Pages

  • RSS

26 June, 2011

சிங்கம் ஒன்று புறப்பட்டதே..

மாம்ஸ் லண்டன் போயிருக்கிறார். ஃப்ரெண்ட்ஸ் வாலிபால் விளையாடலாம் வாடா மச்சான்னு கூப்டிருக்காங்க. நேற்று ஈவ்னிங் போனவர் நாளை நைட் வருவார். கிளம்பும் சமயம் கால் செய்த உள்ளூர் ஃப்ரெண்டுக்கு அவர் சொன்னது.

‘ஆமா. சிங்கம் கிளம்பிட்டே இருக்கு. என்னமோ பழைய ஃபார்ம்ல இருப்பேன்னு நம்பி வரச் சொல்லி இருக்காங்க. அங்க போய் பார்த்தாத்தானே தெரியும். வின் பண்ணா ட்ராஃபியோட வரேன். இல்லேன்னா டியூட்டி ஃப்ரீல வாங்கற டாஃபியோட வரேன்’

நான் நினைச்சேன். அவர் சொல்லிட்டார். அவரை பஸ்ஸேத்தி விட்டு வரும் வழியில் மாம்ஸ் ஃப்ரெண்ட் பசங்களோடு விளையாட அம்மு, சதுவை ட்ராப் பண்ணினேன். அதே அபார்ட்மெண்டில் இருக்கும் இன்னொரு குட்டிப் பையன் ஓடி வந்து சதுவின் காலைக் கட்டிக்கொண்டார். இவர் அப்படியே அவரைத் தூக்கி ஒரு தட்டாமாலை சுற்றி இறக்கினார். குட்டிப் பையன் கையில் இருந்த ஸ்வெட்டரை கொடுத்து போட்டு விடச் சொல்லிக் கேட்டதும் இவர் போட்டுவிட்டார். நன்றியாக அவர் மீண்டும் காலை இறுக்கிக்கட்டிக் கொள்ள சது என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு விட்டார் பாருங்க. எப்போதும் அவர் கேட்பது போல ஒரு குட்டித் தம்பி இருந்திருக்கலாமோ??

உடம்பு சரியாக இல்லாவிட்டாலும் ஏர்போர்ட்டுக்கு நானே வரேன்னு மாம்ஸ்ட்ட சொல்லிட்டேன். என்னவோ இம்முறை மாம்ஸ் என்னை பரிதாபமாகப் பார்க்கும் அளவுக்குப் பிரிவுத் துயர் கண் நிறைத்தது. அதற்கும் அவரே தீர்வொன்று செய்துவிட்டார். அவரின் நண்பர் ஒருவர் புது வீடு வாங்கி இருந்தார். வீடு கைக்கு வருமுன்னர் பழைய வீடு விற்று குறித்த தேதிக்குள் கொடுக்கும்படி ஆயிற்று. ஒரு மாத வாடகைக்கு வேறு ஒரு வீடு எடுத்திருந்தார்கள். அதற்கும் உரியவர்கள் வந்துவிட பகலில் அவரின் மாமனார் வீட்டில் தங்குவதும், இரவில் மனைவி தவிர அவரும் 3 பிள்ளைகளும் வேறு உறவினர் வீட்டில் தங்குவதுமென்ற முடிவில் இருந்தார்கள். மாம்ஸ் பிள்ளைகளை இரவில் எங்கள் வீட்டில் தங்கச் சொல்லி இருக்கிறார். இதோ நேற்றே வந்துவிட்டார்கள். ஹாலில் தூங்க அடம்பிடித்தவர்களை ரூமில் தூங்கச் சொன்னேன். நாங்க தூங்கிடுவோம் உங்களால தனியா, பயமில்லாம தூங்க முடியுமான்னு பயமில்லாம வில் அழுத்தம் கொடுத்து அம்மு கேட்டபோது வேறு வழியில்லாமல் ஹாலில் 2 air mattress போட்டு அதில் நால்வரும், சோஃபாவில் நானும் அவர்களில் ஒருவரும் எனப் படுக்கையை ஒழுங்கை செய்தோம். 

010 016 k

22 ஆம் தேதியில் இருந்து பள்ளி மூடியாயிற்று. எங்களுக்குத் திண்டாட்டம் தொடங்கியாயிற்று. நேற்று காலிங் பெல் கேட்டு பால்கனிக் கதவு வழியாக ஹலோ என்றால் யாரையும் காணோம். பக்கத்திலே படி வழியாக மேலே ஏறிக் கொண்டிருந்த பையன் அதோ அந்தாள் தான் பெல் அடிச்சார் என்று பக்கத்து வீட்டை நோக்கிக் கையில் காகித அட்டைகளோடு போய்க் கொண்டிருந்த ஒருவரைக் கைகாட்டினார். நான் பெல் அடிச்சியான்னு கேட்டும் அவர் திரும்பிப் பாராமல் போய்க் கொண்டிருந்தார். எனக்குப் பகீரென்றது. ஆள் வேறு ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக இருந்தார். இது திருடர்களின் ஒரு தந்திரம். அட்டைகளில் வரைந்த ஓவியங்களோடு கூடவே படிக்க வந்திருக்கேன், பண உதவி செய்ங்கன்னு ஒரு கடிதமும் வச்சிட்டு பள்ளி விடுமுறை காலத்தில வீடு வீடாகப் போய் நோட்டம் விடுவது. எங்கோ ஓரிரண்டு திருட்டுத்தான் நடந்திருக்கிறது என்றாலும் பயமே. எங்கள் அயலில் பெரும்பாலானவர் வெக்கேஷன் போய்விட்டார்கள். மீதி எம்மைப் போல வேலைக்குப் போனால் மூன்று மணிக்கு மேல்  திரும்பிவருபவர்கள்.   பகலில் வெளியே பறவைகளும், வீடுகளில் பிள்ளைகளும் தவிர யாரும் இல்லை.  அவர்கள் தைரியமாய் இருக்கிறார்கள். எமக்குத்தான்.. பிள்ளையாரப்பா பாத்துக்கோ.

என்னமோ எனக்கு பிடிச்சவங்க சந்தோஷமா இருந்தா நான் சோகாச்சியாவோ இல்லை சுகக்கேடாவோ இருக்க வேண்டியதா இருக்கு. இந்த வருஷம் விஜய்க்கு வாழ்த்துப் பதிவு போட முடியாத அளவுக்கு  ஆகிப்போச்சு. பல்லுல ஆப்பரேஷன். 5 ஸ்டிச்சஸ். அதுவும் அவர் பர்த்டே அன்னைக்கே. ஆனா அவர் பர்த்டேக்கு முதல் நாள் எங்க வீட்ல நடந்தது இது. சது ரூம்ல அவருக்கு போன வருஷம் வாழ்த்தாக கிடைச்ச விஜய் படம் ஒட்டி வச்சிருக்கார். முதல் தடவையா வீட்டுக்கு வந்த அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் இது உன்னோட அப்பா டீனேஜ்ல எடுத்த ஃபோட்டோவான்னு கேட்டாராம். இவர் இல்லைன்னு சொல்லி தான் அவரோட ரசிகன்னு சொன்னாராம். வாழ்த்து அனுப்பி வச்ச நட்புக்கு நன்றி.

sathu 

எனக்குப் பிடித்த விஜயின் பாடல் மாம்ஸ்க்குப் பிடித்த ஷ்ரேயாவோடு.

13 நல்லவங்க படிச்சாங்களாம்:

எல் கே said...

யார்கிட்ட சண்டை போட்டீங்க ? பல்லை பேது கொடுது விட்டாங்க போல ? டேக் கேர்

vinu said...

he he he he he neeenga romba nallavanga.....

appuram ungalukku pallu poittathaa kealvipp pattom ... engalin aalntha anuthaabangal antha palluku....

he he he he he he

குணசேகரன்... said...

ம்ம்..விஜய்-ந் பரம் விசிறி போல

நிரூபன் said...

வாலி போல் விளையாடப் போன அண்ணாச்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

குழந்தைகளின் சுட்டித் தனம்...

வடிவேலுவினை பெல் அடித்து விட்டு, ஒரு சுட்டி படத்தில் மாட்டி விடும் காட்சியினை ஞாபகப்படுத்துகிறது,

ஹி....ஹி...

கேளாமல் கையிலை.....இனிமையான காதல் பற்றிய பாடல்..

ரசித்தேன்.

விஜி said...

வா ஆத்தா..பல்லு செட் ஆயிடுச்சா? :)

கவி அழகன் said...

nice

கோபிநாத் said...

மீண்டும் வருக வருக !

மாம்ஸ் வெற்றி வாகை சூடி வர வாழ்த்துக்கள் ;)

உங்களுக்கு பல்லு பத்திரம்..!

\\எனக்குப் பிடித்த விஜயின் பாடல் மாம்ஸ்க்குப் பிடித்த ஷ்ரேயாவோடு.\\

மாம்ஸ்க்கும் அக்காவுக்கும் சேர்த்து - ஒரே கல்லுல ரெண்டு மாங்காவா..தூள் ;)

ராமலக்ஷ்மி said...

அந்த ஊரிலும் திருட்டு பயம்தானா? பத்திரமாய் இருந்து கொள்ளுங்கள்.

சுசி said...

நேர்லன்னா அப்டி ஆகி இருக்கும்.. தப்பிச்சிட்டேன் கார்த்திக் :)

@@

பல்லு இன்னமும் போகல வினோத். இருந்தாலும் அநுதாபத்துக்கு நன்றி :)

@@

முதல் வருகைக்கு நன்றி குணசேகரன். பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம விசிறிங்க :)

சுசி said...

ரொம்ப நன்றி நிருபன். மாம்ஸ் கிட்ட பேசும்போது சொல்லிவிடறேன் :)

@@

இல்லை விஜி.. :( தையல் பிரிக்க ஜூலை 4 தேதி குறிச்சிருக்காய்ங்க :((

@@

முதல் வருகைக்கு நன்றி கவி அழகன்.

சுசி said...

கோப்ஸ்.. வருக வருக சரி.. இஸ்மைலி காணோம்?? :))

அவர 20 வயசுப் பையன் மாதிரி இருக்கார்னு சொல்லிட்டாங்களாம். தோத்தாலும் வெற்றிக் களிப்பில இருக்கார்..

மாம்ஸ கோர்த்து விடலேன்னா சரியா வராதேப்பா :))

@@

முன்னய விட இப்போ ஜாஸ்தியாச்சு அக்கா. அதான் பயமா இருக்கு. பத்திரமாவும் இருக்க வேண்டியது இருக்கு :((

மாணவன் said...

nice :)

சே.குமார் said...

nice one.