Pages

  • RSS

10 April, 2011

என் கண்ணன்..

சீடன். எதிர்பார்க்கவே இல்லை இப்படிப்பட்ட ஒரு படமாக இருக்குமென்று. விமர்சனங்கள் படிக்காமல், கேட்காமல் படம் பார்த்து மலைப்பதும் வித்தியாசமான அனுபவம்தான். எனக்குப் பிடித்த காதல். எனக்குப் பிடித்த வலியோடான காதல். அடுத்து நடக்கப் போவதை மட்டுமில்லாமல் முடிவைக் கூட முன்னாடியே ஊகிக்க முடிந்தது. எந்த திடீர்திருப்பங்களும் இல்லை. இருந்தாலும் ஏனோ மென்மையாய்.. மயிலிறகாய் வருடியது கதை.. படம்.

எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஒரு கண்ணன் படம் எப்போதும் இருந்தது. செப்பு வாயும், வட்டக் கண்களும், அலை அலையாய் கருமுடியும், எதையோ சொல்வதாய்/எதிர்பார்ப்பதாய் அந்தக் கண்களில் வழியும் கருணையும்,  பஞ்சுக் கை உயர்த்தி வெண்ணெயை எமக்குத் தருவதாய் இரு கால் நீட்டி உட்கார்ந்திருப்பான் குறும்புக்காரன். என் பொல்லாத போக்கிரிக் கண்ணன் என்னைக் கை நீட்டி  அழைப்பதாகவே என் கண்ணுக்குத் தெரியும். அப்போதிருந்து அவனுக்குத் தனியாகப் பூ வைக்க ஆரம்பித்தேன். காதல் என்றால் கண்ணன் என்று புரியத் தொடங்கியதில் இருந்து அவனோடான என் உறவும் நெருக்கமாய் ஆனது. நாங்கள் இடம்பெயர்ந்து எங்கு போனாலும் அங்கே அவன் வந்துவிடுவான். அவனில்லாத இடத்தில் மயிலறகில் அவன் உருவம் பொருத்தி வணங்கிய நாட்களும் உண்டு.

012 இங்கே வந்த புதிதில் பூஜை அறையில் அவன் இல்லாத கவலையை அடுத்த வருடமே காலண்டர் வடிவில் வந்து போக்கினான். கன்சீவ் ஆகி இருந்த சமயங்களில் அந்தக் குழந்தைக் கண்ணனின் குறும்பு முகத்தைப் பார்க்கத் தெவிட்டுவதே இல்லை. இப்போது போலவே.

 

மீண்டும் சீடன். மனதை அழுத்திய வலியோடு அசையாது பார்த்துக்கொண்டிருந்தேன். ’நீயும் நானும் மட்டும்தான் இங்க இருக்கோம்னு நினைச்சுப்பாடு’ என்று பாட்டிம்மா சொல்ல மகா பாடத் தொடங்கியதும் கண்ணீர் கட்டுக்குள் இருக்கவில்லை. சுகமான அழுகையோடு இன்னொன்றும் தோன்றியது. சித்ரா அற்புதமாகப் பாடி இருந்தாலும் அனன்யாவுக்கு அவரின் குரல் கொஞ்சமாய் பொருந்தவில்லை. நன்றாக நடித்திருக்கிறார் அனன்யா. தனுஷ் முருகனாய் காட்சி கொடுத்த இடத்துக்குப் பக்கத்தில் சேவல் காணிக்கை செலுத்துமிடம் என்று எழுதப்பட்டிருந்தது சின்னதாய் ஒரு சிரிப்பைத் தந்தது.

தினாவின் இசையில் பா.விஜயின் வரிகள் காதலின் வலியை அழகாய்ச் சொல்கின்றன. முருகனிடம் பாடலைக் கேட்கும் நானும் வேண்ட ஆரம்பித்துவிட்டேன். நீங்களும் கேட்டு, பாருங்க.

--

ஒரு நாள் மட்டும் சிரிக்க
ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம்
மறுநாள் அந்த செடியில் 
அந்த மலர் வாடிய பொழுதில்
பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்..

(ஒரு நாள்..)

கண்பார்வை பறித்து எனை காண சொல்கிறாய்
வெந்நீரை ஊற்றி ஏன் பூக்கச் சொல்கிறாய்
ஊமையாய் மாற்றியே பாடவும் கேட்கிறாய்
நான் சரியா இல்லை தவறா
நான் கனவு எழுதி கலைந்து போன கதையா..

(ஒரு நாள்..)

உன் மீது சிந்தும் நீர் தீர்த்தமானதே
உனைச் சேரும் சாம்பல் திருநீறும் ஆகுதே
உருகியே கேட்கிறேன் அடுத்த என் பிறவியில்
மனம் இரங்கி அருள் வழங்கி
உன் கோயில் படிகள் ஆகப் பிறக்கும் வரம் தா..

முருகா என் சலனம் சலனம் தீர்க்க வேண்டும் முருகா
இந்த ஜனனம் ஜனனம் போதும் போதும் முருகா
உன் சரணம்.. சரணம் முருகா..


14 நல்லவங்க படிச்சாங்களாம்:

நிரூபன் said...

சீடன் படம் மீதான ஒரு பார்வையோடு, உங்கள் வீட்டில் உள்ள கண்ணன் மீதான உள்ளார்ந்த ஈடுபாட்டையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ராமலக்ஷ்மி said...

பாடல் மிக அருமையான பகிர்வு சுசி. நன்றி.

நிரூபன் said...

பாடல் கூட இனிமையான ஒரு பெண் குரலில் மனதை வருடும் வண்ணம் ஒலிக்கிறது, ஆனால் பாடியவர் யார் என்பதைக் கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

கோபிநாத் said...

நல்ல விமர்சனம் - அனுபவ பதிவு ;)

உங்களுக்கு தெரியுமான்னு தெரியல இது ஒரு மலையாள படம் - விபரம் http://kanapraba.blogspot.com/2008/01/blog-post.html
தல மிக அருமையாக ஒரு பதிவு இருக்கு இந்த படத்தை பத்தி முடிந்தால் படியுங்கள் ;)

\\சித்ரா அற்புதமாகப் பாடி இருந்தாலும்\\

மலையாளத்தில் பாடியதற்க்கு சித்ராவுக்கு விருது கொடுத்தாங்க.

அது மட்டும் இல்லமால் சித்ரா மலையாளத்தில் அந்த பாடலை (கடைசியில் வருதே பாடல் அதுல கண்ணனை நினைத்து பாடும் பாடல்)
பாடும் போது நீண்ட வருட்ஙளுக்கு பிறகு அப்போ தான் சித்ரா நிரைமாத கர்பிணி. அந்த பாடல் பாட முடியாதுன்னு என்று சொல்லியும் நீங்கள் தான் பாட வேண்டும் என்று மிகவும் கஷ்டங்களுக்கு நடுவில் அவ்வளவு உணர்வு கலந்து அந்த பாடலை பாடினாங்க. படம் மிக பெரிய வெற்றி - பிறகு அழகான ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனாங்க சித்ரா - அந்த பெண் குழந்தையின் பெயர் நந்தனா ;)


ப்ரித்விராஜ்க்கு அந்த மலையாள படம் தான் முதல் படம் ;)

இன்னும் நிறைய பீட்டு இருந்தாலும்
இந்த படத்தை (சீடன்) பார்க்கவே கூடாது என்ற முடிவில் இருப்பதால் எஸ்கேப்பு ;)

vinu said...

NALLAA IRRUKUMO PADAM?

எல் கே said...

அட நீங்களும் கண்ணன் பக்தையா ? நல்லது நல்லது

Balaji saravana said...

படம் மொக்கைன்னு நண்பர்கள் சொன்னதால பார்க்கல.. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன். :)

அமுதா கிருஷ்ணா said...

தியேட்டர் போவது வேஸ்ட் என்று சொன்னார்களே.வீட்டில் பார்க்கணும்.

யாதவன் said...

கண்ணனை விபரித்த விதம் அழகு

யாதவன் said...

படத்தையும் உங்கள் வாழ்கையின் சில சம்பவங்களையும் முடிச்சு போட்டது அழகு

யாதவன் said...

உங்கள் பாடல் தெரிவு மிக மிக அழகு

r.v.saravanan said...

பாடல் பகிர்வு நன்றி சுசி.

அப்பாவி தங்கமணி said...

Nice விமர்சனம்..:)

சுசி said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிரூபன். பாடியது சித்ரான்னு //சித்ரா அற்புதமாகப் பாடி இருந்தாலும் // சொல்லி இருக்கேங்க :)

@@

நன்றி அக்கா.

@@

எனக்கு இதெல்லாம் தெரியாது கோப்ஸ். ஆனாலும் சித்ரா.. இப்போ வலிக்குது.. நீங்க சொல்லி இருக்கிற விஷயம்.. பிள்ளையாரே.. பெத்த வயிறு எப்டித் தவிக்கும் :((((