Pages

  • RSS

07 April, 2010

ஒரு யுகமாய் ஒரு மணித்துளி..

திங்களும் இங்க ஈஸ்டர் லீவுங்கிரதால வழக்க விரோதமா ஞாயிறு அதுவுமா முழுக் குடும்பமும் சீக்கிரமே எந்திரிச்சோம். மலைக்கு ஒரு டூர் போய்ட்டு வரலாம்னு கண்ணாளன் முத நாளே சொல்லி இருந்தார். நான் வீட்ல தலைக்கு மேல வேலை இருந்ததால போகல. ஒரு பத்தரை மணி போல புறப்பட்டாங்க. நான் அப்பப்போ ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசிக்கிட்டே வேலை செஞ்சுட்டு இருந்தேன். ஒரு மணி இருக்கும். என் மொபைல் திடீர்னு துளி துளி துளி மழையாய் வந்தாளேனு பாடிச்சு.. டிஸ்ப்ளேல என்னவர் பெயர பாத்ததுமே இன்னைக்கு சமையல் பண்ணாத வெளிய சாப்டலாம்னு சொல்ல போறாரோன்னு சந்தோஷமா ஹலோன்னேன்..

 

இப்போ நாங்க மலைக்கு டூர் போறது பத்தி சின்னதா சொல்றேங்க.. என்னோட ஒரு ஃப்ரெண்டு கேட்டுது ”எப்டி? பார்க்குக்கு போறா மாதிரி மலை மேல டூர் போவீங்களா”னு. அதே தாங்க. இங்க எங்க ஊர்ல மொத்தம் ஏழு மலை இருக்கு. அப்டியே ஊர சுத்தி, தொடரா. அதில ஒண்ணு எங்க வீட்டுக்கு எதிர்க்க இருக்கு. போன வருஷம் சம்மர்க்கு நாங்களும்  ஏறிப் பாக்கலாம்னு போனோம். அவ்ளோ நல்லா இருந்துது. (கஷ்ட நஷ்டங்கள் இன்னொரு பதிவில கண்டிப்பா சொல்வா பாருங்க)

 

ஹலோ..

லச்சு வீட்டுக்கு வந்திட்டாளா?

என்னப்பா.. நீங்க கூட்டிட்டு போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டாளான்னா..

இல்லடி.. பாதி வழி வந்ததும் முன்னாடி இறங்கட்டுமான்னா.. சரி போயி கீழ கார் பக்கத்துல வெயிட் பண்ணுங்கனு சொன்னேன். இங்க வந்து பாத்தா காணோம்டி..

என்னப்பா சொல்றீங்க.. எதுக்கு அவள தனியா விட்டீங்க.. என்னப்பா இது ஏன்..

சரி சரி ஃபோன வை. நான் மறுபடி ஏறிப் பார்க்கறேன்..

 

கடவுளே.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. பேசிக் கிட்டு இருந்த ஃப்ரெண்ட் கிட்ட விஷயத்த சொன்னேன். அதுக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும்கிறதால சொல்லிச்சு. “ஒண்ணும் ஆகாது. பயப்படாத. அவ அங்கதான் நிப்பா.. அவர் பாத்துப்பார்”னு.  இருந்தாலும் வெளிய மலைய பார்க்கிறதும் அது கிட்ட எதுனா சொல்றதும்னு ஜன்னலுக்கும் பால்கனிக்குமா ஒரு பத்து நிமிஷம் ஓடினேன்.. அவருக்கு கால் பண்ணேன்..

 

என்னப்பா..

இரு.. பாக்கறேன்..

சத்தமா கூப்டு பாருங்களேன்..

இல்லடி.. இரு.. அதான் நான் ஏறிட்டு இருக்கேன்ல.. சந்திரன் அடுத்த வழியால ஏறிட்டு இருக்கார்..

ஐயோ.. மழை வேற பெய்ய போதுப்பா.. யாரும் கூட ஏறிட்டு இருக்கிறவங்க கிட்ட ஹெல்ப் கேளுங்களேன்.. இல்லேன்னா  நான் வரட்டா..

நீ இங்க எங்கனு வருவே.. நான் பாத்துக்கறேன். இரு..

 

மறுபடி மனசு அடிச்சுக்க ஆரம்பிச்சுது. பிள்ளையாரே.. என் குழந்தை பாவம் தவிக்கப் போறாளே.. மழையும் தன் பங்குக்கு மிரட்ட ஆரம்பிச்சுது. என் தங்கம் தவிச்சுக்கிட்டே ஓடறா மாதிரி ஒரு எண்ணம் வந்துது.. அடி வயித்தில இருந்து ஒரு வலி வந்துது பாருங்க.. என் ஃப்ரெண்டு மட்டும் இல்லேன்னா என் இதயம் நின்னு போயிருக்கும். அழுது கிட்டே எல்லா கடவுளையும் வேண்டிக்கிட்டு மறுபடி ஃபோன்..

 

என்னடி.. இன்னும் காணல..

என் தங்கம் பயந்துடப் போறாப்பா.. போலீஸ்ல சொல்லிடலாமா.. எனக்கு பயமா இருக்குப்பா..

இல்ல.. இரு பாக்கலாம். இங்க ஒருத்தர் கிட்ட வழி கேட்டிருக்கா.. அவரும் தேடிட்டு இருக்கார். வை ஃபோன.. பாக்கலாம்..

 

இப்போ அரைமணி போயாச்சு. இன்னொரு ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணேன். அவர் உடனவே என்னவர் கிட்ட பேச அவர இன்னொரு வழியால வர சொல்லி சொல்லி இருக்கார். அவர் ”பயப்பிடாதீங்க.. இதோ நான் போயிட்டே இருக்கேன். போலீஸ்லாம். வேணாம். நாங்க பாத்துக்கறோம்”னார். இதுக்குள்ள இன்னும் ரெண்டு தரம் கண்ணாளன் கிட்ட பேசிட்டேன். இது மூணாவது கால்..

 

என்னப்பா..

என்ன.. மலை உச்சிக்கு வந்துட்டேன். காணோம்.. இரு..

இல்லைப்பா.. இப்பவாவது போலீசுக்கு ஃபோன் பண்ணுங்க.. என்னால தாங்க முடியலைப்பா..

சரி நீயே பண்ணு.. நான் இன்னும் கொஞ்சம் தேடறேன்.

 

கை நடுங்க 112 அழுத்திட்டு அவங்க லைனுக்காக வெயிட் பண்றேன் டிங் டாங்.. காலிங் பெல்.. பால்கனி கதவ திறந்து ”லச்சும்மாஆஆஆஆ”ன்னேன் ஒரு எதிர்பார்ப்பில.. ”அம்மா அப்பா என்னய வெயிட் பண்ண சொல்லிட்டு தனியா விட்டிட்டு வந்திட்டார்”னு விசும்பலோட சொன்னா.. உங்க பொண்ணு பேச ஆரம்பிச்சதும் முத முதலா பேசினது என்னன்னு தூக்கத்தில எழுப்பி கேட்டாக் கூட இனிமே இத தாங்க சொல்வேன். எப்டியோ படி இறங்கி கீழ போயி கதவு திறந்து என் செல்லத்த அணைச்சதும் தான் என் உயிர் திரும்பி வந்துது.. உடனவே அவருக்கும் ஃப்ரெண்டுக்கும் சொல்லிட்டு, அவங்க ஈர உடுப்பெல்லாம் மாத்த வச்சு, மூஞ்சி கழுவி, சாமி கும்பிட வச்சு, சாமி முன்னாடி பணமும் எடுத்து வச்சேன். அவ அப்பா மாதிரி தைரியசாலி. இத்தனைக்கும் அவ பயப்பிடல. எப்டியாவது தான் வந்திடுவேங்கிற மனத் திடம் இருந்திருக்கு. அது படியே வீட்டுக்கு தனியா வந்தும் விட்டா. ஏற்கனவே ஸ்கூலால + அப்பா கூடனு நிறைய தடவ அதே மலையில ஏறி இருக்கா. அதனாலதான் அவர் தனியா இறங்க சம்மதிச்சதே.

 

ஒரே மலைக்கு ஏற இறங்க நிறைய வழிகள் இருக்குங்க. ஏழு மலையும் தொடரா இருக்கிறதால வழி தப்பி பக்கத்து மலைக்கு போகவும் வாய்ப்பு இருக்கு. நானும் அவரும் ஒரு தடவை அப்டி போயிருக்கோம். ப்ராப்ளம் என்னன்னா எல்லா வழியும் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கும். சில இடங்கள்ள வெறும் பாறையா இருக்கும். நாமதான் கரெக்டா போகணும். இவங்களும் இறங்கும் போது வேற இடத்துக்கு போயிட்டாங்க. அப்புறம் மறுபடி மேல ஏறி கரெக்டா இறங்கிட்டாங்க. அப்போதான் ஒருத்தர் கிட்ட வழி கேட்டது. பக்கத்து வீட்டுக்கு போறாங்கன்னாலே மொபைல் கொண்டு போங்கம்மான்னு சொல்வேன். அன்னிக்கு என்னமோ எனக்கு அது தோணவே இல்லை. அவங்க மொபைலும் எடுத்து போகல. என்னவரும் ரொம்ம்ம்ம்ம்ப பயந்துட்டார். ஒரு மணி நேரம்.. நாங்க பட்ட அவஸ்தை இருக்கே.. யாருக்கும் அது வரக் கூடாதுங்க. குட்டித் தளபதி சொன்னார் ”அக்கா இனிமே நீங்க எங்கள விட்டு போக கூடாது. எனக்கு பயத்தில அழுகையே வந்துச்சு தெரியுமா”ன்னு. பாவம் இவர் கூட போன ஃப்ரெண்ட் சந்திரன் பசங்க ரெண்டு பேர் + சது இவ்ளோ கூத்துக்கும் வண்டில தனியா உக்காந்திருந்தாங்க.

 

ஒரு தடவை இப்டி ஆனத்துக்காக அவங்க தைரியத்த கெடுக்க வேணாமேன்னுட்டு இதோ இன்னைக்கும் அவரும் பசங்களும் டூர் போனாங்க.  ”மொபைல் எடுத்தீங்களாம்மா, அப்பா கூடவே போகணும், தனியா போயிட கூடாது”ன்னு சொன்னத்துக்கு சரிம்மான்னு சமத்தா தலை ஆட்டிட்டு போய் வந்து இதோ இப்போ எப்டி இருந்தது டூர்னு சொல்லிட்டு இருக்காங்க. பனையால விழுந்தவன மாடேறி மிதிச்சா மாதிரி என் அம்மாவும் அக்காவும் என்னய போட்டு கிழி கிழினு கிழிச்சுட்டாங்

 

-சரியா இந்த இடத்தில என் மொபைல் திடீர்னு துளி துளி துளி மழையாய் வந்தாளேனு பாடிச்சு.. எங்க நேரம் இரவு 22:00. டிஸ்ப்ளேல என்னவர் பெயர பாத்ததுமே பரபரப்போட  ஹலோன்னு சொன்னேன்.. விபரம் அடுத்த பதிவில..

 

இப்போ நேரம் எங்க நேரம் அதிகாலை 02:35. தொடர்ந்து படிங்க. இத எங்க விட்டேன்.. ஆங்.. கிழிச்சுட்டாங்க. அம்மா சொன்னாங்க ”உன் அக்காவுக்கு பெண் குழந்தை இல்லையேங்கிர கவலை இனிமே எனக்கு இல்லடிம்மா. இருக்கிறத பாத்துக்க முடியாம நீ பண்ணுறதே போதும் எனக்கு”னு. அக்கா அதுக்கும் மேல போயி “இதோ பாரு இது ரெண்டாவது தடவை. (ஓ.. அப்போ முதல் தடவை என்ன ஆச்சுன்னும் இன்னொரு போஸ்ட்ல சொல்லப் பேறியாஆ?) உன்னால வளர்க்க முடியலைன்னா குடுடி. என் செல்லத்த நான் வளர்த்துக்கறேன்”னு மிரட்டறா. செலவப் பாக்காம டிக்கட்ட போட்டு வந்து கூட்டிட்டுப் போயிடுவாளோன்னு பயந்து வருது எனக்கு.  அண்ணன்கள் ”என்னடி இது கவனமா பாத்துக்கோ”ன்னாங்க. மாமியார், மச்சினர்கள் கிட்ட பேசவே பயமா இருக்கு. அப்பா சொன்னார் ”நீ ஏற்கனவே நொந்து போய் இருக்கேன்னுட்டு நான் எதுவும் சொல்லலைம்மா.. ஆனா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு, கோவமாவும்”னார்.

 

நான் என்னங்க வேணும்னா செஞ்சேன்.. அவங்க பயம் கோவமாகி திட்டிட்டாங்க. இனிமே என்ன.. உங்க பங்கையும் தீர்த்திடுங்க.

 

வர்ட்டா..

25 நல்லவங்க படிச்சாங்களாம்:

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டா...??
நான் கூட சும்மா பில்டப் பண்றீங்கலோனு நெனச்சேன்...அடுத்த சஸ்பென்ச சீக்கிரம் உடைங்க படபடனு வருது....

பனித்துளி சங்கர் said...

எதிர்பார்ப்புகளை தூண்டிவிட்டது . மிகவும் அருமை தொடருங்கள் . மீண்டும் வருவேன் .

ராமலக்ஷ்மி said...

ஒரு யுகமாய்தான் தெரியும் ஒவ்வொரு மணித்துளியும்:(! இனி கவனமா இருக்கலாம். வருத்தப் படாதீங்க.

Chitra said...

பதிவுக்கேற்ற தலைப்பு....... உங்களை போய் திட்ட ஒன்றும் இல்லை. :-)

Anonymous said...

இப்படியா கவனக்குறைவா இருக்கறது
திட்டியாச்சு :)

கோபிநாத் said...

\\திடீர்னு துளி துளி துளி மழையாய் வந்தாளேனு பாடிச்சு.. எங்க நேரம் இரவு 22:00. டிஸ்ப்ளேல என்னவர் பெயர பாத்ததுமே பரபரப்போட ஹலோன்னு சொன்னேன்.. விபரம் அடுத்த பதிவில.. \\

யப்பா சாமீகளா..நான் வரல இந்த விளையாட்டுக்கு.

ராமலக்ஷ்மி said...

சின்ன அம்மிண said...
//இப்படியா கவனக்குறைவா இருக்கறது
திட்டியாச்சு :)//

:))))!

malarvizhi said...

ரொம்ப நன்றாக உள்ளது.தொடருங்கள் .

அன்புடன் மலிக்கா said...

//இப்படியா கவனக்குறைவா இருக்கறது
திட்டியாச்சு :)
//
அப்படியெல்லாம் நான் சொல்லமாட்டேன்பா.

தொடருங்கள் எதிர்பார்ப்போடு இருக்கோமுல்ல..

அச்சோ கொள்ளைக்காரியாமுல்ல பயந்துவருதே புரொபைலில் பார்த்தோமுங்க..

Anonymous said...

am the 10th erunga vasituvitu varukiren...

Anonymous said...

சுசிம என்னது இது
சின்னபுள்ள தனமா இருக்கு
பப்புவ நல்லபடியா பாத்துக்கோங்க.

ஏதோ கொஞ்சம் தைரியசாலிய
பப்பு இருக்கிறதல கொஞ்சம் பயம் இல்லை.

ஒரு ஒரு பதிவும் ஏதோ நேர்ல
இருந்து பகிர்துபோல ஒரு உண்ணர்வு

நன்றி
வாழ்க வளமுடன்


வருத்தபடாத வசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

வரட்டா.

விக்னேஷ்வரி said...

நான் வீட்ல தலைக்கு மேல வேலை இருந்ததால போகல. //
ஷவர் குளியலா?

பார்த்துங்க. குழந்தைகள் வளர்க்குறது ரொம்பக் கஷ்டம். எங்கம்மா, அப்பா பட்ட கஷ்டத்தை வெச்சுத் தான் சொல்றேன்.

பித்தனின் வாக்கு said...

என்னது இது பெம்பிளைக் குழந்தையைத் தனியாகவா அனுப்புவது? அப்படி என்ன தலைக்கு மேல கலரடிக்குற வேலை?. அப்படியே எங்காவது பிரிந்தால் வீட்டுக்கு அல்லது உங்களில் இருவருக்கும் பேன் பண்ணச் சொல்லிக் கொடு.

இனிமே எதாவது காணேம் அல்லது எதாவது முக்கிய பிரச்சனை என்றால் உடனடியாக பிள்ளையாருக்கு ஒரு ரூவாய் போடுவதாக வேண்டிக் கொள். உடனடியாக நடக்கும், பின்னர் அருகில் இருக்கும் கோவிலில் போட்டுவிடு.

பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும். கொள்ளைக்காரி சுசி இப்படி பயப்படுவது ஏன். அநாவசியமாக தனியா அனுப்பி பின்னர் வேதனைப் படனும். நானா இருந்தா தனியா இறக்கி விட்ட மாமாவைப் பிடி பிடி பிடித்து விடுவேன்.

பார்த்தும்மா.

பித்தனின் வாக்கு said...

சுசி கவனிக்கவில்லையா இது ஜம்பது ஆவது பதிவு. வாழ்த்துக்கள்.

Ungalranga said...

நான் திட்ட போவது இல்லை..

அறிவுரையும் சொல்ல போவதும் இல்லை..

பின்ன வேறன்ன பண்ண போறேன்..??

பாராட்ட போறேன்..ஏன்?

திட்டு விழும்னு தெரிஞ்சும் இந்த விஷயத்தை பதிவில் பகிர்ந்தமைக்கு..!!

மங்குனி அமைச்சர் said...

//பித்தனின் வாக்கு said...

சுசி கவனிக்கவில்லையா இது ஜம்பது ஆவது பதிவு. வாழ்த்துக்கள்.//


ரிபீட்டு , டபுள் வாழ்த்துக்கள்

Subha said...

Suvaarasiyama eluthareenga. Vaazthukkal.

சாமக்கோடங்கி said...

குழந்தை கிடைத்ததனால் நன்றாகி விட்டது.. கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்...

பதிவு அருமை..

நன்றி..

கார்க்கிபவா said...

50ஆ??

வாழ்த்துகள்...

சுசி said...

உடைச்சுட்டேன்.. படிங்க சீமான்.. பில்டப்?? கிர்ர்ர்ர்ர்ர்..

< < < < <

வாங்க சங்கர்.

< < < < <

நன்றி அக்கா. கண்டிப்பா கவனமா இருக்கணும்.

சுசி said...

நீங்க ரொம்ப நல்லவங்க சித்ரா.

< < < < <

நீங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க அம்மிணி.

< < < < <

படிக்கிற நேரத்தில உங்கள யார விளையாட கூப்டா கோபி??

சுசி said...

நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்க ராமலக்ஷ்மி அக்கா.

< < < < <

தொடர்ந்தாச்சு மலர்விழி.

< < < < <

முதல் வருகைக்கு நன்றி மலிக்கா.
அது சும்மா பில்டப்புக்கு எழுதினது. பயம் வேண்டாம்.

சுசி said...

சொல்லிட்டிங்க இல்ல.. இனிமே சரியா பாத்துக்கறேன் சூர்யா.

< < < < <

ஹிஹிஹி.. இல்ல விக்னேஷ்வரி. வீட்டுல ஒரு குடும்பத்தலைவிக்கு எத்தன வேல இருக்கும்..

< < < < <

அண்ணா.. அவ்வ்வ்..
உங்க கம்பேனி ரகசியத்தை இங்க சொல்லிட்டீங்களே.. ஆவ்வ்வ்..

அவர எனக்கு ஏற்கனவே ரொம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு.. இன்னமும் பிடிக்கணுமாஆ..

சுசி said...

நன்றி அண்ணா.. நிஜமா நான் கவனிக்கல.. நன்றி..

< < < < <

நீங்க ரொம்ப வித்யாசமானவர் ரங்கன்.

< < < < <

நன்றி அமைச்சரே.. பணமுடிப்பு, பொற்கிளி அரசவையில் இருந்து கிடையாதா??

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி சுபா.

< < < < <

முதல் வருகைக்கு நன்றி பிரகாஷ்.

< < < < <

ஆமாம் குருவே. உங்க ஆசீர்வாதம்.

//50ஆ??//
ரைட்டு..