2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2
மனதை வதம் செய்வதில்
அவன் போல் தான் நீயும்
சில முறையேனும்
காயங்களுக்கு இதமாய்
ஆ(ற்)றுதல் செய்வதால்
நீ மட்டும்
சற்று வேறுபட்டுப் போகிறாய்.
2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2
ஒற்றை வார்த்தையால்
உயிர் வரை நனைக்கவும்
உயிர் வதை செய்யவும்
உன்னால் மட்டுமே முடிகிறது
உதாரணத்திற்கு ஒன்று
“செல்லம்”
2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2
என்னது போல் ஒரு வாழ்வு
யாருக்கும் கொடுக்காதே இறைவா
இருக்கென்று சிரிக்க விடு
இல்லையென்று அழவிடு
இருந்தும் இல்லாமல்
என்ன வலி இது??
2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2
உன்
காலடியில் பரிதவிக்கும்
என் இதயம்
கடந்து வேண்டுமானால் போய்விடு
மிதித்து மட்டும் போகாதே.
2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2
37 நல்லவங்க படிச்சாங்களாம்:
மிதிட்து மட்டும் போகாததே...செல்லம்...ஆஹா..
சுசிக்கா வலியில் வழியுது காதல்...ஆதலினால் காதல் செய்வீர்... அத்தனையும் அருமை அக்கா வழ்த்துகள்...
@susi
ellame arumai
athilum chellam taap .excellent
கலக்குறீங்களே சுசி.
சோக ரொமான்ஸ். but, good.
மிதித்தாலும் பரவாயில்லை
என்னை விட்டு கடந்து சென்று விடாதே
(மிதித்த பிறகு கடந்தா என்னன்னு கேக்குறியளா ...)
//“செல்லம்” //
வாவ்!
கடைசிக் கவிதை சோகத்தின் உச்சம்!
நைஸ் சுசி..
எனக்கு இந்த நாவல், சிறுகதை, கட்டுரை, புத்தக விமர்சனம் எல்லாம் ஜோரா வசப்படுது (யார் அந்த மாதிர் சொன்னதுன்னு கேக்குறீங்களா? எனக்கே தெரியும்!!!!!!!). இந்த கவிதை தான் வசப்பட மாட்டேங்குது. நீங்க நல்லா எழுதுறீங்க. வசூல் ராஜா MBBS படத்துல கேக்குற மாதிரி, நீங்க கவித நல்லா எழுத என்ன செய்றீங்க? தயிர்ல சக்கர போட்டு சாப்புடுவீங்களா?
super super superbbbbbbbbbbbbbb
PAINFUL lINES...
ஒரு நாள் ரொமாண்டிக் கவிதை ஒரு நாள் இப்பிடி சோகம் ஏன் ஏன் ஏன் ...ஒரோ வரிகளிலும் அப்பிடி ஒரு அழுத்தம் ஒ ஏன் இந்த சோகம் தோழி ...அருமையா இருக்கு பா ..நன்றி
ரைட்ட்டுங்க.
பழனிபாரதியின் ஒரு கவிதை..
என் காதல் ரோஜாவை தண்டவாளத்தில் வைக்கிறேன்
ரயிலில் வருவதும் நடந்து வருவதும் உன் இஷ்டம்.
எப்பொழுதோ படித்தது. வார்த்தைகள் மாறி இருக்கலாம். படித்தவுடன் அப்பொழுது தோன்றியதுதான் இப்பொழுதும். ‘அதப்போய் தண்டவாளத்துல ஏண்டா வைக்கிறீங்க?’.. ;)
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதும்டா சாமி
ஒற்றை வார்த்தையால் உயிர் வரை நனைக்கவும் உயிர் வதை செய்யவும் உன்னால் மட்டுமே முடிகிறது உதாரணத்திற்கு ஒன்று “செல்லம்”
அருமை சுசி
ஒன்றும் சொல்வதற்கில்லை
செல்லம் கவிதை - வாவ்...
Very nice Susi
//என்னது போல் ஒரு வாழ்வு
யாருக்கும் கொடுக்காதே இறைவா
இருக்கென்று சிரிக்க விடு
இல்லையென்று அழவிடு
இருந்தும் இல்லாமல்
என்ன வலி இது??//
கிகிகிகி எப்பவும் நீங்க சொல்ற நடிகர் திலகம் இதானா அது?????
முதல் கவிதையில் மட்டும் இரண்டு ன்கள் வந்தது னோ? ஜமோ? ற்பனையோ? வியமோ? ல்வியோ?
கடந்து வேண்டுமானால் போய்விடு
மிதித்து மட்டும் போகாதே////
உங்கள் அன்பிற்கு அளவே கிடையாது
அத்தனையும் அருமை சுசி.
கடைசிக் கவிதை அற்புதம்.
படிச்சிட்டேன் ;)))
கடைசி கவிதை நெஞ்சை தொட்டது....!!! :-))
காதல் செஞ்சுட்டு கவிதை மட்டும் எழுதக் கூடாது.. இதையும் சொல்லி வைங்க கனி.. :))
7 7 7 7 7
ரொம்ப நன்றி எல்.கே.
7 7 7 7 7
நிஜமாவா பாரா?? நன்றிங்க.
ஜமால்.. கடந்து போயிட்டா பரவாயில்லையே.. மிதிச்சிட்டா..
ஆவ்வ்.. சொன்னதையே திருப்ப சொல்றேனா..
7 7 7 7 7
நன்றி பாலாஜி.
7 7 7 7 7
ஹிஹிஹி.. காதலித்துப் பார்.. கவிதை வரும்னு யாருப்பா சொன்னாங்க??
நன்றி வினு.
7 7 7 7 7
நன்றி வெறும்பய.
7 7 7 7 7
சந்தியா.. படிக்கிற உங்களுக்கு போரடிக்காம இருக்கணும்ல.. அதாம்பா இப்டி.
அருமை..... simple and nice. :-)
நர்சிம்.. என்ன சொல்லட்டும்.. இல்லை செய்யட்டும்.. :))
அப்புறம் இந்த கவிதை படித்த புத்தகமும் பார்க்கிறவங்களுக்கு குடுக்கனு வச்சிருக்கிங்களா??
7 7 7 7 7
கார்க்கி.. அது செம பாட்டுல்ல..
7 7 7 7 7
சொன்னதே போதும் சக்தி.
நன்றி அருண்.
7 7 7 7 7
நன்றி அகிலா.
7 7 7 7 7
அதே அதே வசந்து.. அப்புறம்
//முதல் கவிதையில் மட்டும் இரண்டு ன்கள் வந்தது னோ? ஜமோ? ற்பனையோ? வியமோ? ல்வியோ?//
இது கொஞ்சம் கூட புரியலைப்பா.. என்னன்னு தான் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்..
ஹிஹிஹி.. புகழாதிங்க சௌந்தர்..
7 7 7 7 7
ரொம்ப நன்றி அக்கா.
7 7 7 7 7
என்ன படிச்சிங்க கோப்ஸ்??
உ பே கா
நன்றி ஜெய்லானி.
7 7 7 7 7
நன்றி சித்ரா.
unga gmail mugavari ennavoo
anngea ippo pagallaa, appuram neenga intha oRRumaiyai kavanicheengala movie paakkumpothu
blogg ooda top and boottom
hedder and footer change aagi irrukku gavincheengala
வரிகளில் காதல் வழியுது சுசிக்கா...
ஒற்றை வார்த்தையால்
உயிர் வரை நனைக்கவும்
உயிர் வதை செய்யவும்
உன்னால் மட்டுமே முடிகிறது
உதாரணத்திற்கு ஒன்று
“செல்லம்//
ஹேய்ய்ய்ய்
நிஜம் தான்..
அழக்கா உணர்வுகளை வார்த்தையாக்குறீங்க...
welcome to my blog...
கடைசி கவிதை அருமை...
நான் இன்னும் மகான் ஆகலை வினு :))
உங்க ப்ளாக தானே சொல்றிங்க.. பார்த்தேன்.. நல்லாருக்கு.
உங்க முகவரிக்கு வரேன் :)
7 7 7 7 7
நன்றி குமார்.
7 7 7 7 7
முதல் வருகைக்கு நன்றி. வரேங்க ரோஸ்.
enna achhu susi febrary monthsa ethu???.
erunthalum arumai...
padangalum..
vilakamana varigalum..
நன்றி யோகேஷ்..
Nice Lines..
மனதை வதை / வதம் செய்தாலும், அவனை விட இவன் சற்றே நல்லவன்..
ஒற்றை வார்த்தையில் உயிரையே நனைத்தவன் - நல்லா இருக்கு...
என் வாழ்வு போல் யாருக்கும் கொடுக்காதே - இதுவே இன்றைய நாளில் பலர் கடவுளிடம் வேண்டுவது.. வலியின்றி வாழ்வேது நமக்கு...
பரிதவிக்கும் இதயம் - கண்ணடி படாத குழந்தையும், சொல்லடி படாத பெண்ணின் வாழ்வும் எங்குள்ளது இவ்வுலகில்??
கவிதை அருமையாக தொகுக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்...
Post a Comment