Pages

  • RSS

18 April, 2011

அப்பப்போ நினைச்சும் பார்க்கணும்!!

ஆஃபீஸ்கு லேட்டாக எழுந்து அரக்கப் பரக்க.. இங்கே ஒரு வழக்கம் போல் சேர்த்துக்கொண்டாலும் தப்பில்லை. ரெடியாகிக் கொண்டிருந்தபோது அளவுக்கு அதிகமாக கிரீமை கையில் கொட்டி விட்டேன். பூசியது போக மீதியை அருகில் ப்ரஷ் செய்துகொண்டிருந்த சது மீது பூசிவிட்டேன். ‘அஷ் (அய்யே) என்னம்மா நீங்க.. என்மேல பொண்ணு வாசம் வரப்போது’ என்று சொல்லியபடி தேய்த்துக் கழுவியும் சந்தேகத்தோடு என்னை மோந்து பார்க்கச் சொன்னார். பாடி க்ரீமுக்கு இந்த அலப்பரையா என்று கேட்டு அம்மு எண்ணையை ஊற்ற, சமாதானம் செய்து கிளம்பினேன். ஆஃபீஸில் Fund Department கலீக் ஒருவன் என் hand cream எடுத்துப் பூசிக் கொள்வான். முதல் முதல் அவன் க்ரீம் கேட்டு வந்தபோது சூட் போட்டு மீட்டிங் போக ரெடியாக இருந்தான். கேலியாய் பார்த்த இன்னொரு கலீகுக்கு ’என் மேல எப்போதும் பெண் வாசம் இருக்கணும். அதான் பெண்கள் க்ரீம்’ என்று காரணம் சொன்னான். ’ஆமா பார்த்தேன்.. மீட்டிங் ரூம்ல அத்தனையும் சூட்டு போட்ட ஆம்பளைங்கதான் இருக்காங்க. பெண்வாசனையோட போற.. இன்னைக்கு நீ காலி பாரு’ என்று நான் வாரிவிட சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாலும் இன்னமும் அவனுக்கும் சேர்த்து தண்டத்துக்கு hand cream வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஹிஹிஹி.. சதுவும் வருங்காலத்தில் என்ன செய்வாரோ என்று நினைத்துப் பார்த்தேன்.

@@

ரஜி வயல் அறுவடை செய்து வழக்கம்போல என் மாமியார் வீட்டுக்குக் குடும்ப சமேதராய் போய் புத்தரிசி கொடுத்துவிட்டு வந்தானாம். மாமியார் பெருமையாகச் சொன்னார். ‘என்னடா.. மாமியாரை வசியம் பண்றியா. எனக்குத்தான் தங்கச்சியே கிடையாதேடா’ என்று கண்ஸ் கிண்டல் செய்தார். புத்தரிசி வீட்டுக்கு வந்ததும் கோயிலில் பொங்குவதும், பெரியவர்களுக்கு கொடுத்து ஆசீர்வாதம் வாங்குவதும் எங்கள் வழக்கம். புத்தரிசிப் பொங்கல்.. ஹூம். புத்தரிசிச் சோறு.. ஹூம். ’கண்ணு வைக்காத இப்போதான் சாப்டேன்’ என்று ஃபோனில் சொன்னதால் அவனுக்கு எதுவும் ஆகவில்லை. ஹிஹிஹி.. என் மருமகள் சைடு ஆளுங்க வருங்காலத்தில் எனக்கு என்ன வசியம் செய்வார்களோ என்று நினைத்துப் பார்த்தேன்.

@@

பெரிய கிளாஸ் ஒன்றை எடுத்துத் தரச் சொன்னார் சது. எதுக்கென்று கேட்டு பதிலுக்குக் காத்திருந்த என்னைத் தவிர்த்து அவரே எட்ட்ட்டி எடுக்கப் பார்த்து முடியாமல் பதிலினார். ஜூஸ் குடிக்கவாம். அதுக்கு எதுக்கு அவ்ளோ பெரிய கிளாஸ். சின்னதிலை குடிங்க போதும் என்று சிறியதொன்றை எடுத்துக் கொடுத்தேன். கிளாஸை ஜூஸால் நிறைத்து மடமடவென்று குடித்துவிட்டு மீண்டும் கிளாஸை நிறைத்தார். ‘எதுக்கு இப்..’ என் பாதிக் கேள்வியிலேயே பதில் வந்தது. ‘முதல்ல டேஸ்ட் பார்த்தேன். ம்ம்ம்ம்.. ரொம்ப நல்லாருக்கு. இனிமேலதான் குடிக்கப் போறேன்’ ஹிஹிஹி.. அவர் வயசில் கடந்த காலத்தில் நான் எம்புட்டு அறிவோடு இருந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன்.

012

@@

‘இத்தக்குக்கு பித்தாக்கு குதாங் இஞ்கா உவ்வி உவ்வி காவா கவ்..’

அட்ஷகி சொன்னதை அப்படியே திருப்பிச் சொன்னேன்.. விழுந்து புரண்டு சிரித்தார். ‘என்னடி நிலா.. அவங்க பாஷேல இது என்னமோ செம காமடி மாட்டர் போல இருக்கே’ ன்னேன். இப்படியாகத்தான் அட்ஷகி பேசுகிறார். இடையில் நாங்கள் சிரித்தால் புரிந்ததுபோல் அவரும் கைகொட்டிச் சிரிப்பு வேறு. குழந்தைப் பேச்சுக்கு என்ன அர்த்தம் என்று ஒரே சொல்லை அவர்கள் அடிக்கடி சொல்வதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். எதை வைத்து அப்படி ஒரு சொல்லை உருவாக்குகிறார்கள் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு சம்பந்தமே இல்லாத ஒலிகளை/சொற்களை சில பொருட்களுக்குக் கொடுப்பார்கள். அதில் அலோ என்றால் ஃபோன் போன்ற இலகுவான சொற்களும் இருக்கும். அம்மா, அப்பாவுக்கு அடுத்து அம்மு சொல்லியது அக்கா என்ற சொல். அந்த அக்காவின் தொனியை வைத்து என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியும். அடுத்து கடாபுடாவென்று அவர் பேசத் தொடங்கியபோது.. அவளவு சரளமாக எனக்குப் புரியும் என்பது போல் பேசிக்கொண்டே போவார். இடையிடையே என்னிடம் பதில் வேறு எதிர்பார்ப்பார். ‘என்னவாம்டி’ என்று கேட்கும் கண்சுக்கு மொழிபெயர்ப்பது நான் தான். சது அவளவாகப் பேசியதில்லை. சிரிப்பும், தலையசைப்பும், அம்மா என்பதுமாகவே காலத்தைப் போக்கிவிட்டார். ஹிஹிஹி.. வருங்காலத்தில் வரப் போற மாப்பிள்ளை, மருமகள் நிலமை பற்றி நினைத்துப் பார்த்தேன்.

@@

கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால் இம்புட்டு அப்பாவியாவா இருந்திருக்கேன்னு தோன்றுகிறது. வருங்காலம் ரொம்பவே மிரட்டுகிறது. அட உங்களை இல்லைங்க. என்னை..

வர்ட்டா..

20 நல்லவங்க படிச்சாங்களாம்:

நிரூபன் said...

அப்பப்போ நினைச்சும் பார்க்கணும்!!//

இன்றைக்கு ஞாபக மீட்டல் பதிவா...

நிரூபன் said...

இன்னமும் அவனுக்கும் சேர்த்து தண்டத்துக்கு hand cream//

hand கிறீமில் dry skin, Normal Skin இற்கு என்று இருவகைகளைத் தான் இலங்கையில் இருக்கின்றன. ஆண், பெண்ணிற்கு என்று வெரைட்டியான கீறிம் இருக்கிறதை இப்போது தான் அறிகிறேன்.

நீங்க 21ம் நூற்றாண்டில் இருக்கிறீங்க..

நாங்க 20ம் நூற்றாண்டு..;-))

ஹி...ஹி

நிரூபன் said...

எனக்குத்தான் தங்கச்சியே கிடையாதேடா’ என்று கண்ஸ் கிண்டல் செய்தார்//

ஹா...ஹா...

நிரூபன் said...

‘இத்தக்குக்கு பித்தாக்கு குதாங் இஞ்கா உவ்வி உவ்வி காவா கவ்..//

மழலை மொழி, கேட்க கேட்க காதிற்கு இனிமை தரும் மொழி.

கோபிநாத் said...

\\என் மருமகள் சைடு ஆளுங்க வருங்காலத்தில் எனக்கு என்ன வசியம் செய்வார்களோ என்று நினைத்துப் பார்த்தேன்\\

;))) ஓவர் நினைப்பு உடம்புக்கு ஆவாதுக்கா ;)))

யாதவன் said...

நினைவுகள் என்றும் பசுமையானவை
எழுதிய விதம் அருமை

எல் கே said...

//முதல்ல டேஸ்ட் பார்த்தேன். ம்ம்ம்ம்.. ரொம்ப நல்லாருக்கு. இனிமேலதான் குடிக்கப் போறேன்’ //

ஒரு வேலை பய்யன் கண்ஸ் மாதிரி புத்திசாலியா இருப்பான்னு நினைக்கிறேன்

எல் கே said...

//முதல்ல டேஸ்ட் பார்த்தேன். ம்ம்ம்ம்.. ரொம்ப நல்லாருக்கு. இனிமேலதான் குடிக்கப் போறேன்’ //

ஒரு வேலை பய்யன் கண்ஸ் மாதிரி புத்திசாலியா இருப்பான்னு நினைக்கிறேன்

Chitra said...

உற்சாகமான பகிர்வு.... முகத்தில் ஒரு புன்னகையுடனே வாசிக்க வைத்தது.

r.v.saravanan said...

பசுமையான நினைவுகள் இனிமை தான்

சுசி said...

நிரூபன்.. பொதுவா ஆண்கள், என்னவர் உட்பட, பர்ஃபியூம் ஃப்ரீ க்ரீம்தான் உபயோகிப்பாங்க. இலங்கைல இருந்த வரைக்கும் நான் முகத்துக்கே க்ரீம் போட்டதில்லை :)
ஞாபக மீட்டல் கூடவே வருங்கால எதிர்பார்ப்பும் :)

@@

கரீட்டு கோப்ஸ்.. அதான் ரெண்டு வாரம் மெடிக்கல் லீவ் டாக்டர் குடுத்தார் :) இன்னைக்கு போதும்னு நினைக்கறேன்.. ஹஹாஹா..

@@

நன்றி யாதவன்.

சுசி said...

நினைக்கவே வேணாம் கார்த்திக்.. அதான் நிஜம் :) அத ரெண்டு தடவை சொல்ணுமா.. ரைட்டு :)

@@

நன்றி சித்ரா.

@@

கண்டிப்பா சரவணன்.

ப்ரியமுடன் வசந்த் said...

சது மாப்ள உங்கம்மா இப்போவே கனா காண ஆரம்பிச்சுட்டாங்கடோய் சீக்கிரம் ஒரு நல்ல புள்ளய சைட்டடிக்கவாது ஆரம்பி :)

ப்ரியமுடன் வசந்த் said...

//இலங்கைல இருந்த வரைக்கும் நான் முகத்துக்கே க்ரீம் போட்டதில்லை :)//

ஐஸ்வர்யா ராய்ன்னா சும்மாவா? பிப்பீ பிப்பீ குழந்தை பாஷை மாதிரியே இது என்னான்னும் கண்டுபிடிங்க்கா :))

Balaji saravana said...

//கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால் இம்புட்டு அப்பாவியாவா இருந்திருக்கேன்னு தோன்றுகிறது.//
ஹி ஹி.. ரைட்டு. பிட்டு எக்ஸ்ட்ராவா போட்டுட்டீங்க சுசி! :))

அமுதா கிருஷ்ணா said...

நைஸ்.

சுசி said...

பொய்யி பொய்யின்னு சொல்றாப்லை இருக்கு வசந்து.. தெரியலையேப்பா..

ம்க்கும்.. நாங்க பெத்தவுங்க அப்டித்தான் கனவு காணுவோம்.. நீங்க புள்ளைங்க பாத்து சூதானமா இருக்கணுமப்பு :)))))

@@

பாலாஜி.. அசடா இருந்தேன்றத மாத்திப் போட்டிருக்கேன் :)

@@

நன்றி அமுதாக்கா.

logu.. said...

ஹய்யோ..ஹய்யோ

அஹமது இர்ஷாத் said...

Good Good :)

மாணவன் said...

பசுமை மாறா நினைவுகள்..... நல்லாருக்குங்க :)