X X X X X X X X X X
உன்னிடம்
கேட்காது தவிர்க்கப்பட்ட
கேள்விகளுக்குள்
மறைந்திருக்கின்றன
உன் மனதின் உண்மைகள்..
X X X X X X X X X X
வாசல் வரை வரத்தான்
எனக்கான அனுமதி
காத்திருக்கிறேன்
நாளை உன் ஸ்பரிசம்
உணரலாமென..
X X X X X
உன் விரல் விசைக்காய்
என் சுழல்ப் பேச்சு
நீ இல்லாத வீட்டிலும்
மௌனமாய் தவமிருக்கும்..
X X X X X X X X X X
கொடுத்து வைத்த மேகம்
நினைக்கும் போதெல்லாம்
அழுது தீர்த்து விடுகிறது
என்னாலும் அது முடிந்தால்..
X X X X X X X X X X
உயிராய் ஆனவனுக்காய்
உயிரோடு விளையாடும்
ஓர் உயிர் விளையாட்டு..
X X X X X X X X X X
26 நல்லவங்க படிச்சாங்களாம்:
//கொடுத்து வைத்த மேகம்
நினைக்கும் போதெல்லாம்
அழுது தீர்த்து விடுகிறது
என்னாலும் அது முடிந்தால்///
மிக ரசித்த வரிகள்
//உன் விரல் விசைக்காய்
என் சுழல் பேச்சு
நீ இல்லாத வீட்டிலும்
மௌனமாய் தவமிருக்கும் //
காத்திருப்பின் நீளம்!
அருமை சுசி!
:)))))))))
அடியேனும் நல்லவன் தான்............... படிசிட்டமுல்ல!!,, வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு..அத்தனையும்
ஸ்பரிசம் ,மழை,விளையாட்டு எல்லாமே நெஞ்சை தொட்டுருச்சு சுசிக்கா...சரி சரி வாசலில் நிக்காம உள்ளே போங்க எல்லாம் சரியாயிடும்...
அத்தனையும் அருமை.
கொடுத்து வைத்த மேகமும், மெளனமாய் தவமிருக்கும் சுழல் பேச்சும் மனதோடு தங்கி விட்டன.
"கொடுத்து வைத்த மேகம்
நினைக்கும் போதெல்லாம்
அழுது தீர்த்து விடுகிறது
என்னாலும் அது முடிந்தால்.."
நெஞ்சே தொட்ட வரிகள் ...எல்லா கவிதைகளும் சூப்பர் ...ஏன் சுசி எப்போதும் சோக கவிதைகள் ?
ம்ம்
ஒய் ஒரே சோகாச்சி?
very nice! :-)
என்னது ஒரே சோக மாயமா இருக்கு..!!
நன்றி கார்த்திக்.
2 2 2 2 2
நன்றி பாலாஜி சரவணா.
2 2 2 2 2
விஜ்ஜி.. அழகா சிரிக்கறேப்பா..
\\ மயில் said...
:)))))))))\\
;))))))))))))))))
நாங்களும் சிரிப்போம்ல்ல ;))
சுசி சூப்பருங்க.
அதுவும் அந்த ஸ்பரிசம் கவிதை நச்
அப்டியா.. எந்த நியூஸ்ல சொன்னாங்க?? நலமா பிரபா??
2 2 2 2 2
நன்றி புலிகேசி :))
2 2 2 2 2
படத்தில பாக்கலையா கனி.. கதவு சாத்தி இருக்குப்பா..
போக முடியாது :((
ரொம்ப நன்றி அக்கா.
2 2 2 2 2
ஹிஹிஹி.. சோகம் எனக்கு ரொம்ப பிடிக்கும் சந்தியா :))
2 2 2 2 2
சும்மாதான் கார்க்கி.. டைம் பாஸ்.. பொழுது போல..
யக்கோவ், செருப்புக்கு ஒரு கவிதையா:)
வாசல் வரை வரத்தான்
எனக்கான அனுமதி
காத்திருக்கிறேன்
நாளை உன் ஸ்பரிசம்
உணரலாமென
seruppukku mattumalla chilla nearangalil kaathalanukkum ithea nilaimaithaan
நன்றி சித்ரா.
2 2 2 2 2
அந்த //மாயம்// தான் எனக்கும் தெரியல ஜெய்லானி.
2 2 2 2 2
அச்சோ.. ச்சோ ச்வீட்.. நீங்க இவ்ளோ அழகா சிரிப்பிங்களா கோப்ஸ்?? பாத்ததே இல்லை..
நன்றி அருண்.
2 2 2 2 2
அதுவும் பாவம்ல அம்மிணி.. என்ன மாதிரியே..
2 2 2 2 2
அனுபவம் பேசுதா வினு :))
21 வது நல்லவனும் படிச்சானாம்...
அட என் கவிதையும் பக்கத்துல இருக்கே!
நன்றி சுசி
:)))
வித்தியசமான
எதார்த்த
கவிதைகள் ..
புகைப்படங்களாய்....
அழகைத்தான் இருக்கிறது...
மின் விசிறியை வைத்தும்
ஒரு காதல் கவிதை எழுதமுடிகிறேதே?
அத்தனையும் வசீகரம்.
கவிதை அருமை என்றால் படங்கள் ரசிக்க வைத்தன.
Post a Comment