Pages

  • RSS

15 September, 2010

குழந்தைக் கதைகள்..

பூச்சி காட்டினான் என் குழந்தை

ஒன்றல்ல இரண்டு முறை

பாம்போ பல்லியோ இருக்குமென்று பார்த்தவளுக்கு

பூச்சி சிரிப்பைத் தான் தந்தது

காரணம் அறியாக் குழந்தை முழித்தது

சொல்லக் கேட்ட பின் செல்லமாய் முறைத்தது

பறந்து போய் விட்ட பூச்சியை

இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறான்

சிரிப்புக்கான கோவத்தை என் மேல் காட்ட முடியாத

என் போக்கிரிக் குழந்தை

7 7 7 7 7

woman looking

7 7 7 7 7

என் குழந்தை மெச்சிய

கதைகாரி நான்

அவ்வளவு அழகாய் கதை சொல்வேனாம்

அவன் தான் சொன்னான்

கதைக்கான கருவை கொடுத்துவிடுவான்

சொல்லும்போது விட்டுப் போகும் அத்தனையும்

கேள்விகளாய் குறிப்புக்களாய்

அவனால் எடுத்துக் கொடுக்கப்படும்

கதை நாயகனும் அவனே ஆகும்போது

நிஜத்தில் நடந்தது

என் நினைவில் உணரப்படும்

அழகாய் கதை சொல்வேனாம்

அவன் தான் சொல்கிறான்

நடந்ததையெல்லாம் கதையென்னும்

என் தங்கக் குழந்தையை

என்னவென்று நான் சொல்வேன்..

36 நல்லவங்க படிச்சாங்களாம்:

தாரணி பிரியா said...

எங்க தாத்தா என்னை வெச்சு ப்ரியா ப்ரியான்னு ஒரு பொண்ணு இருக்காமுன்னு சொன்ன கதை எல்லாம் ஞாபகம் வருதே :)

Anonymous said...

ஆத்தா ஒரு டவுட்டு, குழந்தைக்கு கதை சொல்றேன்னு ஏன் இந்த படம் போட்டிருக்கே???

அன்பரசன் said...

//நடந்ததையெல்லாம் கதையென்னும்

என் தங்கக் குழந்தையை

என்னவென்று நான் சொல்வேன்..//

Super

vinu said...

me 2nduuuuuuuuuuuuuuu

கார்க்கிபவா said...

மயிலக்காவின் டவுட்டுதான் எனக்கும்..

ஏன்?

கோபிநாத் said...

எனக்கு மயில் அக்கா டவுட்டு மட்டும் இல்ல...தலைப்பு குழந்தைக் கதைகளுன்னு போட்டுட்டு...லேபிள் காதல்ன்னு வருது..ஆகா மொத்தம் ரெண்டு டவுட்டு ;))

சீமான்கனி said...

ஓ....குழந்தைக்கதையா?!!! எனக்கு புரிஞ்சு போச்சு!!!!...நடக்கட்டும் நடக்கட்டும்...நல்லதாவே....கதை சொல்றீங்க...வாழ்த்துகள் அக்கா...

Chitra said...

Cute!!! :-)

Vijiskitchencreations said...

அழகா எழுதியிருக்கிங்க.

சுசி said...

ஹிஹிஹி.. நீங்க குழந்தை தாரணி :)

9 9 9 9 9

விஜி.. நீ கொஞ்சம் வளந்துட்டேப்பா..

9 9 9 9 9

முதல் வருகைக்கு நன்றி அன்பரசன்.

சுசி said...

சரியா எண்ணிப் பாருங்க வினு..

9 9 9 9 9

மயிலுக்கு சொன்ன பதிலை படிங்க கார்க்கி.

9 9 9 9 9

மயிலுக்கு சொன்ன பதிலை படிங்க கோப்ஸ்.. அடுத்த டவுட்டுக்கு பதில்.. நீங்க நல்லா வளந்துட்டிங்க கோப்ஸ்.

சுசி said...

நீங்க ஷார்ப்பு கனி :))

9 9 9 9 9

நன்றி சித்ரா.

9 9 9 9 9

நன்றி விஜி.

Anonymous said...

கேக்கவேண்டியதை எல்லாரும் கேட்டுட்டாங்க. பதிலும் சொல்லிட்டீங்க. பேசாம படிச்சிட்டு போயிட்டே இருக்கேன் :)

Madumitha said...

மனசு உணர்ந்ததை
கவிதையாக்கும்
வித்தை உங்களுக்கு
கை வசமாகியிருக்கிறது.

மிக அழகு.

சிட்டுக்குருவி said...

கதைன்னு சொல்லிட்டு கவிதை மாதிரி எழுதியிருக்கீங்க

நீங்க கிரேட் கதாயினிதான் போங்க

;)))

ஜெயந்த் கிருஷ்ணா said...

அழகா எழுதியிருக்கிங்க...

Anonymous said...

சுசி, இது குட்டிஸ் காதலா அப்படின்ன குட்டிக்காதல்னு லேபிள் வச்சிருக்கலாமோ? ஆனா மீனிங் மாறிப்போயிடுமோ? ஸ்ஸ்ஸ்ப்ப்பா ஒரு கவிதையை எழுதி இப்படி குழப்பிட்டியே...

அருண் பிரசாத் said...

Cuteooo Cute

Anonymous said...

செம! :)

சுசி said...

அகிலா.. கிரேட் எஸ்கேப்பா??

9 9 9 9 9

நன்றி மதுமிதா..

9 9 9 9 9

முதல் வருகைக்கு நன்றி சிட்டுக்குருவி. சேதி தெரியுமா?? நான் மாத்தி சொல்லி இருந்தா நீங்களும் மாத்தி சொல்லி இருப்பிங்க.. :))

சுசி said...

நன்றி வெறும்பய.

9 9 9 9 9

விஜி.. "என் புருஷன் குழந்தை மாதிரி"
ஹஹாஹா..

9 9 9 9 9

அருண்.. நன்றியோ நன்றி.

சுசி said...

பாலாஜி.. :)

Anonymous said...

ஹூம் நல்லா இருக்கு கொழைந்தகள்கு கதை சொல்லியாச்சு அப்போ இனி எங்கள்கெல்லாம் எப்போ சொல்ல போறீங்க

எல் கே said...

மன்னிக்கணும். வீட்டில் இணைய இணைப்பு இன்னும் தரலை. அலுவலகத்தில் திரட்டிகளில் வரும் பதிவுகளை மட்டும் படிக்கிறேன். அதுதான் அடிக்கடி உங்க ஏரியா வர முடியல...

எல் கே said...

// "என் புருஷன் குழந்தை மாதிரி"
ஹஹாஹா..//

முடியல

ராமலக்ஷ்மி said...

அருமை.

//சொல்லும்போது விட்டுப் போகும் அத்தனையும்

கேள்விகளாய் குறிப்புக்களாய்

அவனால் எடுத்துக் கொடுக்கப்படும்//

ஆமாம் சுசி:), எல்லாக் குழந்தைகளும் இதில் ரொம்பக் கவனம்.

தெய்வசுகந்தி said...

good!!!!!

r.v.saravanan said...

கவிதை மிக அழகு.

சொல்லரசன் said...

பரிசல் பதிவை விடாதுப‌டிப்பிங்க போலயிருக்கு குழந்தைகதை,காதலர்படம்,
லேபிளில் காதல் இதுபோல் முரன்பாடுகளுக்கு மூன்று மறுமொழி உறுதி என்பது பரிசலின் தத்துவம்.

சுசி said...

ஹிஹிஹி.. ஹய்யோ சந்தியா..

9 9 9 9 9

எல்கே.. இதில என்ன இருக்கு.. சீக்கிரம் விருந்துக்கு கூப்டுங்க.. புது வீட்டை பாக்கணும் :)

9 9 9 9 9

அக்கா.. நீங்களுமா :))

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி தெய்வ சுகந்தி.

9 9 9 9 9

முதல் வருகைக்கு நன்றி சரவணன்.

9 9 9 9 9

ஹஹாஹா.. சொல்லரசன்.. இப்போ தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். பலன் கிடைச்சாச்சு பாருங்க.

சௌந்தர் said...

நல்ல இருக்கு உங்க குழந்தை கதை. ம்...

ப்ரியமுடன் வசந்த் said...

ஆத்தா ஒரு டவுட்டு, குழந்தைக்கு கதை சொல்றேன்னு ஏன் இந்த படம் போட்டிருக்கே???//

அப்புறம் லேபிளும் டவுட்டு டவுட்டேய்ய்ய்ய்

'பரிவை' சே.குமார் said...

குழந்தைக் கதைக்கு
குழந்தையல்லவா படமாக இருக்க வேண்டும்...

குழந்தைக்காக கதை போலல்லவா இருக்கிறது காதல் என்ற லேபிளுடன்...

இருந்தும் நல்லாயிருக்கு கதை.

கயல் said...

அழகு ...மிகவும் ரசிக்கும்படியான கவிதைகள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Cute post Susi