Pages

  • RSS

04 September, 2009

விருதும் வாழ்த்தும்...

நலமா உறவுகளே... நானும் நலமே.







பாத்தீங்களா வருஸ்ஸையா மூணு விருதுங்க. அத எல்லாருக்கும் பிரிச்சுக் குடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில நான் இருக்கேன். பணமுடிப்பு, பொற்கிளின்னா விஷயம் வேற.

முதலில் எனக்கு பட்டாம் பூச்சி விருதை தந்த கார்த்திகேயனுக்கும், சுவாரஸ்ய பதிவர் விருது தந்த காயத்ரிக்கும், நட்பு வட்டத்துக்குள் என்னையும் சேர்த்துக் கொண்ட வசந்துக்கும் நிறைய நன்றிகள்.

இதில் பட்டாம்பூச்சி விருதை
இது நம்ம ஆளு பாரதியார்
இவங்களுக்கு குடுத்துடுறேன்.

சுவாரஸ்ய பதிவர் விருதை
சாளரம் கார்க்கி
வடலூரான் கலையரசன்
தமிழ்த்துளி டாக்டர் தேவா
இவங்களுக்கு குடுத்திடுறேன்.

அடுத்துதான் ரொம்ப கஷ்டம். கரெக்டா பத்து ஃப்ரென்ட்ஸ சொல்லணுமாம். இருந்தாலும் என் ஃப்ரெண்ட்ஸ் உங்க ஃ ப்ரெண்ட்ஸ், உங்க ஃப்ரெண்ட்ஸ் என் ஃப்ரெண்ட்ஸ், அவங்க ஃப்ரெண்ட்ஸ் நம்ம ஃப்ரெண்ட்ஸ்னு சுருக்கமா சொன்னா எல்லாருமே ஃப்ரெண்ட்ஸ்தான் இல்லையா.
இது நம்ம ஆளு பாரதியார்
இது என்னோட இடம். தமிழ்பிரியன்
சாளரம் கார்க்கி

இவங்களோட என் பதிவை படிக்கிற எல்லாருமே என் நண்பர்கள்தான்.
ஆணிய புடுங்கிகிட்டே பதிவையும் எழுதுறதால நட்பு சம்பந்தமான பாட்டோ படமோ போட முடியலை. உங்களுக்கு பிடிச்ச பாட்டை நீங்களே ஒரு வாட்டி பாடிக்குங்க. ஆஃபீஸ்ல செக்யூரிட்டி சிஸ்டம் ரொம்ப மோசம். நெட் அக்செஸ் குடுக்காம ஒரு பதிவரோட வளர்ச்சிக்கு தடையா எவ்ளோ அநியாயம் பண்றாங்க பாத்தீங்களா?

அடுத்ததா வாழ்த்து.... என் கூட ஃபோன்ல ரொம்ப அட்டகாசம் பண்ணிட்டு இருக்கிற ரெண்டு பேருக்கு.
ஒருத்தர் பெரியண்ணனோட மூணாவது வாரிசு ஊர்ல இருக்கார். கொஞ்சம் சாது. என்கிட்டே அப்பா பூஷு ம்மா பப்புன்னு கொஞ்ச நேரம் சமத்தா பேசிட்டு போய்ட்டே இருப்பார்.

அடுத்தவர் கானடால இருக்கார். அக்காவோட மூணாவது வாரிசு. ரொம்ப வாலு. அப்பப்போ குடும்ப உறப்பினர்கள் இவரால வீங்கின தலையோட அலைய வேண்டியதிருக்கு. எது கிடைச்சாலும் எடுத்து அடுத்தவங்க மண்டை மேலேயே அடிக்கிறது இவர் ஸ்டைல். நான் பேசும்போது மட்டும் கண்ணை விரிச்சுக் கிட்டே கேட்டுட்டு இருப்பாராம். அம்மாவோ அக்காவோ பேசுடி கேட்டுட்டே இருக்கார்னு அப்பப்போ சொல்லலேன்னா அவர் லைன்ல இருக்காரான்னே தெரியாது. எனக்கென்னமோ சித்தி கிட்ட பேச வச்சிடுவேன்னு சொல்லி அவர அக்கா மிரட்டி வச்சிருக்காளோன்னு லைட்டா டவுட்டு.

இருந்தாலும் எப்ப பாத்தாலும் ஷித்தி ஷித்தின்னே அவர் சொல்லிட்டு இருக்கிறதுல அக்கா ரொம்பக் கடுப்பிலேயும் மாமா அதீத ஆனந்தத்திலேயும் இருக்கிறதா தகவல்.

செல்லக் கண்ணன்கள் ரெண்டுக்கும் இந்த மாசம் ஒரு வயசு ஆகுதுங்க. அவங்க என்னிக்குமே சந்தோஷமா நீடூழி வாழணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.

அப்புறம் என்ன. அடுத்த பதிவில உங்க எல்லாரையும் சந்திக்கிறேன். அது வரை நலமா இருங்க.

20 நல்லவங்க படிச்சாங்களாம்:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

தங்களுக்கும்

மற்றும்

அனைவருக்கும்.

கலையரசன் said...

நன்றி டாக்டர் சுசி!!
:-)
ஊசியில்லாம, டானிக் மட்டும் குடிச்ச மாதிரி இருக்கு... விருது வழங்கிற வரிசைல என்னையும் ஞாபகம் வச்சு சேர்த்ததற்க்கு!!

விருது பெற்ற மற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

கோபிநாத் said...

விருதுக்கு மிக்க நன்றிக்கா ;))

இருக்குற இத்தனை பேஷண்ட்ஸ்களில் இந்த பேஷண்டையும் ஞாபகத்துல வச்சி கொடுத்தமைக்கு ;))

குட்டிஸ் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

ப்ரியமுடன் வசந்த் said...

டாக்டர் எனக்கு டாக்டர் விருதுதான் வேணும்

வாழ்த்துக்கள் சுசி

சுசி said...

முதல்ல எல்லா ஃப்ரெண்ட்ஸ் கிட்டயும் ஒரு பெரிய சாரி கேட்டுக்கறேன்..
கொஞ்சூண்டு பிசியா இருந்ததால முறைப்படி உங்க பதிவில வந்து விருது பத்தி சொல்ல முடியலை. நீங்க உண்மையான நண்பர்கள்தாங்கிரத நிரூபிச்சிட்டீங்க. பெருமையா இருக்கு.
ரொம்ப நன்றி.

சுசி said...

நன்றி ஜமால்.கற்போம் வாருங்கள் புதுசா எழுத ஆரம்பிச்சிட்டீங்களா என்ன? வந்து படிக்கிறேன்.

நன்றி கலை.டானிக் குடிச்சு தெம்பாயிட்டீங்களா? கிளம்புங்க கிளம்புங்க மன்ற வேலைகள் நிறைய இருக்கு.கொலை வெறி ரசிகரான நீங்கதான் மன்றத்தோட கொபசென்னு தலைவி முடிவு பண்ணிட்டேன் :))))))

முதல் வருகைக்கு நன்றி சந்தான சங்கர். வித்தியாசமான அழைப்பிதழ். கட்டாயம் வந்து எழுதிட்டு நிக்காம செல்லுகிறேன் :))

நன்றி கோபிநாத். விருத மத்தவங்களுக்கு கொடுக்கற சாக்கிலயாவது ஒரு பதிவ போடுங்களேம்பா. குட்டீசுக்கு வாழ்த்தை கன்வே பண்ணிடறேன்.

இவ்ளோதானே வசந்த். தாரளமா குடுத்திடறேன். இன்னையில இருந்து நீங்களும் (போலி)டாக்டர் வசந்த் என அழைக்கக் கடவீர்களாக.

நேசமித்ரன் said...

மிக்க நன்றி உங்களின் பேரன்பிற்கும் தொடர்ந்துதரும் உற்சாகமூட்டும் சொற்களுக்கும் இந்த இரண்டு விருதுகளுக்கும்

உங்களின் இரண்டு குட்டீசுக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும்

நேசமித்ரன் said...
This comment has been removed by the author.
நேசமித்ரன் said...
This comment has been removed by the author.
சுசி said...

நன்றி நேசமித்ரன்.
குட்டீசுக்கு உங்க வாழ்த்துக்களை சொல்லியாச்சு.
உங்க கவிதைக்கு இதெல்லாம் ஈடாகுமா என்ன...

லோகு said...

மிக்க நன்றி..

நானும் அவார்டு வாங்கிட்டேன்.. நானும் ரௌடி தான் ..

கார்க்கிபவா said...

romba thanks madam...

:))))

சுசி said...

பாத்து லோகு.
என்கவுண்டர்ல போட்டுடப் போறாங்க :)))

சுசி said...

நன்றி கார்க்கி :))))))

Anonymous said...

போலி டாக்டர், உங்க இவ்வளவு வேலைகளுக்கு நடுல நம்மளையும் , அன்போட ப்ரெண்டாக்குனதுக்கு நன்றி.

சுந்தர் said...

விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் .

இது நம்ம ஆளு said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.

விருது பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி..

செல்லக் கண்ணன்கள் ரெண்டுக்கும் இந்த மாசம் ஒரு வயசு ஆகுதுங்க. அவங்க என்னிக்குமே சந்தோஷமா நீடூழி வாழணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.

சுசி said...

உங்க நட்பு கிடைச்சுது ரொம்ப சந்தோஷம் அம்மணி.


நன்றி சுந்தர்.


நன்றி பாரதியார்.

Admin said...

உங்கள் விருதுக்கு எனது நன்றிகள்

உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்

சுசி said...

நன்றி சந்ரு. பரிசு எடுத்தாச்சு.