Pages

  • RSS

18 December, 2011

உ பி.. மன்னிச்சூ..

முதல்ல வாழ்த்து சொல்றதா மன்னிப்பு கேக்கிறதான்னு தெரியவில்லை. இரண்டையும் சேர்த்தே சொல்லிடறேன்.

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு மன்னிச்சிடுங்க உ பி.

உ பினா என்னவென்று தெரியாதவர்களுக்கு முதலில் சொல்லிவிடுகிறேன். உ பி என்றால் உடன் பிறப்பு. என் உடன் பிறக்காத என் உடன் பிறப்பு.

நான் இலங்கையைச் சேர்ந்தவள்ன்றது இன்னமும் பலருக்குத் தெரியாது. நேரில் பார்ப்பவர்களே ’நீங்க இந்தியாவா’ன்னு கேக்கும்போது பாராதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு நாள் சாட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது ’நான் இலங்கை.. அதிலவும் வன்னி’என்றேன். அடுத்த பதில் ‘உடன் பிறப்பே’ என்று வந்தது. அன்றிலிருந்து அவரை நான் வசந்த் என்றது குறைந்து போக அவரும் சுசிக்கா, அக்கா என்பதை குறைத்து உ பி என்பதே அழைப்பாய் போயிற்று.

ஒற்றைப் பிள்ளையாய் அம்மா, அப்பாவைப் பிரிந்து ஊர் நினைவுகளோடும் ஏக்கத்தோடும் இருக்கும் (இங்கே இருந்த என்று சொல்லலாமா உ பி?? ‘ஜோ’ரா சொல்லலாம்ன்னு நினைக்கறேன்) வசந்த் போலவே என் கஸின் ஒருவனும் கத்தாரில் வேலையில் இருந்தான். நாங்கள் பேசுவதுதான் அவனுக்கான பூஸ்ட். அதுவே வசந்திடம் ஒரு தனிப் பாசத்தை எனக்குள் உருவாக்கியது எனலாம். யாரிடமும் அதிகம் மெயில்/சாட்டில் பேசாத நான் வசந்திடம் அவ்வப்போது அம்மா, அப்பா பற்றி விசாரிப்பேன். ‘இப்பதான் உ பி பேசினேன்’ என்றோ ‘இனிமேலதான் பேசப் போறேன்’ என்றோ சொல்லும்போது அந்த சந்தோஷம் என்னையும் தொற்றிக் கொள்ளும்.

பிரியமுடன் வசந்த் என்பது பேச்சளவில் மட்டுமில்லை. உடன் வேலை செய்யும் இலங்கைப் பையன்கள் மேல் அவருக்கு இருக்கும் பாசமும் அன்பும் உங்களுக்குத் தெரியாது இருக்கலாம். ஒவொருவரின் மீதும் போர் ஏற்படுத்திய காயங்களை அறிந்து அவர்களுக்குத் தன்னாலான உதவியை, அன்பை வழங்குகிறார்.

எங்காவது நான் எழுதியதில் கருத்து முரண் இருப்பின் உடனேயே ஓலை வந்துவிடும். அதே போல அவர் எழுதுவதில் ஏதாவது யாராவது சொல்வதனால் நெருடல் இருந்தால் கேட்பார். புரிந்துகொண்டு கருத்துக்கு மதிப்பளிக்கும் பக்குவம் இருப்பதால் எதுவாக இருந்தாலும் என்னாலும் உடனேயே கேட்டுவிட முடிகிறது.

வசந்தின் அப்பா, அம்மா சிரிப்பைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் இவரின் சிரிப்பு எங்கிருந்து வந்ததென்று. இதே சிரித்த முகத்தோடு, உங்கள் மனம்போல எல்லாமும் ‘ஜோ’ராக அமைந்து, ‘ஜோதி`மயமாக உங்கள் எதிர்காலம் விளங்க எங்கள் அனைவரதும் மனமார்ந்த வாழ்த்துகள் உ பி. என்றும் என்னப்பனிடம் உங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.

முதல் முதலில் இந்தப் பாடலைக் கேட்டபோது உ பி பர்த்டேக்கு பரிசாகப் போடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் பர்த்டே முதலில் வந்ததால் அவர் முந்திக்கொண்டார். என் ஞாபகசக்தியின் லட்சணத்தில் சரியான நேரத்துக்கு இல்லாவிட்டாலும் இப்போது இந்தப் பாடலை பரிசாக்கிக் கொள்கிறேன். மனதார மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். மன்னிச்சூஊஊஊ உ பி :)

6 நல்லவங்க படிச்சாங்களாம்:

ராமலக்ஷ்மி said...

வசந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

விஜி ராம் said...

happy birthday vasanth :)

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த் ;-))

கடைசிவரைக்கும் வசந்த் பிறந்த நாள் எப்போன்னு சொல்லவேல்லியே ! ;-))

ப்ரியமுடன் வசந்த் said...

Thank u Ramlakshmi madem , viji madem Gopi sir..

and

சுசிக்கா இந்த மன்னிப்பு கேட்டதுக்காகத்தான் நீங்க இன்னொரு மன்னிப்பு கேட்கவேண்டியிருக்கும் நாந்தான் விஷ் கேட்டு வாங்கிட்டேனே பின்ன ஏன் ? இருந்தாலும் நெம்ப நன்றிக்கா ..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்வாழ்த்துக்கள். நன்றி.
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

கயல் said...

:)