Pages

  • RSS

27 September, 2010

இரண்டில் ஒன்று!!

100. சொல்லிப் பார்க்கவே சந்தோஷத்தில் மனம் நிறைகிறது. இது என்னோட நூறாவது இடுகை. என்னை இது வரை எழுத வைத்த உங்களுக்கும் எழுதிய எனக்கும் எவ் வகையில் நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும், நட்புக்கும் என்றும் என் வணக்கங்கள். நன்றி சொல்லி தள்ளி வைக்க விருப்பம் இல்லை. இருந்தாலும் சொல்லிக் கொள்கிறேன்..

நன்றி மக்கள்ஸ்..

இன்னைக்கு ஸ்பெஷலா, வித்தியாசமா எதாவது எழுதணும்னு ரொம்ம்ம்ம்ப யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். எப்போதும் என் இஷ்டத்துக்கே எழுதிட்டு இருக்கேனேன்னு ரொம்ப நாளா ஒரு உறுத்தல். இன்னைக்கு ஒரு நாள் (கேட்டுக்குங்க மக்கள்ஸ்.. இன்னைக்கு ஒரு நாள் தானாம்) ஒரு சின்ன மாற்றம். உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் குடுத்திருக்கேன். உங்களுக்கு இருக்கிற நேர அளவுகளுக்கேற்ப ரெண்டில ஒண்ண படிச்சிட்டு போங்க. கண்டிப்பா படிச்சிடணும் சொல்ட்டேன். நூறாவது இடுகைன்னு நெகிழ்ந்து போய் இருக்கிற சந்தர்ப்பத்தில ரெம்ப கஷ்டப்பட்டு உங்கள டவல் எடுக்க வைக்காத மாதிரி எழுதிட்டு இருக்கேன்.

எல்லாரும் நலமா இருக்க என் பிள்ளையார வேண்டிக்கிறேன்.

 \ \ \ \ \ \ \ \ \ \

நான் உன்னிடம்

’லவ் யூ’ சொன்னதை விடவும்

’சாரி’ சொன்னது அதிகம்

’உம்மா’ கேட்டதை விடவும்

’திட்டாதே’ கேட்டது அதிகம்

’கிட்ட வா’ என்றதை விடவும்

’கோச்சுக்காதே’ என்றது அதிகம்

’கொஞ்சிய’ கணங்களை விடவும்

’கெஞ்சிய’ கணங்கள் மிக மிக அதிகம்!!

 \ \ \ \ \ \ \ \ \ \

லவ் யூ

சாரி

உம்மா

திட்டாதே

கிட்ட வா

கெஞ்சி கேட்டுக்கறேன்

கோச்சுக்காதே!!

\ \ \ \ \ \ \ \ \ \

27 நல்லவங்க படிச்சாங்களாம்:

கயல் said...

வாழ்த்துக்கள் தலைவீ.......

மென்மேலும் வளருங்கள்

எல் கே said...

வாழ்த்துக்கள் சுசி... ரெண்டுமே நல்லா இருக்கு

ராமலக்ஷ்மி said...

சதத்துக்கு என் அன்பான வாழ்த்துக்கள் சுசி!

ராமலக்ஷ்மி said...

இரண்டுமே வாசித்தாயிற்று:))!

R. Gopi said...

நூறுக்கு வாழ்த்துக்கள். நான் ரொம்ப வெட்டி. அதனால் ரெண்டயுமே படிச்சுட்டேன்!

cheena (சீனா) said...

அன்பின் சுசி

நல்வாழ்த்துகள் - சதம் அடித்ததற்கு

அழகான இடுகை - வாசகர்களின் விருப்பத்திற்கு எழுதப்பட்ட ( ???? ) இடுகை அருமை.

என் பிள்ளையாரும் தங்களுக்கு ஆசி கூறுவதில் மகிழ்கிறார்.

கவிதையும் அருமை

நல்வாழ்த்துகள் சுசி
நட்புடன் சீனா

Anonymous said...

நூறாவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சுசி :)
ஆயிரம் பதிவுகள் எழுத இப்பவே வாழ்த்திக்கிறேன் :)
//கோச்சுக்காதே!!

கெஞ்சி கேட்டுக்கறேன்..

திட்டாதே

கிட்ட வா

லவ் யூ

சாரி

உம்மா//
சும்மா மாத்திப் போட்டு பார்த்தேன்..

அதுவும் ஒரு கதை சொல்லுதே! (ஆச்சர்யக்குறி) :)

Thamira said...

2 கவிதையையும் தனித்தனியா படிச்சா கடுப்பாயிடும்னு நினைக்கிறேன். ஒண்ணா படிக்கையில் பரவாயில்லைனு நினைக்கிறேன். முதல் ஆளா வேற வந்துட்டேன்.. போனா போகுது..

100வது பதிவுக்கு வாழ்த்துகள்.!

விஜி said...

உருப்படியா சூப்பரா இருக்கு :)) இப்படியே நூறு நூறுன்னு போயிட்டே இருப்பா :)))

சிட்டுக்குருவி said...

வாழ்த்துகள் அக்கா :))

Anonymous said...

//’கெஞ்சிய’ கணங்கள் மிக மிக அதிகம்!!//

முதலில் வாழ்த்துக்கள் 100வது பதிவுக்கு...

அழகிய கெஞ்சலோ?

Anonymous said...

//லவ் யூ சாரி உம்மா திட்டாதே கிட்ட வா கெஞ்சி கேட்டுக்கறேன் கோச்சுக்காதே!! \ \ \ \ \ \ \ \ \ \//

கொஞ்சம் சீரியஸ் கமெண்ட் தான் இப்படி தான் போகிறது வாழ் நாளில் பாதி...எனக்கு இது பிடிச்சிருக்கு இயல்பாய் இருப்பதால்...

கார்க்கிபவா said...

100க்கு வாழ்த்துகள்..

ப்ரியமுடன் வசந்த் said...

சதம் அடித்த தங்கத்தாரகை பொன்மனச்செம்மல் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் போலிடாக்டர் சுசி வாழ்க வாழ்க...

கொஞ்சிய கெஞ்சிய விட்டுட்டீங்க ...

நட்புடன் ஜமால் said...

100 அடிக்க உதவிய 99களுக்கும் வாழ்த்துகள்

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள் சுசி!

ரெண்டும் சூப்பர்....

'பரிவை' சே.குமார் said...

ரெண்டுமே நல்லா இருக்கு.
சதத்துக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

வாழ்த்துக்கள் உங்கள் 100 வது படைப்புக்கு
தொடருங்கள் துணைக்கு நாம் இருக்கிறோம்

சுசி said...

ஆவ்வ்வ்.. இதெல்லாம் ரொம்ப ஓவரு கயல்..
சைடால வளந்துட்டு இருக்கேன்பா.. ஓக்கேதானே??

§ § § § §

நன்றி எல் கே. உங்களுக்கு இங்கேயும் வாழ்த்துக்கள்.

§ § § § §

நன்றி அக்கா.. நீங்க ரொம்ப நல்லவங்க :)

கோபிநாத் said...

100வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

சுசி said...

ஹஹாஹா.. நன்றி கோபி.

§ § § § §

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீனா ஐயா. உங்களுக்கும் பிள்ளையார் சொந்தமா?? சந்தோஷம் சந்தோஷம்.

§ § § § §

நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் பாலாஜி. ஹிஹிஹி..

சௌந்தர் said...

முதல் நல்லா இருக்கு.
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

சுசி said...

அச்சச்சோ.. கவனமா இருடி சுசி.. இந்த தடவை ஆதி //போனா போகுது//ன்னு விட்டுட்டு போறாரு.. கைல கத்தி எடுக்கிரத்துக்குள்ளை ஒழுங்கா உருப்படியா
எழுதிடு..

§ § § § §

உன் ஆசியும் வாழ்த்தும் பலிக்கட்டும் விஜி :))

§ § § § §

நன்றி சிட்டுக்குருவி.

சீமான்கனி said...

நூறுக்கு வாழ்த்துகள் சுசிக்கா ஊரெல்லாம் சுத்திட்டு வந்து உருப்படியா ஒரு இடுக்கை ரெம்பநாளுக்கு பிறகு கெஞ்சியோ கொஞ்சியோ கேட்டாலும் எனக்கு பிடிச்சிருக்கு...மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் அக்கா..

க ரா said...

சதத்திற்கு வாழ்த்துகள் :)

sakthi said...

வாழ்த்துக்கள் சுசி!!!!

Madumitha said...

தாமத்மான என் வாழ்த்துக்கள்.
நீங்கள் பல நூறுகள் தொட.