Pages

  • RSS

25 August, 2010

லுக்கு விடாதிங்கப்பா..

குடும்பமா வாக்கிங் போயிட்டு இருந்தோம். எப்போதுமே பாதிக் குடும்பம் முன்னாடி போயிட்டு இருக்கும். பின்னாடி வர பாதிக் குடும்பத்துல எப்ப்ப்ப்போதும் நானிருப்பேன். நம்ம நடையோட ஸ்பீடு அப்டி. என் ஸ்பீடுக்கு ஈடு கொடுத்து அப்பப்போ யாராவது கூட வருவாங்க. என்னவர் சொல்வார் ஒரு ஸ்டெப் வச்சிட்டு அடுத்தது வைக்க நீ தேட வேண்டியதில்ல.. தரை அங்கதான் இருக்கும்.. தைரியமா கால வைனு. இப்போ என் கூட அவர்தான் வந்திட்டு இருந்தார்.

“எனக்கு புது ஜாக்கிங் ஷூஸ் வாங்கணும்பா”

“இதுவே நல்ல புதுசா தானே இருக்கு”

“என்ன சொல்றிங்க நீங்க.. இது நான் இங்க வந்த வருஷம் வாங்கினது. இதோட பனெண்டாவது வருஷமா பாவிச்சுட்டு இருக்கேன். அதான் என்னால ஸ்பீடா நடக்க முடியலை தெரியுமா..”

இதுக்கு அவர் பதில் சொல்லைன்னாலும் பரவால்ல. இல்லைன்னா ஒரு ஜாக்கிங் ஷூவ பனெண்டு வருஷமா பாவிச்ச ஒரே ஆள் நீதாண்டின்னு சொல்லி இருந்தாலும் கூட பரவால்ல. ஒரு லுக்கு விட்டார் பாருங்க.. அதான்..

joggesko

<<<<<     >>>>>

இந்தியால இருந்து ஒரு பார்சல் வந்திருக்கிறதாவும், சைஸ் கொஞ்சம் பெருசா இருக்கிறதால் போஸ்ட் ஆஃபீஸ்ல வந்து தகுந்த ஆதாரம் காட்டி கலெக்ட் பண்ண சொல்லியும், ரெண்டு வாரத்துக்குள்ள எடுக்கலேன்னா உடமைக்கு நாங்க பொறுப்பு கிடையாது.. அப்டி ஒண்ணு இங்க வரவே இல்லைன்னு சொல்லிடுவோம்னும் ஒரு கார்ட் வந்திருந்துது எங்க ஊர் போஸ்ட் ஆஃபீஸ்ல இருந்து. அட நம்ம பதிவுலகவாசிங்க யாரோ தான் நமக்கு பார்ஸேல் அனுப்பி வைச்சிருக்காங்களோனு சட்னு குதிச்ச மனச அடக்கிட்டேன். நமக்கு யாரு.. வேணாம் விட்டுடலாம். ஒரு வேளை மாமா?? சான்ஸே இல்லை. கேக்காம அனுப்ப மாட்டார். அப்போ.. அதானா.. கண்ணாளனோட சர்ப்ரைஸாஆஆ.. திருவிழா வருது, ரெண்டு மூணு பார்ட்டிக்கும் போணும்.. நல்லதா சாரி இல்லை.. எல்லாம் அநேகமா ஒரு தடவை கட்டினதாதான் இருக்கு.. இல்லேன்னா பிளவுஸ் தைக்கலன்னு கொஞ்சம் ஓவராதான் புலம்பிட்டோமோ.. சரி.. அதான் வந்திடுச்சே இனிமே குதிச்சுக்கோன்னு மனச குதிக்க விட்டேன். அப்டியே ஃபோன் பண்ணி அவர் காதில விஷயத்தை விட்டேன். அவர் பேர்லதான் பார்ஸல் வந்திருக்கு. அவர் தான் போய் எடுக்கணும்.

பார்ஸல ஓபன் பண்ணா பெருசா ஒரு பாக்ஸ் முதல்ல எட்டிப் பாத்துச்சு.. புடவைக்கு எதுக்கு பாக்ஸ்லாம்.. ஓஹோ.. பொருத்தமா வளையல் கூடவே இருக்கும்போல.. அதான் உடையாம இருக்க பாக்ஸ்ன்னு நான் நினைக்குறத்துக்குள்ள குட்டியா ஒரு புக் ப்ரீத்தி புளூ லீஃப்னு எழுதினாப்ல.. அதேதாங்க.. டேபிள் டாப் கிறைண்டர்.. என் சோகத்தை அப்புறம் வச்சுக்கலாம்.. இப்போ மேல படிங்க.. இருந்தாலும் சின்னதா ஒரு ஆவ்வ்வ்..

”இது எப்போப்பா ஆர்டர் பண்ணிங்க..”

“போன மாசம் நம்ம விவேகானந்தன் அண்ணா இந்தியா போனார்ல.. அவர் கிட்ட சொல்லிவிட்டேன்”

”ஓ.. நான் கூட என்னமோ புடவைன்னு நினைச்சேன்பா. (காதில புகை தெரிஞ்சுது உங்களுக்கு?? அவர் கிரைண்டர்ல பிஸியா இருந்ததுல என்ன கவனிக்கல.. நான் சொன்னதையும் வ போ கவனிக்கல) இது நல்ல ப்ராண்டாப்பா”

”அப்டின்னுதான் அவர் சொன்னார்டி”

“இல்லப்பா பழசு ஸ்மித் கிரைண்டர்.. நான் இங்க வந்த வருஷம் வாங்கினது.. பனெண்டு வருஷமா பாவிச்சேன்ல. இதுவும் அப்டி இருக்கணுமே”

இதுக்கு அவர் பதில் சொல்லைன்னாலும் பரவால்ல. இல்லை ஒரு கிரைண்டர பனெண்டு வருஷமா பாவிச்ச ஒரே ஆள் நீதாண்டின்னு சொல்லி இருந்தாலும் கூட பரவால்ல. ஒரு லுக்கு விட்டார் பாருங்க.. அதான்..

Preethi_Blue_Leaf_Platinum

<<<<<     >>>>>

இது இங்க டிவில வந்த ஒரு ஆட்.. எனக்கு ரொம்ப பிடிச்சுதுங்க. குழந்தை அவ்ளோ க்யூட்டா இருக்கு.. நீங்களும் பாருங்க. இங்க caviar அவிச்சு.. bacon கூட லைட்டா பொறிச்சு ஒரு சாப்பாடு செய்வாங்க.. ம்ம்ம்ம்ம்.. ஊர்ல அம்மா மிளகாய்த்தூள், உப்பு கலந்து செஞ்சு குடுக்கிற பொறியல அடிச்சிக்க முடியாதுன்னாலும்.. இதுவும் நல்லா இருக்கும். அத விட ப்ரேக்ஃபாஸ்ட், லன்ச்கு சேர்த்துப்பாங்க முழு caviar.. வாயில கடுகாட்டம் கடக் கடக்னு கடிபடும். இப்போ நீங்க பல்லக் கடிக்கிற சத்தம் எனக்கு கேக்குது.. அதனால.. லுக்குகள் தொடரும்..

வர்ட்டா..

43 நல்லவங்க படிச்சாங்களாம்:

சீமான்கனி said...

Ai vadai...

சீமான்கனி said...

பாதி வருஷம் சிமெண்ட்டு பெஞ்ச்ல உட்கார்ந்துட்டு வந்தா ஷூ புதுசாதே இருக்கும்...அப்படின்னு பாத்தாரோ???மாம்ஸ்...வாயில்லா பூச்சி... பாவம் கா...

ஜெய்லானி said...

கலக்குங்க ..கலக்குங்க...பரவாயில்ல நல்ல பிராண்ட் அதான் 12 வருஷம் வந்திருக்கு...

ராமலக்ஷ்மி said...

இனிமே வேற மாதிரி சொல்லிப் பாருங்களேன் சுசி:))!

Anonymous said...

//தரை அங்கதான் இருக்கும்.. தைரியமா கால வை//
ஹா ஹா! அவ்ளோ ஸ்பீடா நீங்க :)

//லுக்கு விட்டார் பாருங்க.. //
வெறும் லுக்கோட விட்டுட்டார்னு சந்தோசப்படுறீங்க அப்டித்தான ;)

நைஸ் Ad! சுசி..

Anonymous said...

Hmmmm...That was nice one ....
Very interesting too....
Please keep writing more...

Regards
Ezhini.P

துளசி கோபால் said...

சுசி,

இந்தியாவுக்கு வந்ததும் நானும் ஒன்னு வாங்கினேன். ஆனால்..... தேங்காய் எல்லாம் நல்லா மையா அரைக்கலைப்பா. தண்ணி சேர்த்தால் அப்படியே மேலே கசிஞ்சு வருது:(

எனிவே குட் லக்.

a said...

நல்லா இருக்குங்க...

எஸ்.கே said...

செம சூப்பரான விளம்பரம்! நல்லா எழுதறீங்க! வாழ்த்துக்கள்!

கார்க்கிபவா said...

ப்ரீத்திக்கு நான் கியாரண்ட்டி :)

Chitra said...

ஒரு ஸ்டெப் வச்சிட்டு அடுத்தது வைக்க நீ தேட வேண்டியதில்ல.. தரை அங்கதான் இருக்கும்.. தைரியமா கால வைனு.

.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...... யம்மா....... சிரிச்சு முடியல..... சூப்பர் கமென்ட், இது!

அருண் பிரசாத் said...

12 வருஷம் பொருத்த சிங்கம் சுசி வாழ்க

Anonymous said...

சுசி சும்மா சொல்ல கூடாது ஷூஸ் நல்லா தானே இருக்கு அப்பிடி தானே இருக்கும் நீங்க தினமும் நடந்தா தானே அது பழைசா போகும் ஹி ஹி ஹி //

நீங்க அட்ரஸ் சொல்லியிருந்தா நானும் ஏதாவது பார்சல் அனுபியிரிப்பேன் இல்லே ச்சே போ பா ..

டீ. வி ஆட் சூப்பர் உங்க சதுவும் இதே போல் ஆடினாலோ இந்து சாப்பிட்ட பிறகு (சும்மா தமாஷு )

மீதி லூக்குகள் படிக்க ஆவலோட ..

பா.ராஜாராம் said...

//என்னவர் சொல்வார் ஒரு ஸ்டெப் வச்சிட்டு அடுத்தது வைக்க நீ தேட வேண்டியதில்ல.. தரை அங்கதான் இருக்கும்.. தைரியமா கால வைனு.//

:-))

சுசி, ஜாலி!

சுசி said...

வாயில்லா பூச்சியா கனி?? அதுக்கும் சேர்த்து தான் லுக்கு விடறாரே :(

4 4 4 4 4

ஜெய்லானி.. ஸ்மித் கிரைண்டர சொல்றீங்களா?? இல்லை ஷூச சொல்றிங்களா??

4 4 4 4 4

இனிமே அப்டித்தான் செய்யணும் அக்கா.

சுசி said...

பாலாஜி.. ஹிஹிஹி..
நீங்க வேற.. அந்த லுக்குக்கு பதில் அவர் என்னய திட்டலாம் :))

4 4 4 4 4

முதல் வருகைக்கு நன்றி எழினி..
எழினி.. அழகான தமிழ் பெயர் :)

4 4 4 4 4

முதல் வருகைக்கு நன்றி துளசி.. ஆவ்வ்வ்வ்.. அப்போ சீக்கிரமே புது கிரைண்டர் வாங்கணுமா?? நான் இத எப்டியும் ஒரு இருபது வருஷமாவது பாவிக்கணும்னு இருந்தேனே..

துளசி கோபால் said...

சுசி,

இன்னொரு சின்ன விஷயம்.

இதை அரைக்குதுன்னாலும் மிக்ஸி (கம் க்ரைண்டர்)ன்னு சொல்லுவோம்.

வெறும் கிரைண்டர்ன்னா அது நம்ம ஆட்டுக்கல்லுக்கு மட்டுமே:-))))

ஆங்.... சொல்ல மறந்துட்டேனே.... ஜூஸர் அட்டாச்மெண்ட் நல்ல பயனா இருக்கு.

கோபிநாத் said...

கலக்கல் வீடியோ...;))

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி யோகேஷ்.

4 4 4 4 4

நன்றி எஸ்.கே.

4 4 4 4 4

கார்க்கி உங்க தோழி ப்ரீத்திக்கு நீங்க கியாரண்டி.. என் கிரைண்டருக்கு??

சுசி said...

சித்ரா.. இன்னைக்கு தான் நீங்க இவ்ளோ சிரிச்சு பாக்கறேன்.. :))

4 4 4 4 4

அருண்.. சட்னு "பொ" வோட கால விட்டுட்டு படிச்சிட்டு கர்ஜிக்க பார்த்தேன் போங்க..

4 4 4 4 4

வேற ஆட் பார்த்து செஞ்சிருக்கார் சந்தியா.. அவருக்கு இது சாப்ட பிடிக்காது. அடுத்த தடவை ஏதும் தேவைன்னா அட்ரஸ் அனுப்பறேன்.. என்ன ஒரு வைர செட் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை :))

சுசி said...

நன்றி பாரா.

4 4 4 4 4

ஓ.. அப்டியா துளசி.. நன்றிங்க. ஜூஸ் கண்டிப்பா செஞ்சுடுவேனாக்கும் :))

4 4 4 4 4

நன்றி கோப்ஸ்.

சொல்லரசன் said...

//அவர் கிரைண்டர்ல பிஸியா இருந்ததுல என்ன கவனிக்கல.//

//பனெண்டு வருஷமா பாவிச்ச ஒரே ஆள் நீதாண்டின்னு சொல்லி இருந்தாலும் கூட பரவால்ல. ஒரு லுக்கு விட்டார் பாருங்க..//

அவ‌ரு செய்ய‌ற‌ வேலையை நீங்க‌ செய்ய‌றாத‌ எழுத‌ற‌போது லுக்குதான் விட‌முடியும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அதான ஷூ சரி இல்லைனா எப்படி நடக்க முடியும்... நான் உங்க கட்சி தான் சுசி... (ஹி ஹி ஹி... நானும் இப்படி எல்லாம் நொண்டி சாக்கு சொல்லுவேன்... அதான் உங்க கட்சில சேந்துட்டேன்...)

//அட நம்ம பதிவுலகவாசிங்க யாரோ தான் நமக்கு பார்ஸேல் அனுப்பி வைச்சிருக்காங்களோனு சட்னு குதிச்ச மனச அடக்கிட்டேன்//
அடடே போன மாசம் அனுப்பின இட்லி இன்னுமா வந்து சேரல... போய் பாருங்க சுசி...

ஐ... மிக்சி அழகா இருக்குங்க... இந்த மிக்சியதான் போன வருஷம் அவர் மட்டும் ஊருக்கு போனப்ப வாங்கிட்டு வர சொன்னேன்.. .எங்க அம்மாவும் இவரும் சேந்துட்டு வெறும் கலருக்கு ரெண்டாயிரம் அதிகம் எதுக்குன்னு... ப்ரீத்தி chefpro பிளஸ் வாங்கிட்டு வந்துட்டாரு... ஒரே சந்தம் என்னமோ பம்ப்செட் மோட்டார் ஓடற மாதிரி... நாம சொல்றது யாரு கேக்கறா...

Anonymous said...

//நம்ம நடையோட ஸ்பீடு அப்டி//
எங்க வீட்லயும் இதே கதைதான். வாக்கிங் தானே போறோம். எந்த ரயிலை புடிக்க இப்படி ஓடணும்னு நான் கேட்பேன்

vinu said...

ஒரு லுக்கு விட்டார் பாருங்க.. அதான்..
அதான்..
அதான்..

அதேதான்..








Adiikada bannu vaangu veenga polla irrukkea.

vinu said...

கார்க்கி said...
ப்ரீத்திக்கு நான் கியாரண்ட்டி :)

yow karki neee ithuvaraikkum Thozikkuthaan guaranteeeeeenu ninaichean ippo preethikkuma


pooya poiyee pullai kuttigalai padikkvaikkira vealliyai paaru.

eatho bachelors naangalavathu poluchu poaroam...........


vanthutttaiynga intha thogothillaiyum nikkirathukku

sakthi said...

ஒரு ஸ்டெப் வச்சிட்டு அடுத்தது வைக்க நீ தேட வேண்டியதில்ல.. தரை அங்கதான் இருக்கும்.. தைரியமா கால வைனு.


:::))))

வேங்கை said...

நல்லா இருக்கு நல்லா எழுதுறீங்க

கவி அழகன் said...

ஒரு விதமான அழகு

கவி அழகன் said...

I am 99th follower

ஜெயந்த் கிருஷ்ணா said...

1 2 3 4 5..... 95 96 97 98 99 .. நூறு...

நான்தானுங்க நூறாவது follower..

RAJA RAJA RAJAN said...

அருமை...

நடந்தவர் கால்ல சீதேவியாம்...!
12 வருஷ நடை... நல்லது தான்...!

http://communicatorindia.blogspot.com/

Anonymous said...

"வேற ஆட் பார்த்து செஞ்சிருக்கார் சந்தியா.. அவருக்கு இது சாப்ட பிடிக்காது. அடுத்த தடவை ஏதும் தேவைன்னா அட்ரஸ் அனுப்பறேன்.. என்ன ஒரு வைர செட் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை :))"

அப்பிடியா வைர செட் அதுல ஒட்டியாணம் ,வளையல் ,மூக்குத்தி மோதிரம் எல்லாம் வேணம் இல்லையா சரி நான் எல்லாம் ஆர்டர் செஞ்சு வாங்கி வைக்கறேன் நேரில் வரும்போது தரேன் சந்தோசம் தானே (வைர செட் வேண்டுமா ஹூம் ஹூம் நான் எதோ முருங்கை கீரை கிடைக்க மாட்டான்னு சொன்னங்களை பாவம் கொஞ்சம் கொடுத்து அனுப்பலாமே ன்னு பார்த்தா ஹூம் )

'பரிவை' சே.குமார் said...

லுக்கு ரொம்ப அருமைங்க...
தொடருங்க...
படமும் கலக்கல்.

'பரிவை' சே.குமார் said...

லுக்கு ரொம்ப அருமைங்க...
தொடருங்க...
படமும் கலக்கல்.

சுசி said...

சிரிப்புக்கு நன்றி நர்சிம்.

4 4 4 4 4

சொல்லரசன்.. பிரமாதம்.

4 4 4 4 4

புவனா.. ஆவ்வ்.. துளசியோட கமண்ட் பாருங்கப்பா..

சுசி said...

சரியான கேள்விதான் அகிலா. லுக்கு விட்டிருப்பாரே??

4 4 4 4 4

வினு.. கார்க்கி மேல வொய் கொலை வெறி.. ஸ்டமக் பர்னிங்??

4 4 4 4 4

முதல் வருகைக்கு நன்றி சக்தி.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி வேங்கை.

4 4 4 4 4

ஆமாம் யாதவன்.

4 4 4 4 4

முதல் வருகைக்கும் நூறாவது ஃபாலோயர் ஆனத்துக்கும் நன்றி வெறும்பய.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி ராஜன். நீங்க ஒரு ராஜன் தானே??

4 4 4 4 4

ஹிஹிஹி.. சும்மா விளாட்டுக்கு கேட்டேன் சந்தியா :))

4 4 4 4 4

நன்றி குமார்.

Anonymous said...

என் அன்பு தோழியே நானும் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னே ..தப்பா நினைக்க வேண்டாம்

சுசி said...

சந்தியா :)))))

ப்ரியமுடன் வசந்த் said...

;) இந்த கஞ்சப்பிசினாரின்னு எங்கூர்ல சொல்லுவாய்ங்க அது நீங்கதன் போல ஹும்.

r.v.saravanan said...

நல்லா எழுதறீங்க! வாழ்த்துக்கள்