Pages

  • RSS

28 October, 2011

என் சிங்கம்!

எல்லாரும் கண் வைக்கிறார்கள் என் கண்ணாளன் மீது. காதில் புகையோடு பெருமையாகவும் உணர முடிகிறது. அக்காச்சியுடன் ஃபேஸ்புக் வழி இணைந்த பழைய நட்புகள் சில ’என்ன உங்க அத்தான் அப்ப பாத்தது போலவே இருக்கார். அவருக்கு வயசே ஆகிறதில்லையா’ என்றார்களாம். அரைக்கிலோ எடை கூடினாலே அரை மணி நேரம் ஜாக்கிங்கை கூட்டிவிடுவார். எப்படித்தான் முடிகிறதோ. ஒரு நாள் மழை காற்றென்று கூட ஜாக்கிங் போவதை நிறுத்தமாட்டார். இவரைப் பார்த்து இப்போது ஒரு கூட்டமே ஜாக்கிங் கிளம்பியுள்ளது.

என் தொப்பை பற்றி சிறிதளவு வருத்தம் அவருக்கு. ’என் கூட ஜாக்கிங் வேண்டாம் அட்லீஸ்ட் வாக்கிங் வாயேன்’ என்பார். ’எதுக்குப்பா.. அதான் எனக்கும் சேர்த்து நீங்க அழகாவும், ஸ்லிம்மாவும் இருக்கிங்களே அது போதும் எனக்கு’ என்பேன். முறைத்தால் ‘என் ஸ்பீடுக்கு உங்களால நடக்க முடியும்னா சொல்லுங்க.. தினமும் வரேன்’ என்பேன். ’ராசாத்தி.. நீ இப்டியே சோஃபால இரு.. நான் போறேன்’னுட்டு போய்விடுவார்.

இப்போதெல்லாம் அவர் மேல் அடிக்கடி எரிஞ்சு விழறேனாம். அவர் சொல்லும் வரை எனக்கே தெரியவில்லை. என் இயல்பான பொறுமை ஓடிப் போய் அவரிடம் சேர்ந்து அவரை பொறுமைசாலி ஆக்கிவிடுகிறது.  நேற்றும் எதுவோ சொன்னபோது சுள்ளென்ற என் கோபம் பார்த்து சிரித்தார். ‘எதுக்கு சிரிக்கறிங்க இப்போ’ என்றேன். இன்னமும் சிரித்து ‘உன் கோவத்தை பாத்தா சிரிப்பா வருது’ என்றதோடு விடாமல் அக்காச்சிக்கு கால் பண்ணி ‘உங்க தங்கச்சிக்கு சொல்லி வைங்க.. என் மேல ரொம்ப கோச்சுக்கறா இப்பலாம்’னு சொல்லி என்னை இருவருமாக வாரிக் கொண்டிருந்தார்கள்.

மாமியார் மேல அவருக்கு இருக்கும் பாசம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை கூடிக் கொண்டே போகிறது. இப்படி ஒரு பிள்ளை கிடைக்க கண்டிப்பாக மாமி புண்ணியம் செய்துதான் இருக்கிறார்கள்.

‘அம்மா.. நோர்பேர்ட் அண்ணா கண் முழிச்சிட்டார்’

‘ஓ.. கடவுளே காப்பாத்திட்டே.. சிரிச்சாரா??’

‘ஏம்மா.. நான் என்ன ஃபோட்டோவா எடுக்கப் போனேன்.. சிரிச்சாரான்றிங்க??’

இடையில் புகுந்த நான் ‘இல்லைப்பா மாமி அவர் உங்களை அடையாளம் தெரிஞ்சு சிரிச்சாரானு கேக்கறாங்கப்பா’

‘ஆமா.. நீதானே அவங்க பக்கப்பாட்டு.. எங்கடா இன்னமும் ஒண்ணும் சொல்லையேனு பார்த்தேன்’

என்பதாய் அவர்கள் இருவர் மொக்கையில் நானும் பல்ப் வாங்கி வீடு எப்போதும் பிரகாசமாய் இருக்கிறது. இருவரும் பேசுவதை கேட்டுச் சிரிப்பதிலேயே என் பொழுது போய்விடும். நண்பர்களுக்கும் இவர்களின் இந்த வாரல் பேச்சு மிகவும் பிடிக்கும்.

இவருடைய பழைய பாஸ் ஒரு தமிழர். தினமும் அவரைப் பார்த்து மொக்கை போடுவது இவரது மிகப்பெரிய பொழுதுபோக்கு. இவர் முன்னே யாரோ ஒரு நோர்வேஜியனுக்கு ஊரில் அவர் ஆடாத வேட்டை பற்றி வெடித்துக்கொண்டு இருந்தாராம். எல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் இவர் சொன்னாராம். ‘நான் இவர் சொல்றது போல வேட்டைக்கு போறதில்லை.. ஏன் தெரியுமா? சிங்கம் புலில்லாம் கைல துப்பாக்கியோடையா வருது? அதேபோல வெறுங்கையோட போய் என் வீரத்தால வேட்டையாடுறதுதான் என் வழக்கம்’ என்றதை அந்த அப்பாவி நம்பிக்கொண்டு போயிருக்கிறார்.

ஒரு பார்ட்டிக்கு போய்விட்டு இன்னொன்றுக்கு போய்க்கொண்டிருந்தோம். ஒரு நாளும் அந்த ஹால் இருந்த் இடத்துக்குப் போனதில்லை என்பதால் நண்பர் ஒருவரின் பின்னே போய்க்கொண்டிருந்தோம். அவர்களும் எங்களைப்போல் இரண்டு வண்டி வாங்கி இருக்கிறார்கள்.

‘புவனா பெரிய வண்டி ஓட்டி நான் பாத்ததில்லை’

‘ஆமா.. அவங்க வேலைக்கு கூட சின்னதிலதான் போவாங்களாம்னு ரமணன் சொன்னான்’

‘ஏன்பா.. அவங்க தான் ரொம்ப தைரியமானவங்களாச்சே.. நானே பெரிய வண்டி ஓட்டறேன்.. அவங்களுக்கு என்ன?’

‘அடியேய்.. நீ பூனையா இருந்தாலும் சிங்கத்துக்கு வாழ்க்கைப்பட்டு பெண்சிங்கம் ஆயிட்ட.. அங்க அப்டி இல்லையே’

நான் சிரித்ததில் தூங்கிக் கொண்டிருந்த அம்மு எழுந்து சிணுங்கத் தொடங்கிவிட்டார்.

என்ன உங்க புருஷனுக்கு ரெண்டாவது பொண்டாட்டி வந்துட்டாங்களாமே என்று நண்பர்கள் கேலி செய்யும் அளவுக்கு அவரின் புது மொபைலோடு பொழுதைப் போக்குகிறார். ’இது வரை உனக்கு இத மாதிரி செமயா ஒரு காலர் ஐடி கிடைச்சதில்ல. கால் பண்ணி கேட்டுப்பாரு’ன்னார். அது warning it’s ur wife என்று அடித் தொண்டையில் அலறுது.

அப்பா மேல் அம்முவுக்கும் சதுவுக்கும் பயமும் இருக்கிறது. நான் என்னதான் கத்தினாலும்.. ம்ஹூம்.. ஆனால் அவர் கூப்பிடும் தொனி வைத்தே கோவத்தைப் புரிந்து கொள்வார்கள். அப்பாவிடம் பாசத்தோடு பயமும் இருப்பது நல்லதே. ஆனால் அதை பயம் என்று வரையறுக்க முடியாது. முடிவு அப்பாவுடையதென்பது போல, அப்பாவே எல்லாம் என்பது போல ஒரு வகையான.. எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அப்பாவை எப்படி உருக வைத்து காரியம் சாதிக்கலாம் என்று அவர்களுக்குத் தெரியும். சுருக்கமாகச் சொன்னால் அப்பா அவர்களுக்கு ஒரு தோழன்.

415 சம்மருக்கு சுவிஸ் போயிருந்த போது ’என்ன மச்சாள் அண்ணா கைல நீங்க வெள்ளில தாலி கட்டி விட்டிருக்கிங்களா’ன்னு நிலா கேட்டாள். இது அவர் கையில் எப்போதும் இருக்கும் செயின். இங்கே வந்த புதிதில் வாங்கினாராம். எப்போதும் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி போட்டிருப்பார்.

இன்னும் சரியாக ஒரு மணி நேரத்தின் பின் தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி முதன்முதலாய் என் முகத்தில் முழிக்க வைத்து வாழ்த்துச் சொல்லி மிரட்டி அவருக்கான புது நாளைத் தொடங்க வைக்கப் போகிறேன். இம்முறை அவருக்கு அம்மாவின் ஆசீர்வாதமும் ஸ்பெஷலாக கிடைப்பது மனநிறைவாக இருக்கிறது.

லவ்யூப்பா.. பிள்ளையார் எனக்கு எல்லாமும் ஆன உங்கள் வழி எங்களைக் காத்துக்கொள்ளட்டும். என்றும் நீங்கள் இனிதே வாழ எல்லா வளமும் நலனும் துணை வரட்டும்.

11 நல்லவங்க படிச்சாங்களாம்:

Ramani said...

அருமையான பதிவு
சிலரால்தான் தாங்கள் உணர்வதை வாசிப்பவர்களும்
உணரும்படி எழுதமுடிகிறது
உங்களுக்கு எழுத்து வசப்பட்டிருக்கிறது
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

உங்க கண்ணாளனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி...ஆனால் நாளும் கிழமையுமா உங்க முகத்தில் விழிக்க வைக்க்ப்போறேன்னு சொல்றீங்களே? ஏன் சுசி..பதிவு காதலால் கசிந்து உருகுவதை தடுக்கமுடியவில்லை..இன்று போல் என்றும் வாழ்க தோழியே..

ஆமினா said...

//‘என் ஸ்பீடுக்கு உங்களால நடக்க முடியும்னா சொல்லுங்க.. தினமும் வரேன்’//

நல்லவேள அவர் ஒத்துக்கல..... இல்லைன்னா ஒரு ஹீரோவை ஜீரோவாக்கிய பெருமை உங்கள வந்து சேர்ந்திரிக்கும் ஹி...ஹி...ஹி....

விஜி said...

பார்றா பயபுள்ள என்னமா ரொமான்ஸ் வாழ்த்து சொல்லுது :))) பாவம் மனுசன் உன்னையெல்லாம் சகிச்சுக்கறாரே அதுக்கே அவருக்கு மகாத்மா பட்டம் கொடுக்கனும்

மகாத்மாக்கு இன்னொரு மகாத்மாவோட ( ஹெஹெ நாந்தான்) வாழ்த்து சொல்லிட்டு ஆத்தா :)))

கோபிநாத் said...

மாம்ஸ்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)

\\‘அடியேய்.. நீ பூனையா இருந்தாலும் சிங்கத்துக்கு வாழ்க்கைப்பட்டு பெண்சிங்கம் ஆயிட்ட.. அங்க அப்டி இல்லையே’\\

செம பஞ்ச் மாம்ஸ் ;-))

கண்டிப்பாக சிலை உண்டு ;-)

பாலா said...

உண்மையான ஆழ்மன பாசத்தின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

அக்கா...
மாமாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இந்த இனிமையான உறவு என்றும் இனிக்கட்டும்.

சுசி said...

நன்றிங்க ரமணி :)

@@

பழிவாங்கத்தான் தமிழ் :)

@@

ஹஹாஹா.. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆமினா :)

சுசி said...

சொல்லிட்டேன் மேயர் ஆத்தா.. நீயே பட்டத்தை வழங்கி சிறப்பிச்சிடு :))

@@

பக்கத்தில உங்களுக்கும்.. மாமனை விட்டுக்கொடுக்கா என் தம்பின்னு :))

@@

நன்றி பலா :)

சுசி said...

நன்றி குமார் :)

ராமலக்ஷ்மி said...

உங்கள் கணவருக்கு என் தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:)!