Pages

  • RSS

15 September, 2009

அவரும் நானும்....

எல்லோரும் நலம்தானா ?

நானும் நலமே.


நான் பதிவு எழுத ஆரம்பிச்சதில இருந்து இந்த குணாவுக்கு என் மேல ரொம்ப பொறாமை வந்திடுச்சுங்க. என் எழுத்துத் திறமை என்னை உலகளாவிய ரீதியில் பிரபலம் ஆக்கியிருப்பது அவருக்கு பொறுக்கலை. விடுங்க விடுங்க. பிரபலமானா சில பல பிரச்சனைகள், போட்டி பொறாமைகள் வந்துதானே தீரும்.


வாரம் ஒரு பதிவு போடவே நான் படற கஷ்டம் அவருக்கு எங்க புரியப் போது. சும்மா அத படிக்கிற உங்க கஷ்டத்த பத்தி மட்டுமே பேசினா எப்டி? நானும் எதோ கொஞ்சம் மனசாட்சி உள்ளவங்கிரதாலதானே தினமும் எழுதலை. அநியாயத்துக்கு என் மேல குத்தம் சொல்ல கூடாதில்லையா.


அது மட்டுமா பொட்டி முன்னாடி உக்காந்தா போதும். அப்போதான் அவருக்கும் பசங்களுக்கும் நான் ஒருத்தி வீட்ல இருக்கேங்குற ஞாபகம் வரும். அம்மா அது, சுசி இதுன்னு எத்தனை தடங்கல்.. இதையெல்லாம் தாண்டி நான் எழுதுரத்துக்குள்ள எழுத வந்த விஷயம் மறந்து போய்டும். அது யாரது இல்லேன்னா மட்டும்னு இப்போ நினைச்சது? ஓ என் மனசாட்சியா...


இந்த சண்டே ஒரு பர்த்டே பார்ட்டி போயிருந்தோம். பெரும்பாலும் பேச்சு என்னை சுத்தியே இருக்க ரெண்டு காரணங்கள். ஒண்ணு கேக் ஐசிங் செஞ்சது நான். அதுக்கு சீரியஸா முகத்த வச்சுக் கிட்டு என்னமோ தான்தான் செஞ்சா மாதிரி குணா குடுத்த பில்டப்புல நீங்களும் இருக்கீங்களேன்னு சில மனைவியர் கணவன்மாரை கடும் பார்வை பாத்துக்கிட்டாங்க. நான் குணாவ கொடும் பார்வை பார்த்தது வேற விஷயம்.

அடுத்தது நான் இளைச்சுட்டேனாம். டாக்டர பாத்தீங்களா, டயட்ல இருக்கீங்களா, ஏதாவது பிரச்சனையா இப்டீன்னு ஏகப்பட்ட கேள்விகள். என் மேல அவங்களுக்கு இருந்த அக்கறைய பாத்து எனக்கு அழுகையே வந்துடிச்சு. குணா கிட்ட கேட்டப்போ அவளுக்கு புதுசா இப்போ ஒரு வெட்டி வேலை கிடைச்சிருக்கு அதான்னு சொல்லிட்டு சரிதானேங்கிற மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்தார்.. நான் சொன்னேன் இல்லை எனக்கு கவலைகள் சிலதிருக்கு அதான்னு. அது சொ.செ.சூ ஆயிடிச்சு. நிஜம்தாங்க, பாவம். இத்தனை நாள் என்ன கொடுமைப்படுத்தினது அவளுக்கு பெருசா தோணலை. ஆனா இப்போ ஒட்டுமொத்த பதிவுலகத்தையே கொடுமைப்படுத்தும்போது அவளுக்கு கவலையா இருக்குன்னார். இது ரொம்ப ஓவரு. என் பதிவை அவ்ளோ பேர் படிக்கிறதில்லைன்னு எனக்கு தெரியாதா என்ன.ஏங்க அவ்ளோ கொடுமையாவா இருக்கு நான் எழுதுறது????

என்னமோ போங்க. இத கேட்டத்துக்கு அப்புறம் இனி நாளுக்கொரு பதிவு போடலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். பாக்கலாம்.

மீண்டும் சந்திக்கிறேன் ஒரு நல்ல முடிவுடன்.

21 நல்லவங்க படிச்சாங்களாம்:

ராமலக்ஷ்மி said...

சும்மா ஒரு கலாட்டாதானே! பெரிசு பண்ணாம எழுதுங்க:)! Cheer up!

கோபிநாத் said...

\\என்னமோ போங்க. இத கேட்டத்துக்கு அப்புறம் இனி நாளுக்கொரு பதிவு போடலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். பாக்கலாம்.
\\

அவ்வ்வ்வ்வ்வவ்...அக்கா உங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட கொலைவெறி யோசனை எல்லாம் வருது...தப்புக்கா...மகா தப்பு !

thiyaa said...

நல்ல சுகம்

கார்க்கிபவா said...

//அப்புறம் இனி நாளுக்கொரு பதிவு போடலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். பாக்கலாம்.//

ஆண்டவா!!! எங்களுக்கு ஏன் இப்படி ஒரு சோகம்? காப்பாது தாயே..!!!!!1

என்னது? இளைச்சிட்டிஙக்ளா? சுசி, நீங்க எப்போ குண்டானிங்க? அவங்க கிடக்கறாங்க..

சுசி said...

நன்றி ராமலக்ஷ்மி அக்கா.
வெற்றியோடு சீக்கிரம் வாங்க.


நோ நோ.. அழக் கூடாது கோபி. யோசனைதானே... முடிவு இல்லையே :)))


முதல் வருகைக்கு நன்றி தியா.

கார்க்கிபவா said...

:)))))

சுசி said...

கார்க்கி! உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததுனால அவர் கூட உங்கள காப்பாத்த முடியாது..

அநேக பெண்களைப் போல கல்யாணத்துக்கு அப்புறம் குண்டாயிட்டேன் .. :)))

நேசமித்ரன் said...

\\என்னமோ போங்க. இத கேட்டத்துக்கு அப்புறம் இனி நாளுக்கொரு பதிவு போடலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். பாக்கலாம்.
\\
ரிபீடிங் டாக்டர்

கலையரசன் said...

ஏன் திடீர்ன்னு இந்த சோக முடிவு?
(இது எங்களுக்கான சோகம்!!)
:-))

Admin said...

\\என்னமோ போங்க. இத கேட்டத்துக்கு அப்புறம் இனி நாளுக்கொரு பதிவு போடலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். பாக்கலாம்.
\\

என்ன கொடுமை இது..... கடவுளே எங்களைக் காப்பாத்து.....

Admin said...

உங்கள் வலைப்பதிவுகள் புலம்பெயர்ந்த இலங்கை வலைப்பதிவர்களைத் திரட்டும் சொந்தங்கள் வலைப்பதிவிலே இணைக்கப்பட்டுள்ளது.



www.sonthankal.blogspot.com

சுசி said...

நீங்களுமா நேசமித்ரன்...:))


கலையரசன் டெம்ப்ளேட்ல புதுஸ்ஸா படமெல்லாம் போட்டு சந்தோஷமா இருக்கார்னு ப்ளாக்காண்டவர் சொன்னார் கலை.. அதான்!


கடவுளுக்கு நிறைய வேலை இருக்கு சந்ரு...:)) நன்றி சந்ரு.

ப்ரியமுடன் வசந்த் said...

// இனி நாளுக்கொரு பதிவு போடலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். பாக்கலாம்.//

கிளம்பிட்டீகளா

ரைட்டு

வாழ்த்துக்கள் உங்களுக்கு

அப்ப எங்களுக்கு?

:)

Anonymous said...

//என் எழுத்துத் திறமை என்னை உலகளாவிய ரீதியில் பிரபலம் ஆக்கியிருப்பது அவருக்கு பொறுக்கலை. //

ஹிஹி, எல்லா ரங்கமணிகளும் அப்படித்தான். வேணும்னா நீங்களும் எழுதுங்கன்னு சொல்லிப்பாத்தாச்சு. எல்லாம் பொறாமை புடுச்சவங்க.

Anonymous said...

//அநேக பெண்களைப் போல கல்யாணத்துக்கு அப்புறம் குண்டாயிட்டேன் //

நமக்கு தொப்பைதான் போடுதுங்க :( எக்ஸர்ஸைல்லாம் யாரு செய்யறது.

இது நம்ம ஆளு said...

பிரபலமானா சில பல பிரச்சனைகள், போட்டி பொறாமைகள் வந்துதானே தீரும்.
:)
:)

Anonymous said...

//பிரபலமானா சில பல பிரச்சனைகள், போட்டி பொறாமைகள் வந்துதானே தீரும்//



ஆமா..ஆமா..ஆமா..


//வாரம் ஒரு பதிவு போடவே நான் படற கஷ்டம் அவருக்கு எங்க புரியப் போது.//



அதுசரி..


//குணாவ கொடும் பார்வை பார்த்தது வேற விஷயம்.//



ஹி..ஹி..ஹி...


//என்னமோ போங்க. இத கேட்டத்துக்கு அப்புறம் இனி நாளுக்கொரு பதிவு போடலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். பாக்கலாம்.//



:((((



அன்புடன்,

அம்மு.

சுசி said...

உங்களுக்கா வசந்த்.. ஆழ்ந்த அனுதாபங்கள்... :))


சரியா சொன்னீங்க அம்மணி.. பொறாமை தொப்பை ரெண்டுக்கும் சொன்னேன்... ஹிஹி ஹி..


வாங்க ராம்... ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க... நான் அப்பப்போ வைகை போய் பாத்துட்டுதான் இருக்கேன். வயல் இன்னும் விளையலையா???


நன்றி பாரதியாரே.. சிரிப்புக்கு..


முதல் வருகைக்கு நன்றி அம்மு.. வந்ததுமே பயந்திட்டீங்களா? அப்டீல்லாம் போடமாட்டேன்.

அறிவிலி said...

//மீண்டும் சந்திக்கிறேன் ஒரு நல்ல முடிவுடன். //

இடுகை போட்டு 6 நாள் ஆச்சு, நல்ல முடிவாத்தான் எடுத்துருக்கீங்க போல.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி அறிவிலி...

வேற வழி... மக்கள் ரொம்ப பயப்படராங்கங்க...

பித்தனின் வாக்கு said...

/ அடுத்தது நான் இளைச்சுட்டேனாம். டாக்டர பாத்தீங்களா, டயட்ல இருக்கீங்களா, ஏதாவது பிரச்சனையா இப்டீன்னு ஏகப்பட்ட கேள்விகள். //

அய்யோ!! என்பத்திஜந்து கிலோல இருந்து எழுபத்தி ஜந்துக்கு வந்துட்டிங்களா?
// நிஜம்தாங்க, பாவம். இத்தனை நாள் என்ன கொடுமைப்படுத்தினது அவளுக்கு பெருசா தோணலை. ஆனா இப்போ ஒட்டுமொத்த பதிவுலகத்தையே கொடுமைப்படுத்தும்போது //

அவரு ரொம்ப நல்லவருங்க, உன்மைய சொல்லியிருக்காரு, அந்த தைரியத்தை நான் பாராட்டுறன்.