Pages

  • RSS

04 April, 2010

சாது மிரண்டால்..

பசங்களுக்கு பள்ளியில பெற்றோர் சந்திப்பு வச்சாங்க. போன அரையாண்ட விட இப்போ முன்னேற்றம் இருக்குன்னு சொன்னாங்க. ரெண்டு பேர் டீச்சருங்களும் ரொம்ப சந்தோஷப்படறாங்களாம் இவங்க ஸ்டூடண்ட்சா கிடைச்சத்துக்கு. அவங்க நிறைய சொன்னாங்கங்க. நான் ரொம்ப சமத்துன்னு மட்டும் எழுதிடறேன். (படிக்கிற நீங்க பாவம்ல) விஷயம் சின்னதா இருந்தாலும் கேக்கும்போது.. ஈன்ற பொழுதில்..

 

சின்ன வயசில இருந்து சது ஒரு ஜெண்டில்பாய்னு சொல்லி இருக்கேன். அவர விட சின்னப் பசங்க அடிச்சிட்டாங்கன்னா கூட திருப்பி அடிக்க மாட்டார். நர்ஸரி டீச்சர் சொன்னாங்களாம் யாரையும் அடிக்க கூடாது, அதிலயும் உங்கள விட சின்னப் பசங்கள அடிக்கவே கூடாதுன்னு. ஸ்கூல் சேர்ந்ததும் தான் ப்ராப்ளமாச்சு. நிறைய புது பசங்க. அப்போ என் கண்ணாளன் ஒரு நாள் சொல்லி வச்சார். யாராவது அடிச்சா உங்களுக்கு வலிக்குதில்ல. அதே மாதிரி நீங்க அடிச்சாலும் அவங்களுக்கு வலிக்கும். திருப்பி அடிச்சிங்கனா வலியோட பயத்தில மறுபடி அடிக்க மாட்டாங்க. இல்லேனா ஒரு விளையாட்டு மாதிரி எப்பவும் உங்கள சீண்டிப் பாப்பாங்கனு. இருந்தாலும் அவரால அத முழுசா ஒத்துக்க முடியல. சின்னப் பசங்க அடிச்சா எங்க கிட்ட சொல்வார். இனிமேல திருப்பி அடிச்சிடுவேன். ஏன்னா எனக்கு வலிக்குது அப்டினு. எங்க ஃப்ரெண்ட் ஒருத்தங்க பையனுக்கு ஒண்ணு வச்சிட்டார். அவர் இப்போ அண்ணா அண்ணானு ரொம்ப மடக்கம்.

 

க்ளாஸ் பையன் ஒருத்தர் ஓவரா டார்ச்சர் குடுத்திட்டார். இவருக்கு வந்த கோவத்தில அவர விரட்டி விரட்டி அடி.. அவர் பாத்ரூம்ல போயி தாழ்  போட்டுட்டு வெளிய வர மாட்டேனு அழுது கடசில டீச்சர் போயி சது அந்த ஏரியாலவே இல்லனு சொல்லி சமாதானம் பண்ணி தான் வெளிய வந்தாராம். அடுத்து ஒருத்தர் கூட சண்டை போட்டப்போ இவர் டீச்சரால விலக்கி விட முடியாம போக இன்னொருத்தங்க வந்து ரெண்டு பேருமா கஷ்டப்பட்டு பிரிச்சு விட்டாங்களாம். டீச்சர் சொன்னாங்க. ”அவ்ளோ கோவமா அன்னிக்குதான் நான் உன்ன பாத்தேன். வழக்கமா சண்டைக்கு நீயா போறதில்ல. அன்னிக்கு உனக்கு கோவம் வந்தது நியாயம்தான் இருந்தாலும் நீ அடிக்கிற அளவுக்கு போவேன்னு நான் நினைக்கல சது”னு.. உடனவே இவரு சொன்னார். ”நானா அடிக்க நினைக்கல அப்பாதான் சொன்னார் அடினு.” லைட்டா கம்ப்ளைண்ட் மாதிரி டீச்சர் எங்க கிட்ட சொல்ல வந்தாங்க போல. என்ன இதுங்கிறா மாதிரி என்னவர ஒரு லுக்கு விட்டாங்க. என்னவர் சொன்னார் ”சும்மாவே தொட்டத்துக்கெல்லாம் சண்டை போடறவங்கன்ற ஒரு தப்பான அபிப்பிராயம் வெளிநாட்டவங்க மேல இங்க இருக்கு. அதிலயும் நாங்க ஆயுத சண்டைக்கு பெயர் போன நாட்ல இருந்து வந்தவங்க. பசங்களுக்கும் அது தெரியும். யாரும் அடிச்சா தற்காப்புக்காக திருப்பி அடிக்கிறதோ, தடுக்கிறதோ தப்பில்லைங்கிறத புரிய வைக்க ட்ரை பண்ணேன். அததான் சொல்றார்”னு.. சொன்னேன் ஆனா சொல்லலை ரேஞ்சுக்கு பேசினார். அப்டியே நர்ஸரி டீச்சர் சொன்னத நான் சொன்னேன். டீச்சர் சிரிச்சிட்டே சொன்னாங்க. ”புரியுது. சது தானா வம்புக்கு போக மாட்டார். எனக்கு நல்லாவே தெரியும். ஆனா வந்ததையும் விட மாட்டார். இது இனி எல்லாருக்கும் தெரியும். (பன்ச் டயலாக்??) அதனால பெருசா ப்ராப்ளம் ஒண்ணும் வராது. இருந்தாலும் நீங்களும் தெரிஞ்சுக்கணும்னுதான் சொன்னேன்”னாங்க.

 

அவர் இத முன்னாடியே எங்ககிட்ட சொல்லி இருந்தார். இருந்தாலும் அப்பாவ மாட்டி விடுவார்னு நாங்க எதிர்பார்க்கல. அதொண்ணும் இல்லிங்க. அந்தப் பையன் நிறைய்ய்ய கெட்ட வார்த்தை சொல்வாராம். அன்னிக்கு கெட்ட வார்த்தை சொல்லிட்டே அடிச்சிட்டு நீ கருப்பன் தானே அதனால நான் அடிச்சாலும் திட்டினாலும் நீ வாங்கிதான் ஆகணும்னு சொன்னாராம். அப்புறமென்ன.. சாது மிரண்டிட்டார். அதென்னமோ தெரிலிங்க. இவங்க உடனவே சொல்றது நம்ம நிறத்ததான். பசங்க கிளாஸ்ல நல்லா படிக்கிறாங்கன்னா உடனவே நிறத்த சொல்லி கிண்டல் பண்ணுறது பெரிய வகுப்புகள்ள நிறையவே இருக்கு. இவங்க அதை எல்லாம் கண்டுக்காம படிச்சு மேல வரது இவங்க சாம்ர்த்தியம்.

 

நான் கூட எத்தனையோ தடவ கேட்டிருக்கேன். சுள்ளுனு கோவம் வந்தாலும் ஒண்ணும் சொல்ல மாட்டேன். அப்பாவப் பாத்து கத்துக்கிட்டது. பேசாம ஒரு சிரிப்போட போயிட்டோம்னா அதுவும் கூட அவங்களுக்கு செருப்படிதான். இருந்தாலும் ஏன் இப்டி இருக்காங்கன்னு வலிதான் கொஞ்ச நாளைக்கு மனச போட்டு வதைக்கும். நல்ல வேளை அப்போல்லாம் பக்கத்தில என் கண்ணன் இல்லையேனு நினைச்சுப்பேன். சின்ன சின்ன விஷயங்களுக்கு ஊரையும் உறவுகளையும் தேடி ஓடற மனச இழுத்து வச்சிக்கிட்டு, இந்த நாட்டோட காலனிலை தொடக்கம் கலாச்சாரம் வரைக்கும் எங்கள மாத்திக்கிட்டு வாழற வாழ்க்கையோட கஷ்டம் புரியுமா இவங்களுக்கு.

 

ஆஃபீஸ்ல இது வரைக்கும் ஒரு தடவை கூட எனக்கு விஷ் பண்ணாத ஏன் ஒரு ஹாய் கூட சொல்லாத ஒருத்தர் இருக்கார்னா பாருங்களேன். ரிஸப்ஷன்ல நிக்கிறப்போ, கிச்சன்ல காஃபி எடுக்க போறப்போ, லிஃப்ட்ல, இல்ல எதிர்க்க கடந்து போறப்போ சமயத்தில சிலர் கண்களுக்கு எப்டித்தான் நான் தெரியாம போறேனோங்கிறது எனக்கு இன்னமும் தெரியாத, புரியாத ஒண்ணு. (அதுவும் இவ்ளோ பெரிய உருவம் தெரியலைன்னாஆ.. அதையும் சொல்லேண்டி சுசி) அதுக்காக நான் அலட்டிக்கிறதில்ல. எங்க டீம் லீடர் நான் வேலைக்கு சேர்ந்த புதுசில ட்ரெய்னிங்ல இதையும் கத்துக் குடுத்தா. யாரெல்லாம் கண்டுக்காம போறாங்களோ அவங்கள பாத்து சத்தமா ஹாய் சொல்லு.. அடுத்த வாட்டி அவங்களாவே சொல்வாங்கனு. எனக்கு என்னமோ அது சரியா படலை. அதனால என் கண்ணன் சொல்றத செஞ்சிடுவேன். அது சரியானு சொல்லுங்க.

பிடிக்கலேன்னா போயிட்டே இரு..

வரட்டா..

22 நல்லவங்க படிச்சாங்களாம்:

Anonymous said...

meeeeeee

the first..

erunga padichitu vantu

comments podren..

(parkumpothu entha commentum ellai.)i hope i am the first..


valga valamudan
complan surya

Anonymous said...

ஏன் இப்டி இருக்காங்கன்னு வலிதான் கொஞ்ச நாளைக்கு மனச போட்டு வதைக்கும்----

unmiyana varigal...evlouthan sadranama eduthukitalam..sila neram namalum sarasarithaney...so we have to accept..


பன்ச் டயலாக்? yenn..yen..ella neengaluma vijay padam patu ketupoitenga..Kadavuleey..

சின்ன சின்ன விஷயங்களுக்கு ஊரையும் உறவுகளையும் தேடி ஓடற மனச இழுத்து வச்சிக்கிட்டு, இந்த நாட்டோட காலனிலை தொடக்கம் கலாச்சாரம் வரைக்கும் எங்கள மாத்திக்கிட்டு வாழற வாழ்க்கையோட கஷ்டம் புரியுமா இவங்களுக்கு. ---"chancey ellinga kooda pirantha uraavugalukey thiriathu ellai..ethila enga evangalaku ellam puria poguthu..."


"அது சரியானு சொல்லுங்க. பிடிக்கலேன்னா போயிட்டே இரு.. வரட்டா.."true lines

onu otthupoganum ellati vilagi poganum....

வரட்டா.."ada enna susima pasai nekum ottindu..

Nandri
Valga valamudan.
V.v.S
Sangam sarbaga
Complan surya.

"Mothathil Valinerintha Unarugalin chinna thodakkam entha padivu.."

ராமலக்ஷ்மி said...

சாதுவை மிரள வைத்தவை:(!

//இவங்க அதை எல்லாம் கண்டுக்காம படிச்சு மேல வரது இவங்க சாம்ர்த்தியம்.//

சொல்லிடலாம், ஆனால் அந்த வயதில் ரொம்ப சிரமமானதே.

//காலனிலை தொடக்கம் கலாச்சாரம் வரைக்கும் எங்கள மாத்திக்கிட்டு வாழற வாழ்க்கையோட கஷ்டம்//

புரியுது எங்களுக்கு.

//பிடிக்கலேன்னா போயிட்டே இரு..//

இதுதான் சரி.

Anonymous said...

பிடிக்கலைன்னா கண்டுக்காம போயிட்டே இருப்பேன் நான். நம்மை பிடித்தவங்க நிறைய பேர் இருக்கும் போது திரும்பிப்பாக்காவதங்களைப்பத்தி ஏன் கவலைப்படணும். அதையெல்லாம் மனசில போட்டுக்கறதே இல்லை.

சீமான்கனி said...

சுசி கிட்ட இருந்து சீரியசான பதிவு சிரிக்க முடியல கோபமா வருது கோபம் வரணும் அதுதான் சரி...மனசுக்குள்ளயே போட்டு கஷ்ட்டபடுறத விட அப்பவே வெளிய கொட்டிடனும் அதுதான் நல்லது...இது என்னோட கருத்து ...
வாழ்த்துகள்...சுசி...

சீமான்கனி said...

ஆனால் இடம் பொருள் ஏவல் கொஞ்சம் பார்க்க வேண்டியும் இருக்கு...

அண்ணாமலையான் said...

நல்லாருக்குங்க..

கோபிநாத் said...

இந்த பதிவுக்கு வெளிநடப்பு செய்யலாமான்னு யோசிச்சேன். பட் கடைசியில அட இது நம்ம விஷயமுன்னு தோணுச்சி...அங்க இல்ல இங்க இல்ல எங்கையும் இப்படி தான் நிறம் ஊர் உடை இப்படி ஏதாச்சும் ஒன்னுல யாருக்காச்சும் பிடிக்கமால் இருக்க தான் செய்து.

மதிக்கிறவுங்களை மதிப்போம் அதுவே போதும் ;))

அப்புறம் வெளிநடப்புக்கு காரணம் எங்க அமைதி அம்மணியை பத்தி ஒன்னுமே இல்லையே அதனால தான் ;))

Chitra said...

///யாரெல்லாம் கண்டுக்காம போறாங்களோ அவங்கள பாத்து சத்தமா ஹாய் சொல்லு.. அடுத்த வாட்டி அவங்களாவே சொல்வாங்கனு////


.........நான் கண்டுக்கிறேன், சுசி அக்கா. ஹாய்.....ஹாய்....ஹாய்.....!!!

சுசி said...

ரொம்ப நன்றி சூர்யா.. ஆமா.. இன்னைக்கு உங்களது தான் ஃபஸ்டு கமண்ட்.. கொஞ்சம் தமிழில எழுதக் கூடாதா?? அவ்வ்வ்..

| | | | |

அதான் அக்கா.. இங்க சில பசங்களுக்கு இப்டி ஆகி இருக்குனு தெரிய வரும்போது நாளைக்கு நம்ம பசங்களுக்கு இப்டி எதுவும் வர கூடாதேனு பயமா இருக்கு.. நாம என்னதான் சொன்னாலும் தைரியமா எதிர்த்து நிக்க வேண்டியது அவங்கதான் இல்லையா.. :((

| | | | |

சுசி said...

சரியா சொன்னீங்க அம்மிணி.. கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் கட்டாயமா நானும் அத கடைப்பிடிக்கிறேன்.

| | | | |

நீங்க சொன்ன ரெண்டுமே சரிதான் சீமான்.. இத விட சீரியஸ்லாம் இருக்கு. நான் எழுதுறது இல்ல. உ+ம் நான் நேத்து ஆ ஒ பாத்தது.. அவ்வ்வ்..

| | | | |

நன்றி அண்ணாமலையான்.

சுசி said...

சரியா சொன்னீங்க கோபி.. மதிக்கலேன்னா மிதிக்க வேண்டாம். போயிட்டே இருப்போம். சரியா.. அவங்க அமைதியா.. கேக்கவே சந்தோஷமா இருக்குப்பா..

| | | | |

ஹாய் சித்ராஆஆஆஆ..

| | | | |

நான் சீரியசா எழுதுறது கூட உங்களுக்கு சிரிப்பா இருக்கா கார்க்கி??

Anonymous said...

உண்மையான வரிகள்
வலி நிறைந்த உண்ணர்வுகளை எளிமையான வார்த்தைகளால்
மிக அழகாய் பதிவு செய்து இருக்கிங்க.

வாசிக்க பிடித்து இருந்தது.

நன்றி
வாழ்க வளமுடன்
வருத்தபடாத வாசிபோர்
சங்கம் சார்பாக
காம்ப்ளான் சூர்யா.

மீண்டும் வருவோம்ல
வரட்டா......
(எது எங்க சுசிமா கிட்ட கத்துகிட்ட வார்த்தை )எப்புடி....

பித்தனின் வாக்கு said...

மிக நல்ல பதிவு. இது வெளி நாட்டில் வேலை பார்க்கும் அனைவரின் கருத்தான பதிவு. இது மட்டும் இல்லை. அமெரிக்காவில் நல்ல சம்பளம் வாங்கும் ஒருவர். இது போன்ற காரணங்களால் தன் மகனின் படிப்பு கெடக்கூடாது என்று பெங்களூர் வந்து செட்டில் ஆன கதை கூட இருக்கு.

கடைசியா ஒரு வரி சென்னாய் பாரு, அதுதான் பெஸ்ட். ஆனாலும் எனக்கு பிடித்த வரிகள் சின்ன அம்மினி சொன்னது.
நம்மைப் பிடித்தவர்கள் ஆயிரம் பேர் இருக்க பிடிக்காதவரைப் பற்றி நாம் ஏன் கவலைப்படனும். அட்டகாசம். நன்றி சுசி.

சுசி said...

மீண்டும் நன்றி சூர்யா.. அழகா தமிழில எழுதினத்துக்கு..
நானே ஒருத்தர் கிட்ட சுட்டு வச்சிருக்கேன் என் கிட்ட கத்துக்கிட்டீங்களா?? வெளங்கும் :))

| | | | |

நன்றி அண்ணா.. இங்கேயும் ஒரு சிலர் அப்டி செஞ்சிருக்காங்க.
ஆமாம்.. அம்மிணி நல்லா சொல்லி இருக்காங்க :))

பனித்துளி சங்கர் said...

அடுத்தவர்களின் பார்வைக்கு நாம் தவறாக தெரிந்தால் அது நம்ம தப்பில்லை .

சுசி said...

ஆமாம் சங்கர்..

நம்ம கிட்ட தப்பில்லாதப்போ தப்பில்லத்தான்.

எல் கே said...

//பிடிக்கலேன்னா போயிட்டே இரு//

correctana policy. keep it up ungalai kadukaati neenga avangala kandukaathenga

சுசி said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி LK.

ப்ரியமுடன் வசந்த் said...

சுசி இன்னாச்சு?

//எங்க ஃப்ரெண்ட் ஒருத்தங்க பையனுக்கு ஒண்ணு வச்சிட்டார். அவர் இப்போ அண்ணா அண்ணானு ரொம்ப மடக்கம்.//

அடக்கி ஆள்றார் மாப்ள அப்டித்தான் மாப்ள இருக்கோணும்...

//சது தானா வம்புக்கு போக மாட்டார். எனக்கு நல்லாவே தெரியும். ஆனா வந்ததையும் விட மாட்டார்.//

குட்டித்தளபதி வாழ்க...

//பேசாம ஒரு சிரிப்போட போயிட்டோம்னா அதுவும் கூட அவங்களுக்கு செருப்படிதான்//

ஜூப்பர் பாலிசி சுசிக்கா..

சது யாரு? குட்டிமாப்ளயா? சதுவா சாதுவா?

சுசி said...

உ.பி கேட்டத்துக்கு நன்றி.. மெயில் மிரட்டல் அனுப்புறத்துக்குள்ள வந்தத்துக்கும் நன்றி..

//குட்டித்தளபதி வாழ்க...//
அடடடடா.. இது தோணலையே எனக்கு. இன்றிலிருந்து சது அப்படியே அழைக்கக் கடவர்..

அவரேதான் வசந்த். சாதுவான சது :))

மங்குனி அமைச்சர் said...

//க்ளாஸ் பையன் ஒருத்தர் ஓவரா டார்ச்சர் குடுத்திட்டார். இவருக்கு வந்த கோவத்தில அவர விரட்டி விரட்டி அடி.. அவர் பாத்ரூம்ல போயி தாழ் போட்டுட்டு வெளிய வர மாட்டேனு அழுது கடசில டீச்சர் போயி சது அந்த ஏரியாலவே இல்லனு சொல்லி சமாதானம் பண்ணி தான் வெளிய வந்தாராம்.//

இது நல்லாருக்கே