல்ல படிக்கும் நம்ம அக்காவா இதுன்னு ஒரு டவுட்டு கூட வந்துச்சி ;)))
மாட்டிவிட்ட ஆளுங்களும் சூப்பரான ஆளுங்க...கலக்குங்க ;)//
சேம் ப்ளட்...
மன்னா என் என்கிட்ட இருந்து தப்பிச்சுடியே...வாழ்த்துகள்...
ஓஹ் இந்த மன்னனைத்தான் தேடிட்டு இருந்தீங்களா? வெயி பண்ணுங்க இன்னும் ஒரு 70 வருசம் போய் பார்த்திடலாம்...!
வரலாறுன்னா கொள்ளப்பிரியம் எனக்கு எழுதிடுவோம்...! ஹம் ஆனா இன்னும் எவ்ளோ நாள் ஆவப்போதுன்னு தெரியாது
இலங்கை மன்னன் பற்றி
தகவல்கள் நன்று சுசி
கூடவே என் தளத்தை உங்கள் தளத்தில்
இவங்க பதிவும் படிக்கலாம் பகுதியில்
சேர்த்ததற்கும் நன்றி
ஒரு வாரமா எதுவுமே எழுதல..
கொஞ்சம் லேட்டாகும். கோச்சுக்காதிங்க
கார்த்திக்.. கிர்ர்ர்ர்.. இன்னமும் மறக்கலை நான்..
@ @ @ @ @
அதனால தான் நான் அது பத்தி அதிகம் எழுதிறதில்லை பாலாஜி.. ஆற்றாமையோடு கூடவே ஒரு வலியும் வரும் பாருங்க :((((
@ @ @ @ @
பிரபா.. அட்ரஸ் கண்டுபிடிச்சிட்டேன்.. இனி ஒரு தொடர் வரட்டும்..
விஜி.. அந்த அடக்கத்தில எனக்கு ரெண்டு கிலோ அனுப்பி வைப்பா.. பிளீஸ்..
@ @ @ @ @
கண்டிப்பா படம் எடுத்துட்டு வாங்க யாதவன்.. உங்க வலைப்பதிவோட பெயர் என்னங்க??
@ @ @ @ @
அப்போ சிட்டுக்குருவி உங்க பெயர் இல்லையா?? சரி.. இனிமே நல்லபொண்ணுன்னே கூப்டறேன்.
ரொம்ப சந்தோஷம் அருண்.
@ @ @ @ @
நன்றி குமார்.
@ @ @ @ @
வெறும்பய.. நன்றில்லாம் எதுக்குங்க.. மதிச்சு நீங்க தொடர சொன்னப்போ நானும் எழுதணும்ல.. :))
தப்பிச்சிட்டோம்னு ரெம்ப சந்தோஷமா கோப்ஸ்?? ஆகட்டும் ஆகட்டும்.. இன்னொரு தொடருக்கு மட்டும் யாரும் என்னை கூப்பிடட்டும்..
@ @ @ @ @
அச்சச்சோ.. எப்டி தப்ப விட்டிங்க கனி??
@ @ @ @ @
வசந்து.. ஹிஹிஹி.. சமத்துப்பா நீ..
எவ்ளோ நாள் ஆனாலும் எழுதுங்க.. சரியா..
நன்றி சரவணன்.. நன்றில்லாம் எதுக்குங்க :))
@ @ @ @ @
கண்டிப்பா கோச்சுப்பேன் கார்க்கி.. ஆனா உங்கள இல்லை..
எழுதிடுவோம்
வன்னி மன்னன் பற்றிய பதிவு அருமை சுசி.
நன்றி சுசி!
நிச்சயமா எழுதறேன்.
வீசப்போறது கூர்வாளா? என்னான்னு பார்ப்போம்.
எம்பூட்டு நம்பிக்கை உங்களுக்கு? கண்ணெல்லாம் கலங்குது தாயி!
:))
தமிழன் பண்ணின பெரும் தவறே வரலாறுகளை பாதுகாக்காமல் விட்டதுதான். இன்றய கண்ணீரை சொல்லியழ முடியாமலிருப்பதுவும் அதனாலேயே...!
இது போன்ற பதிவுகள் எழுதக்கூடியவர்கள் தொடர்ந்து எழுதவும்.
Post a Comment