Pages

  • RSS

11 April, 2010

கோக் சாப்டா சரி ஆய்டும்..

-சரியா இந்த இடத்தில என் மொபைல் திடீர்னு துளி துளி துளி மழையாய் வந்தாளேனு பாடிச்சு.. எங்க நேரம் இரவு 22:00. டிஸ்ப்ளேல என்னவர் பெயர பாத்ததுமே பரபரப்போட  ஹலோன்னு சொன்னேன்.. விபரம் அடுத்த பதிவில..

மேலும் விபரங்களுக்கு இங்க கிளிக்குங்க.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

இப்போ அங்க சொன்ன அடுத்த பதிவான இந்த பதிவுக்கு வாங்க..

 ஹலோ..

ஏய் டாக்டர் சதுவுக்கு appendicitis ஆகி இருக்கலாம்னு சொல்றார்.. சீக்கிரம் ரெடியாகு ஹாஸ்பிடல் போணும்.. அம்மா அக்கா கூட வரணும்னு அடம் பிடிக்கிறார்.. வந்துட்டு இருக்கேன்..

கடவுளே என்னப்பா சொல்றீங்க.. என்ன ரெடியாகுறது.. இதோ இறங்கிறேன்.. சீக்கிரம் வாங்க..

அத்தனை கடவுளையும் வேண்டிக்க ஆரம்பிச்சேன்.. இன்னும் அம்மு குடுத்த அதிர்ச்சியில இருந்தே நான் முழுசா வெளியில வரல.. இப்போ இது.. என் குட்டிக் கண்ணன்.. வலி தாங்க மாட்டாரே.. என்ன செய்வேன் நான்.. அம்மு கூடவே இருந்து கேட்டுட்டு இருந்தவங்க பிஜாமாஸ் சேஞ் பண்ணிட்டு ரெடி ஆகி எனக்கும் ஷூஸ் எடுத்துக் கொடுத்து ஹெல்ப் பண்ணாங்க. பாவம் தம்பின்னும் அடிக்கடி சொல்லிட்டு இருந்தாங்க.

இன்னமும் என்ன ஆச்சுன்னு சொல்லலை இல்லை. இங்க இப்போ ஸ்டமக் ஃபீவர் சீஸன். ஒரு வகையான வைரல் ஃபீவர். தலை வலிக்கும், செம டயர்டா இருக்கும், குமட்டல், சமயத்தில வாந்தி, இனித்தான் மெயின்.. வயித்து வலீஈஈஈஈஈஈ.. ஸ்கூல்ல இருந்து முதல்ல கொண்டு வந்தவங்க அம்மு.. அடுத்து எனக்கு, கண்ணாளனுக்கு கடைசியா சதுவுக்கு. ஸ்கூல் முடிச்சு வந்து இருந்தவர் நைட்டு எட்டு மணி போல வலியில ரொம்ப கஷ்டப்பட்டார். கண்ணாளன் எமர்ஜன்சிக்கு கூட்டிப் போனார். இதுக்கு மெடிசின் கிடையாதுன்னு தெரிஞ்சாலும் டாக்டர் கிட்ட போனா அவருக்கு ஓக்கேவா இருக்குமேன்னுதான் கூட்டிப் போனார். நானும் அம்முவும் அவங்க வந்ததும் தூங்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம். பெயர்தான் எமர்ஜன்சியே தவிர டாக்டர பாக்க குறைஞ்சது ரெண்டு மணி நேரமாகும். அது வரைக்கும் நர்ஸ்தான் அப்பப்போ வந்து செக் பண்ணுவாங்க.

கார்ல நாங்க ஏறினதும் அழ ஆரம்பிச்சிட்டார்.                                  

அழாதிங்க கண்ணா.. எதுவும் ஆகாது.. அதான் ஹாஸ்பிடல் போறோம்ல..

ஊசி போடுவாங்க..                                                                                     

போடுவாங்க ஆனா பசங்களுக்கு வலிக்காம பாத்துப்பாங்க..                     

என் வயித்த வெட்டப் போறாங்க..                                                       

அதெல்லாம் ஒண்ணும் பயம் இல்லை.. அம்மா வயித்த ரெண்டு தடவை வெட்டித்தானே நீங்க ரெண்டு பேரும் பிறந்தீங்க..                                      

தம்பி.. எனக்கு கூட ஒரு தடவை ஆபரேஷன் பண்ணாங்களே.. மறந்துட்டீங்களா?? அதுவும்  முதலாம் வகுப்பில..                             

அப்பாவுக்கு கூட ரெண்டு தடவை முழங்கால்ல பண்ணாங்களேப்பா.. இப்போல்லாம் லேசர்லவே வயித்த வெட்டாம ட்ரீட்மெண்ட் குடுப்பாங்க தெரியுமா..                                                                                                       

ஆஆஆஆ.. லேசராஆஆஆ.. லேசர் வச்சு சுட்டா நான் செத்துப் போய்டுவேனே..

வேற ஒண்ணும் இல்லைங்க. பசங்களோட அத்தனை கேம்ஸ்லயும் லேசர் வெப்பன்ஸ் வச்சு எதிரிய சுட்டு வீழ்த்துறதா வருதில்லையா.. அவர் பயம் போகட்டும்னு சொன்னது இப்டி ஆயிடிச்சு.. மறுபடி அவர சமாதானம் பண்ணி கார் பார்க் பண்ணிட்டு எல்லாரும் இறங்கினா அவர் இறங்கணுமே.. ஒரு வழியா இறங்க வச்சு எமர்ஜன்சி போணும்னா சிவப்பு லைன பிடிச்சு போங்கனு இருந்தத படிச்சு உள்ள போனோம். டாக்டரோட ரெஃபரல் பாத்து இவர இப்போ எப்டி இருக்குனு கேட்டா வலியா.. எனக்கா.. கிடையவே கிடையாது ரேஞ்சுக்கு பேச ஆரம்பிச்சிட்டார். அவர் பயத்திலதான் அப்டி சொல்றார்னு சொன்னோம். ஒரு மேல் நர்ஸ்தான் வந்தார். “ஹலோ யங் மேன்.. என் பெயர் ஹூல.. உங்க பெயர்”னு ஆரம்பிச்சு பேச்சு குடுத்துக் கிட்டே ஒரு பெட்ல படுக்க வச்சு இன்னொரு ரூமுக்கு கொண்டு போனார். ரூமுக்குள்ள இருந்த அத்தனை  உபகரணங்களும் தன்ன செக் பண்ணத்தான்னு நினைச்சு இன்னமும் அழுகை பெருசாயிடிச்சு. மறுபடி நர்ஸ் தன் பேச்சால வசியம் பண்ணி யூரின் டெஸ்ட் எடுத்தாச்சு. இப்போ ப்ளட். அம்மா கண்ண மறைங்க.. அப்பா கைய்ய பிடிங்கனு சொல்லி ஊசி குத்தியாச்சு. இதோ பாரு உன் ப்ளட் எவ்ளோ அழகா இருக்குனு அவர் சொன்னதும் எட்டிப் பாத்தவர் என்ன இத்தன புட்டில எடுக்கறே?? என் ரத்தம் முழுக்க எடுத்து முடிக்க போறியானு கேட்டு லைட்டா பயத்தோட சிரிச்சார்.

நர்ஸ் “பயந்தா மாதிரி appendicitis இல்ல.. அதுனா வலி ஜாஸ்தி ஆயிட்டே போகும். இது வேற எதுவோ தான்.. பாக்கலாம்.. யூரின் ரிசல்ட் க்ளியரா இருக்கு. ப்ளட் ரிசல்ட் வந்ததும் டாக்டர் வருவார். அது வரைக்கும் நீ ஒரு துளி தண்ணி கூட குடிக்க கூடாது. சமத்தா இருக்கணும். அப்டி எதுனா டவுட்னா உன்ன இன்னைக்கு ஆப்ஸர்வேஷன்ல வச்சிருப்போம். இல்லைன்னா நீ வீட்டுக்கு போலாம்”னார். நான் தனியா இருக்க மாட்டேன் அம்மாவும் என் கூட இருக்கணும்னு மறுபடி அழுகை. மறுபடி சமாதானம் பண்ணிட்டு அப்புறமென்ன.. ரிசல்டுக்கு வெயிட்டிங்தான்.

அழுத களைப்பில அவர் தூங்க ஆரம்பிச்சிட்டார். அம்முவுக்கும் சாமம் ஒரு மணி ஆயிட்டதால கண்ணு சொக்க ஆரம்பிச்சிடுச்சு. கண்ணாளனும் அதே அதே.. 01:50 க்கு டாக்டர் வந்தார். ஒரு வழியா இவர எழுப்பி விட்டோம். இது வரை வந்த ரிசல்ட்ல எந்த ப்ராப்ளமும் இல்லை. மீதி வந்ததும் எதுனா டவுட்னா நாங்க காண்டாக்ட் பண்றோம். மறுபடி வலிக்குதுனு சொன்னார்னா டைரெக்டா இங்க வாங்க. மத்த படி நீங்க இப்போ வீட்டுக்கு போலாம்னு வயித்தில பால வார்த்தார். அப்போதான் எனக்கு நமக்கு வந்த தண்ணீர் சப்ளை ப்ராப்ளம் நினைவுக்கு வந்து சொன்னேன். அதுன்னா டயரியா பிச்சுக்கும். அதான் அதுக்கு முதல் சைன். இவருக்கு வெறும் வலிங்கிறதுனால இது வைரஸ்தான்னு சொன்னார்.

Bilde004

அவர் ஸ்கூல் போகல. நான் லீவ் எடுத்துட்டேன். புதன் டு வெள்ளி.. ராத்திரில வலிச்சா உடனவே அம்மாவ எழுப்புங்கனு சொல்லி எங்க ரூம்லதான் அவர் தூங்கறார்.

 அம்மா..                                                                                                                         

ம்.. என்னடா செல்லம்..                                                                                   

வயித்த வலிக்குதும்மா..                                                                                           

ஓ.. சரி தூங்குங்க.. அம்மா வருடி விடறேன்..                                          (லைட்டா கண்ண திறந்து பார்த்தேன் மணி 03:14. வெள்ளி அதிகாலை)

அம்மா..                                                                                                            

என்னப்பா.. இன்னமும் வலிக்குதா..                                                     

இல்லம்மா.. கொஞ்சம் கோக் சாப்டா சரி ஆகும்னு நினைக்கிறேன்.

கோக்காஆஆ..                                                                                                     

எனக்கு இப்போ சரி ஆயிடிச்சுன்னு நீங்க இன்னைக்கு பூரா கோக் குடுக்கல இல்ல.. அதான் எனக்கு வயித்த வலிக்குதுனு நினைக்கிறேன்..

சரிப்பா எடுத்துட்டு வரேன். கொஞ்சம்தான் குடிக்கணும் ஓக்கேவா..             

ம்ம்..

இப்போ இந்த ரேஞ்ச்ல போயி கிட்டு இருக்கு. இங்க பசங்களுக்கு வயிறு சரியா இல்லைனா கோக் குடுக்கிறது பாட்டி வைத்தியம். எங்களுக்கு சின்ன வயசில சோடா காய்ச்சல்னு ஒண்ணு வரும். மருந்தே இல்லாம அவரவருக்கு பிடிச்ச சோடா சாப்டா அன்னிக்கே சரி ஆய்டும். ஒரு பாட்டிலையும் தனிய்ய்யா அவங்களே சாப்டுறதுதான் பாயிண்டே. அதே கதைதான் இங்கவும் நடக்குது. அம்மு சும்மான்னா விட மாட்டாங்க. தம்பி அழுதது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா ஆயிட்டதால விட்டிருக்காங்க.

என் செல்லங்கள் குறையே இல்லாம ஆளாளுக்கு கலங்க வச்சிட்டாங்க. இப்போ தனக்கு ஹாஸ்பிடல்னா எந்த பயமும் இல்லைனு சொல்ற அளவுக்கு அவருக்கு தைரியம் குடுத்த நர்ஸுக்கு தான் அன்னிக்கு நிறைய நன்றி சொன்னோம். மேல் நர்ஸ் அன்பா பாத்துக்க மாட்டாங்கன்னு எனக்கு இருந்த ஒரு அபிப்பிராயத்த அடியோட மாத்தின அந்த ஹூல..

பங்கக பிங்கோ பாங்கோ.. அதாங்க.. எங்கிருந்தாலும் வாழ்க..

இத எழுதி முடிச்சிட்டு நிம்மதியா தூங்கிட்டேங்க.. வ போ ஞாயிறு போஸ்ட் செஞ்சு உங்க நிம்மதிய குலைக்கலாமேன்னுட்டு. என் மொபைல் திடீர்னு பாடிச்சு.. சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்ததென்னை.. பாட்ட ரசிக்க முடியாம பயத்தோட பார்த்தேன் டிஸ்ப்ளேல புது நம்பர்.. ஏற்கனவே நடுங்கிட்டு இருந்த கையால ஒரு வழியா எடுத்து விழுந்திடாம இறுக்கி பிடிச்சிட்டே சொன்னேன்.. ஹஹஹலோலோ.. வெறும் காத்து தாங்க வந்துது.. மீதி அ டு த் த ப தி வு ல..

வர்ட்டா..

20 நல்லவங்க படிச்சாங்களாம்:

Complan Surya said...

hey

hey

hey

am the first..

erunga poi porumia padithuvitu

comments podren..

eppudi...

varatta....

complan surya

Chitra said...

எல்லோரும் எப்படி இருக்கீங்க? சுகமா? :-)

தமிழ் பிரியன் said...

யாவரும் நலம்ன்னு போட்டுக்கிட்டு அப்பப்ப எல்லாரையும் பயமுறுத்துறீங்களே?... நியாயமா?.. ;-)

*இயற்கை ராஜி* said...

ஓ..சோடாக் காய்ச்சலா.. புதுசா இருக்கே..

டேக் கேர்

கார்க்கி said...

பத்திரமா பார்த்துக்கோங்க மேடம்..

கோபிநாத் said...

இப்போ எப்படி இருக்கார் குட்டி மாப்பி!?

அனைவரும் கனமாகவும் நலமாகவும் இருங்க.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பகிர்வுக்கு நன்றி ! தொடருங்கள் . மீண்டும் வருவேன் .

ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியனை வழிமொழிகிறேன்.

சுசி said...

சூர்யா.. இவ்ளோ பொறுமையாவா படிப்பீங்க..

> > > > >

இப்போ சுகமா இருக்கோம் சித்ரா.

> > > > >

தமிழ் பிரியன்..
வாஸ்து சரியில்லயோ?? நல்ல ஜோசியர் இருந்தா சொல்லுங்களேன்.

சுசி said...

ஹிஹிஹி.. நன்றி இயற்கை.

> > > > >

யார பாத்துக்க சொல்றீங்க கார்க்கி??

> > > > >

இப்போ நலமா இருக்கார் கோபி.
//அனைவரும் கனமாகவும்//
எப்டி?? ஒரு 150kg கனம் ஓக்கேவா??

சுசி said...

வாங்க சங்கர்.

> > > > >

அக்கா.. என்ன செய்ய.. வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்வாங்க.
அது போல இருக்கு என் நிலமை :))))

LK said...

இப்பொழுது குழந்தைகள் இருவரும் நலம்தானே? நீங்களும் அண்ணனும் நலம்தானே?

seemangani said...

ஆண்டவனே சோடாக் காய்ச்சலா... இந்த காயிச்சல் என் அக்காக்கு அடிக்கடி வரும் அப்படியே எனக்கும் வைத்தியம் கிடைக்கும்...சில நேரம் எனக்காகவே அக்காக்கு இந்த காயிச்சல் வரும் அடுத்த அதிர்வுக்காய் காத்திருக்கிறேன்...இப்போவே லைட்டா வலிக்குது...

Complan Surya said...

...இப்போவே லைட்டா வலிக்குது...---தகுந்த டாக்டரை பார்க்கவும் --போலிகளை கண்டு .... திரு .மணி

அப்பரும் எழுத்துக்கூட்டி படிக்கணும் அதன் கொஞ்சம் லேட் ஆய்ட்டுங்க..

susima குடும்பத்தினர் நலமாய் இருக்க இறைவனை எங்கள் சங்கம் வேண்டிகொள்கிறது..

பதிவு என்று சொல்வதை விட நிகழ்வை
சொல்லி இருக்கீறீங்க..

நன்றி
வாழ்க வளமுடன்
வருத்த படாத வசிப்போர் சங்கம்
செயலாளர்
காம்ப்ளான் சூர்யா.

சுசி said...

எல்லாரும் நலம் LK.

> > > > >

ஹிஹிஹி.. இருங்க சீமான்.. எப்டியும் இந்த வருஷத்துக்குள்ள எழுதிடுவேன்.

> > > > >

வேண்டுதலுக்கு நன்றி சூர்யா.

பித்தனின் வாக்கு said...

என்ன சுசி, குண்டு மேல குண்டாய் போடுகின்றாய். பசங்களுக்கு கோக் குடிக்க பழக்கி வைத்துள்ளாய்யா? அமெரிக்கா,இந்தியாவில் எல்லாம் தூக்கிக் காடாசும் அதை ஏன் பழக்கப் படுத்துகின்றீர்கள், மெல்ல நல்லதா ஒரு பாணம் குடீக்கப் பழக்கவும்.

சோடாக் காய்ச்சல் புதுசா இருக்கு. எனக்கு சாப்பிட்டவுடன் சோடா வயித்து வலி வரும், பன்னீர் சோடா சாப்பிட்டவுடன் சரியாகி விடும்.

பார்த்தும்மா, இப்ப எப்படி இருக்கான். கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

தியாவின் பேனா said...

நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.

நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.

பித்தனின் வாக்கு said...

சுசி, இப்ப சது எப்படி உள்ளான்? பெண்ணும் நலமா? அவருக்கும், உங்களுக்கும்,குழந்தைகளுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். முடிஞ்சா நம்ம கடைப்பக்கம் வந்து திட்டிட்டுப் போம்மா.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in