Pages

  • RSS

26 August, 2012

பழையன பகிர்தல்..

இப்பொழுதெல்லாம் பதிவு எழுதுவதற்கான பொறுமையும், மனமும் இல்லாமலே போய்விட்டது. எதுவாக இருந்தாலும் கூகிள் ப்ளஸ்ஸில் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது மிக இலகுவாக இருக்கிறது. இல்லாத மூளையை உருட்டிப் பிரட்டி அதே விஷயத்தை 140 எழுத்துகளுக்குள் அடக்கி ட்விட்டரில் பகிர்ந்து கொள்வது மிகப் பிடித்திருக்கிறது. அப்படியே அங்கே பகிரப்படுபவற்றை படித்து கருத்துகளைச் சொல்வதில் நேரம் போய்விடுவதால் பதிவுகளை படிப்பதையும் குறைத்துவிட்டேன். முன் போல எப்படியாவது வாரம் இரண்டு இடுகைகளை எழுதி விட வேண்டுமென்று போன வாரம் முடிவு எடுத்தேன். அதை செயலாக்குவது முயற்கொம்பாகவே இருக்கிறது.

விருப்பமானவர்கள் என்னை @susiguna என்ற ஐடியில் ட்விட்டரில் தொடருங்கள். அதிகமாக அவ்வப்போது கேட்கும் பாடல்களின் வரிகளையே பகிர்ந்து கொள்வேன். அதனால் தைரியமாகத் தொடரலாம். நானும் தப்பித்துக்கொள்வேன். ட்விட்டரிலும் கூகிள் ப்ளஸ்ஸிலுமாய் அவ்வப்போது பகிர்ந்து கொள்வதில் பிடித்தவற்றில் சில இங்கேயும்.

--

சொன்ன சொல்லின் விலை.. கொடுக்கக் கொடுக்கத் தீரவில்லை.. தீர்வதாய் இல்லை..

--

பிறந்தநாள் வாழ்த்துகளின் போது சந்தோஷமாய் சிரிப்பவர்களை பார்த்தால் குட்டியாய் ஒரு வலி எட்டிப் பார்க்கிறது..

--

டைப்பும்போது கவனிப்பதில்லை
கவனிக்கும்போது எண்டர் தட்டியிருப்போம்
# எண்டர் தட்டிய சாட்

--

சொன்ன சொல்லையும் எண்டர் தட்டிய சாட்டையும் திருப்ப வாங்க முடியாது.. இரண்டிலும் பழிவாங்கப்படும்போது அழாம இருக்க கத்துக்கணும்..

--

காதலுக்குள் நட்பையும் உறவையும் சேர்த்து நரகமாக்குபவனும் நண்பன் தான்..

--

தானாய் அமைந்தது சொந்தம்.. நானாய் அமைத்தது நட்பு..

--

கையை ஆட்டியபடி பள்ளிக்குள் செல்லும் பிள்ளையின் சிரித்த முகத்தின் முன் ட்ராபிக்கும் பார்க்கிங் அலைச்சலும் ஒன்றுமே இல்லை.. 
--
படுத்தவுடன் தூங்கும் வரத்தை சிலருக்கு மட்டும் கொடுத்தது கடவுளின் மிகப் பெரிய ஓரவஞ்சனை..
--
வெயில், மழை, ஆலங்கட்டி மழை, பனியென மாறி மாறி வரும் காலநிலையும் என்னைப் போல இன்று ஒருநிலையில் இல்லைப் போல..

--

காலையில் நான் தலைவாரும்பொழுது சது ஸ்கூலுக்கு ரெடியாகிட்டு இருந்தார்.. நான் தலைவாரிய சத்தம் அவருக்கு ஆப்பிளை கடிச்சு சாப்டுறது போல இருந்திச்சாம்.. பிள்ளைகளுக்குத் தான் எப்டிலாம் யோசிக்க முடியுது..

10 நல்லவங்க படிச்சாங்களாம்:

கோபிநாத் said...

\\முன் போல எப்படியாவது வாரம் இரண்டு இடுகைகளை எழுதி விட வேண்டுமென்று போன வாரம் முடிவு எடுத்தேன்\\

முடிவு எடுத்துட்டிங்களா...அப்போ நாங்க காலியா ;)))

அவ்வ்வ்...ட்விட்டரில், ப்ள்ஸ்ல இப்போ இங்கையும் அதேவா...பிள்ளையாரே ;))

கோபிநாத் said...

ஆனா ஒன்னு சொல்லனும் தலைப்பு சூப்பரு ;))

vinu said...

nandru

Anonymous said...

டைப்பும்போது கவனிப்பதில்லை
கவனிக்கும்போது எண்டர் தட்டியிருப்போம்
# எண்டர் தட்டிய சாட்
--
சொன்ன சொல்லையும் எண்டர் தட்டிய சாட்டையும் திருப்ப வாங்க முடியாது.. இரண்டிலும் பழிவாங்கப்படும்போது அழாம இருக்க கத்துக்கணும்..////ஹீ..ஹீ..ஹீ... அருமை!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

எல் கே said...

ஆண்டவா எங்களை காப்பாத்து

சுசி said...

கோப்ஸ்.. ஃப்ரெண்ட கூப்டாலும் முடிவு முடிவுதான்!!

--

வினு :)

--

முதல் வருகைக்கும் சேர்த்து நன்றிங்க சாமுண்டீஸ்வரி :)

சுசி said...

நன்றிகள் தனபாலன் :)

--

கார்த்திக்.. பாவம் அவரே என்னால நொந்துபோய் இருக்கார் :)

vinu said...

tnx sister after a long where you have been all these days...

சுசி said...

ப்ளாக் பக்கம் அவ்ளவா வரதில்லை வினு :)