Pages

  • RSS

12 August, 2009

லண்டன் ரிட்டர்ன்.....

நல்லா இருக்கீங்களா நல்லவர்களே?

நான் வந்துட்டன். வந்துட்டன். வந்துட்டன். அலறிக்கிட்டே வந்துட்டன். ஏன்னு தொடர்ந்து படீங்க பதிவுலக வழக்கப்படி கடைசீல சொல்றேன்.

சீட் நம்பர் பாத்ததுமே நாலு பேர் கொண்ட குடும்பம் பிரிஞ்சு உக்கார வேண்டிய சோதனை உருவாச்சு. போகும்போது அப்பா கூட வரும்போது அம்மா கூடன்னு குட்டீஸ் எடுத்த முடிவு செயலாச்சு. என் கெட்ட + குணாவோட நல்ல நேரம் என் பக்கத்தில ஒரு வயதான தம்பதி. குட்டிக் கைகளோட திடீர்னு பெரிய கையும் பின்னாடி இருந்து சேட்டை பண்ண ஆரம்பிக்க சிரிச்சு கிட்டே ஆன்டி என் கூட பேச ஆரம்பிச்சாங்க. அப்புறமென்ன சுசி ஜாலியா பீட்டர் மொக்கைய ஆரம்பிச்சுட்டா.

குணா தம்பி வீட்லதான் டேரா. ரெண்டு வருஷமாச்சு பாத்து. அண்ணன் குடும்பத்த பாக்காத கவலேல பாவம் ரொம்ப குண்டாயிட்டாரு. வைஃப் உண்டாயிருக்காங்க. குணாவுக்கு அவ்ளோ கொண்டாட்டம். சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ எல்லாம் பாரபட்சமே இல்லாம தம்பிய வாரிக்கிட்டே இருந்தாரு.

நல்லவங்க போற ஊர்ல எல்லாம் மழை பெய்யும்கிரதுக்கு சரியா ஒரே மழை. பசங்களுக்கு டபுள் கூத்து நனைஞ்சு கிட்டே ஊர் சுத்தரோம்னு. நான்தான் கொஞ்சம் எடை குறைஞ்சு போய்ட்டேன். என்னங்க? புரியலையா? நான்தான் குணாவோட சர்க்கரைக்கட்டி,பசங்களோட sweet அம்மா.. சரி விட்டுர்றேன், படிக்கிறத விட்ராதீங்க.

Big Ben முன்னாடி ஃ போட்டோ புடிச்சோம், London Eye இல ஒரு சுத்து வந்தோம், Madame Tussauds போய் வெளிய வர்றதுக்குள்ள போதும்னு ஆயிடிச்சு. ஆளாளுக்கு எப்டி இருக்கே சுசி, ஏன் ரெண்டு வருஷமா வரலைன்னு பேச ஆரம்பிச்சா எப்டீங்க விட்டுட்டு வர முடியும்? இந்த ஆஞ்சலீனா ஜூலிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. ஒரு வேளை பிராட் பிட் எங்கிட்ட ரொம்ப நேரம் பேசினது பிடிக்கலையோ என்னமோ. Bluewater Shopping Centre ல சுத்தினோம். OLD TRAFFORD Manchester United football club stadium + museum பார்த்தது ஒரு வித்யாசமான அனுபவம். அதுவும் குணா டீமோட பரம சப்போட்டர் வேற. ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. இடையில சிலபல நண்பர்கள், உறவினர்கள சந்திச்சோம். Birmingham பாலாஜி கோயில் போனப்போ சுமங்கலி பூஜை நடந்துட்டு இருந்துச்சு. நான் வேற மாடர்ன் சுமங்கலியா போய் நின்னுட்டன்.. மாமா பையன் என்னக்கா இன்னைக்குன்னு இப்டி பப்பரப்பான்னு வந்து நிக்கறேன்னு வார ஆரம்பிச்சுட்டான்.

அவன பத்தி சொல்ல மறந்துட்டேன். பத்து வருஷத்துக்கு அப்புறம் சந்திச்சோம். ஆளும் அறிவும் வளர்ந்தாலும் இப்பவும் என்னோட அதே குட்டி மச்சான்தான். பசங்களும் நல்லாவே ஒட்டிக் கிட்டாங்க. கொழுந்தனார் இருக்கிறது சிட்டிக்கு ரொம்ப வெளிய. அதனால நினைச்சாப்ல ரெஸ்டாரன்ட்ல கொட்டிக்க முடியல. நானும் அவனும்தான் சமையல். மழைக்கு சூடா அவிச்ச வேர்க் கடலை சாப்டா நல்லா இருக்கும்டான்னு சொன்னதுக்கு காய வச்சு உடைச்ச வேர்க் கடலை வாங்கி ஒருநாள் பூரா ஊற வச்சு அவிச்சீங்கன்னா அவிச்ச வேர்க் கடலை உடைச்சு சாப்டுற கஷ்டம் இல்லாம கிடைக்கும்னு சிலபல பாச்சிலர் டிப்சும் குடுத்தான். வரும்போது ஏர்போர்ட்ல பார்க்க ரொம்ப பாவமா இருந்துது. அடிக்கடி வாங்கக்கான்னு சொல்லும்போதே கண்ணு கலங்கிடிச்சு. வெளிநாடு, தனிமை.. பாவம்....

Theme Park • Alton Towers என்னைய அலற வைச்ச இடம். ஒரு Oak மரம், சூனியக்காரி, 200 வருஷம் முந்தின கதைன்னு சொல்லி உள்ள கூட்டிட்டுப் போனா அங்க எதோ எல்லாம் இப்போ நடக்கிராப்ல இருக்கு. அந்த இருட்டும் மணமும் இன்னும் நினைவில இருக்கு. ஹைலைட்டா ஒரு பெஞ்சு மேல உக்கார வச்சு குறுக்க கம்பியபோட்டு எந்திரிச்சு ஓட முடியாம இறுக்கிட்டு ஃபுல்லா ரெண்டு மூணு சுத்து. தலைகீழா நிக்கும்போது அந்த சூனியக்காரியோட சிவப்பு கண்கள், பேய் சிரிப்புன்னு, நல்ல வேளை நானும் ஜூனியரும் அலறினது யாருக்கும் கேக்கலை. வேர்த்து விறுவிறுத்து வெளிய வந்தப்போ பொண்ணு ரொம்ப ஜாலியா இருந்துச்சும்மா இன்னொரு வாட்டி போலாமான்னா.
சுசி #%&%#¤%&...
குணா தம்பி எனக்கு அப்பவே தெரியும் அண்ணி உள்ள கொண்டு போயி கத்தக் கூட வழியில்லாம என்னமோ பண்ணப் போறாங்கன்னு. நீங்களே போகும்போது நா எப்டி ஜகா வாங்குரதுன்னுதான் வந்தேன்னார்.

வரும்போது நெறைய சாக்லேட் வாங்க நான் விடலைன்னு என்னைய மறுபடி தனிய விட்டுட்டாங்க. ஜன்னலாண்டை ஒரு அக்கா, நடுவ காலி சீட், கரையில நான். என்னடா இப்டி ஆச்சேன்னு பாத்தா ராஜேந்தர் சிங்க்னு ஒரு விமானப் பணி ஆண். ஜன்னலக்கா அடிக்கடி உதவிக்கு கூப்டதால.. அது என்னமோ சொல்வாங்களே நெல்லுக்கு இறைத்தன்னு...

அப்புறம் சாக்லேட்லாம் கேட்டு அடம் பிடிக்கக் கூடாது. உங்க பல்லுக் கெட நான் விடுவனா?. பின்னூட்டத்த ஒழுங்கா போட்டுட்டு சமத்தா அவங்க அவங்க வேலையப் பாருங்க.

மறுபடி சந்திக்கலாம்.

அ.. வர்ட்டா...

இப்போ ஆரம்பிச்சாதான் அடுத்த பதிவை இதவிட பெருஸ்ஸா போட முடியும்....

12 நல்லவங்க படிச்சாங்களாம்:

நட்புடன் ஜமால் said...

பின்னூட்டத்த ஒழுங்கா போட்டுட்டு சமத்தா அவங்க அவங்க வேலையப் பாருங்க.]]


சரி தாயீ.

கார்க்கிபவா said...

உங்கள பார்த்துட்டு சூன்யக்காரி கத்தின சத்தம் எனக்கே கேட்டுச்சுங்க..

Thamiz Priyan said...

Welcome back!

இது நம்ம ஆளு said...

அப்புறமென்ன சுசி ஜாலியா பீட்டர் மொக்கைய ஆரம்பிச்சுட்டா.

நல்லவங்க போற ஊர்ல எல்லாம் மழை பெய்யும்கிரதுக்கு சரியா ஒரே மழை

நான்தான் கொஞ்சம் எடை குறைஞ்சு போய்ட்டேன்

வரும்போது ஏர்போர்ட்ல பார்க்க ரொம்ப பாவமா இருந்துது. அடிக்கடி வாங்கக்கான்னு சொல்லும்போதே கண்ணு கலங்கிடிச்சு. வெளிநாடு, தனிமை.. பாவம்....


அப்புறம் சாக்லேட்லாம் கேட்டு அடம் பிடிக்கக் கூடாது. உங்க பல்லுக் கெட நான் விடுவனா?. பின்னூட்டத்த ஒழுங்கா போட்டுட்டு சமத்தா அவங்க அவங்க வேலையப் பாருங்க.

எப்படி இப்புடி

கோபிநாத் said...

வாங்க வாங்க...

செம ஜாலியக்கா...ம்ம்..இன்னும் இருக்கா!!?

கலையரசன் said...

சும்மாயிருந்த என்னை இப்ப.. வயிதெரிச்சலை கிளப்பிட்டீங்க சுசி..
பின்னே.. என்னை விட்டுட்டு போயிட்டீங்களே!

பதிவர் நண்பருக்கு உதவிடுவோம்!!

http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html

நேசமித்ரன் said...

வாங்க டாக்டரம்மா
ஏர்போர்ட் கெடுபிடி காச்சல் விவகாரம் எல்லாம் ஒன்னும் இல்லாம பத்திரமா திரும்பி வந்ததுக்கு வாழ்த்துக்கள்
போட்டோ கீட்டோ இல்லையா ?
அந்த சூனியக் காரி மேட்டர் நல்லா இருந்துச்சு..
நல்லா பயந்தீங்களா ?
ஹி ஹி

Admin said...

பயணம் தொடர் பதிவா போட்டா நாங்க எல்லோரும் பதிவுலக விட்டு ஓட வசதியா இருக்குமே...

சுசி said...

ரொம்ப சமத்து ஜமால்.

கடவுள் கிருபையால நீங்க என்னப் பாக்கக் கூடாதுன்னு வேண்டிக்குங்க கார்க்கி. இதுதான் உறவின் குரல் என்கிறதா? கரீட்டா உங்க காதுல விழுந்திருக்கு...

ஓஹோ இதுதான் நீங்க சொன்னா கமண்டா தமிழ் பிரியன்?? உருப்படும்...

எப்படியோ இப்படி பாரதியாரே....

இருக்கு... ஆனா இல்லை கோபிநாத்.

அடுத்த தடவை போற இடத்த முன்னாடியே சொல்றேன். அக்கா குடும்பத்துக்கும் சேர்த்து டிக்கட்ட எடுத்துக் கிட்டு வந்திடுங்க கலை தம்பி...

நன்றி நேசமித்ரன். இன்னமும் பயம் மிச்சமிருக்குன்னா பாத்துக்கோங்களேன்.

அவ்ளோ சீக்கிரம் தப்பிக்க முடியாது சந்ரு.

சொல்லரசன் said...

//நல்லவங்க போற ஊர்ல எல்லாம் மழை பெய்யும்கிரதுக்கு சரியா ஒரே மழை.//

உண்மையில் நீங்க நல்லவங்கதான்.

//Big Ben முன்னாடி ஃ போட்டோ புடிச்சோம், //

போட்டோவை போட்டுயிருக்கலாம்.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்கீங்களா ?

வந்தாச்சுல்ல அப்பறமென்ன பீட்டரக்கா கலக்குங்க...

சுசி said...

நன்றி சொல்லரசன். நான் நல்லவங்கரதுனாலதான் போடலை. மக்கள் பாவம் இல்ல...

நல்லா இருக்கேன் வசந்த். உங்க அளவுக்கு என்னால கலக்க முடியாது.