Pages

  • RSS

23 April, 2010

என் அன்பு அக்காவுக்கு..

எங்க வீட்டு நாட்டாமை.. என் அக்கா.. செல்லமா அக்காச்சின்னு சொல்லுவோம். எனக்கு அம்மாவுக்கு கூட பயம் இல்லைங்க. இவங்களுக்குத்தான் ரொம்ப பயப்படுவேன். ஒண்ணும் பண்ண மாட்டாங்க. ஒரு லுக்கு ஒண்ணு விடுவாங்க. ஆள் கருகிப் போறத்துக்குள்ள இடத்த விட்டு எஸ் ஆயிடணும். நாயே பேயேன்னெல்லாம் என்னய மாதிரி திட்டமாட்டா. ஆனா உனக்கு நான் முன்னாடியே சொல்லி இருக்கேன்னு ஆரம்பிச்சு திட்டுவா.  எதா இருந்தாலும் அவ கிட்டயும் ஒரு வார்த்தை  கேட்டு செய்வேன், இல்லேன்னா செஞ்சுட்டு இப்டி செஞ்சுட்டேன்னு சொல்வேன்.

søstreநாங்க இந்த சைஸ்ல இருக்கும்போது ஸ்கூல்ல பஞ்சில ஒரு பொம்மை செஞ்சு எனக்கு குடுத்தா. ரொம்ப காலம் அது கூட விளையாடி இருக்கேன். அது இந்த படம் பாத்ததும் நினைவு வந்துது..

 

 

 

 

சின்ன வயசில ஒரே டிசைன் துணியில ரெண்டு பேருக்கும் அம்மா ஃப்ராக் தச்சு குடுத்துடுவாங்க. ரெடிமேட்னா கூட ஒரே கலர், ஒரே டிசைன். கொஞ்சம் வளர்ந்ததும் அவ சண்டை போட்டு அந்த வழக்கம் இல்லாம போச்சு. இப்போ மறுபடி அம்மா ஆரம்பிச்சிருக்காங்க. அதாவது ஒரே சாரி.. வேற கலர். எனக்கும் அவளுக்கும் நாலு வயசு இடைவெளின்னாலும் பாத்தா ரெட்டைப் பிறவிங்க மாதிரியே இருப்போம். அவ திங்ஸ் நான் எடுத்தா அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. படிக்கனு வெளியூர் போனதும் நம்ம வேலைய காட்டிடுவோம்ல. எடுத்தத அப்டியே அந்த இடத்தில இன்ச் விலகாம வச்சிடுவேன். ரெண்டு மூணு தடவை செக் பண்ணுவா. அப்புறம் நான் படிக்கனு வெளியூர் போனதும் தானாவே எல்லாத்தையும் தந்து அனுப்புவா.

சின்னண்ணன் கூட கூட்டு சேர்ந்துட்டு என்னய அழ வைக்கிறது அவளுக்கு ஒரு ஹாபி. முடிய முகத்த மூடிக்கிறா மாதிரி பிரிச்சு போட்டுடுவா. அப்டியே மெதுவா விலக்கி கண்ண முழிச்சு ஒரு பார்வை பார்த்தான்னா என் அலறல்ல வீடே அதிரும். அம்மா வந்து பாக்கும்போது சமத்தா உக்காந்திட்டு இருப்பா. நம்ம பேச்ச யார் நம்பறாங்க. பளீர்னு ஒண்ணு என் முதுகில விழும்.  ரெண்டு பேரும் அடிச்சிக்குவோம். யாரு கடைசி அடி அடிக்கிறதுங்கிறதுதான் போட்டியே. அதில மட்டும் விட்டுக் குடுக்க மாட்டேன். நான் ஊர விட்டு வர வரைக்கும் இது நடந்துது. 

ரொம்பத் தைரியசாலி. தொட்டத்துக்கெல்லாம் அழற, பயப்படற எனக்கு நேர் எதிர். யாருக்கும் எதுக்கும் பயப்பிட மாட்டா. இப்பவும் அவள பாத்து ஆச்சரியப்பட்டுக் கிட்டே இருக்கேன். எப்டி இவளால மட்டும் இது முடியுதுன்னு. ஊர்ல இருக்கும்போது எங்க போறதுன்னாலும் ஒண்ணா சுத்துவோம். ஆனா மனசு விட்டு ஒரு ஃப்ரெண்டா பழகினதில்ல. எதுவோ ஒண்ணு என்ன அவ கிட்ட இருந்து தள்ளி வச்சுட்டே இருந்துது. அவளும் இதுதான் உனக்கான எல்லைனு ஒரு அளவு வச்சிருப்பா. இது பாக்கிறவங்களுக்கு தெரியாது. அவ்ளோ ஜாலியா பேசுவோம். ஏன் அவளுக்கே தெரியாது. இல்லை அவ இத புரிஞ்சுக்கலைன்னும் சொல்லலாம். 2002 ல சித்தப்பாவுக்கு உடம்புக்கு முடியாம போனப்போ அவளும் டென்மார்க் வந்திருந்தா. அப்போ பசங்கள தூங்க வச்சிட்டு நைட்டு பூரா பேசிட்டே இருப்போம். மெல்ல எங்களுக்குள்ள இருந்த தடை விலக ஆரம்பிச்சு அவ்வளவும் பேசினோம். அவ என்ன விலக்கிய, ஒதுக்கிய இல்லை கவனிக்காத சின்னச் சின்ன விஷயங்கள எல்லாம் சொன்னேன். ரொம்ப ஆச்சரியப்பட்டா. சிரிச்சா. இவ்ளோ கொடுமைக்காறியாவா நான் இருந்திருக்கேன்னு. அது வரைக்கும் எனக்கு எல்லாமுமாய் இருந்தவ தோழியாயும் ஆயிட்டா.

என்ன இருந்தாலும் மூத்தவ இருக்கும்போது இளையவளுக்கு கல்யாணம் பண்றது நல்லதில்லைன்னு நிறையப் பேர் சொன்னப்போ அப்பாவ சமாதானம் பண்ணதே இவதான். அது மட்டும் இல்லாம டீச்சர் ட்ரெய்னிங்ல இருந்தவ யாருக்கும் தெரியாம ரிஸ்க் எடுத்து எங்க கல்யாணத்துக்கு வந்தா. எனக்கு வேண்டிய எல்லாம் செஞ்சு குடுத்துட்டு நார்வே போயி எப்டி தனியா இருக்க கத்துக்கணும்னு அம்மாவ விட நிறைய அட்வைஸ் பண்ணா. அவ ஊருக்கு திரும்பின அன்னைக்கு என்ன அணைச்சுக் கிட்டு ரெண்டு துளி கண்ணீர் விட்டதுதான் அவ எனக்காக அழுத முதல் அழுகை. அப்புறம் டென்மார்க்ல இருந்து புறப்பட்டப்போ ஏர்போட்ல அவ அழுதது. அவ கிட்ட சொல்லி இருக்கேன். நீ என்ன வேணா பண்ணு. ஆனா இனிமே அழ மட்டும் கூடாது. என் அக்காச்சிய அப்டி என்னால பாக்கவே முடியாதுன்னு.

அவளுக்கு மூணும் பசங்களா போயிட்டதால என் அம்முக்குட்டி மேல அவளுக்கு உயிர். டென்மார்க்ல இருந்தப்போ சித்தி அவள பேர் சொல்லி கூப்டத கேட்டு அம்முவும் அவள பேர் சொல்லிதான் கூப்டுவாங்க. பெரியம்மானு சொல்ல மாட்டாங்க. விடுடி. அவங்களா என்னிக்கு தோணுதோ அப்போ சொல்லிட்டு போறங்கன்னு சொல்லிட்டா. என்னவர் கூட முன்பிருந்த அதே பாசம் இப்போவும் இருக்கு.  முன்ன மாதிரியே அண்ணான்னுதான் சொல்வா. எல்லா விஷயமும் அவ கிட்ட பேசுவார். பாருங்களேன் இவள இப்டி பண்றானு போட்டுக் குடுக்கவும் தவற மாட்டார். மாமியாருக்கும் அவள ரொம்ப பிடிக்கும். என்னடி இன்னமும் ஆண்ட்டி ஒழுங்கா மாமின்னு கூப்டுன்னு அவ சொன்னதும்தான் நானே அத கவனிச்சேன்.

அது என்னமோ தெரியல ஒவொரு வருஷமும் அவ கிட்ட போகணும்னு ப்ளான் பண்ணுவோம். ஆனா எப்டியோ அது தள்ளி போய்ட்டே இருக்கு. அவ கனடா போனத்துக்கு அப்புறம் இப்போதான் முதல் முறையா ஊருக்கு வெக்கேஷன்ல போக இருக்கா. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு இப்பவே வேண்டுதல் வச்சாச்சு. அவ என்னிக்கும் சந்தோஷமா தீர்க்காயுசோட வாழணும்னு எப்பவும் போல என் பிள்ளையார வேண்டிக்கிறேன்.

ஹாப்பி பர்த்டே அக்காச்சி..

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

நீங்களும் உங்க வாழ்த்துக்கள சொல்லிடுங்க. பார்ட்டி எங்க எப்போனு அடுத்த பதிவில சொல்றேன்.

வர்ட்டா..

19 நல்லவங்க படிச்சாங்களாம்:

Chitra said...

Convey our birthday wishes to your wonderful sister! You are blessed with her. :-)

ப.கந்தசாமி said...

பாசம்னா இது பாசம்! வாழ்த்துக்கள்.

எல் கே said...

உங்க அக்காவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எப்பவும் கூடப்பிறந்தவங்க கல்யாண ஆகி போறப்பதான் அவங்க அருமை புரியும். எங்க வீட்டாலும் இதே கதை தான். எனக்கு கல்யாணம் ஆகற வரைக்க்கும் என் அக்க கூட சண்டை போட்ருக்கேன்

பித்தனின் வாக்கு said...

அன்பு அக்காச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னமும் சண்டை போடனும், அப்பத்தான் பாசம் நல்லா வளரும். என் நேர் மூத்த அண்ணன் சின்ன வயதில் என்னை அடிக்கடி அறைந்து விடுவான். அப்புறம் ஒரு பதினைந்து வருடங்கள் அறைந்தது இல்லை. ஒரு நாள் ஒரு கருத்து வேறுபாட்டில் நடுரோட்டில் என்னை அடிக்க கை ஓங்கிவிட்டான். நானும் சிரித்துக் கொண்டே அடி கண்ணா நீ என்னை அறைந்து ரொம்ப வருசமாகின்றதுன்னு சொன்னேன். ஓங்கிய கையை இறக்கி ரோடு என்றும் பாராமல் அனைத்துக் கொண்டான். கூட்டுக் குடும்பமும், இது போன்ற உறவுகளும் தான் கடவுள் நமக்குக் கொடுத்த சொர்க்கம். நல்ல நினைவலைகள் சுசி. அக்கா நல்லா சமைப்பாங்கனா சொல்லு, நானும் உங்க கூட வந்து ஒரு வாரம் டேரா போட்டு விடுகின்றேன். நன்றி.

கார்க்கிபவா said...

அக்காவுக்கு வாழ்த்துகள்

ஜெய்லானி said...

உங்க அக்காவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஹாப்பி பர்த்டே TO
பிக் சுசிமா....
ஹாப்பி பர்த்டே TO
பிக் சுசிமா...
ஹாப்பி பர்த்டே TO
பிக் சுசிமா...
நீங்கதானே சொன்னீக இரண்டு பேறும் ஒரே POLA eruppenganu .)SO
(நீங்க KUTTI சுசிமா )okva..

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிக் சுசிமா""

வாழ்த்த வயதில்லை
அதனால் எபோதும் நலமாய் இருக்க எங்கள் சங்கம் இறைவனை பிரதிக்கும்.
பிறகு எங்கே வாழ்த்துவோர் அனைவருக்கும் எங்கள் சங்கம் கேக் வழங்கி வாழ்த்துக்களை கூறிகொள்கிறது

வருத்தபடாத வாசிப்போர் சங்கம்

காம்ப்ளான் சூர்யா .

அமுதா கிருஷ்ணா said...

என் தங்கையுடன் சின்ன வயதில் கழித்த காலங்கள் நினைவிற்கு வந்தன..வாழ்த்துக்கள் அக்காவிற்கு...

ராமலக்ஷ்மி said...

ரொம்ப ரொம்ப நெகிழ்வான பதிவு. உங்க அக்காச்சிக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

//ஆனா மனசு விட்டு ஒரு ஃப்ரெண்டா பழகினதில்ல. எதுவோ ஒண்ணு என்ன அவ கிட்ட இருந்து தள்ளி வச்சுட்டே இருந்துது. அவளும் இதுதான் உனக்கான எல்லைனு ஒரு அளவு வச்சிருப்பா. //

பல பேருக்கும் நிகழ்வதுதாங்க. அப்புறம் பழைய கதை பேசி சிரிச்சு எல்லாம் சரியாவதும்:)!

*இயற்கை ராஜி* said...

உங்க அக்காவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.:-)

நிலாமதி said...

அழகாய் எழுதி இருகிறீங்க சின்ன வயசு ஞாபகத்தை .... எனக்கும் என் அக்காளுக்கும் ஒரே நாள் பிறந்ததினம்.
இடையில் ப்தினோருவருட இடைவெளி. எனக்கு மேல் அண்ணாக்கள் இருக்கினம். என் நெஞ்சிலும் நினைவுகள் ..தாலாட்டுகின்றன.

சுசி said...

ரொம்ப நன்றி சித்ரா.

C C C C C

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டாக்டர்.

C C C C C

நன்றி LK.. ஆனா என் அண்ணனுங்க அவ கூட சண்டை போட்டதில்ல தெரியுமா..

சுசி said...

//கூட்டுக் குடும்பமும், இது போன்ற உறவுகளும் தான் கடவுள் நமக்குக் கொடுத்த சொர்க்கம்.//

சரியா சொன்னிங்க அண்ணா..
சூப்பரா சமைப்பா.. என்ன நீங்க இங்க வரத்துக்கு பதில் கனடா போணும்..

C C C C C

நன்றி கார்க்கி.

C C C C C

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜெய்லானி.

சுசி said...

நன்றி சூர்யா.

C C C C C

அப்போ நீங்களும் ரவுடி அக்காவா அமுதா??

C C C C C

எல்லாம் சரியானாலும் இன்னமும் எனக்கு பயம் மட்டும் போல அக்கா.. :)

சுசி said...

நன்றி ராஜி :)

C C C C C

ஓ.. கொடுத்து வச்சவங்க நீங்க நிலாமதி.
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

சீமான்கனி said...

//ஹாப்பி பர்த்டே அக்காச்சி...//

ஐயோ...பாவாம்....சுசி கா...என்ன பாத்துதான் என் அக்கா பயப்படுவாங்க...ஷெம் ஷெம் பப்பி ஷெம்...

கோபிநாத் said...

அக்காவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-))

சுசி said...

அக்காச்சி.. சீமான் கனி என்னவோ சொல்றார் பாரு..

C C C C C

நன்றி கோபி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ரெண்டு பேரும் அடிச்சிக்குவோம். யாரு கடைசி அடி அடிக்கிறதுங்கிறதுதான் போட்டியே. அதில மட்டும் விட்டுக் குடுக்க மாட்டேன்//

இந்த வரிய படிச்சப்ப கண்ல தண்ணி வந்துடுச்சு சுசி. என்னோட தங்கையும் கூட அப்படி தான். என்ன அடிச்சுகிட்டாலும் ரெண்டு நிமிசத்துக்கு மேல பேசாம இருக்கா மாட்டா. I miss her sooooooooooooooooooo much even now after years. She lives in Singapore. இந்த வருஷம் அவ இங்க (கனடா) வர்றதா பிளான் இருந்தது ஆனா வர முடியல. அவள பாத்து ரெண்டு வருஷம் ஆச்சு... இந்த அக்டோபர்ல தீபாவளிக்கு ரெண்டு பெரும் இந்தியா போலாம்னு பிளான் பண்ணி இருக்கோம். So much waiting for it. You really made my day.... nostalgic.....நல்ல பதிவு