இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு மழை நாள் காலையில் விழிப்பதற்கு மனமில்லாமல் தாமதமாக எழுந்ததால் வேகமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். ஸ்டோர் ரூமுக்குள் சென்று கார் கீயில் கை வைக்கும் போது படாரென்று பக்கத்து அறைக் கதவு திறந்து கூடவே “அம்மா” என்றொரு குரல். “என்ன கண்ணா” என்றேன். “ஆஃபீஸுக்கு கிளம்பிட்டிங்களா?? நீங்க ரொம்ப அழகா இருக்கிங்கம்மா. உங்களுக்கு இந்த ட்ரஸ் ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப சூடா இருக்கிங்கம்மா. எனக்கு குளிருது. ஏன் இன்னைக்கு லேட்டா போறிங்க??” இடுப்பை கட்டி, வயிற்றோடு முகம் சேர்த்து காலைக் குளிருக்கு இதமாய் என் கதகதப்பை அனுபவித்த படி தொடரும் கேள்விகளுக்கு, இரு கைகளால் நானும் இறுக்கி அணைத்தபடி பதில் சொன்னேன். இடையிடையே தலை கோதலும், உச்சி முகர்தலும் என் செல்லக் குட்டிக் கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது.
நான் வேலைக்குப் போகத் தொடங்கிய வருடத்தில் ஒரு நாள் மாலை மடி மீது இருந்த படி சொன்னார். ”நீங்க முன்ன மாதிரி இல்லம்மா” என்ன இது என்று கண நேரத் திகைப்போடு கேட்டேன் “ஏண்டா கண்ணா இப்டி சொல்றிங்க. அம்மா எப்போதும் போல தானே இருக்கேன்” சிணுங்கியது பிஞ்சு முகம். “இல்லை.. இப்பல்லாம் நான் ஸ்கூல் முடிஞ்சு வந்தா நீங்க வீட்ல இருக்கிறதில்லை.. காலேலவும் எந்திரிச்சா உங்கள காணோம்” “என்ன கண்ணா செய்யட்டும். அம்மாவும் வேலைக்கு போனா தானே..” காரணங்கள் சொல்லியும் சமாதானம் ஆகவில்லை. ”இப்டி செய்லாமா? நீங்க எங்ங்ங்கேயும் போகாம வீட்ல இருக்கும் போது உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறா மாதிரி ஒரு வேலை தேடிக்கோங்களேன்” அப்படி ஒரு வேலை கிடைக்காதென்று சொன்ன பின் புரிந்து கொண்டு வெக்கத்தோடு சிரித்தார். என்னைப் போலவே அவருக்கும் பகல் நேரப் பிரிவு இயல்பாய் இருக்கவில்லை.
கொசுவத்திகள் எப்போதும் இனிமை தான் இல்லையா. இப்பொழுது முதல் பத்தியை தொடரலாம். அன்று காலை எதேச்சையாக ஆரம்பித்தது இப்போதும் தொடர்கின்றது. என்ன தான் என் மனதுக்கு மகிழ்வாய் இருந்தாலும் சமயத்தில் என்னை வழி அனுப்பவென்றே சீக்கிரம் எழுந்து வருவது ஏற்பாய் இல்லை. வழக்கத்தை விடவும் சீக்கிரமாக கிளம்பி போனால் கதவை திறந்தோ, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தோ குளிருக்கு உடலை குறுக்கியபடி கை ஆட்டி டாடா சொல்லும்போது.. முடியவில்லை. போகட்டும் சில நாட்கள் இப்படியே. கட்டி முத்தத்தோடு வேலைக்கு போவதும் புது உற்சாகம்தான்.
அம்மாவின் அணைப்பும், முத்தமும், மடி இருத்தலும் இன்னமும் வேண்டுமென்பதைத் தவிர இப்போதெல்லாம் ஏதோ ஒரு வகையில் தான் வளர்ந்து விட்டதை காட்டிக் கொண்டே இருக்கிறார். சென்ற வியாழன் வேலையால் வரும்போது இருவரையும் கடைக்குக் கூட்டிப் போவதாக சொல்லி இருந்தேன். இவர் ஃபோன் பேசினார்
“அம்மா.. நான் யூனாஸ் கூட வீட்டுக்கு போறேம்மா. ஓக்கே”
“அப்போ நீங்க கடைக்கு வர்லையா? அக்காச்சி எங்க?”
“அவங்க உங்களுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நான் போறேன்”
“சரிப்பா.. ஆனா அப்பா வர லேட்டாகும். நீங்க நாங்க வர வரைக்கும் தனியா இருப்பிங்களா? அஞ்சு மணி கூட ஆகலாம்”
“அம்ம்ம்மா.. நான் ஒண்ணும் சின்ன பையன் இல்லம்மா.. நான் இருப்பேன். பை”
“இருங்க.. கீ இருக்கா?”
“இருக்கு.. பை”
அவர்கள் ஆடிப் பாடி வீடு போய்ச் சேரும் நேரம் கணக்கு வைத்து அழைத்தேன்.
“என்னாம்மா”
“என்ன செய்றிங்க? யூனாஸ் என்ன செய்றார்?”
“யூனாஸ் இங்க வரல”
“அப்போ?”
“அவர் அவங்க வீடு வரைதான் வந்தார்”
“ஓ.. அம்மா அவரும் எங்க வீட்டுக்கு வரதா நினைச்சிட்டேன். அடுத்த தடவை சரியா சொல்லணும் ஓக்கேவா.. நீங்க என்ன செய்றிங்க இப்போ? என்ன வண்டி சத்தம் கேக்குது?”
” நான் இன்னும் வீட்டுக்குள்ள போலம்மா. வாசல்ல வரும் போது கால் பண்ணிங்க. அதான் வெளிய நின்னே பேசிட்டு இருக்கேன்”
“முதல்ல வீட்டுக்குள்ள போங்க. உள்ள போய்ட்டு கதவை சரியா லாக் பண்ணிட்டு மறுபடி கால் பண்ணி சொல்லுங்க”
“அம்மா.. நீங்க நினைக்கிரிங்க இல்லை நான் குட்டிப் பையன் மாதிரி பயப்படுவேன்னு. உங்களுக்காக வேணும்னா கால் பண்றேன். எனக்கு பயம் கிடையாது”
இதற்கு மேலும் அவர் தைரியத்தை குறைக்க முயலாமல் சரி என்று வைத்தேன். நாங்கள் வீட்டுக்கு வரும்போது டிவி முன் இருந்தார். கூடவே பெருமிதமாய் ஒரு பார்வை.
”அம்மா.. செப்பானியா வீட்டுக்கு போய்ட்டு வரேன். எத்தனை மணிக்கு வரணும்?” மொபைலில் அலாரம் செட் செய்து கொள்வார். ஸ்கேட் போர்ட், மைக்ரோ ஸ்கூட்டர் இல்லையென்றால் சைக்கிள் சகிதம் பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி போகும் அவரை மறையும் வரை பார்த்துக் கொண்டிருப்பேன். இதை எழுதும் இந்த நேரத்துக்கு இடையில் முத்தங்களும் அணைப்புமாக அடிக்கடி கொடுத்துப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று விடிந்ததில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். “நான் குழந்தையா இருந்தது நினைவிருக்காம்மா உங்களுக்கு?” நானும் அதே நினைவுகளுடனேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். வயிற்றுக்குள் இன்னமும் அவர் உதைப்பது போல சில்லென்ற ஒரு உணர்வு வந்து போக, தானாகவே ஒரு இனம் புரியாத பெருமூச்சும் வருகிறது.
நேற்றுத் தான் கவனித்தேன். தூங்குவதற்கு முன் இரண்டு கிளாஸ் பால் எடுத்துக் குடிக்கின்றார். “ஏன் கண்ணா ரெண்டு கிளாஸ் பால்? சாப்பாடு பத்தலையா?” “அம்மா.. தெரியாதா உங்களுக்கு? ரெண்டு கிளாஸ் பால் குடிச்சிட்டு தூங்கலைன்னா எனக்கு தூக்கமே வராது. அப்புறம் நைட்டு பூரா முழிச்சிட்டே இருப்பேன்” அவ்வளவு சீரியசாக சொல்லி விட்டுப் போனவர் இன்று பாலே குடிக்காமல் பன்னிரண்டு மணிக்கு எழுவதற்கு தயாராய் தூங்கப் போயிருக்கிறார்.
சும்மாவே அதிகம் எழுதுவேன். இதில் அம்மாவாய் எழுத ஆரம்பித்தால்? இப்போதைக்கு முடித்துக் கொள்ளலாம்.
என் செல்லக் கண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அவருக்கு அழகான ஒரு வாழ்த்தை நினைவாக அனுப்பி வைத்த கோப்ஸ்.. உங்களுக்கு ரொம்ப நன்றிப்பா. இன்றுதான் காட்ட வேண்டும் என்பதையும் மீறி நேற்று இரவே காட்டி விட்டேன். அவ்வளவு சந்தோஷப்பட்டார். பிரிண்ட் எடுத்து கொடுக்கும்படியும் கேட்டிருக்கின்றார். அவர் அறைக்குள் வைக்க வேண்டுமாம். மீண்டும் நன்றி.
அப்படியே அவர் கேட்ட பாடலையும் கொடுத்து விடுகிறேன்.
34 நல்லவங்க படிச்சாங்களாம்:
கண்ணுக் குட்டிக்கு அம்மாவின் முத்தங்களும் வாழ்த்துக்களும் :))
உங்க செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி :)
சிறப்பான வாழ்வு தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
பிறந்தநாள் வாழ்த்துகள் சதுர்ஜன் :)
செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
//“அம்மா” என்றொரு குரல். “என்ன கண்ணா” என்றேன். “ஆஃபீஸுக்கு கிளம்பிட்டிங்களா?? நீங்க ரொம்ப அழகா இருக்கிங்கம்மா. உங்களுக்கு இந்த ட்ரஸ் ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப சூடா இருக்கிங்கம்மா. எனக்கு குளிருது. ஏன் இன்னைக்கு லேட்டா போறிங்க??” இடுப்பை கட்டி, வயிற்றோடு முகம் சேர்த்து காலைக் குளிருக்கு இதமாய் என் கதகதப்பை அனுபவித்த படி தொடரும் கேள்விகளுக்கு, இரு கைகளால் நானும் இறுக்கி அணைத்தபடி பதில் சொன்னேன். இடையிடையே தலை கோதலும், உச்சி முகர்தலும் என் செல்லக் குட்டிக் கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது.//
தாய்மைக்கே உரிய அன்பும் மழலைக்கே உண்டான மொழியும் கலந்த இதமான வரிகள்...
மொத்ததில் பதிவு அவரின் ஒவ்வொரு பரிமானத்தையும் நீங்கள் உற்று கவனிப்பதை உணரவைக்கிறது சுசி...
குட்டித் தளபதி எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்:)!
உங்கள் செல்லத்துக்கு என் வாழ்த்துக்களும். குட்டிக்கு சுத்தி போடுங்கள் சுசி.
Tons of birthday wishes to your son from our family. May the Divine blessings of the Almighty be ever with him.
Where is the cake??!!
Where is your usual kavithai???!!!
Manyyyyyyyy moreeeeeeeeeeee happyyyyyyy returnsssssss of the dayyyyyyyyy
@ சதுர்ஜன்
Many More HaPpY ReTuRnS of the Day கண்ணா.
@ சுசி
உங்கள் மகனை அவர், இவர் என மரியாதையுடன் அழைப்பது நன்றாக இருக்கிறது. எங்களுக்குகாக இப்படியா அல்லது வீட்டிலும் இப்படிதான் அழைபீர்களா!
ஐயோ பாசம் கொட்டுது வாசிக்க வாசிக்க அன்புமழை பொழியுது இருந்தாலும் மனதுக்குள் சில நெருடல்கள
எனது வாழ்த்துக்கள் உரிதாகட்டும்ம்
இலங்கையில் இருந்து யாதவன்
அம்மாவுக்கும் பையனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் :)
எங்களோட வாழ்த்தும் சேர்த்து சொல்லிடுங்க :)
ஐ.. சுசி.. நீங்க தான் இன்னைக்கு ஃபஷ்ட்டு.. நன்றிங்க :))
! ! ! ! !
ரொம்ப நன்றி பாலாஜி..
! ! ! ! !
அம்புட்டு தானா வசந்து?? ஒரு மானே.. ரெண்டு தேனே சேர்த்திருக்கலாமே?? :)
ரொம்ப நன்றி தமிழரசி.. என் உலகம் அவங்கள சுத்தி தானேங்க.. அவங்க வளர்ச்சியில நான் வளர்ந்தத பாத்துக்கறேன் :))
! ! ! ! !
ரொம்ப நன்றி அக்கா.
! ! ! ! !
கண்டிப்பா செய்றேன் எல் கே. நன்றிங்க.
வாழ்த்துக்கும் ஆசிக்கும் நன்றி கோபி. கேக் நாளைக்கு அவர் தோஸ்த்துங்க கூட. அப்புறம் நவம்பர்ல வீட்ல.
! ! ! ! !
நன்றி கார்க்கி.. இங்க வரைக்கும் கேட்டுது சத்தம் :)
! ! ! ! !
நன்றி அருண். கோவம், செல்லம் வந்தா வா, வாடா.. மத்தபடி எப்போதும் இப்டித்தான் :) இது பத்தி பெருஸ்ஸா, தனியா ஒரு போஸ்ட் எழுதறேன்.
வாழ்த்துகள்!
நன்றி யாதவன்.. என்ன நெருடல்கள்??
! ! ! ! !
ஐ.. சங்கர்.. நல்லா இருக்கிங்களா?? நன்றிங்க.
! ! ! ! !
கண்டிப்பா சொல்றேங்க விஜி.
நன்றி ஜமால்.
பிறந்தநாள் வாழ்த்துகள் சதுர்ஜன்
செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)))))))
மனமார்ந்த வாழ்த்துக்கள் குட்டி மாப்பிக்கு ;))
பிறந்தநாள் வாழ்த்துகள் சதுர்ஜன்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சதுர்ஜன்.
உங்க (குட்டிப்) பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பெற்றோருக்கு பிள்ளைகள் எப்படி வளர்ந்தாலும் அவர்கள் கண்ணுக்கு குட்டிகள்தான் :)
பாசத்துடன் சேர்த்தெழுதிய கட்டுரை அருமையானக உள்ளது
மருமகனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுசிக்கா முதல் இரண்டு பத்தி படிக்கும் பொது அம்மா நிஞாபகம் வருது...கண்களின் நீருடன்...
செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
குட்டி தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நன்றி சக்தி.
! ! ! ! !
நன்றி தாரணி.
! ! ! ! !
நன்றி கோப்ஸ் :((
நன்றி சரவணன்.
! ! ! ! !
நன்றி கயல்.
! ! ! ! !
சரியா சொன்னிங்க பாலன்.. அம்மா,அப்பா இப்போதும் என்ன குட்டிம்மான்னு சொல்வாங்க :)) நன்றிங்க..
ஆவ்வ்வ்வ்.. கனி.. எழுதும்போது எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துதுப்பா..
! ! ! ! !
நன்றி குமார்.
@ சதுர்ஜன்
sathukutii happy birthday
eppadikku
sivakutti
Birthday Wishes.
உங்கள் பையனுக்கு
என் வாழ்த்துக்களைச்
சொல்லுங்கள்.
Post a Comment