Pages

  • RSS

19 June, 2009

என் புதிய பதிவுலக நண்பர்களுக்கு....


சென்ஷி, லோகு, சொல்லரசன், பித்தன்!

மீண்டும் நன்றி. லோகு சொன்னாப்ல வேற தளங்களிலேயும் போடனும்னு ரொம்...ப ஆசை. ஆனா இன்னும் கொஞ்சூண்டு திருத்தம் செஞ்சதும் போடலாம்னு இருக்கேன். இன்னும் நெறைய எழுதணும்னு எனக்கும் விருப்பம்தாங்க. ஆனா சேம் பிளட். நேரமே கெடக்கிரதில்ல.


இங்க இருந்து பொட்டி தட்ற நேரம்தான் ஐடியாவா கொட்டுது. வீட்டுக்கு போயி என் வாலுங்க கூட மல்லு கட்டி தூங்க வச்சு, சமயல முடிச்சு, ரெண்டு பேர் கூட (குறைஞ்சது) போன்ல (வம்பு) பேசி, கொஞ்சூண்டு டிவி பாத்து (சத்யமா சீரியல் பக்கம் போறதில்ல. நம்ம கதைய வச்சே நாலு மெகா சீரியல் ஓட்டலாம். இதில அது வேறயா)

எத்....தன வேல.... லொட்டு லொசுக்குன்னு வீட்ல வேலைக்கா பஞ்சம் (இந்த வீட்ல மனுஷன் இருப்பானா. சும்மா உக்காந்தா நீ என் தலமேலயும் எதையாவது வச்சிட்டு போய்ட்டே இருப்பேன்னு சொன்னது உன் புருஷனா? விடு சுசி உனக்குத்தான் தாலி கழுத்துல ஏறும் போதே சூடு சொரண எல்லாம் எறங்கிடுச்சே)

இது எல்லா குடும்ப தலைவீசும் சொல்ல்ரதுதாங்க. வீட்டுக்கு வீடு வாசல் படி இருந்து தானே ஆகணும். என் வீடு மட்டும் விதி விலக்கா என்ன. அதிலையும் ஒரோருத்தர் ப்ளாக பாக்கும் போது தப்பா உள்ள வந்திட்டோமான்னு தோனுது. என்ன்னா எழுத்து, என்ன்னா அமைப்பு.... இதில நம்மளது எல்லாம் எந்த மூலைக்கு. இருந்தாலும் பரவால்ல. அவங்களது மாளிகைன்னா நம்மது குடிசை. ஹோட்டல் + கையேந்திபவன். சரவணா ஸ்டோர்ஸ் + பொட்டிகடை. இப்டி ஏதேதோ சொல்லி என்ன நானே தேத்திக் கிட்டு எழுத வேண்டியதா போச்சு. அட்லீஸ்ட் ஆட்டைய போட்டாவது எழுதிருவோம்ல!


அதோட நான் பதிவர் கணக்கை ஆபீஸ்ல இருந்து உருவாக்கீட்டேனா அது பெரிய தலைவலியா போச்சு. ஆஃபிஸ் மெஷின்ல தமிழ் வரல. அப்பறம் நான் ரொம்ப நோண்டினதில அது மூணு மொழிகளேம் போட்டு குழப்பிடுச்சு. நான் வேற டெக்னிகல் விஷயத்தில அதி மேதாவியா சமயங்கள்ல என்ன பண்ணறதுன்னு தெரியாம முழிக்கிறேன். சின்னதா ஒரு உதாரணம். வீட்ல வாலுங்களுக்கு என் மொபைல் + கம்பியூட்டர தொடறதுக்கு அனுமதி கிடையாதுங்க. ஏதாவதுன்னா சமத்தா அப்பாவோடாத விளையாடுங்க கண்ணுங்களான்னு அனுப்பிடுவேன். இப்போ அவங்களுக்குன்னு ரெண்டும் வாங்கி குடுத்ததும் என்ன தெனாவட்டு! உங்க கிட்ட இந்த ப்ரோக்ராம் இருக்கா, இத எப்டி யூஸ் பண்றதுன்னு தெரியுமான்னு ரொம்பவே கடுப்பேத்துறாங்க. நான் பூனைக்கும் ஒரு காலம் வரும்னு சொன்னா என் யானை சொல்லுது அதா நீ பூனைங்கிறது தெரியுமே காலம் வருதான்னு மட்டும் பாருங்குது. எனக்கு எதிரிங்க வெளிய இல்லீங்க.

உங்க ஆதரவு தான் எனக்கு என்னைக்குமே இருக்குமே (இருக்குமா?) நெஜமா சொல்றேங்க இது எனக்கு ரொம்ப புதுமையான + சுகமான அனுபவமா இருக்கு. முகம் தெரிந்தவர்களிடம் முதுகிலும், மனதிலும் வாங்கும் குத்துகளுக்கும் அடிகளுக்கும் இந்த முகம் அறியா நண்பர்கள் வடிகாலா இருக்கப் போறாங்கன்னு என் மனசு சொல்லுது.

எனக்கு எதுவும் தெரியாதுங்கரத சுருக்கமா சொல்லாம கொஞ்சம் ஓவரா பில்ட் அப் குடுத்திட்டேன்னு நல்லாவே தெரியிது. (அதுக்காக விஜயகாந்த் ரேஞ்சுக்கு கண்ணு சிவக்க நீங்க படிக்க கூடாதுங்க. அப்புறம் எங்கேருந்து நலமா இருக்கிறது. பிரஷர் எகிறிடாது?)

எல்லாரும் நல்ல மனசோடயும் நல்ல சுகத்தோடையும் இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன், எப்பவும் போல. மீண்டும் நலம் அறிய வருவேன்....

6 நல்லவங்க படிச்சாங்களாம்:

Thamiz Priyan said...

கலக்கிட்டீங்க.. பதிவு எழுத உங்களை மாதிரி ஆட்களைத் தான் தேடுறோம்.. வாழ்த்துக்கள்!
//உனக்குத் தான் தாலி கழுத்தில் ஏறும் போதே சூடு சொரண எல்லாம் எறங்கிடுச்சே/// ;-))))) ROTFL

லோகு said...

தமிழிஸ், தமிழ்மணம் தளங்கள்ள சேர்த்தா இன்னும் நிறைய பேர் படிப்பாங்க..
இப்பவே சூப்பரா எழுதறீங்க.. தைரியமா சேருங்க..

சுசி said...

நன்றி தமிழ் பிரியன்!
திருமண வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா...

சுசி said...

//இப்பவே சூப்பரா எழுதறீங்க.. தைரியமா சேருங்க..//
நன்றி லோகு!
என்ன வச்சு ஒண்ணும் காமடி பண்ணலையே? நீங்க குடுத்த தைரியத்த நம்பி களத்தில எறங்கிட்டேன். தமிழிஷ் உடனையே ஏத்துக்கிட்டாங்க (நம்ம திறமைய பாத்து) தமிழ் மணம் ரெண்டு நாள் பொறுத்துக்கோம்மா (நல்ல) முடிவ சொல்ரோம்னிருக்காங்க (இங்கதான் கொஞ்சம் உதைக்குது)

சென்ஷி said...

:)))


சூப்பர்!

சுசி said...

வருகைக்கு நன்றி சென்ஷி.