Pages

  • RSS

30 October, 2011

மாயம் செய்தவன்!!

தலைப்பை படித்ததும் தெரிந்திருக்குமே?? தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும், தெரிந்தும் தெரியாது என்பவர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன். வேலாயுதம் செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம. ஒரு பரம விஜய் ரசிகையான என்னை ஏமாற்றாத விஜய்க்கு முதலில் நன்றிகளும் வெற்றிக்கு வாழ்த்துகளும். அதே விஜய். அதே செண்டிமெண்ட். அதே சண்டை. அதே காமெடி. அதே அசத்தும் நடனம். ஆனால் புதிய ரசனையைக் கொடுத்து மாயம்தான் செய்திருக்கிறார் விஜய்.

Velayutham-Movie-Poster ஆறு மணி ஷோவுக்கு நாலு மணிக்கு நானும், நாலரைக்கு அம்முவும், ஐந்து மணிக்கு சதுவும் ரெடி ஆகிவிட்டோம். மாம்ஸ் வந்து ‘என்னம்மா இன்னும் ரெடி ஆலையா நீங்க’ன்னு விரட்டி ஒரு வழியாக அவர்கள் ரெடியாகி தியேட்டர் போக ஐந்தே முக்கால். டிக்கட் காசை கையுக்கும், தான் வரவில்லை என்ற தகவலை காதுக்கும் கொடுத்தார். நின்றிருந்த மழைக்கொரு நன்றியை சொல்லிவிட்டு உள்ளே ஓடினால் ’என்னக்கா இவ்ளோ லேட்டா வரிங்க.. முன்னாடி தான் சீட் கிடைக்கப்போது’ என்ற படக்காரத் தம்பியிடம் டிக்கட்டை பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு அம்மு, சதுவை பாப்கார்ன், கேண்டிக்கு அனுப்பிவிட்டு, மாமியாரோடு உள்ளே போனால் முன்னிருந்து மூன்றாவது ரோவில் கரையோர சீட்தான் கிடைத்தது. துண்டை போட்டுவிட்டு மீண்டும் வந்து கடிக்கஸ், நொறுக்ஸ், குடிக்ஸ் எல்லாம் வாங்கியபடி டிக்கட் தம்பியை கடந்தபோது அவர் அருகில் நின்றிருந்த நோர்வேஜியன் சொன்னார் ‘பரவால்லையே உனக்கு நல்ல லாபம்தான் போல.. கடைசி நேரத்தில நிறையப்பேர் வராங்க’ பயபுள்ளை என்னத்தான் வாரிச்சோ என்ற டவுட்டை போக்கியது வெற்றிடமாக இருந்த முன் வரிசை. ‘என்னம்மா இது கரைல உக்காந்து தலை திருப்பி பாக்க கஷ்டமா இருக்குமே’ என்ற அம்முவை சமாதானம் செய்து எல்லோரும் உட்கார்ந்தோம். எங்கள் வரிசையில் நடுவில் இருந்த நால்வர் முன் வரிசைக்கு ஷிஃப்ட்டாக நடு சீட்டுகளுக்கு நாங்கள் ஷிஃப்ட்டினோம்.

’ண்ணா.. நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்.. நீ காட்ட்டு காட்ட்டுன்னு வேற சொல்றே’ என்று இமையை படபடவென்று வெட்டிவிட்டு அப்பாவியாய் சொன்னபோது சிரிப்புச் சத்தம் தியேட்டர் நிறைந்தது. அதையே விறைப்பா/முறைப்பா சொல்லி இருந்தால் இந்த அளவு ரசனை வந்திருக்காது. எப்படியும் செம சாத்து சாத்தப் போகிறார் என்பது  தெரிந்த ஒன்றே என்றாலும் இந்த அப்பாவித்தனம் ரசித்துச் சிரிக்க வைத்த இடம் அது.

velayudhamவிஜயின் காஸ்ட்யூம் கலக்கல். இங்கே வேட்டைக்காரனுக்கு அப்புறம் தியேட்டரில் விசில் கூடாதென்று கட்டுப்பாடு. அப்படியும் கைதட்டலும், விசிலும் கேட்டபடியே இருந்தது. சது அவ்வப்போது ’syk kul film அம்மா’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரையும் ஊருக்கு அனுப்பிய பின்னர் ‘இப்ப பாருங்க தங்கச்சிய கிட்நாப் பண்ணப் போறாங்க’ என்றார் அம்மு. ட்ரெயின் புழுதி கிளப்பியபடி நின்றபோது யாரோ ஒருவர் ஒன்ன்றிப் போய்ப் பார்த்திருப்பார் போல தூசி தாங்காமல் இருமுவது போலவே இருமினார்.

அம்முவுக்கு ஹன்ஸிகாவை விட ஜெனிலியாவைத்தான் பிடித்ததாம். ஜெனிலியா விஜய் முடிவு கேட்டு அழுதபோது எனக்கும் அழுகாச்சியா இருந்துது. பாடல்கள் கேட்டபோது மாயம் செய்தாயோ எனக்கு ரொம்ம்ம்ம்பவும் பிடித்திருந்தது. பார்த்தபோது விஜய் ஸ்டைலாக இருக்காரேன்னு நான் நினைக்க சது சொன்னார். சில்லாக்சில் விஜய் அவளவு அழகு. முளைச்சு மூணு படமாக்கிய விதம் அழகா இருந்துது. ரத்தத்தின் ரத்தமே ஒரு வகையான அமர்த்தலான இசையமைப்போடு அட்டகாசம். சொன்னாப் புரியாதுவுக்கு எழுந்து ஆட முடியாத வருத்தம் எனக்கு. என்னா டான்சுப்பா. ஆனால் பாடல்களை முழுதாகப் போடவில்லை. ’கேட்டிங்களாம்மா.. மீசைன்னு இந்தப் பாட்லவும் வருது. நான் நினைக்கறேன் எல்லாப் பாட்லவும் வருதுன்னு’ என்று தனது கண்டுபிடிப்பை அம்மு சொன்னார்.

velayudham_UHQ விஜய் கழுத்தில தாயத்து மாதிரி ஒண்ணு போட்டிருக்கார். மாம்ஸுக்கும் அதே போல் ஒன்று வாங்க வேண்டும். கியூட்டா இருந்தது.  சந்தானம் செம. சிரித்து முடியவில்லை. சரண்யா மோகன் தங்கச்சி காரக்டரோட அவ்ளோ பொருந்தி இருக்காங்க. சரியா 8:36 க்கு யாரோ என்னய திட்டி இருக்காங்க. அம்புட்டு புரையேறியது எனக்கு. மாம்ஸிடம் கேட்டு கன்ஃபார்ம் பண்ணிவிட்டேன். அவர் நினைக்கவே இல்லாதபோது திட்ட சான்ஸ் இல்லை. என்னைத் திட்டியது யார்?? நான் மேலே சொன்ன அந்த நோர்வேக்காரன் எங்களுக்கு பக்கத்தில் கேட்டுவிட்டு இருந்தார். கொஞ்சநேரம்தான் அப்புறம் போய்டுவேன் என்றவர் எழுந்து முன் வரிசையில் அமர்ந்து முழுப்படமும் பார்த்தார்.

என்னதான் சொல்லுங்க. விஜய் படத்த தியேட்டர்ல போய் பார்க்கிற அந்த சந்தோஷமே தனிதான். எப்படி நேரம் போனதென்றே தெரியாமல் அத்தனை நேரமும் எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது படம் என்பதை விட விஜய் என்று சொல்வதே பொருத்தம். படம் முடிந்து வந்து வண்டியில் ஏறும்போதே ‘விஜய்க்கு வெற்றிப்படம்’ என்றார் மாமி. 

’அது நீங்க சொல்ணுமா உங்க முகம் சந்தோஷமா இருக்கிறது பார்க்கும்போதே தெரியுதே நல்லா என்ஜாய் பண்ணி இருக்கிங்கன்னு’ என்றார் மாம்ஸ்.

சது ‘அப்பா நான் பாத்ததிலயே பெஸ்ட் விஜய் படம் இதுதான்’ என்றதோடு டிவிடிக்கும் ஆர்டரை கொடுத்தார். கூடவே ’எப்போம்மா விஜயோட அடுத்த படம் வரும்’னு டிக்கட்டும் புக் செய்தார்.

மாம்ஸ் ஏழாம் அறிவு இந்தவாரம் பார்க்கப்போகிறாராம். பசங்களுக்கு விருப்பமில்லை. சூர்யாவின் நடிப்புக்காகப் போகலாம் என்றிருக்கிறேன். இல்லையென்றால் அடுத்து நான் தியேட்டரில் பார்க்கப்போகும் தமிழ்ப்படம்?? நண்பேண்டா!!

வர்ட்டா..

velayutjam movie new stills 2

12 நல்லவங்க படிச்சாங்களாம்:

நட்புடன் ஜமால் said...

உங்கள மாதிரி (4 பேரு

வேணாம் வேணாம் நீங்க ஒருவரே போது)

இரசிகர்கள் இருக்கும் வரை ...

நான் என்னத்த புதுசா சொல்லப்போறேன்

இரசிக்க வச்சிருந்தா சரிதான் ...

அமுதா கிருஷ்ணா said...

விஜய்யை ரொம்ப ரசித்து எழுதி இருக்கீங்க..

சே.குமார் said...

அக்கா... ரசிகையாய் உங்கள் விமர்சனம் நல்லாயிருக்கு.

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

ரொம்ப நல்லா இருக்கு......

இராஜராஜேஸ்வரி said...

அது நீங்க சொல்ணுமா உங்க முகம் சந்தோஷமா இருக்கிறது பார்க்கும்போதே தெரியுதே நல்லா என்ஜாய் பண்ணி இருக்கிங்கன்னு’

கார்க்கி said...

இந்த‌ தீபாவ‌ளி ந‌ம‌க்கு செம‌ க‌லெக்ஷ‌ன் தான்..

கோபிநாத் said...

நல்ல விமர்சனம் அக்கா ;-)

தமிழரசி said...

விஜய் ரசிகைன்னு நிருபீச்சிட்டீங்க...உங்க விமர்ச்சனம் பிடிச்சிருக்கு..

சுசி said...

சரியேதான் ஜமால் :)

@@

அமுதாக்கா :)

@@

நன்றி குமார்.

சுசி said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க செல்லக் குழந்தை.

@@

இராஜராஜேஸ்வரி :))

@@

கண்டிப்பா கார்க்கி.

சுசி said...

நன்றி கோப்ஸி :)

ராமலக்ஷ்மி said...

// சது ‘அப்பா நான் பாத்ததிலயே பெஸ்ட் விஜய் படம் இதுதான்’ என்றதோடு டிவிடிக்கும் ஆர்டரை கொடுத்தார். // குழந்தையின் மகிழ்ச்சியில் உங்கள் மகிழ்ச்சி ஆகியிருக்குமே பன்மடங்கு:)!