Pages

  • RSS

18 April, 2010

யாரும் தப்பிக்க முடியாது..

மறுபடி என் புது வீட்ட பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னவங்க.. பாத்துட்டும் கம்முன்னு இருந்தவங்க.. இன்னமும் பாக்காதவங்க அல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன்..

சைடு பார்ல புதுசா ஒரு விஷயம் சேர்த்திருக்கிறத பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னவங்க.. பாத்துட்டும் கம்முனு இருக்கிறவங்க.. இன்னமும் பாக்காதவங்க.. அல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன்.. ஒண்ணுதாங்க.. ரெண்டு விஷயத்துக்கும் சேர்த்து சொல்ல வந்தது ஒண்ணுதான்.

இதனால ரெம்பக் கடுப்பில இருக்கேன் நானு. சோ.. அதனால.. இந்த தடவையும் சீரியஸ் பதிவுதான். தண்டனையில இருந்து யா..ரும் தப்பிக்க முடியாது சொல்ட்டேன்.

ஐஸ்லாண்ட்ல நடந்த எரிமலை வெடிப்பு பத்தி அறிஞ்சிருப்பீங்க. சாம்பல் புகை மண்டலம் குறையுற வரைக்கும் இங்க ஃப்ளைட்டெல்லாம் நிறுத்தி வச்சிருக்காங்க. லைட்டா சல்ஃபர் வாசனை காத்தில இருக்கு. ஒரு இடத்தில சாம்பல் வண்டி மேல படிஞ்சிருந்ததா கூட பேப்பர்ல படிச்சேன். எங்க ஆஃபீஸோட வெளியூர் கிளைகளில இருந்து வர வேண்டிய தபால் வராததால ஆணி கம்மியா இருந்துது. ரெண்டு நாள் ஜாலியா போச்சு. இப்போ யாரு கண்ணு பட்டுதோ பயபுள்ளைக ட்ரெயின் மூலமா அனுப்பி வச்சிட்டாங்க. விளைவு.. வெள்ளிக் கிழமை ஆணி குமியப் போதுன்னு டீம் லீடர் சொல்லிட்டாங்க. அன்னிக்குன்னு பாத்து லேட்டா எந்திரிச்சிட்டேன். (அடிப்பாவி.. பத்து நிமிஷம்தானேடி லேட்டா எந்திரிச்சே..) 

நீங்க லேட்டா எந்திரிச்சா எப்டி ரெடியாவீங்களோ அப்டி இல்லாம வழக்கம் போலவே ரெடியானேன். (ம்க்கும்.. ) ரோட்ல இறங்குறத்துக்கு முன்னாடி மம்மி சின்ன வயசில சொல்லிக் குடுத்தா மாதிரி வலது பக்கம் முதல்ல பார்த்தேன். ரெண்டு கார் சைட் குடுக்கிறத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்துது. பின்னாடி வரப்போற என் காருக்கு எதுக்கு சைட் குடுக்குறாங்கன்னுட்டு கொஞ்சம் எட்டிப் பாத்தா ஒரு ட்ரக் வந்துட்டு இருந்துது. இப்போ மம்மி சொன்னது மறுபடி ஞாபகம் வந்து இடது பக்கம் பாத்தா அங்க ஒரு கார் வந்துட்டு இருந்துது. அப்டியே என் கார் முன்னாடி அது வரும்போது ரெண்டு பக்கம் பாத்தா போதாதும்மா.. போக வேண்டிய பக்கத்த பறுபடி பாக்கணும்னு ம சொ ஞா வந்து மறுபடி வலது பக்கம் பார்த்தேன். ட்ரக் இன்னமும் வந்துட்டு இருந்துது. இல்ல நின்னுட்டு இருந்துது. என்னடா இது.. சைட் குடுத்தும் எதுக்கு வெயிட் பண்றாங்கனு என்ன மாதிரியே யோசிச்ச ரெண்டாவதா நின்ன வண்டி ட்ரைவர் வெளிய இறங்கி ட்ரக் ட்ரைவருக்கு இங்கதான் இவ்ளோ இடம் இருக்கே எடுத்துட்டுப் போயேன்னு சைகை காமிச்சாங்க. அவர் கண்டுக்கணுமே. அப்போ முத வண்டியில இருந்த ட்ரைவர் இறங்கி இவங்களுக்கு எதுவோ சொன்னாங்க. ரெண்டு பேரும் அவங்க அவங்க வண்டியில மறுபடி ஏறி உக்காந்துட்டாங்க. இப்போ என் முன்னாடி வந்த வண்டி என்ன கடந்து போய் ரெண்டாவது வண்டி பின்னாடி போய் மூணாவதா நின்னுது.

என்னடா நடக்குது இங்கனு ட்ரக்காளன இன்னும் நல்ல்ல்ல்லா எட்டிப் பாத்தா.. பாத்தா.. பா.. அதான் நல்லா எட்டிப் பாக்கறேன்னு சொன்னேன்ல. அதுக்குள்ள என்ன அவசரம்?? இருங்க என்ன பாத்தேன்னு எழுதறேன். அது வேற ஒண்ணும் இல்லீங்க. ஸ்னோ இருந்த வரைக்கும் ரோடோரம் சேர்ந்த குப்பை கூளம் கல்லையெல்லாம் சுத்தம் பண்ற வேலைய செஞ்சுட்டு இருந்தாரு அவரு. வழக்கமா வர வண்டிய விட இது வித்யாசமா இருந்ததால எங்களுக்கு தெரியல. அவர் நத்தை வேகத்தில வர எப்டியும் பத்து நிமிஷமாவது ஆகும்னு நினைச்சுட்டு என் கார நிறுத்தினேன். சரியா எட்டு நிமிஷம். ஒரு வண்டி ஓடிட்டு இருக்கிறத விட ஸ்டார்ட்ல நிக்கும்போதுதான் அதிகமா சூழல் மாசடையும்கிறது நீங்க அறிஞ்ச விஷயம்தானே. மத்த மூணு பேரும் அத செய்யலைங்க. ஸ்ட்டார்ட்லவே வண்டிங்க நின்னுது.

அது மட்டுமா.. ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சுன்னா இல்லை ரோட் வேலைக்குன்னு ட்ராஃபிக் ஜாமாகி நிக்கும்போது எத்தன பேர் வண்டிய நிறுத்தறோம்.. நேரமாகும்னு தெரியுதில்ல. அப்புறமும் எதுக்கு ஸ்டார்ட்ல நிக்கணும். ஆஃப் பண்ணிட்டோம்னா வண்டியும் ரிலாக்ஸ் பண்ணிக்கும். கொஞ்சம் யோசிக்கலாம்ல.. இது மட்டும் இயற்கை அனர்த்தங்களுக்கு காரணம் இல்லேன்னாலும் இதுவும் காரணம் தான் இல்லையா. அப்புறம் எரிமலை பொங்கி பனிப் பாறைகள் உருகிப் போகாம என்ன செய்யும். ஏப்ரல் மாசத்துல இந்த ஊர்ல இன்னைக்கு ஸ்னோ கொட்டாம என்ன செய்யும். வண்டிக்கு சம்மர் டயர் வேற மாத்தியாச்சு. கொஞ்சம் டெம்ப்ரேச்சர் ப்ளஸ்ல இருக்கப்போயி ஸ்னோ கரைஞ்சு போயிடறதால தப்பிச்சோம். இல்லேன்னா டயர் ஸ்லிப்பாகி ஆக்சிடெண்ட் சகட்டு மேனிக்கு நடக்குமே. என்னவோ போங்கப்பா.. யாருமே கவனிக்க மாட்றாங்க.

நேத்து ஒரு பார்ட்டிக்கு போயிருந்தோம். விழா நாயகி அஞ்சு மாச குழந்தை. சர்ச்ல ஞானஸ்நானம் காலேல முடிச்சுட்டு சாயந்தரம் பார்ட்டி, கூட்டம், ஃபோட்டோன்னு கஷ்டம் குடுத்தாலும் சமத்தா அழாம இருந்தாங்க. எல்லாரும் ஃபோட்டோ எடுத்து முடிச்சதும் நான் தூக்கி வச்சிருந்தேன். என் ராசி உடனவே என் தோள்ல தூங்கிட்டாங்க. சின்ன சின்ன போட்டிகள் விளையாட்டுகள்னு சத்தமா இருந்ததால ஒரு ஓரத்தில மடியில அவங்கள வச்சுட்டு உக்காந்திருந்தேன். அவங்க உறவுக்காரக் குட்டிப்பொண்ணு ஒண்ணு.. சது வயசு.. பயங்கர வாயாடி.. உங்க வயசு என்ன ஆண்ட்டினு என் கிட்ட பேச்ச ஆரம்பிச்சா. வயசுக்கேத்தாப்ல பேசுவாங்களோ?? சொன்னேன். கேட்டதும்  ஆஆச்சரியப்பட்டா. நீங்க எவ்ளோன்னு நினைச்சீங்கன்னேன்.. நான் சொன்னதில இருந்து பத்த குறைச்சு சொன்னா. இப்போ நான் ஆஆஆஆச்சரியப்பட்டேன். உங்களுக்கு பாப்பானா பிடிக்குமா? ம்.. ரொம்ப. அப்போ உங்களுக்குன்னு ஒண்ண எடுத்துக்க வேண்டியதுதானே. அவங்க அகராதியில குழந்தை பெத்துக்கிறத்துக்கு அர்த்தம் இதுதான் போல?! இல்லடா.. எனக்குன்னு வேணாம். ஆனா இப்டி அடுத்தவங்க பாப்பாவ தூக்கி வச்சுக்க பிடிக்கும். உங்களுக்குனு வேணவே வேணாமா? வேணாம். அதான் எனக்குனு ரெண்டு பசங்க இருக்காங்களே.. அவங்களே போதும்.

அந்த ஆண்ட்டி யாரு? அவங்க பசங்க யாருனு இப்டியே பேச்சு போயிட்டு இருந்துது. சீரியசா.. ஆண்ட்டி இந்த பாப்பா உங்க மடில சமத்தா தூங்குது.. ஆமாண்டா.. அவங்க ரொம்ப டயர்டாயிட்டாங்க இல்லை.. அதான். பாப்பா பாக்கும்போது உங்க பாப்பா மாதிரியே இருக்காங்க.. அப்டியா? ஏம்மா அப்டி சொல்றீங்க?? நீங்க ரெண்டு பேரும் ஒரே கலரா இருக்கீங்க..  சாயல் இல்லாம கலர் தீர்மானிக்குது பாருங்க. விஷயம் புதுசா இருக்கில்ல. இப்டி இன்னமும் சீரியசா போச்சு பேச்சு..

ஆண்ட்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. (சிரிச்சுட்டேன் நான். அவ முழிச்சா. எதுக்கு சிரிச்சேன்னு புரியாமலா.. இல்ல என் சிரிப்ப பாத்து பயந்தானு தெரில) தாங்ஸ்டா தங்கம். நீங்களும் ரொம்ப அழகா இருக்கிங்க. உங்க சாரி அழகா இருக்கு. தாங்ஸ்டா.. உங்க ஃப்ராக்கும் அழகா இருக்கு. உங்க வளையல் அழகா.. என்ன இது.. எதுக்கு சிரிக்கிறிங்க இப்போ?? ஹல்லோ.. படிச்சிட்டு இருக்கிற உங்களத்தான் கேக்கறேன். அதான் முன்னாடியே சொன்னேன்ல சீரியசா எழுதப் போறேன் இன்னைக்குன்னு..  நிஜமா சொன்னாங்கப்பா.. நம்புங்க. ரைட்டு!! இதுக்கு மேல நாங்க பேசிக்கிட்டத உங்களுக்கு சொல்லப் போறதில்ல நானு..  உங்க பேச்சு கா.. 

வர்ட்டா..

26 நல்லவங்க படிச்சாங்களாம்:

எல் கே said...

இது சீரியஸ் பதிவா :(
//ரோட் வேலைக்குன்னு ட்ராஃபிக் ஜாமாகி நிக்கும்போது எத்தன பேர் வண்டிய நிறுத்தறோம்.. நேரமாகும்னு தெரியுதில்ல. அப்புறமும் எதுக்கு ஸ்டார்ட்ல நிக்கணும்//
சரிதான்
//நான் சொன்னதில இருந்து பத்த குறைச்சு சொன்னா. //
பாவம் சின்ன பொண்ணுல்ல அதான்
//வர்ட்டா..//
சரி டாட்டா டாட்டா

ராமலக்ஷ்மி said...

குட்டிப் பொண்ணும் எங்க சுசி பொண்ணும் பேசிக்கிட்டது சுவாரஸ்யம்:)!

எல் கே said...

//நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அம்மாவும் அக்காவும். யாராவது நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்க சொல்ல வேண்டும் அவர்களுக்கு.//

சரி கவனிக்கக் சொல்லலாம்

Thamiz Priyan said...

புது வீடா... ரொம்ப நாளா ரீடரில் படிச்சிட்டு இருப்பதால் தெரியல.. ஹிஹிஹி... நல்லா தான் இருக்கு!

Thamiz Priyan said...

அப்புறம் அந்த பொண்ணு பாவம்.. சின்ன வயசிலயே கண்ணு சரியா தெரியாம இருக்கே... அவங்க அம்மாகிட்ட சொல்லி நல்ல கண் டாக்டரிடம் பார்க்கச் சொல்லுங்க...:-)

சாந்தி மாரியப்பன் said...

டிப்ஸுன்னு சொன்னீங்க.. ஆனா ஒண்ணையும் காணோமே :-)))))

சாந்தி மாரியப்பன் said...

நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அம்மாவும் அக்காவும். யாராவது நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்க சொல்ல வேண்டும் அவர்களுக்கு.

ஆஹா... இதுதான் அந்த டிப்ஸா இருக்குமோ!! :-))))

சீமான்கனி said...

போங்க நானும் உங்க பேச்சு கா... சீரியஸ் பதிவுன்னு சொன்னதும் ஆம்புலஸ்கு போன் பண்ணி ஆக்ஸிசன் சிலிண்டர்லாம் ரெடியா எடுத்து வச்சேன்...இப்போ எல்லாம் வேஸ்ட்டா போச்சு...நான் வாறேன்...

கார்க்கிபவா said...

இது ஒரு சீரியஸ் பதிவென்பதால் ஸ்மைலி போடாத அதே வேளையில், ஏன் போடக்கூடாது என்ற கேள்வியையும் முன் வைக்கிறேன். சைடு பாரில் எனது கேள்வியை போட்டதற்கு நன்றி. ஆனால் சைடு பாரில் மட்டுமல்ல எந்த பாரிலும் கார்க்கி இருக்கிறான் என்பதை என்னையறிந்தவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவ்ளோ நல்லவன் நான் என்பதே நான் சொல்ல அவ்ரும் க்ருத்து

தாரணி பிரியா said...

ஏதோ தெரியாம அந்த குட்டி பொண்ணு அப்படி சொல்லிடுச்சு. அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டா எப்படி சுசி

Anonymous said...

ENGA SUSIMATHAN VERY CUTE..

ALGA ELUTHRANGA..

APO APO APO COMMEDY PANRANGA..

(Annal enta template avalova pidikali..blue colrla vachu eruntehngaley athuthan super..)

apprum susima matavangalku ellam poramai neenga rumba alaga erukenganu...


apprum vara vara unga eluthukala nagisuvai adikama erukirathu...verivil engal sangathil oru padavi kudukkapoikirom..

nandri varuthapadtha vassipor sangam
complan surya

பித்தனின் வாக்கு said...

//நான் சொன்னதில இருந்து பத்த குறைச்சு சொன்னா. //

அடாடா இருபது இல்லை குறைத்து இருக்க வேணும். சரி நீங்க அந்தக் குழந்தைக்கு கொஞ்சமா லஞ்சம் குடுத்து இருப்பீங்க.

அப்புறம் அந்தப் பெண்ணுக்கு உலக மகா வாயாடின்னு பட்டம் கொடுக்க வேண்டும். பின்ன சுசிகிட்டயே வாய் கொடுத்துள்ளாள். (அய்யே நான் இல்லை).

நல்லா அன்பா பண்பா சின்னப் பொண்ணுக்கு பதில் சொல்லி, மீண்டும் நீங்க ஒரு கொள்ளைக்காரி இல்லைன்னு நிருபிச்சிருக்கின்றாய்.

பித்தனின் வாக்கு said...
This comment has been removed by the author.
கோபிநாத் said...

இப்போதைக்கு படிச்சிட்டேன்...புது வீடு போன முறையே பார்த்தேன்...நல்லாயிருக்கு ;))

சொல்லரசன் said...

உங்க புது வீடு அருமை,

//உங்க சாரி அழகா இருக்கு. தாங்ஸ்டா.. உங்க ஃப்ராக்கும் அழகா இருக்கு. உங்க வளையல் அழகா.. என்ன இது.. எதுக்கு சிரிக்கிறிங்க இப்போ?? //

விட்டால் உ.தமிழன் போல் பக்கம்பக்கமா எழுதபோறிங்களோன்னு நினைச்சு சிரிச்சேன்

சுசி said...

அப்போ கிடையாதா LK?

B B B B B

ஹிஹிஹி.. நன்றி அக்கா.

B B B B B

மறக்காம சொல்லிடுங்க LK.

சுசி said...

வீடு கட்ட ஆன செலவு இன்னும் கொஞ்சம் செட்டில் பண்ண வேண்டியதிருக்கு தமிழ் பிரியன்.
அம்மா கிட்ட சொன்னேன். என் பொண்ணுக்கு உங்கள மாதிரி நொள்ளக் கண் கிடையாதுங்கிறாங்க :(

B B B B B

அதே அதே அமைதிச்சாரல். முதல் வருகைக்கு நன்றிங்க.

B B B B B

நான் என்னங்க சீமான் பண்ணட்டும். ஃப்ளைட்டு ஓடலையே. இல்லேன்னா உடனடியா வந்திருக்கலாம்.

சுசி said...

ஓ.. சைட் டிஷ்லனு போட்டிருக்கணும் இல்லையா கார்க்கி..
தப்புத்தான் தப்புத்தான்.. மன்னிச்சுக்கோங்க.

B B B B B

//அப்படி//
//இப்படி//
அடடடடா.. கவிதை மாதிரி கமண்ட் போட்டிருக்கீங்க தாரணி பிரியா.. சீரியசா..

B B B B B

பொருளாளர் பதவிய குடுத்திடுங்க சூர்யா. ரெண்டு தடவை வீடு கட்னதில கடன் ஜாஸ்தி ஆயிடுச்சு.

சுசி said...

ரைட்டுண்ணா. அடுத்த தடவை லஞ்சம் டபுள்.
ஹிஹிஹி.. நான் சமத்து அண்ணா.

B B B B B

அப்டியா கோபி. சொல்லவே இல்லை.

B B B B B

உங்கள சிரிக்க வச்சிட்டேன் பாத்தீங்களா சொல்லரசன். நலமா இருக்கீங்களா??

Anonymous said...

enta veedu nalla ella susima..mathunga..elati na tamila comments podamaten.

ungalku epothiku porulalar padhi venam..athu namakitey erukatum.engium economic crisis a erkku.(paren nama padavikey abathu...)

so ungalai.

Norway Mahalirani Thaliviya ungala niyamikkrom...kodavey pakathila erukkum sila nadugalin poruppum viravil arivikapadum..

nandri
varhapadtha vaasipor sangam
Complan surya

மங்குனி அமைச்சர் said...

//ஆண்ட்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. (சிரிச்சுட்டேன் நான். அவ முழிச்சா. எதுக்கு சிரிச்சேன்னு புரியாமலா.. இல்ல என் சிரிப்ப பாத்து பயந்தானு தெரில)///


எங்க சின்ன கவுண்ட மனோரம்மா மாதிரி சிரிச்ச , குழந்த பயப்படாதா

சுசி said...

எனக்கு இப்போதைக்கு இது பிடிச்சிருக்கு சூர்யா.. இத விட நல்லதா ஒண்ணு கிடைக்கிற வரைக்கும் புது வீடு நோ வே.. :((
தலைவிக்கு பொருளாளர் பதவியும் சேர்த்துக் குடுக்கிறதா இருந்தா யோசிக்கலாம். :))

B B B B B

நீங்கதான் ககபோ அமைச்சரே :))))

malarvizhi said...

பதிவு நல்லா இருக்கு.

Anonymous said...

sari,,

adam pidikrenga..athanla Norway nattu Porulalar padaviya ungalukkey kuduthren....
"engal v.v.s sangam norway nattu mahalir ani porulalar susi valga..valga
"engal v.v.s sangam norway nattu mahalir ani porulalar susi valga..valga
"engal v.v.s sangam norway nattu mahalir ani porulalar susi valga..valga..

(ethudan avaruku US$50000 madha sambalam valangapadum.)

epo santhosma...

(ennoda padhavi ellam kekapdiathu athu tappu..)

ok no enta veedu nallathan erukku..aanll rumba amithiya erukku..athan.its ok..

v.v.s complan surya.

சுசி said...

நன்றி மலர்விழி.

B B B B B

நன்றி சூர்யா.

rathinamuthu said...

தங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது. பரிசலின் யாமினி தொடர் மூலமாக உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். பின்னூட்டம் இடவில்லை என்றாலும் தொடர்ந்து வாசிப்பேன். நன்றி