Pages

  • RSS

14 April, 2010

செருப்பு.. அப்பப்போ சப்பல்..

எல்லோருக்கும் எங்களோட இனிய சித்திரைப் புது வருட வாழ்த்துக்கள்.

சித்திரை வருஷம் தடல் புடலா கொண்டாடினதெல்லாம் ஒரு காலம். நான் அது பத்தி சொன்னாலும் பசங்கள பொறுத்த வரைக்கும் தை முதலாம் தேதிதான் புது வருஷம். இங்க வந்த புதுசுல சில ஃப்ரெண்ட்ஸ் வருவாங்க. இப்போ எல்லாரும் பசங்க, வேலைன்னு பிஸி ஆயிட்டாங்க. நினைவிருந்தா வாழ்த்துவாங்க. அவ்ளோதான். இதுவே ஊர்லன்னா.. அவ்வ்வ்.. இன்னைக்கு வேணாம். வருஷத்தன்னிக்கு சந்தோஷமா இருந்தாத்தான் வருஷம் பூரா  சந்தோஷமா இருப்பேன்னு நம்புறவ நான். (அச்சச்சோ.. அப்போ இந்த வருஷம் உனக்கு அம்புட்டுதானா?? ) அதனால எங்க ஊர்ல புது வருஷம் கொண்டாடுறது பத்தி வேற ஒரு நாளைக்கு எழுதறேன். ஆவ்வ்வ்.. (அதுக்கேண்டி நீ அழறே.. அவங்க இல்ல அழணும்)

சரி அத விடுங்க. இந்த ஊர்ல 86/87 ஆண்டுப் பகுதியில வந்த விண்டர் சீஸன் 62 நாட்கள் தொடர்ச்சியா ஸ்னோ இருந்த வருஷம்னு ரெக்கார்ட் பதிவாச்சு. அதாவது ஸ்னோ தொடர்ந்து கொட்டும்னு இல்லை. ஆனா மழைக்குப் பெயர் போன எங்க ஊர்ல மழை பெஞ்சு கரைஞ்சு போகாம இருந்தது. இந்த சீஸன் 2009/2010.. மொத்தம் 98 நாட்கள். புது ரெக்கார்ட். இடையில ரெண்டு நாள் மழைன்னாலும் ஸ்னோ கரையல.

இனிமே போதும். முடியலங்கிர ரேஞ்சுக்கு ஸ்னோல பிறந்து, தவழ்ந்து, அள்ளித் தின்னு வளர்ந்தவங்களே வந்திட்டாங்கன்னா, வந்தேறு குடிகளான நம்ம நிலை?? மழை பெய்து கரைஞ்ச ஸ்னோ கண்ணாடியாட்டம் ஃப்ரீஸ் ஆகாம இருந்ததால வழுக்கி விழுந்து டேமேஜ் ஆன மக்கள் + வாகனங்களோட எண்ணிக்கை இந்த வருஷம் குறைவு. நானும் இந்த வருஷம் சாதனை செஞ்சாச்சு. ஒரு நாள் கூட ஆஃபீசுக்கு கண்ணாளன் கூட்டிப் போல. பஸ்லவும் போல. (சில பல நாட்கள் பரவால்ல நீயே தைரியமா போனு அவர் சொல்லிட்டார்னு பயத்தில நடுங்கி கிட்டே அவர திட்டிக்கிட்டு ட்ரைவ் பண்ணது யார்டி சுசி?? நீயா என்ன??)

அதையும் விடுங்க. தலைப்பு பத்தி சொல்லணும்ல. கண்ணன் மேல கோவம்  எனக்கு. ஒரு கட்டத்தில இனிமே என்ன செருப்புன்னு கூப்டுன்னு சொன்னேன். சொன்னது தப்புனு உணர்ந்து சாரி சொன்னேன். சிரிச்சுக்கிட்டே எதுக்கு சாரின்னிச்சு. இல்ல நான் அப்டி சொன்னது உனக்கு வருத்தமா இருந்திருக்கும்னு நினைச்சு சாரி சொன்னேன். ஆனா இப்போ உன் சிரிப்பு பாத்தா அப்டி இல்லைன்னு  தோணுது. அப்பப்போ ஒரு சேஞ்சுக்கு சப்பல்னும் கூப்டுன்னேன். நான் சொன்னது சரிதானுங்களே.. செருப்பு.. சப்பல்.. இதில எந்தப் பெயர் எனக்கு நல்லா இருக்கும்??

ரெக்கார்ட் வச்ச ஸ்னோவ ஊரெல்லாம் அமர்க்களமா படம் பிடிச்சாங்க. நானும் எங்க வீட்ல இருந்த ஸ்னோவ படம் பிடிச்சிருக்கேன். ராமலக்ஷ்மி அக்கா மன்னிச்சிடுங்க.. உங்கள மாதிரி முத்து முத்தா கவிதையா எடுக்க தெரியல எனக்கு. வெயில் பட்டு இறுகிப் போன ஸ்னோ அப்டியே டைமன்ல கம்பளம் செஞ்சு விரிச்சு வச்சா மாதிரி ஜொலிச்சுது பாருங்க.. அப்போ உங்கள நினைச்சேன்.

IMG_9023 பால்கனில இருந்து பாத்தா முன்னாடி இருந்த எதையும் காணோம்.

 

 

 

IMG_9026IMG_9025  கராஜ் கூரை மேல.

IMG_9031 IMG_9032

பின் பக்கம். இதுக்கு மேல கதவு திறக்க முடியல.

IMG_9068 IMG_9036 IMG_9073

இன்னொரு பால்கனி.. கதவே திறக்க முடியல.

IMG_9037 IMG_9038 IMG_9039 IMG_9040

வீட்டோட முன்பக்கம். பசங்க உழுது வச்சிருக்காங்க.

IMG_9041 IMG_9045

அநாதரவா புதைஞ்சு போய் இருக்கிற பேப்பர் ரீசைக்கிள் பின். நல்ல வேளை குப்பை போடற பின்ன முன்னாடியே எடுத்து கராஜ்ல வச்சிட்டோம்.

IMG_9048 IMG_9056 IMG_9057 IMG_9058 பள்ளத்தில ஃபுட்பால் க்ரவுண்ட், நெருங்க முடியாத நிலையில போஸ்ட் பாக்ஸ், ரோட்.

IMG_9047 வீட்ல இருந்து ரோடுக்கு போம்போது வழுக்கிச்சுன்னா ஒண்ணு  எதுக்க இருக்கிற பள்ளத்தில குபீர். இல்ல ரெண்டு பக்கமிருந்தும் வர வண்டி மேல டமார். 

 

 

IMG_9054 சைட்ல.. மேல இருக்குற வீடுகளுக்கு போறத்துக்கான படிக்கட்டு. நடக்க இல்லை. சறுக்க மட்டும்.

 

 

 

 

 

IMG_9049IMG_9055

ரோட்ல, நடைபாதையில இருக்கிற ஸ்னோவ அள்ளிக் கொண்டு போய் பள்ளத்தில கொட்டறாங்க.. வசதி இல்லாத இடங்கள்ல லாரில அள்ளிட்டுப் போய் குளங்கள்ல கொட்டினாங்க.

இப்பவே படங்கள் ஜாஸ்தி ஆயிடுச்சு. அதனால இப்போ ஸ்னோ விட்டுப் போயிருக்கிற மிச்ச சொச்சங்கள இன்னொரு பதிவில பார்க்கலாம்.

மீண்டும் புது வருஷ வாழ்த்துக்கள்.

வர்ட்டா..

20 நல்லவங்க படிச்சாங்களாம்:

Chitra said...

ஊர்க்காட்டில, அவங்க அவங்க உச்சி வெயில் மண்டைய புளக்குதுன்னு இருக்குறப்போ, கண்ணுக்குக் குளிர்ச்சியாக படங்கள் போட்டு அமர்க்களப் படுத்திட்டீங்க...... புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

*இயற்கை ராஜி* said...

ம்ம்..பார்க்கவே குளிர்ச்சியா இருக்கே:-)

சீமான்கனி said...

புது வருசமும் அதுவுமா குளு குளுன்னு குளிர வச்சுடீங்க ஜில்லுனு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...

Anonymous said...

am the fourth.

am the fourth

am the fourth...

mm valmana valkaium

nalamana valkaium

endrum petru valla engal

sangam valthukirathu.

and padivu and

phots nice...

unga padivu pola summa

jillnu erukkku.

nandri
v.v.s
complan surya

ராமலக்ஷ்மி said...

பகிர்வு அருமை சுசி.

மார்கழியில் கூட ‘பனின்னா பனி அப்படி பனி’ன்னு நாங்கல்லாம் இனி சொல்ல மாட்டோம்பா:))!!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

எல் கே said...

இதெல்லாம் சரி இல்லீங்க . இங்க வெயில் மண்டைய பொளக்குது. காஞ்சு பொய் உக்காந்து இருக்கோம் இப்ப பனிமழையா .. ஹ்ம்ம் நடத்துங்க. படம் super

கார்க்கிபவா said...

இப்படிலாமா பனி கொட்டும்?????????

இது நார்வே இல்லைங்க, நோ வே...

அமுதா கிருஷ்ணா said...

படங்கள் சூப்பர்..புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பித்தனின் வாக்கு said...

ஆகா படங்கள் பார்த்தே எனக்கு ஜலதோசம் பிடிச்சுரும். இந்தக் குளிரில் நான் கம்பளியை விட்டு வெளிய வரமாட்டேன். எனக்கு எப்பவும் 27 டிகிரிதான் இருக்கனும். வெப்ப இரத்த பிராணி நான்.
இனிய ஜில்லுனு புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

தாரணி பிரியா said...

ஆஹா சூப்பரா இருக்குங்க. இங்க நாலு ஃபேன் போட்டும் வெயில் குறையலை :). படங்கள் பாத்தாலே ஜில்லுன்னு இருக்கு

தாரணி பிரியா said...

//செருப்பு.. சப்பல்.. இதில எந்தப் பெயர் எனக்கு நல்லா இருக்கும்?? //

ரெண்டுமே வேண்டாமே சுசியே போதும்

Anonymous said...

இங்கியும் இப்பதான் கொஞ்சமா குளிர ஆரம்பிச்சுருக்கு

கோபிநாத் said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;))

ஆமா படத்துல உங்க வீடு எங்க இருக்கு!!?

சுசி said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் சித்ரா..

A A A A A

நன்றி இயற்கை..

A A A A A

உங்களுக்கும் ஜில்லுனு நன்றிகள் சீமான்..

சுசி said...

உங்களுக்கும் சங்கத்துக்கும் நன்றி சூர்யா.

A A A A A

நன்றி அக்கா. இனியும் நீங்க தாரளமா சொல்லலாம் அக்கா.. ஊர்ல இருந்த வரைக்கும் நானும் சொன்னவதானே..

A A A A A

கோச்சுக்காதீங்க LK.. அடுத்த பதிவு பனி இல்லாத படங்கள்தான்.

சுசி said...

ஆமாம் கார்க்கி. கொட்டுது..
நோ வே யாஆ?? ஆவ்வ்வ்..

A A A A A

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அமுதா.

A A A A A

நன்றி அண்ணா. ஒண்ணும் பண்ண முடியாதுண்ணா.. கம்பளிய சுத்திக் கிட்டாவது வேலைக்கு போயே ஆகணும்.

சுசி said...

ஐ லைக் யூ தாரணி பிரியா.. உங்களுக்கு மட்டும் சம்மர் சீஸன் ஜில்லுன்னு இருக்கணும்னு வேண்டிக்கிறேன். நீங்க ஒருத்தர் தான் படிச்சு கமண்ட் போட்டிருக்கீங்க.

A A A A A

உங்களுக்கு இனிமேதான் விண்டர் ஆரம்பிக்குது இல்லையா அம்மணி?? என்ஜாய் மாடி..

A A A A A

புது வீட்டுக்கு மைனஸ் ஓட்டு போட்டுட்டு.. இப்போ எத்த்த்துவுமே சொல்லாம என் வீடு எதுனு கேக்கறீங்களா கோபி??
உங்களுக்கு நக்கல் இருக்கலாம்.. நளினம் இருக்கலாமோ..
அதாம்பா மஞ்சக் கலர்ல இருக்கே.. அது.

Anonymous said...

ஐ லைக் யூ தாரணி பிரியா.. உங்களுக்கு மட்டும் சம்மர் சீஸன் ஜில்லுன்னு இருக்கணும்னு வேண்டிக்கிறேன். நீங்க ஒருத்தர் தான் படிச்சு கமண்ட் போட்டிருக்கீங்க.

---ethai nan vanmiya kandithu villi nadapu cikren...apo ungala appdi ellam kopidakodanthuthan ungala pathi perumiya chola virumbala..unga alagna peru susimavey nalla eruku...

apprum mithavanga ellam unga padiva padikamya comments potuerukangnu chola varengala...

apo avangalukumatm jillnu erukanuma..engalukkelam vendikamatengla..

kovathudan..
complan surya

சுசி said...

சூர்யா.. உங்களுக்காக மட்டுமில்ல எல்லாருக்காகவும் வேண்டிக்கிறேன்.. ஓக்கேவா :))

பருப்பு (a) Phantom Mohan said...

தெரு நாய் பொறைய பாக்குற மாதிரி, இந்த படத்த நான் பார்த்தேன்...இந்த மண்ணுப் பய ஊர்ல அவிங்க மண்ட மாதிரியே எங்க பாத்தாலும் மண்ணு...ம்ம் அது சரி இக்கரைக்கு அக்கறை பச்சை...