Pages

  • RSS

30 June, 2011

உன்னுள் வாழ்கிறேன்..

எங்கிருந்தாலும் நான் இருக்கும் இடத்தில் பாட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆஃபீஸில் என் காதுகளுக்கு மட்டும். ’சீக்கிரமே உனக்கு காது அவுட்டாகப் போது பாரு` என்று சக ஊழியர்கள் கிண்டல் செய்தாலும் ஐபாட், இயர்ஃபோன் மறந்து போகும் நாள் எனக்கு சாபக்கேடு. என் நண்பர்களுக்கும். நல்லதா ஒரு பாட்டு சொல்லு என்று அடம்பிடிப்பேன். அவர்கள் சொல்லும் பாட்டின் வரிகள் மறந்துவிட்டால் கூகிளாண்டவர் துணையோடு மனதுக்குள்ளும், தனியாக இருக்கும்போது முணுமுணுத்தும் பாடிக்கொண்டிருப்பேன். என்னை எங்கோ இழுத்துச்செல்லும் பாடல்களில் ஒன்றை இன்று எஃப் எம் உதவியோடு கேட்க நேர்ந்தது. இன்னமும் வெளிவர முடியாமல் அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். அல்லது வர விரும்பாமல் உள்ளேயே இருக்கிறேன் என்றும் சொல்லலாம்.

முதல் முதல் கேட்டபோதே மனதை அழுத்திய பாடல் இது. அதன் பின் எப்போது கேட்டாலும் கனம் குறைவதில்லை. எதுவோ ஒரு சோகம், பாரம், தவிப்பு இப்படிக் கலவையாய் ஒரு உணர்வு வந்து போகும். காலையிலிருந்து இப்போது இந்தக் கணம் வரை திருப்பித் திருப்பிக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.  கொஞ்சம்  தனிமை.  நிறைவாய்க் கண்ணீர். இந்த மன அழுத்தம் போக தேவையாய் இருக்கிறது. உடனேயே உனக்கென்ன இப்போ என்று கேட்காதீர்கள். எனக்கு எதுவும் இல்லை. சில நேரங்கள் அப்படித்தான். ஏதோ ஒன்று எதுவோ ஒன்றின் காரணமாய் தேவைப்படுகிறது. தேவைப்படுத்திக் கொள்கிறேன். தொடர்பே இல்லாமல், என்னவென்றே புரியாமல். சிரிப்பும், அழுகையும் எதுவோ ஒன்றின் நினைவுபடுத்தலாய் வருவது வாழ்வில் இயல்பே.

பாடலைக் கேளுங்கள். யுவன், நா.முத்துக்குமார் சேர்ந்து படைத்த அற்புதம். ஷ்ரேயா கோஷலின் குரல். இது தமிழில் அவரின் ஆரம்ப காலப் பாடலாக இருக்க வேண்டும். எனக்கு சரியாகத் தெரியவில்லை. உச்சரிப்பைக் கவனியுங்கள்.  7G, ரெயின்போ காலனி படத்திலிருந்து என்னைத் தின்றுகொண்டிருக்கும் பாடல்.

நினைத்து நினைத்துப் பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்.. ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்குக் கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்.. ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்..

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு..

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா
தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்..

11 நல்லவங்க படிச்சாங்களாம்:

Anonymous said...

மிகவும் சரியா சொன்னீங்க சுசி.. இந்த பாடல் கேட்ட முதல் முறையில் இருந்து இன்று வரை யார் கேட்டாலும் எனக்கு பிடித்த பாடல் இது தான்,,கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வரும்...இதற்கு எந்த பிண்ணியும் இல்லை.வரிகளா இல்லை அந்த பாடகியின் மயக்கும் குரலா? தெரியலை..சொர்ணலதாவுக்கு பிறகு மனதை மயக்கும் குரல்..

கவி அழகன் said...

நல்ல பாடல்

ப்ரியமுடன் வசந்த் said...

//முதல் கனவு போதுமே காதலா //

பாடலின் இந்த இடத்தில் மனதை என்னவோ செய்துவிடும் இப்போலாம் இந்த பட்டு மட்டுமில்ல எந்த சோகாச்சி பாட்டும் கேட்கறதெல்லாம் இல்ல எப்பவும் மனசை சந்தோஷமா வச்சிகிடற பாட்டு மட்டும்தான் கேட்பது எதுக்கு வீணாபோய் வம்பை விலைக்கு வாங்குவானேன்!!!

கோபிநாத் said...

செல்வா+யுவன்+நா.முத்துகுமார்+ஆரவிந் கிருஷ்ணா கூட்டணியின் வந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று ;)

இரசிகை said...

intha padathil yennoda choice
"kana kaanum kaalangal"-thaan.

irunthaalum,
intha song-la oru special irukku...

male voice song-kkum
female voice song-kkum
relativity irukkum.

male voice la irukkum kelvikalukku,female voice-la pathil irukkum.

athil mikavum pidithathu kadaisi variyaana kelviyum,pathilumthaan....

sakthi said...

எதுவோ ஒரு சோகம், பாரம், தவிப்பு இப்படிக் கலவையாய் ஒரு உணர்வு வந்து போகும்

உண்மை தான் மனம் மயக்கும் இசையும் வரியும் அமைந்த பாடல்

பத்மநாபன் said...

பாடகர் ஸ்ரேயாவின் தமிழ் உச்சரிப்பு உண்மையில் மனம் மயங்கவைக்கிறது..இசையும் இணக்கமாக அருமையான பாடல்....

Priya said...

சுசி சொன்னால் நம்புவீர்களா.. இன்று எழுந்ததில் இருந்து ஏனோ அந்த பாடலை பாடிக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் இந்த பாடலை கேட்கவும் இல்லை பார்க்கவும் இல்லை. ஆனால் ஆச்சரியம் உங்க தளத்தில் இதே பாடலை பற்றி குறிப்பிட்டு இருக்கிங்க.

//எதுவோ ஒரு சோகம், பாரம், தவிப்பு இப்படிக் கலவையாய் ஒரு உணர்வு வந்து போகும்//... நீங்க சொன்னது போல் நானும் புரியாத தவிப்பை உணர்ந்திருக்கிறேன். எனக்கு மிக மிக பிடித்த பாடல். கேட்ட முதல்முறை மனம் கசிய இன்று வரை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.அதிலும் பாடகி ஸ்ரேயாவின் குரல் அத்தனை இனிமை!தொடர்ந்து ரசிப்போம்!

அன்புடன் மலிக்கா said...

எனக்கும் பிடிக்கும் சசி இப்பாடல்வரிகள்..

விக்னேஷ்வரி said...

What a song!!!

ராமலக்ஷ்மி said...

குரலா வரியா இசையா என எதையும் தனியாக முதன்மை படுத்த முடியாமல் எல்லாமே சிறப்பாக அமைந்த அருமையான பாடல். எனக்கும் பிடித்த ஒன்று. நன்றி சுசி.