அவன் நண்பன் வீட்ல இருந்தான். அவனைப் போலவே பட்டு வேஷ்டி சட்டையில இருந்த நண்பன் அப்பா கிட்ட பேசிட்டு இருந்தான். எல்லாரும் கோயிலுக்கு போக ரெடி ஆயிட்டு இருந்தாங்க. நண்பனோட ரெண்டாவது தங்கை அப்பா கிட்ட கையில ப்ரேஸ்லட் கட்டி விட சொல்லி ஹெல்ப் கேட்டா. அவரும் எந்திரிச்சு கொக்கிய மாட்டிக்கிட்டிருந்தார். அப்போதான் கவனிச்சான். இத்தனை நாளா எப்டி கவனிக்காம போனோம். தினமும் பாக்கிறதால தெரியலையா. குழப்பம். கொஞ்சம் அதிர்ச்சி. இல்ல. நம்பி பழக விட்டிருக்காங்க. இது தப்பு. கவனமா இருக்கணும் இனிமே. கட்டாயமாக பார்வையை அவளிடம் இருந்து திருப்பிக் கொண்டான். புது ட்ரஸ் போட்டுக் கிட்டு திருவிழாவுக்கு போற சந்தோஷம் அப்டியே முகத்தில தெரிய தேவதை ரேஞ்சுக்கு இல்லேன்னாலும்.. எதுவோ ஒண்ணு இவ கிட்டவும் இருக்கத்தான் செய்யுது. நினைத்துக் கொண்டான், அதன் பின் அவன் அதை மறந்தே போனான். (இருந்தாலும் காலம் அதை மறக்கல. தப்புக்கு தண்டனை வழங்க காத்துக்கிட்டு இருந்துது)
)()()()()(
பைக் சத்தம் கேட்டது.. வரார் ஹீரோ.. நினைத்துக் கொண்டாள். ஆமாம். இப்போ ஆள் இன்னும் அழகா வந்து ஹீரோ மாதிரித்தான் ஆயிட்டாரு. என்ன இது?? அண்ணன்களோட நண்பன்.. இப்டில்லாம் நினைக்க கூடாது. இது தப்பு. முதல்ல படிக்கணும். ஆனா அன்னிக்கு அவங்க மான் குட்டிய கொண்டு வந்து காட்னப்போ அது ஓடாம பிடிச்சுக்கன்னு என் கையையும் சேர்த்து அவர் பிடிச்சப்போ ஜில்லுன்னு எதுவோ ஆச்சுதே?? இனிமே கவனமா இருக்கணும். அவனுடன் பேசுவதை முடிந்த வரை குறைத்துக் கொண்டாள். போராட வேண்டிய தேவை எதுவும் இல்லாமல் தோன்றிய எண்ணம் தானாக மறைந்து போனது. அதன் பின் அவள் அதை மறந்தே போனாள். (இருந்தாலும் காலம் அதை மறக்கல. தப்புக்கு தண்டனை வழங்க காத்துக்கிட்டு இருந்துது)
)()()()()(
இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்த அவன், அம்மாவையும் இலங்கையிலிருந்து கூப்பிட்டிருந்தான். அம்மா கேட்டாங்க.. “ஏம்பா அங்கிளோட ரெண்டாவது பொண்ண உனக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கேன். நல்ல பொண்ணுதானே. நீ என்ன சொல்றே..” “நீங்களா கேட்டிங்களா” “இல்லப்பா.. அவங்க உறவில யாராவது நல்ல பொண்ணு இருந்தா பாக்க சொல்லி உன் ஜாதகம் கொடுத்தேன். அவர் தன்னோட ரெண்டாவது பொண்ணுக்கு பாக்கலாமான்னார். நான் உன்ன கேட்டு சொல்றதா சொல்லி இருக்கேன்” “அவங்களுக்கு சம்மதம்னா எனக்கும் ஓக்கேதான்.” அவளுக்குன்னு ஒரு புடவை ஸ்பெஷலா அம்மா கிட்ட வாங்கி குடுத்தான். அம்மா சந்தோஷமா ஊருக்குத் திரும்பிப் போனாங்க.
)()()()()(
பள்ளியில அன்னிக்கு இலவச சீருடை வழங்கினதால அவ கிளாஸ்ல மொத்தமா வந்திருந்த முன்னூத்தி சொச்ச பசங்களையும் ஒரு வழியா உக்காத்தி வச்சிருந்தா. புது துணிய பாத்த சந்தோஷம் ஒவொரு பிஞ்சு முகத்திலேம். தலைவலியையும் மறந்து ரசிச்சுக்கிட்டே தொடர்ந்து வேலை பார்த்தவளை சக ஆசிரியர் கூப்டார். “எப்டித்தான் இந்த கஷ்டத்திலேம் சிரிச்சுட்டு உக்காந்திருக்கீங்களோ.. உங்க அப்பா வந்திருக்கார். போய்ப் பாருங்க.” “அய்.. டீச்சர் அப்பாஆஆஆஆ..” ஆரவாரம் போட்ட பசங்கள க்ளாஸ் லீடர பாத்துக்க சொல்லிட்டு அப்பா கிட்ட ஓடிப் போனா. “என்னப்பா இந்த நேரம்?? அண்ணா வந்திருக்காரா?? லீவ் போட்டுட்டு வரட்டுமா??” படபடத்தவளை சின்னச் சிரிப்பால அடக்கினவர் சொன்னார். “அதெல்லாம் இல்லம்மா. ஆண்டியோட ரெண்டாவது பையன உனக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கோம். நீ என்ன நினைக்கிறே..” நேரடியான கேள்வி. கொஞ்சம் கூட எதிர் பார்க்காததால அவள் அதிர்ச்சி வெளிப்படையாய் தெரிஞ்சது. தொடர்ந்தார் அவர்.. “அண்ணா அக்கா கிட்ட லெட்டர் மூலம் கேட்டாச்சு. அம்மா ரஜிக்கு முழு சம்மதம். நீ என்ன சொல்றே” “அவரு ரொம்ப கோவக்காரராச்சேப்பா. என் மேலயும் கோபப்பட்டுட்டார்னா??” சம்மதத்தை இந்த மாதிரியும் சொல்ல முடியும்னு காட்டிய சின்னப் பொண்ண நினைச்சு சிரிச்சுக்கிட்டே வீடு நோக்கி பைக்ல போயிட்டிருந்தார் அப்பா.
இண்டர்வல் முடிச்சு மறுபடி சீருடையில மூழ்கிப் போய் இருந்தவள தாய்மாமன் வகுப்பறைக்கே வந்து கூப்டார். முகம் பார்த்ததுமே அவளுக்கு புரிஞ்சிடுச்சு. “என்ன மாமா.. போற வழியில அப்பா சொல்லிட்டு போய்ட்டாரா??” “ம்ஹூம்.. இங்க வரும்போது சொன்னாரும்மா. அத்தையும் கூட வரேனாங்க. நாந்தான் இல்ல நான் பாத்துட்டு வரேன்னுட்டு வந்தேன். உன்ன பாக்கவே சம்மதம் சொல்லிட்டேனு தெரியுது. நான் இப்பவே போயி அத்தை கிட்ட சொல்றேன்”னு கிளம்பினார். “என்ன டீச்சர்.. முதல்ல அப்பங்காரன் வரார்.. இப்போ மாமங்காரன் வரார்.. என்ன நடக்குது இங்க” கிண்டல் பண்ண அதே சக ஆசிரியருக்கு “போங்க சார்.. நீங்க வேற.. முடிஞ்சா கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணுங்க.. ஸ்கூல் முடியிறத்துக்குள்ள மீதியையும் குடுத்து முடிச்சிடணும்”னு சொல்லிக் கிட்டே மறுபடி வேலையில் மூழ்கினாள். காலேலயே குண்டு விமானம் ரெண்டு சுத்து சுத்திட்டு போயிருக்கு. நாளை பள்ளி நடக்குமோ இல்லையோ.. கண்டபடி குழம்பிய மனச விட இன்னைக்கு நம்பி வந்த பிஞ்சு மனங்கள் வாடிப் போகாம சீருடை வழங்குறது முக்கியம்னு அவளுக்கு தோணிச்சு.
)()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()(
விதி வலியதுங்க. அதோட கூட்டு சேர்ந்து காலமும் காத்துட்டு இருந்துதா..
24.04.1998..
09:23 - 10:23 க்கு இடைப்பட்ட சுப நேரத்தில..
தண்டனைய நிறைவேத்திடுச்சு.
அதாங்க. நீங்க நினைச்சதேதான். அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம்.
சரியான தண்டனை தானுங்களே.. நீங்க என்ன சொல்றீங்க??
எனக்கும் என் அன்புக் கண்ணாளனுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள சொல்லிக்கிறேன்.
பெற்றார், உற்றார், சுற்றம், சோதரம், நட்புனு சுத்திக்கிட்டு இருந்தவ, தன்னந்தனியா பக்கத்து வீட்டுக்கு போகக் கூட பயந்தவ என்னிக்கு தனியா ஃப்ளைட்டேறி வந்து இவர் கிட்ட சேர்ந்தேனோ அன்னிலேர்ந்து அத்தனையும் எனக்கு அவராய். கண்ணாளனாய், கண்ணனாய், பொறுக்கியாய், போக்கிரியாய், நண்பனாய், நாயகனாய் சமயத்துக்கேற்ப அவர் உறவு முறை மாறும். நண்பியோட அப்பா எப்போதும் சொல்வார். என் குணம்தான் அவருடைய பலம்னு. கேக்கும்போது பெருமையா இருந்தாலும் இதையும் நான் ஒத்துக் கிட்டுதான் ஆகணும். என்ன ஒவொரு படியா முன்னேற வச்ச முழுப் பொறுப்பும் அவரதுதான். நான் இருக்கேன்ல.. நீ செய். எப்போதும் எனக்கு அவர் சொல்றது. எங்களுக்கிடையான காதல், கோபம், குறும்பு, அன்பு எல்லாத்தையும் அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் உங்க கூட பகிர்ந்துக்கிட்டேன்.. இனியும் அது தொடரும்.
இந்த தடவை சனிக்கிழமைல வந்திருக்கிறதால கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. மாலை ஆறு மணிக்கு சின்னதா ஒரு பார்ட்டி.. எல்லாரும் வந்திருங்க. கண்டிப்பா சமையல் நான் தான். இதுக்கு அப்புறமும் வரவங்க நலத்துக்கு யாவரும் நலம் எந்த வகையிலேம் பொறுப்பு கிடையாது. இது எச்சரிக்கை இல்லை.. வேண்டுகோள்!!
வர்ட்டா..
24 நல்லவங்க படிச்சாங்களாம்:
hey hey hey
am the first first.
my best wishes susi
surya..
"இருந்தாலும் எவ்ளோ பெரிய தண்டனையா
குடுத்து இருக்க கூடாதுதான்...!
எதிர்பாராது விதி வலியதுதான்...!
வாழ்க வளமுடன்
இப்போதும்,
எப்போதும்,
தீர்க்க ஆயுளைடனும்,
நீண்ட சந்தோசத்துடனும்
வாழ எல்லாம் வல்ல இறைவனையும்
பிறகு
என்நண்பன் சாமி பிள்ளையாறியும்,
பலசாலி நண்பன் ஆஞ்சிநேயரையும்
அல்லாவயும்
ஏசுவயும்
எங்கள் சங்கம் வேண்டிகொள்கிறது
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா
padiva padikka oodivanthen...
etho vera matter chollaporenganu patha...
eppdi oru kunda..thokkipotu vitenga..
sari paravala..thedirunu chonathala yerpadugal ethvum siayamudiala..
athanal enga valtha varuvor annaivarukum kaikoopi vanakathium..
2 milkybar choclatum valagapadum enbathi mikka mahilichioda arivikirom..neram sariyaga 6mani alavil susima vettil nadaiperum...
eppdiku
v.v.ssangam sarbaga
complan surya
என் மனம் கனிந்த இனிய மன நாள் வாழ்த்துக்கள் . உங்க திருமண கதைய ரொம்ப வித்யாசமா எழுதினீங்க.. சாப்பிட வரோம் எங்களுக்சு பிரச்சனை ல்லை. ஆனா பாருங்க அவர் பாவம் இன்னிக்காவது நல்ல சாப்பட்ட சாப்பிடட்டுமே
இனிய வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சுசி.
வாழ்த்துகள்..
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ் வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள்!!!
:-)
//எனக்கும் என் அன்புக் கண்ணாளனுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள சொல்லிக்கிறேன். //
பயந்துகிட்டே படிச்சேன். நல்ல வேளை. இந்த நாள் சந்தோஷம் வாழ்வில் நீடிக்க இறைவனை வேண்டுகிறேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ஆகா...சூப்பரு ;))
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))
சுசி காவுக்கு என் உள்ளம் கனிந்த திருமண நாள் வாழ்த்துகள்...இருந்தாலும் இந்த உச்சகட்ட தண்டனை உச்சு கொட்ட வைத்து விட்டது...தவறுகளில் மனிதன் திருந்துகிறான் தண்டனைகளில் திருத்தப்பாடுகிறான்....பித்துவம்.
தப்பிக்கவே முடியாதா...
வாழ்த்த்துக்கள் இன்றுபோல் என்றும் சந்தோசமாக வாழ.
வாழ்த்துகள்
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்னிக்குத்தான் பதிவைப் பார்க்க முடிந்தது. ரொம்ப மகிழ்ச்சி. இனிய திருமண வாழ்த்துக்கள். இன்றும் போல என்றும் வாழ்க வளமுடன்.
கொஞ்சம் லேட்டா வந்ததுக்கு மன்னிச்சுக்கே. குணா மாமாவுக்கும் எனது வாழ்த்துக்களை கூறிவிடு. மிக்க மகிழ்ச்சி.
பசங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
பாவம் குணா சார், ஏமாந்துட்டார், என்ன செய்வது. ஒரு நிமிசத்தில் வரும் ஆசை, சில சமயங்களில் உங்களை மாதிரி நல்ல மனைவியை அளிக்கின்றது.
//தண்டனைய நிறைவேத்திடுச்சு.///
எல்லாருமே ஒரே மாதிரி தான்யா நினைக்கிறாங்க
//தண்டனைய நிறைவேத்திடுச்சு.///
எல்லாருமே ஒரே மாதிரி தான்யா நினைக்கிறாங்க
----same blood...hahahaha..
dont worry manguni amacharey... மங்குனி அமைச்சர்..all will solve..
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மேடம்.
நன்றி சூர்யா..
D D D D D
ஹிஹிஹி.. அதனாலதான் நானே சமைக்கிறேன் LK :))
D D D D D
நன்றி ராஜி.
நன்றி அம்மிணி..
D D D D D
அன்று போலா கார்க்கி.. ரைட்டு!!
D D D D D
நன்றி சித்ரா.
ஜெய்லானி.. எதுக்கு பயந்திங்க??
D D D D D
நன்றி கோபி. பரிசு??
D D D D D
எதுக்கு சீமான் தப்பிக்கணும்.. நானும் அவரும்தான் திருத்தப்பட்டிட்டோமே :))
நலமா சந்ரு??
D D D D D
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜலக்ஷ்மி.
D D D D D
அண்ணா உங்களுக்குத்தான் தங்கை மேல எவ்ளோ பாசம் :))))
அமைச்சரே.. :))))
D D D D D
அமைச்சர் உங்க ஃப்ரெண்டா சூர்யா??
D D D D D
நர்சிம்.. அடுத்த உங்க கமண்டுக்கு இன்னும் ஒரு வருஷம் வெயிட் பண்ணணும் போல :)
ellarumey ennku theriyatha nanbargal than..
enta ulgamey enaku nanbargal.
oru sila perai enaku therium
avargal therinta nanbargal..
micham ulla anivarum theriyatha nanbargaley..
susima..
varta..
susima neengal enda blog pakkam varavey paypdrengal..yyyyy
Post a Comment