Pages

  • RSS

04 August, 2010

சொர்க்கம்!! இரண்டே வார்த்தையில்.

vannசுள்ளிடும் உன் வார்த்தைகள்

ஒரு சிலதான்

என் மனதில் வலிகள்

வலிகள் மட்டும்??

 

*****     *****     *****     ******     *****

IMG_0640  எங்கு வரம் வாங்கி வந்தது

தொலை நீண்ட நீல வானம்

ஒன்று கடக்க இன்னொன்றாய்

ஒட்டி உறவாடிக் கொள்கின்றன

வெண் பஞ்சு மேகங்கள்..

 

*****     *****     *****     *****     *****

 

எனக்கான சொர்க்கம்

இரண்டே வார்த்தையில்..

”கிட்ட வா”

*****     *****     *****     *****     *****

தொடர் கதைய மறந்துட்டேன்னு நினைச்சிங்களா?? இதுவும் பயணத்தில பார்த்ததுதான். என் கண்ணனுக்கும் எனக்குமான சொத்து. சோகம், சுகம், ஏக்கம், கண்ணீர், காதல் அத்தனையையும் இரு மனங்களுக்கும் கண் வழி கடத்தும் மாய மருந்து. எல்லாம் மறந்து விரிந்த அவன் கைகளுக்குள் அணைந்து, அணைத்து அங்கேயே இருந்திட முடியாமல் நடப்பு வாழ்க்கை இழுத்து வருவது போல்தான் இதுவும். எதுவோ ஒரு ஜெர்மன் தெருவில.. 160 கி.மீ வேகத்துல வண்டி போய்க்கொண்டு இருந்த போதுதான் பார்த்தேன்..

KVS.  யாரோ  ஒரு புண்ணியவான். கோதுமையோ எதுவோ விளைச்ச ஒரு தானிய வயல்ல, அறுவடைக்குத் தயாரான பழுப்புப் பயிர்களுக்கு மத்தியில பசேல்னு எழுதி வச்சிருந்தார். கிட்ட வா.. கூடவே சுசியும் சேர்த்து சொல்வது போல.. அரக்கப் பரக்க காமிரா எடுத்து ஒரு கிளிக்.. வெறும் பழுப்புப் பயிர்.. அடுத்த கிளிக்.. இந்தப் படம்.. அப்படியும் ஒரு குட்டிச் செடி குறுக்கே.. V மறைஞ்சு போச்சு.

வண்டிய உடனே திருப்ப முடியாத படி நேர்ப் பாதை.. அகலம் குறைந்த சாலையோரம் ஒதுக்கி நிறுத்துவது உயிராபத்தில் முடியும். இன்னொரு முறை பார்க்கலாம் என்ற ஆறுதலோட இதாவது கிடைச்சதே என்ற திருப்தியோட வந்தாச்சு. அப்போ இருந்த படபடப்பில தோணலை. எந்த இடம்னாவது பார்த்து வைக்கணும்னு. அப்படியே எப்பவோ ஒரு தலைவலி நாளில் எழுதி வச்ச இன்னொரு ”கிட்ட வா”வும் இலவச இணைப்பா.. பாவம் நீங்க.

*****     *****     *****     *****     *****

 Kissing-Couple

இச் என்று ஒரு சத்தம்

இறுக்காத ஓர் அணைப்பு

”ஆமா இவ ஒருத்தி”

பட்டென்று நனவுக்கு வந்தேன்

”இத்தனை நேரம் தலைவலியோட

ஏன் கஷ்டப்படறே??”

”வீட்டுக்குப் போய்தான் டாப்லட் போடணும்னு

அப்டி என்ன வேண்டுதல் உனக்கு??”

”அவ வீட்ல காயகல்பம் வச்சிருக்காளாம்”

குறைப்படுவார்கள் அலுவலகத்தில்

போகாத பொழுதை நெட்டித் தள்ளி

வேலை முடிந்து வீடு வந்தால்

என் முகம் பார்த்த அடுத்த நொடி

இரு கை நீட்டி

என் கண்ணன் கூப்பிடுவான்

”தலைவலியா..

கிட்ட வா..”

இச் என்று ஒரு சத்தம்..

இறுக்காத ஓர் அணைப்பு..

உயிரின் அணுவரை சுகித்துப் போகும்

யாருக்கு வேண்டும் மருந்தும் மாத்திரையும்??

*****     *****     *****     *****     *****

30 நல்லவங்க படிச்சாங்களாம்:

கார்க்கிபவா said...

நான் தான் மொத வெட்டா?

வயல் சூப்பர்...

நடத்துங்க..

தலைவலிக்கே தலைவலியான்னுதானே கேட்பாங்க???

Chitra said...

எனக்கான சொர்க்கம்

இரண்டே வார்த்தையில்..

”கிட்ட வா”


.... romantic!

ப்ரியமுடன் வசந்த் said...

ஜெர்மனில கூடயா களவாணி படம் ஓடுது?

Unknown said...

ஜெர்மனில கூடயா களவாணி படம் ஓடுது?

--repeatu..hahaha..

hmm simple and cute photos and

kavithaigal simply super.

unga kavithaigal kadisivarigal adada...

ok tata
bye.

புலவன் புலிகேசி said...

நச்....

சௌந்தர் said...

களவாணி படம் பாருங்க இந்த சீன் அதுல இருக்கும்

Anonymous said...

"என் முகம் பார்த்த அடுத்த நொடி இரு கை நீட்டி என் கண்ணன் கூப்பிடுவான் ”தலைவலியா.. கிட்ட வா..” இச் என்று ஒரு சத்தம்.. இறுக்காத ஓர் அணைப்பு.. உயிரின் அணுவரை சுகித்துப் போகும் யாருக்கு வேண்டும் மருந்தும் மாத்திரையும்??"

ஆமா சுசி மாத்திரை யாருக்கு வேண்டும் இல்லே ?

KVS படம் சூப்பர்...மீதி விசேஷங்கள் எப்போ எழுத போறே ?

Anonymous said...

nice :))

Anonymous said...

சூப்பர் கவிதை

கோபிநாத் said...

ம்ம்ம்ம்...:-)))

உங்க கவிதை எல்லாம் நல்லாயிருக்கு...பின்னூட்டம் பகுதிக்கு வந்து படித்த பிறகு ;))

Anonymous said...

http://sandhya-myfeelings.blogspot.com/2010/08/blog-post_05.html

vinu said...

vanga vang chuchi back with banga after holidays ...




cuteeeeeeeeeee

Guruji said...

குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/

நர்சிம் said...

பயங்ங்க்கர்..ங்க.

சீமான்கனி said...

//இச் என்று ஒரு சத்தம்..

இறுக்காத ஓர் அணைப்பு..

உயிரின் அணுவரை சுகித்துப் போகும்

யாருக்கு வேண்டும் மருந்தும் மாத்திரையும்??//

ஆஹா...சுசிக்கா...என்னத்த சொல்ல அழகாய் வந்த கவிவரிகள் புகைப்படங்களுக்கு நடுவே
புகைபோடும் வானம்
புரியாத சோகம் கூடவே
பிரியாத சொர்க்கம்....
இருந்தா கேட்க்கவாவேனும்...

ஆஹா எனக்கே கவிதை வருதே...
பயணம் எனக்கும் ரெம்ப பிடிக்கும் அக்கா அப்போது நிறைய எழுதுவேன்...உங்களை போலவே...

சுசி said...

யார கார்க்கி.. உங்கள தானே??

//நடத்துங்க..// அப்போ எழுத வேணாமாப்பா??

Y Y Y Y Y

ஹிஹிஹி.. நன்றி சித்ரா.

Y Y Y Y Y

என்ன சொல்றீங்க வசந்து??

சுசி said...

நீங்களுமா சிவா??

Y Y Y Y Y

நலமா புலிகேசி??

Y Y Y Y Y

ஓஹோ.. இத தான் வசந்தும் சிவாவும் சொன்னாங்களா?? அவ்வ்..

கண்டிப்பா பாக்கறேன் சௌந்தர்.

சுசி said...

இதோ அடுத்தது அதுதான் சந்தியா.

Y Y Y Y Y

நன்றி குமரன்.

Y Y Y Y Y

அம்மிணி :))))

சுசி said...

கோப்ஸ்.. நீங்க என்னிக்கு போஸ்ட் படிச்சிங்க??

Y Y Y Y Y

சாரி சந்தியா.. கொஞ்சம் பிஸி.. இப்போ வந்துட்டேனே :))

Y Y Y Y Y

வரவேற்பு அமோகமா இருக்கே வினு.. ??

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி உஜிலாதேவி. வந்துட்டா போச்சு.

Y Y Y Y Y

இல்லையே நர்சிம்.. முதல்ல கை கட்டிட்டு நின்னத விட இதில இன்னும் அழக்க்கா இருக்கிங்களே..

Y Y Y Y Y

உங்க அளவுக்கு வருமா கனி :)) எழுதுங்க எழுதுங்க..

'பரிவை' சே.குமார் said...

//எனக்கான சொர்க்கம்
இரண்டே வார்த்தையில்..
”கிட்ட வா”//

சூப்பர்..!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் சுசி... //யாருக்கு வேண்டும் மருந்தும் மாத்திரையும்??// ஆயிரம் அர்த்தம் சொன்ன வரிகள்...

நீங்க கூப்பிட்ட "கடவுளும் நானும்..." தொடர் பதிவு எழுதிட்டேன்பா... ரெம்ப லேட்ஆ எழுதினதுக்கு சாரி... http://appavithangamani.blogspot.com/2010/08/blog-post_06.html)

முனியாண்டி பெ. said...

இவ்வளவு நாள் எப்படி உங்களை படிக்காமல் இருந்தேன். உங்கள் எழுத்துநடை மிகவும் நேர்த்தியாக வசீகரமாக உள்ளது.

// வலிகள் மட்டும்??// அலையும் தான் மனதில் சொல்லாமல் சொல்கிறது படம்.

//இச்// நினைவில் இருந்து விடுபடுவதாய் தொடங்கி //இச்// என முடிவது அருமை.

என் பதிவு "ஆதலால் காதல் செய்தேன்" படிக்கவும்.

http://adisuvadu.blogspot.com/2010/07/blog-post.html

சுசி said...

நன்றி குமார்.

Y Y Y Y Y

படிச்சிட்டேன் புவனா. நானே மறந்துட்டேன் கூப்டத :) எதுக்கு பெரிய வார்த்தைல்லாம் :(

Y Y Y Y Y

ரொம்ப நன்றி முனியாண்டி. படிச்சேன் நல்லா இருக்கு.

vinu said...

what happen suchi visted my blog and said "வேற சொல்லத் தெரியலை" was my post that much hurts.

vinu said...

wow wow i too wasn't meant, i was kidding thanks for your opinion and comments

thanks a lot

Starjan (ஸ்டார்ஜன்) said...

அன்புள்ள சுசி மேடம்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

ராமலக்ஷ்மி said...

அருமை சுசி:)!

மங்குனி அமைச்சர் said...

"சொர்க்கம்!! இரண்டே வார்த்தையில்."////

" கிட்ட வா " ரசனையான வார்த்தைகள்

Unknown said...

ADUTHA PADIVU VERAIVIL

VARA VENDUKIREN.

ELLAI ENDRAL

NORWAYKU ANTREX ANUPI VAIKAPADUM...

ANBUDAN
ORU VASAGAN...