அக்காச்சி கனடா வந்ததுக்கு அப்புறம் நேத்து தான் அண்ணாவ ஸ்கைப்ல பாக்க முடிஞ்சுது. அண்ணாவோட ரெண்டாவது பையன் பேசினார்.
“சஜோபன் எங்க தயான்”
”அவரா அத்தை.. அவங்க எல்ல்ல்லாரும் அவங்க வீட்கு கனடாக்கு போய்ட்டாங்க”
“ஓ.. எப்போப்பா.. சொல்லவே இல்லையே யாரும் எனக்கு”
“அன்னிக்கே போய்ட்டாங்க. தெரியாதா உங்களுக்கு?? அப்பாதான் ப்ளேன்ல கொண்டு போயி விட்டுட்டு வந்தார்”
“ஓ.. உங்க அப்பா ப்ளேன்லாம் ஓட்டுவாரா?? அத்தைக்கு அதுவும் தெரியாதேப்பா”
“அத்தை.. அப்பா ப்ளேன் ஓட்டலை. ப்ளேன் இருக்கிற இடத்துக்கு கூட்டி போய் விட்டாரு. அவங்க ப்ளேன்ல ஏறி போய்ட்டாங்க”
“ஓ.. ரொம்ப நல்லது. உங்களுக்கு என்ன சொல்லிட்டு போனார் சஜோபன்??”
“எனக்கா அத்தை?? டாடா தயான்.. பை பை தயான்.. போய்ட்டு வரேன் தயான்னு சொல்லிட்டு போனார் அத்தை”
2 2 2 2 2
இது போன வாரம். புகழ், தயான் ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க. கிரண் ரொம்ப வாலுன்னு போட்டுக் குடுத்துட்டு இருந்தாங்கன்னும் சொல்லலாம்.
“அச்சச்சோ.. அவ்ளோ குழப்படி செய்வாரா கிரண். அப்போ நீங்க சமத்தா தயான்”
“ஆமா அத்தை. எங்க மாடு இருக்கில்ல.. அதுக்கு குடுக்கிற மாவு இருக்கில்ல.. அத எல்லாம் எடுத்து உடம்பு பூரா போட்டுப்பார் அத்தை.. குளிக்கிற மாதிரி”
கேள்விக்குறிய முகத்தில காட்டி அண்ணிய பாத்தேன். அவங்க பதில முகத்தில காட்டி பாத்ததோட மட்டுமில்லாம சொன்னாங்க..
”அது ஒண்ணும் இல்லை மச்சாள். மாட்டுக்கு வைக்கிற புண்ணாக்கு இருக்கில்ல. அத தான் அவர் அப்டி சொல்றார்”
2 2 2 2 2
இதுவும் அதே மாட்டோட இன்னொரு கதை. தயானும் புகழும் டியூஷன் போய்ட்டு வந்தாங்களாம். வரும்போது யாரோ சொன்னாங்களாம். உங்க பின்னாடியே பேய் வரும். திரும்பி பாக்காம வீடு போய் சேருங்கன்னு. பயந்திட்டீங்களான்னு புகழ கேட்டேன். ஆமா அத்தை. ஓடியே வந்துட்டேன், சத்தமா கத்திக்கிட்டேன்னாங்க. தயான கேட்டேன்.
“எங்க மாடு இருக்கில்ல.. அது கன்னுக்குட்டி வச்சிருக்கில்ல.. அதனால அது கோவமா இருக்கும். நான் பக்கத்தில போக மாட்டேன். எனக்கு ரொம்ப பயம். பேய்க்கெல்லாம் எனக்கு பயம் கிடையாது அத்தை. ஏன்னா நான் வீரன்”
அப்டின்னார். அது சரி. நீங்க தான் அப்பப்போ அத்தைய ஸ்கைப்ல பாக்கறிங்க இல்லை. அப்புறம் உங்களுக்கு எப்டி பேய்க்கு பயம் வரும்னேன். அண்ணி விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. அண்ணா நோ கமண்ட்ஸ்.
2 2 2 2 2
அக்காச்சி வந்த அடுத்த நாள் அப்பா கிட்ட பேசும்போது பசங்க மூணு பேருமே ரொம்ப நல்லா தமிழ் பேசுறதா சொன்னார். அவங்களுக்கு வாங்க, போங்க, ஆமா, இல்லை மாதிரியான சில சொற்கள் தான் தமிழில பேச வரும். ஆனா நாங்க பேசினா புரிஞ்சுப்பாங்க. இப்படியே தொடர்ந்து பேசினா இனிமே மறக்க மாட்டாங்கப்பான்னு சொன்னேன். அப்டியே அண்ணா கிட்டவும் பேசினேன். சந்தோஷமா இருக்கு அவங்க தமிழ் பேசுறத கேக்கும்போதுன்னேன். அது வெறும் பேச்சில்லடி. தமிழ் அலைன்னார். ஷித்தி.. நான் கனடா வண்டிட்டன். எங்க வீட்ல நிக்கிடன். அம்மா கடைக்க போரிங்க நீங்க.. இப்டி பட படன்னு சஜோபன் பேசுறார். அக்காச்சி கிட்ட சொன்னப்போ சொன்னா அவர் தமிழ் புலமைய பத்தி.
அத்தானோட அப்பா ஃப்ரெண்டு வீட்டுக்கு போயிருந்தாங்களாம். பரவால்லையே. பசங்களுக்கு ரொம்ப மரியாதையான பழக்கம் பழக்கி வச்சிருக்கிங்க. அப்டித்தான் இருக்கணும் அப்டின்னு அவர் ஒரு சான்றிதழ் கொடுத்தாராம். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு.. சஜோபன் அவர பாத்து சொன்னாராம்..
“டேய்.. போய் எனக்கு சோடா எடுட்டுட்டு வாடா”
2 2 2 2 2
ஊர் நேரத்துக்கு சேரன் முழிச்சுக்குவாராம். அம்மாவும் அப்பாவும் அவர மடியில வச்சிட்டு அக்காச்சி தூக்கம் கலையாம இருக்க என் கூட ஸ்கைப்ல பேசிட்டு இருந்தாங்க. சதுர் வந்து என் தோளில சாஞ்சிட்டு பாத்துட்டு இருந்தார். சேரனுக்கு வந்துதே கோவம். டேய்.. எந்திரிடா.. ஷித்தி பாவ்ம். வலிக்கம்.. அடி உனக்கு.. இத சொன்னதும் இல்லாம அப்பப்போ மானிட்டருக்கு அடி, குத்து வேற. எனக்கு வலிக்காம இருக்கன்னு கிட்ட வர சொல்லி வருடி விட்டார். சதுருக்கு ஒரே சிரிப்பா போச்சு.
இன்னமும் கருண் தமிழ் அலையில நான் பாதம் நனைக்கல.
2 2 2 2 2
சமையல் செஞ்சுட்டு இருந்தேன். தங்கா அக்காவங்க சாப்பிட வரதா இருந்தாங்க. சதுர் தண்ணி குடிக்க வந்தவர் அதை விட்டு என் பக்கத்தில வந்தார். எதுவோ கேக்க போறார்னு தெரிஞ்சுது. எதுவா இருக்கும்னு பாத்தா அவருக்கு தேவையான எதுவும் அங்க இருக்கலை. அதிசயமா சமையலுக்கு எடுத்து வச்சிருந்த மசாலா பொருட்களை பாத்தார். அப்டியே கேட்டார்.
“என்னம்மா இது.. மரத்தை எல்லாம் போட்டா சமையல் செய்விங்க.. இத நாங்க சாப்டணுமா.. அஷ்..” (அப்டின்னா அய்யே..)
அவர் கேட்டது கறுவா பட்டை. அவ்ளோ பெருஸ்ஸ்ஸா மரத்துண்டு சைஸ்ல தான் கிடைச்சுது. இங்க இருக்கிற துருக்கிக்காரன் கடையில. தங்கா அக்கா சாப்டும்போது சொன்னாங்க. ”வந்ததும் சொல்ல நினைச்சேன். என்னப்பா இன்னைக்கு இவ்ளோ நல்லா வந்திருக்கு உங்க க்ரேவி.. வாசனையும் தூக்கலா இருக்கு”
பின்ன மரம்லாம் போட்டு சமையல் செஞ்சா சும்மாவா.. நீங்களும் பாருங்க மரத்தை.
வர்ட்டா..
30 நல்லவங்க படிச்சாங்களாம்:
“டேய்.. போய் எனக்கு சோடா எடுட்டுட்டு வாடா”
அட்டகாசம் சுசி.
சுசிக்கா, ஒரு கேள்வி. இந்த இடுகைக்கு சம்மந்தமில்லாதது.
நான் நிறைய இலங்கைத் தமிழர்களிடத்துல பாத்திருக்கேன். அவங்க பேரெல்லாம் வடமொழிப் பேர் இல்லை வடமொழி எழுத்து வர்ற (ஜ, ஷ, ஸ, ஹ) பேராவே இருக்கே? ஏன் அப்பிடி? இங்க இந்தியாவிலயாவது வடமொழிப் பேர் பரிச்சயம். அது ஸ்டைலா இருக்குதுன்னு நினைக்கிறாங்கன்னு சொல்லலாம். ஆனா இலங்கையில எப்பிடி? நிஜம்மாவே தெரியாமக் கேக்கறேன்.
ஆமாம் அக்கா இந்தகாலத்து குட்டிஸ் கிட்ட பேசி நம்மளால பேசி சமாளிக்க முடியலைதான்...சரி இன்னும் எவ்ளோ பல்பு ஸ்டாக் இருக்கு ????
//அது சரி. நீங்க தான் அப்பப்போ அத்தைய ஸ்கைப்ல பாக்கறிங்க இல்லை. அப்புறம் உங்களுக்கு எப்டி பேய்க்கு பயம் வரும்னேன். அண்ணி விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. அண்ணா நோ கமண்ட்ஸ்.
//
ஹா ஹா ஹா.............
டாடா தயான் - ஹூம் ...
புண்ணாக்கையா ...
அண்ணா சமத்து
சோடா எடிட்டிட்டு வாடா - ஹா ஹா
ஒரே சிப்பு தான் :)
அதுக்காக இம்பூட்டு பெருசாவா போடுவீங்க பட்டையை ...
பட்டைய கிளப்பிட்டிங்க :)
/பின்ன மரம்லாம் போட்டு சமையல் செஞ்சா சும்மாவா.. நீங்களும் பாருங்க மரத்தை/
:))))))))
சுசி உங்க சொந்தங்கள் எல்லோரும் உங்களை போல் தமாஷு தான் ன்னு நினைக்கிறன் ..
“டேய்.. போய் எனக்கு சோடா எடுட்டுட்டு வாடா”..இது சூப்பர்..
"என்னம்மா இது.. மரத்தை எல்லாம் போட்டா சமையல் செய்விங்க.. இத நாங்க சாப்டணுமா.. அஷ்..” (அப்டின்னா அய்யே..)"
அப்புறம் உங்க சதுர் மரத்தை போட்ட சைடு டிஷ் சாபிட்டனா ?
எப்போதும் போல் நல்ல பதிவு ..
ஊர் நேரத்துக்கு சேரன் முழிச்சுக்குவாராம். அம்மாவும் அப்பாவும் அவர மடியில வச்சிட்டு அக்காச்சி தூக்கம் கலையாம இருக்க என் கூட ஸ்கைப்ல பேசிட்டு இருந்தாங்க. சதுர் வந்து என் தோளில சாஞ்சிட்டு பாத்துட்டு இருந்தார். சேரனுக்கு வந்துதே கோவம். டேய்.. எந்திரிடா.. ஷித்தி பாவ்ம். வலிக்கம்.. அடி உனக்கு.. இத சொன்னதும் இல்லாம அப்பப்போ மானிட்டருக்கு அடி, குத்து வேற. எனக்கு வலிக்காம இருக்கன்னு கிட்ட வர சொல்லி வருடி விட்டார். சதுருக்கு ஒரே சிரிப்பா போச்சு.
....... Thsts cho chweet!!!
அனைத்தும் கலக்கல்...நானும் அலையில பாதம் நினைச்சேன் ;))
இங்கையும் அக்கா குட்டிஸ்...அடிக்கடி ஏய் வாங்ன்னு சொல்லு எப்படி இருக்கீங்கன்னு கேட்டனும்...இப்படி போயிக்கிட்டே இருக்கு ;))
மகிழ்ச்சி ;)
//பின்ன மரம்லாம் போட்டு சமையல் செஞ்சா சும்மாவா.. நீங்களும் பாருங்க மரத்தை.//
அது என்ன பட்டைதானே
வெரி க்யூட்!
முடியல
தயானும் சதுரும் கொடுத்த பல்ப்தான் பிரகாசமா எரிஞ்சுருக்கு...
அவங்க இவங்கன்னு கூப்பிடுவீங்களா குழந்தைகள? எங்க வீட்டு குழந்தைகளையும் எங்கப்பா அப்படித்தான் கூப்பிடுவார் சின்னவங்களுக்கும் மரியாதை குடுத்து பேசறது ரொம்பவும் நல்ல விஷயம்...
சூப்பர் டிம் பிட்ஸ்... அழகு கொஞ்சும் மழலை தமிழ்...
//டேய்.. எந்திரிடா.. ஷித்தி பாவ்ம். வலிக்கம்.. அடி உனக்கு.. இத சொன்னதும் இல்லாம அப்பப்போ மானிட்டருக்கு அடி, குத்து வேற. எனக்கு வலிக்காம இருக்கன்னு கிட்ட வர சொல்லி வருடி விட்டார்.//
ஹா..ஹா...நினைச்சு பார்த்து சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணியே வந்துடுச்சி...
“டேய்.. போய் எனக்கு சோடா எடுட்டுட்டு வாடா”
enanaku pepusi..venum
ஹா..ஹா...நினைச்சு பார்த்து சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணியே வந்துடுச்சி...
--no no crying...
சரி இன்னும் எவ்ளோ பல்பு ஸ்டாக் இருக்கு ????
--athu neriya erukku....varusiya varum parunga..
MUDALA blogku thiristi suthi podunga susikka..
avlo supera erukku..
ok
tata varata...
அருமை... கலக்கல்...
வேற பட்டை எதுவும் கேட்கலையோ?
//டேய்.. எந்திரிடா.. ஷித்தி பாவ்ம். வலிக்கம்.. அடி உனக்கு.. இத சொன்னதும் இல்லாம அப்பப்போ மானிட்டருக்கு அடி, குத்து வேற. எனக்கு வலிக்காம இருக்கன்னு கிட்ட வர சொல்லி வருடி விட்டார். சதுருக்கு ஒரே சிரிப்பா போச்சு.//
ரசித்தேன்:)!
//பின்ன மரம்லாம் போட்டு சமையல் செஞ்சா சும்மாவா.. நீங்களும் பாருங்க மரத்தை.//
சிரித்தேன்:))!
நன்றி மதுமிதா.
1 1 1 1 1
முகிலன்.. என்னோட முன்னல்லாம் நீங்க சொன்னா மாதிரி தனி தமிழ் பெயர்கள் தான். தாத்தா பாட்டி, அம்மா அப்பா காலத்தில. அப்புறமா வந்து சேர்ந்ததுதான் இந்த பெயர்கள். அதுக்கு சினிமாவும் ஒரு காரணமா இருக்கலாம். அப்புறம் விடுதலை புலிகளால தமிழ் பெயர்கள் உயிர் பெற்றுது. அவங்க உறுப்பினர்கள் எல்லாருக்கும் அவ்ளோ அழகான தமிழ் பெயர்கள். தவிர வீட்டுக்கு ஒருத்தராவது ஜ, ஷ, ஸ, ஹ வரா மாதிரி பேரோடதான் இப்போ இருக்காங்க. (அப்டி இல்லாதவங்களும் இருக்காங்க. அழகு தமிழ்ப் பெயர்களோட மட்டும்) இதுக்கு நியூமராலஜி பெரிய்ய்ய பங்கு வகிக்குது :))
1 1 1 1 1
கனி.. அது எரிஞ்சு கிட்டே இருக்கும்.
அய்.. புலவர் சிரிச்சுட்டார்..
1 1 1 1 1
அடுத்தவங்க நெத்தில போட்டாதானே தப்பு ஜமால் :))
1 1 1 1 1
எல்லாம் உங்க அருள் ஆசிதான் குருவே.
நன்றி திகழ்.
1 1 1 1 1
ம்ம்.. ஃபுல் கட்டு கட்னார் சந்தியா.
1 1 1 1 1
நன்றி சித்ரா.
கோப்ஸ்.. பாத்துப்பா நீங்களும் அப்டியே பேசிட போறிங்க.
1 1 1 1 1
அதே தான் அம்மிணி. எங்க ஊர்ல கறுவான்னு சொல்வோம்.
1 1 1 1 1
நன்றி ப்ரியா.
வொய் அருண்?? காலேல கூட உங்க போஸ்ட் படிச்சேனே..
1 1 1 1 1
பார்ரா.. எந்த பல்பு பிரகாசம்னு ஆராய்ச்சி வேற வசந்துக்கு.
அப்டித்தான் பேசிக்குவோம்.. செல்லமும் கோவமும் ஜாஸ்தி ஆனா என் பசங்கள மட்டும் டா, டி :))
1 1 1 1 1
நன்றி புவனா.
நன்றி ஜெய்லானி.
1 1 1 1 1
நாங்க கோக் தான் குடிப்போம் சிவா. சுத்தி போட்டுடலாம்.
1 1 1 1 1
ஹஹாஹா.. கேக்கலை குமார்.
நன்றி அக்கா.
COKE KUDITHAL blog elutharavangalku aagtham..
:)))PBC NEWSA CHONNAGA...
NANDRI
Post a Comment