என்னோட ஒரு ஃப்ரெண்டு கிட்ட பேசும்போது ஹாப்பி கிறிஸ்ட்மஸ்னேன். லூசா நீன்னு கேட்டு அலுத்திடுச்சோ என்னமோ என்னாச்சு.. எதுக்கு இப்போ சொல்றேனுச்சு. ஏப்ரல் முடிஞ்சு மே மாசமும் வரப் போது, ஆனா இன்னமும் ஸ்னோ கொட்டிட்டு இருக்கிற ஊர்ல இருந்துக்கிட்டு, வேற என்ன சொல்ல நான்..
வெயிலடிக்கும்.. மழை பெய்யும்.. அதுவே ஆலங்கட்டி மழையாகும்.. அப்டியே ஸ்னோவா கொட்டும்.. இவளவும் அரை மணி நேரத்துக்குள்ள நடக்கும். மறுபடி வெயில்.. மழை.. இயற்கை வித்தை காட்டிட்டு இருக்கு. அப்போதான் ஆஃபீஸ்ல ஆளாளுக்கு சொல்லிக்க ஆரம்பிச்சோம் ஹாப்பி கிறிஸ்ட்மஸ். இடுக்கண் வருகில் நகுகனு சும்மாவா சொன்னாங்க. ஜாலியா இருந்துது அப்புறம். அதுவும் பொறுக்கலை போல இயற்கைக்கு. வெள்ளி காலேல வழக்கம் போல அலாரம் அலற அலறி அடிச்சிக்கிட்டு எந்திரிச்சு ரூம விட்டு வெளிய வந்தா வழக்கமா கதவு வழியா தெரியிற வேலி, கார், மலை, வீடுகள் எதையும் காணோம். கண்ணாடி போட்டிருக்கேனான்னு தொட்டுப் பாத்தா இருக்கு. என்னடா இதுன்னு கிட்டக்க போயி பாத்தா ஸ்னோ.. ராத்திரி பூரா கொட்டி வச்சிருக்கு. சம்மர் டயர் ஸ்லிப்பாக உயிர கைல பிடிச்சிக்கிட்டு வேண்டுதலோட ஆஃபீஸ் போனேன்.
பாருங்க.. முதல் படத்தில ஆலங்கட்டி மழை.. அடுத்து ஸ்னோ. மொபைல்ல எடுத்ததால கொஞ்சம் க்ளியரா இல்லை.. (இல்லேன்னா மட்டும்??)
இதுக்கும் முன்ன இருந்த ஸ்னோவோட மிச்ச சொச்சத்த ஃபோட்டோ எடுத்ததா போன பதிவில நான் சொன்னத நீங்க மறந்தாலும் நான் மறக்கல. அதையும் பாருங்க.
முன்னாடி ப்ளே க்ரவுண்ட், எங்க உள்பாதை.
ரெண்டு வீட்டுக்கும் இடையில பெரிய குவியல், ரோட், வீட்டு முற்றம்.
இத முதல் இந்த பதிவில சேர்க்க மறந்துட்டேன். இந்த வருஷ அமோக ஸ்னோவ வழிக்கிறத்துக்கும், அள்ளி எறியவும்னு வாங்கிய ஆயுதங்கள். ரெண்டு மூணு ஸ்னோல புதைஞ்சு வேற போச்சு.
அப்டியே அந்த படங்கள்ல பாருங்க ஸ்னோவோட இந்த இடமெல்லாம் எப்டி இருந்திச்சுன்னு, நேரம் கிடைச்சா..
வர்ட்டா..
18 நல்லவங்க படிச்சாங்களாம்:
//. கண்ணாடி போட்டிருக்கேனான்னு தொட்டுப் பாத்தா இருக்கு//
சூப்பர்...
எங்க மனுசங்க இங்க வெயில காஞ்சு போயிருக்கான் நீங்க என்னடான பனினு சொல்லி....
குளு குளு பகிர்வுக்கு நன்றி சுசிக்கா...ஜில்லுனு இருக்கு....ஹும்ம்ம்ம்...
உங்கள் பதிவில் படங்கள் எப்பொழுதும் "ஜில்லுனு" இருக்குதுங்க......
சூப்பர் படங்கள்
உங்க நிலைமையை நினைச்சு எப்படி ரீயாக்ட் செய்யுறதுன்னே தெரியல.
ஆனாலும் படங்கள் எல்லாம் நல்லா தான் இருக்கு ;)
இங்க வெயில்ல அவனவன் மண்டைல நாட்டியம் ஆடுது... ஏதாவ்து சொல்லிட போறேன்... ம்ருவாதையா படஙக்ள எடுத்திடுங்க :)))
அருமையான எழுத்து நடை . மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
hey hey am
the first
susima..konjam late aitu..
paren evlo alga erukku enna pola
anaithu padangalum
apprum norway supera erukku
athvum ungal pugaipadangal polavum
padiugal polavum..
(enaku oru doubt neenga yen enda blog pakam enterey ???agamatrengal.appdi payama..
susima
appuram
varatta..
varuthapadtha vaasippor sangam
complan surya
படங்கள் அருமை என்றால் பனிக்குள்ளே நீங்கள் திண்டாடுவது அருமை என்பதாகி விடுமோ தெரியல! ஆனாலும் பகிர்வுக்கு நன்றி.
இங்கே பெங்களூரில் கூட ஆலங்கட்டி மழையாக்கும்:)!
இல்லையே ஸ்னோனு இல்ல சொல்லி இருக்கேன். சரியா படிங்க LK..
E E E E E
திட்றிங்களா பாராட்டறிங்களா சீமான்??
E E E E E
சித்ரா.. நன்றிங்க..
நன்றி ஜெய்லானி.
E E E E E
அழுதிடுங்க கோபி.. அதான் பெஸ்டு.. அவ்வ்வ்வ்..
E E E E E
இன்னும் படங்கள் எடுக்கணுமா கார்க்கி?? ஸ்னோ கரைஞ்சு போச்சேப்பா.. இப்போ ஒன்லி மழை :(
ஐ லைக் யுவர் நேர்மை சங்கர். படிச்சு கமண்ட் எழுதின ஒரே ஆள் நீங்கதான். கிர்ர்ர்..
E E E E E
நன்றி சூர்யா.. படிச்சிடலாம்..
E E E E E
அப்டி இல்லை அக்கா.. கஷ்டம்னாலும் சமாளிக்கறோம். உங்க கூட பகிர்ந்துக்கிறதால ஆறுதலாவும் இருக்கு.
ஆலங்கட்டி மழைய ஃபோட்டோ எடுதிங்களா??
முயற்சித்தேன் சுசி. ஒரு இன்ச் சன்னலைத் திறந்தாலும் ஆளைத் தள்ளும் புயல் காற்று. முயற்சி தோல்வியுற காமிராவை கீழே வைத்து விட்டு பேசாம ஒரு கவிதை எழுதி வைத்து விட்டேன்:))!
ஆஹா... எந்த ஊருப்பா இது? எங்க ஊர (கனடா) விட மோசமா இருக்கும் போல. இங்கயும் இன்னும் காலை நேரம் நல்லா குளிருது. கொடுமைக்கி ஏப்ரல் முடிய போகுது... ஒசான் முத்திடுச்சுடா சாமி. போடோஸ் நல்லாவே எடுத்து இருக்கீங்க
ம்ம்... இங்க வெயில் கொடுமை..அங்க பனிக் கொடுமையா
சூப்பர் மேடம்.
ஹாப்பி கிறிஸ்ட்மஸா ..நார்மலா மெரி கிறிஸ்ட்மஸ்னு தானே சொல்லணும்.. ;);)(இதுக்கு அடுத்த வருசமே கமெண்ட் போட்டு இருக்கலாம் இவன்னு தோணுதா..;););)
அச்சச்சோ.. நல்ல வேளை இங்க புயல் காத்து இன்னும் வர்ல..
உங்க கவிதையே கதை சொல்லுமே அக்கா.. அது போதும் :))
E E E E E
முதல் வருகைக்கு நன்றி தங்கமணி. உங்க ஊரளவு குளிர் இல்லை இங்க. இந்த வருஷம்தான் இப்டி சாமி ஆடுது.
E E E E E
ஹஹாஹா.. அதே அதே ராஜி.
ககபோ நர்சிம்.. அவ்வ்வ்..
அது நார்மலா கிறிஸ்ட்மஸ் டைம்ல சொல்றது.. இது அப்நார்மலா சம்மர் டைம்ல சொல்றது..
கண்டிப்பா தோணுது.. ஏன்னா இதையே அடுத்த போஸ்டோட முத பத்தியா எழுத இருந்தேன்.. ஆவ்வ்வ்..
Post a Comment