Pages

  • RSS

27 June, 2009

மழை விட்டும் தூறல் நிக்கல...

என்னப்பா! எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
சுசி மட்டும் நல்லாவே இல்லீங்க. இப்போதான் ஒருபடியா கொஞ்சம் தேறி இருக்கேன். சுசிக்கு பேஸ்மென்ட் மட்டும் இல்லீங்க, பில்டிங்கும் வீக்கு. அவ்ளோ சுலபமா சுசி சீக்காளி ஆனதில்ல. எப்பவாச்சும் ஜலதோஷம் அட்டன்ச போட்டுக்கும். இந்த வாட்டி கொஞ்சம் ஜாஸ்தி ஆய்டிச்சு. பல நோய்கள் கைகோத்துகிட்டு ஒரே சமயத்துல அட்டாக் பண்ணிடிச்சு. அதோட ட்ராவல் பண்ணினதும் ரொம்ப தப்பாயிடிச்சு (அது பத்தி தனி பதிவு எழுதுறேன்)

நா வேற ரொம்ப சீன் காட்டிகிட்டு மலேல ஏறினேனா (இதுக்கும் தனி பதிவு வரும்) நிலம இன்னும் மோசமாயிடிச்சு. ஏங்க எனக்கு மட்டும் இப்டி? ரொம்ப நொந்து போயிட்டேங்க. அதிலையும் டாக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கான அன்டி பயாட்டிக் வேற குடுத்திட்டாரா ஒரே தலைசுத்தும், வாந்தியும். குணா இத நண்பர்கள் மத்தீல என்ன மாதிரி ப்ளே பண்ணார்னு தெரீல, ஆளாளுக்கு போன போட்டு மூணாவதா? சொல்லவே இல்லைங்கிறாங்க. அதில இது வேறயா? ( அப்டியே இருந்தாலும் இத எல்லாம் சொல்லிட்டா செய்வாங்க)

அதிலையும் குணாவோட கவனிப்பு இருக்கே, அட அட அடா... ரெஸ்டாரன்ட் கெட்டுது போங்க. காப்பி கேட்டா ஒரு மணிக்கு அப்பறம். ஜூசின்னா அரை மணி. சாப்பாடு பீசாவும் பர்கரும் (பசங்க காட்ல அடை மழை) சுசி ரெண்டு நாள் பாத்திட்டு பொங்கி எழுந்ததில மெரண்டு போயி கோழி குழம்பும் சோறும் போட்டாரு. அவர் மட்டும் காயகல்பம் சாப்பிட்டிருக்காரா என்ன? அவருக்கும் உடம்புக்கு ஏதும் வரும்ல! (என்ன ஒரு பரந்த மனம் பாத்தீங்களா) அப்போ போடறேண்டி நானும் ரெஸ்டாரன்ட் சாப்பாடு.

முதுகு வலிக்கு திடீர்னு மலை ஏறினதும் காரணாமா இருக்கலாம்னு டாக்டர் சொன்னார். பிசியோதெரபிஸ்ட் சின்னதா எக்சர்சைஸ் பண்ண சொன்னார். அது எங்க கிடைக்கும்னு தெரீலிங்க. அதிலையும் என் சைஸ்ல கிடைக்குமான்னும் தெரீல.

சும்மா சொல்லக் கூடாதுங்க, ஸோபாவும் டீவியுமா பொழுத ஓட்ரதும் சுகம்மாதான் இருந்திச்சுங்க. அதிலையும் இப்போ ஆதித்யா+சன் மியூசிக்கும் நமக்கு வருதா ஒரே ஜாலி. இனி மறுபடியும் வேலைக்கு ஓடுறத நெனக்கவே அலுப்பா இருக்கு. வேற வழி? பசங்களுக்கு கொண்டாட்டம் அம்மா வீட்ல இருக்காங்கன்னு. இந்த குணா இருக்கே... நீ நாளைக்கு வேலைக்கு போறியான்னு கேட்டு அப்பப்போ கடுப்பேத்திட்டே இருப்பாரு (என்னைய பாக்க அவ்ளோ கஷ்டமாவா இருக்கு? ) இப்போ கூட ஒரு டவுட்டாவே சுத்திட்டு இருக்காரு.

அப்புறமா வேற மருந்தோட உங்கள சந்திக்கிறேன். அதுவரை நலமாய் இருங்கள்.

9 நல்லவங்க படிச்சாங்களாம்:

Thamiz Priyan said...

அச்சச்சோ.. குணா வேனும்னே படுக்க வச்ச மாதிரி இருக்கே.. ஹா ஹா ஹா!
காய்ச்சலில் புலம்புற மாதிரி இருக்கு பதிவு... ;-))

லோகு said...

அந்த டாக்டரோட ரசிகையான இந்த டாக்டருக்கே உடம்பு சரியில்லையா..


என்ன கொடுமை சசி மேடம் இது..

சென்ஷி said...

:))))))

சுசி said...

//காய்ச்சலில் புலம்புற மாதிரி இருக்கு பதிவு... ;-))//
நன்றி தமிழ் பிரியன்!
கொஞ்சம் ஓவரா புலம்பிட்டேனோ? கவனிப்பாரின்றி சும்மா ஒரு மூலையில இருக்கிறது ரொம்ப குஷ்டமப்பா சாரி கஷ்டமப்பா.

சுசி said...

//அந்த டாக்டரோட ரசிகையான இந்த டாக்டருக்கே//
ஆஹா இது நல்லாருக்கே... நன்றி லோகு. ஆனா சசி மேடம் கிடையாது சுசி மேடம்....

சுசி said...

//:))))))//
வருகைக்கு நன்றி சென்ஷி.

சொல்லரசன் said...

உங்க புலம்பல பார்த்தா துறல் மழையாகி விடும்போல இருக்கு

சுசி said...

வாங்க சொல்லரசன்! நல்ல வேளை மழை ஆகல. அதான் நிஜ டாக்டர் ஆன்டி பயாட்டிக் குடுத்துட்டாரே...

Admin said...

உங்கள் பதிவுகள் நம் எளிய தமிழிலே பிரமாதமாக இருக்கின்றது. தொடருங்கள். உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்தாகிவிட்டது....